நீ எங்கே இருக்கிறாய் அம்மா
===========================
நானோ உடல் நலிவுற்று
நாதியின்றி இருக்கிறேன்-ஆனால் நீ
மருத்துவ மனையில் நாடி பார்த்து
நாக்கு நீட்டச் சொல்லி சோதிக்கிறாய்.
நான் உடல் சோர்வுடன் தவிக்கிறேன்.
நீயோ ஊக்க பானங்களுக்கு பரிந்துரைக்கிறாய்.
நான் பசியால் வாடுகிறேன் நீ
நட்சத்திர ஓட்டலில் பரிமாறுகிறாய்.
கடினமான கணக்குப் புரியாமல் முழிக்கிறேன்.
நீயோ பள்ளியில் மாணவர்க்குப் பாடம் நடத்துகிறாய்.
நான் மணலில் கோட்டை கட்ட முயல்கிறேன்.
நீயோ அடுக்குமாடி பற்றி விவாதிக்கிறாய்.
நான் மனம் வாடி என்னுள் ஒடுங்குகையில்
நீயோ எங்கோ மனநலப் பாடம் எடுக்கிறாய்.
என் கணினி என் மூளையைக் கசக்குகையில்
நீ யாருக்கோ கணினி மூலம் ஆலோசனை கூறுகிறாய்.
காயப்பட்ட எனக்கு உன் அணைப்பு தேவை
நீ கூட்டத்தில் அனைவரையும் அரவணைக்கிறாய்.
தனிமையில் நான் வாடும்போது-நீ
கூட்ட ஆரவாரக் கைதட்டல் பெறுகிறாய்.
நான் எங்கே எப்படித் துவங்குவது என்று எண்ணுகையில்
நீ வாழ்க்கை ஏணியின் உச்சத்தில் இருக்கிறாய்.
என் அம்மாவாக நீ எங்கே இருக்கிறாய் அம்மா.?
--------------------------------------------
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பார்களே...!
ReplyDeleteநீங்கள் அப்படி நினைக்கிறீர்களா
Deleteகவிதை வரிகள் கனக்க வைத்தது ஐயா சிலருக்கு கடமையே வாழ்க்கை...
ReplyDeleteபிள்ளை வளர்ப்பது அவர்கள்கடமைஅல்லவா அம்மா என்றதும்வரும் எண்ணமே அன்பும் கனிவும்தனே
Deleteசொல்ல வந்த கருத்துக்கள் தெளிவாக வந்துள்ளது. அருமை
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி
Deleteகவிதை அருமை.
ReplyDeleteகண்ணில் நீர் துளிர்க்க வைத்தது.
மகனின் எண்ணங்கள். இப்போதெல்லாம் வேலைக்கு போகும் வேலைக்கு போகும் அம்மாக்களின் பிள்ளைகள் கதி இதுதானே
Deleteஅப்பாக்க்ள் செய்ததை அம்மாவும் செய்ய ஆரம்பித்தால் வரும் விளைவு இதுதானோ?
ReplyDeleteஒன்றைப் பெறணும் என்றால் ஒன்றை இழக்கணும். எதை எதை இழக்கணும் என்பது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.
மகன் point of view நன்றாக வந்திருக்கிறது. ஆனால் எதிர்பார்ப்பு தவறு என்பது என் எண்ணம்.
மகன்கள் எடிர்பார்ப்பு அதுதானே
Deleteஅருமையான வரிகள் ஐயா...
ReplyDeleteநன்றி டிடி
Deleteஅம்மாவின் இந்த சமூகப் பணி கூட தனக்காகத்தான் என்பதை மகன் அறியும் காலம் வருகையில் நிச்சயம் அறிந்து மகிழ்வான்..
ReplyDeleteஅந்தக்காலம்வருமா
Deleteநல்ல பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி மேம்
Deleteஎன்ன செய்வது இன்றைய அம்மாக்கள் வேலை செய்யவும் விரும்புகிறார்களே..
ReplyDeleteஅப்போது பிள்ளைகளை மறக்கிறார்களோ
Deleteநல்ல பகிர்வு..... எதிர்ப்பு இருந்தால் ஏமாற்றம் தான்.
ReplyDeleteஎதிர்பார்ப்பு என்றுஇருக்க வேண்டுமோ
Delete
ReplyDeleteஅம்மா என்றால் அன்பு என்று J J பாடியது நினைவில் வந்தது.
முழுப்பாடல் கூகிள் கொடுத்தது.
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம் ! ((அம்மா))
அன்னையை(ப்) பிள்ளை
பிள்ளையை அன்னை
அம்மா என்றாய் அழைப்பதுண்டு
அன்பின் விளக்கம்
பண்பின் முழக்கம்
அம்மா என்றொரு சொல்லில் உண்டு ! (அம்மா)
பத்து திங்கள் மடி சுமப்பாள் !
பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
பத்திய மிருந்து காப்பாள்
தன் ரத்தத்தை பாலாக்கி கொடுப்பாள் !! (அம்மா)
இயற்கை கொடுக்கும் செல்வத்தை எல்லாம்
பொதுவாய் வைத்திட வேண்டும்
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும்
பகிர்ந்தே கொடுத்திட வேண்டும் !
ஒருவருக்காக மழை இல்லை
ஒருவருக்காக நிலவில்லை
வருவதெல்லாம் அனைவருக்கும்
வகுத்தே வைத்தால் வழக்கில்லை !! (அம்மா)
ஆனால் படிவு வித்தியாசமாய் இருக்கிற்தே
Deleteஇதனை இரு நிலையில் நோக்குகிறேன். 1)சமூகப் பணியில் ஈடுபட்டவர்கள் பல நிலைகளில், குடும்பத்திலிருந்து விலகியிருக்கும் சூழல் அமையும். அது அவர்களின் குறையல்ல. சமூக ஈடுபாடு அத்தகைய நிலைக்கு இட்டுச்சென்றுவிடும். 2) பிறிதொரு நோக்கில் பார்க்கும்போது குடும்பத்தைக் கவனிக்காமல் சமூகம் என்ற வேண்டிக்கிடக்கிறது என்று எண்ணத்தோன்றும்.
ReplyDeleteஇரு விதமாகவும் சிந்திக்கலாம்
Deleteமனம் கனத்துப் போனது ஐயா
ReplyDeleteசில நேட்ரங்களில் சில அம்மாக்கள்
ReplyDeleteஅருமையான வரிகள் சார்.
ReplyDeleteதுளசிதரன்
மனதைக் கனக்க வைத்த வரிகள்.
ReplyDeleteநல்லாருக்கு சார்.
கீதா
நன்றிம்மா
Deleteநெகிழவைத்த நல்ல கவிதை. அந்த எதிர்-எதிர் வார்த்தைகள் மிக நேர்த்தியாய் தேர்வாகியிருக்கிறது.
ReplyDeleteதலைப்பு தான் -- நீ எங்கே இருக்கிறாய் மகனே? -- என்று இருக்க வேண்டுமோ?..
மகன் கேட்பதுபோல் இருப்பதால் அந்த தலைப்பு நன்றி சார்
ReplyDeleteசும்மா கூட்டத்தோடு ஜால்ராப் போட்டுக்கொண்டிருக்காமல், எதிர்த் தரப்பில் நின்று அம்மாவைக் கவனித்திருக்கிறீர்கள். Done well..
ReplyDeleteகூட்டம் என்ன சொல்கிறது நன்றி
Deleteகால மாறுதலில் தவிர்க்க முடியாத நிலைமை.
ReplyDeleteவெகு நாட்களுக்குப்பின் வருகை மகிழ்ச்சி
ReplyDeleteOh my God....This is beautiful!! எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள்!!! மனசு ரசிக்கிறது...கூடவே வலிக்கிறது. பல அம்மாக்கள் இப்படியும் இருக்கிறார்கள்.
ReplyDeleteபெரும்பாலும் கரிய்ர் தொடரும் அம்மாக்க்ள் இப்படியும் இருக்கலாம்
ReplyDelete