Tuesday, November 3, 2020

ஹை நான் இறக்க வில்லை

  

ஹை  நான் இறக்க வில்லை111111

               

அனுபவ உபாதைகளை விளக்குவதன் காரணமே  பலருக்கும் ஒரு விழிப்புண்ர்வு ஊட்டவும்  மனம் தைரியத்துடன் இருக்கவும்தான்  2010 ம் ஆண்டு எனக்கு ஒரு மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்து இதயத்தில் ஒரு குழாய் நோய் வாய்ப்பட்டு இருந்ததால்  எனக்கு ஆஞ்சியோப்லாஸ்டி செய்தார்கள்  என்று எழுதி இருக்கிறேன் நான் நலமுடன் தொடர பல மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்கள்

அதில் ஒன்று asa   என்று சொல்லப்படும் ஒரு மாத்திரையும் அடக்கம் ஆனால்  அந்த மாத்திரை எங்கும்  கிடைக்க வில்லை  நான்  அதில்லாமலேயே இருந்தாலும் பாதகமில்லை என்று கூறிவந்தேன் ஆனால் மருத்துவர் சொன்ன ,மாத்திரையை சாப்பிடாமல் இருக்கக் கூடாது என்பதில் என்மனைவியும் மகன்களும் குறியாய் இருந்தனர் எனக்கு சிகிச்சை செய்த கார்டியாலஜிஸ்டிடம் அப்பாயின்ட் மென்ட் கிடைப்பதுகஷ்டமாக இருந்ததால்  அதே மருத்துவ மனையில் இருந்த  வேறு கார்டியாலஜிஸ்டிடம் விஷயத்தை கூறினேன்  அவர் கொடுத்த மாற்று மருந்து டோசேஜ் அதிகமாய் இருக்கவே  அதை தெரிவித்துஅதன் பக்க விளைவுகள் பற்றியும் அவரிடம்  கூறினேன் அவர் கொடுத்த மருந்தை உட்கொள்ளவும்  தொந்தரவு ஏற்பட்டால் அவரை மீண்டும் பார்க்கவும் கூறினார் அந்தபதில் எனக்கு உடன் பாடில்லாமல் இருந்தது  என் மக்களுக்கு நான்  மருந்து உட்கொள்ளவேண்டும்  என்னும் கட்டாயவிருப்பம் இருந்தது எப்படியோ எனக்கு முதலில் சிகிச்சை கொடுத்த அதே மருத்துவரிடம் எப்படியோ அப்பாயிண்ட்மெண்ட்  வாங்கினார்கள் நானும் சென்று பார்த்து விளக்கினேன்   அவருக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும்  சுமார் பத்து வித மாத்திரைகளை குறைத்து மூன்றே மாத்திரைகள் போதும் என்றார் அவரிடம்  சொல்லலாமா வேண்டாமா என்று நினைத்து பின் கூறி விட்டேன்   என்  தொப்புழ் பக்கம் சிறிய வலி என்றும் சற்று வித்தியாசமாக தெரிகிறதென்றும்  கூறிக் காண்பித்தேன் அதைப் பார்த்ததும்  அவர் என்னை அங்கிருந்த ஒரு சர்ஜனை பார்க்கக் கூறி  அவருடன் தொடர்பு கொண்டு  பார்க்கவும் ஏற்பாடு செய்தார்  அப்போதே அவரிடம்சொன்னேன்  சர்ஜன்  என்றால்  உடனே அறுவைதானே என்று          

அந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் நான் எதிர்பார்த்தபடி  உடனேயே ஆப்பரேஷன் செய்ய வேண்டும்  என்றார் IRREDUCIBLE obstructive UMBLICAL HERNIA என்றும் உடனே ஆப்பரேஷன் செய்யாவிட்டால்  அது சிறு குடலை strangulate   செய்யும் வாய்ப்பு இருக்கிறது என்றும்  கூறினார்

 

 அறுவை சிகிச்சைக்கு முன்பாக பல டெஸ்டுகள்  எடுத்தார்கள் ஒரு வழியாய் என்னை ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றார்கள் ஆப்பரேஷ்ன்  மேஜர மைனரா என்று கேட்டென்   இந்த வயதில் எல்லா  ஆப்பரேஷனு ம்  மேஜர்தான் என்றனர்  மனதில் இன்னும்  எல்லோரையும் பார்ப்போமா என்று இருந்தது நிஜம்.  அப்படியே ஏதாவது  ஆனாலும் கவலைப்பட்டு பிரயோசனம் இல்லை என்று தோன்றியதுசிகிச்சை முடிய சுமார் ஒன்றரை மணிநேரம்  ஆயிற்று பிறகு போஸ்ட் ஆப்பரேடிவ் வார்டில் எனக்கு நினைவு வரும்வரை கிடத்தி இருக்கிறார்கள்  மெள்ள எனக்கு தெளிவு ஏற்பட்ட போது கண்களை சுழல விட்டு இருக்கும் இடம் இதுதான் என்று உறுதிப் படுத்திக்  கொண்டேன்  முதலில் நினைவு வந்து  தோன்றிய எண்ணமெ நான்  பிழைத்து  விட்டேன்  இறக்க வில்லை என்பதுதான்  தெளிவு வந்ததும்  என் மக்களையும்  மனைவியையும் பார்க்க வேண்டும்  என்றேன்  




 

 

                             

         

28 comments:

  1. மேஜர் ஆனவங்களுக்கு செய்யும் ஆப்ரேஷன் எல்லாம் மேஜர்தான் போலிருக்கு.... மேஜரோ மைனரோ செலவு எல்லாம் மேஜர் செலவாகத்தான் இருக்கும் இப்போது

    ReplyDelete
    Replies
    1. யார் மேஜர் நான் என்றும் மைனர்தான்

      Delete
  2. நீங்கள் சுகமாகியது அறிந்து சந்தோஷம் அதனால்தான் உங்களி அனுபவ பதிவுகளை படிக்க முடிகிறது

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதுவது எல்லாமே ஏதோ அனுபவ அ டிப்படையில்தான்

      Delete
  3. பயம் காட்டும் சுயம் !

    ReplyDelete
    Replies
    1. இறந்துவிடுவேனோ என்று நினைத்தது நிஜம்

      Delete
    2. அந்த நிலையில் யாருக்கும் இயற்கையாக வரும் பயம்தான் இது.

      Delete
    3. எதிர் பார்த்தது நடக்க்வில்லை என்பதில்மகிழ்ச்சியே

      Delete
  4. ஐயா

    சொல்லியபடியே அருகில் வந்த காலனை உதைத்து விட்டீர்கள். 

    டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்துகளை வாங்கியவுடன் ஒரு டைரி அல்லது நோட்டு புத்தகத்தில் தேதி, மருந்தின் பெயர் மற்றும் தயாரித்த கம்பெனி, மருந்தின் உள்ளடக்க வேதிப்  பொருள் பெயர் எல்லாவற்றையும் குறித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் மருந்து கிடைக்காத போது அந்த மருந்தின் மாற்று மருந்து அதே வேதிப்பொருள் அடங்கியது வேறு கம்பெனி தயாரிப்பு கடைக்காரர் சொல்வார். அதை வாங்கலாம். 

    asa என்பது ஆஸ்பிரின் தான். இது பழைய அஸ்பிரோவிலும் தற்போதைய டிஸ்பிரின் ஈகோஸ்பிரின் போன்ற பெயர்களில் கிடைக்கிறது. இந்த மருந்து இரத்த குழாயகளில் ஏற்படும் கொழுப்பு போன்ற அடைப்புகள் ஏற்படாதவாறு பாதுகாக்கும். 

    உங்கள் வயதிற்கு அறிவுரை கூறும் தகுதியில்லை எனினும் சொல்ல விரும்பியதைத் தான் எழுதினேன். 

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. அவன் பல நேரங்களில் போக்கு காட்டுகிறான்

      Delete
    2. Hope you are doing fine.
      Asa is an ordinary blood thinner medicine. Nothing special, can’t believe it was not available.
      Rajan

      Delete
    3. that was what was prescribed I WAS Aware thae it was a common medicine But some brands dont suit me ANY WAY ALL IS WELL that enda well Thanks

      Delete
  5. தாங்கள் குணமடைந்தது அறிந்து மகிழ்கிறேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. அது ஆயிற்று இரண்டுஆண்டுகள்

      Delete
  6. அறுவை நல்லவண்ணம் முடிந்து நீங்கள் குணம் பெற்றமை மகிழ்வளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அறுவை நல்லவண்ணம் முடிந்தால் பலரையும் நான் பதிவுகளில் அறுக்கிறேன்

      Delete
  7. இது முன்பு நடந்த அறுவை சிகிச்சைதான் இல்லையா சார்? இப்போது இல்லை என்று தோன்றுகிறது.

    என்றாலும் அனுபவங்கள் பல பாடங்களைக் கற்றுத் தரும்தான்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. யூ ஆர் ரைட் இது நடந்து ஆயிற்று இரு ஆண்டுகளுக்கும் மேல்

      Delete
  8. அப்பொழுதே இதைப் பற்றி ஒரு இடுகை போட்டிருந்தீர்கள்.

    டாக்டர் என்னிடம், ப்ரெஷருக்கு என்ன மாத்திரை உபயோகிக்கிறீங்க என்று கேட்கும்போதெல்லாம், மனைவியிடம்தான் கேட்கணும், அவளுக்குத்தான் தெரியும் என்றே இதுவரை சொல்லியிருக்கேன். அவசரத்துக்கு அதனை போட்டோ எடுத்து வைத்துக்கணும் என்று இப்போ தோணுது.

    ReplyDelete
    Replies
    1. அந்த மாத்திரை உபயோகத்தில்இருக்கிறதா அத்தனை முக்கியமானதா மற்க்கக்கூடியதா

      Delete
  9. பலவித அனுபவங்கள். நலமுடன் வாழ்க.

    ReplyDelete
  10. முன்னரே படித்த நினைவு.  என் அப்பா 80 வயதில் ப்ராஸ்டேட் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.  அப்போது அவர் எண்ணமும் இதே மாதிரிதான் இருந்தது. 

    ReplyDelete
  11. பல நேரங்களில் எழுதியவையே வித்தியாசமான எண்ணத்துடன் ரிபீட் ஆகும்

    ReplyDelete
  12. நல்லவேளை. பதிவிலேயே பயமுறுத்தி விட்டீர்களே பாலா சார். பத்திரமா இருங்க

    ReplyDelete
  13. பயமுறுத்தும் நோக்கமில்லை என்றாகிலும்ஒரு நாள் போக வேண்டியார்கள்தானே அப்போது எதிர்பார்த்தேன் நடக்க வில்லை அனுபவம்பதிவாகியது

    ReplyDelete