மே மாதம் வந்தால் நான் எதிர்
நோக்கும் மலர் ஃபுட்பால் லில்லி எனும் பூ தான்ஆண்டுதோறும் பூத்துமகிழ்விக்கும் மலர்
இந்த ஆண்டு தலைகாட்டாததுபூக்களுக்கும் கோரோனா
வந்து மடிந்து விட்டதோஎன்று நினைக்கத் தோன்றுகிறது மாடி வீட்டுநண்பர் அனுப்பிய காணொளி இணைக்கிறேன் சில மலர்க்ள் நினைவலைகளஎழுப்புகின்ற்ன
ஒரு அஞ்சலி
மலரே மலரேமௌனமேன்
தலை வணங்கி வருவோரை வரவேற்பாய்
இக்காலத்தில்
யார்தான் வருகிறார்கள் வரவேற்க
கந்தசாமி ஐயா தில்லையகத்து கீதா
இன்னும்
பலருக்கும் புரியும் இப்புலம்பல்
ஆண்டு தோறும் மே மாதம் மலரும்
உன் பெயர்
தெரியாது தவித்தபொது கீதாமதிவாணன்
தான் உன் பெயர் ஃபுட்பால் லில்லி என்று கண்டறிந்து சொன்னர்
மலரே மலரே
மௌனமேன் நீதலை வணங்கி வறவேற்கும்அழகை உன்னை
காட்டி மகிழ்ந்தேன்அந்த மகிழ்ச்சி
இனி வருமோ
கோரொனா உன்னையும் காவு வாங்கி விட்டதோ
மலரே நீஏன் மௌனமாய் இருக்கிறாய் புரிகிறது
இந்த ஆண்டு நீதான் ஜனிக்கவில்லையே எப்படி
மரணித்து இருக்க முடியும்
இந்த ஆண்டு இல்லாவிட்டால் என்ன, அடுத்த ஆண்டு மலர்ந்துவிட்டுப் போகிறது...
ReplyDeleteமேமாதம் மொக்கு விடும் இந்த ஆண்டு இதுவரை காண் வில்லை
Deleteஅடுத்த ஆண்டு நிச்சயம் மலரும்
ReplyDeleteநம்புகிறேன்
Deleteஅந்த மகிழ்ச்சி விரைவில் வரட்டும்...
ReplyDeleteவாய் முஹூர்த்தம் பலிக்கட்டும்
Deleteஅடுத்த வருடம் மலரட்டும். இந்தச் செடியின் விதை எங்கு கிடைக்கிறது என்று பார்க்கணும்.
ReplyDeleteவிதை அல்ல கிழங்கு என்று நினைக்கிறேன்
Deleteமீண்டும் மலரும் சார். அதன் வேர்கள் பூமிக்குள் இருக்குமே. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் அப்போது இப்பூக்களைக் காட்டினீர்கள் நினைவு இருக்கு..
ReplyDeleteஉங்கள் வீட்டிற்கு வர இயலாத நிலை இப்போது இல்லை என்றால் வந்திருப்பேன் சார்.
கீதா
மூன்று செடிகள் ஒரேஇடத்தில் இருந்ததுலாக் டௌன் எல்லாம் முடிந்த்போது வாருங்கள்
Deleteதெத்திப்பூவை நாங்களும் இட்லிப்பூ என்போம் சார். இக்சோரா!
ReplyDeleteகீதா
எ ரோஸ் இஸ் எ ரோஸ் பை வாடெவர் நெம் யூ கால் இட்
Deleteதெத்தி, விருட்சி, வெட்சிப் பூக்களை நாங்களும் இட்லிப் பூ என்றே சொல்லி இருக்கோம். சின்ன வயசில் அதிகம் வெள்ளை நிறப் பூக்களே பார்த்திருக்கேன். பின்னர் தான் அடர் சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில்!
ReplyDeleteகுருவாயூர் கிருஷ்ணனுக்கு உகந்த பூ
Deleteபூச்செடியில் புதிய துளிர் விட்டிருக்காது. இல்லைனா சுத்தமாய் அற்றுப் போயிடுத்தோ? இருந்தால் மீண்டும் துளிர்த்து வரும்.
ReplyDeleteமுதலில்மொட்டுஜ் விடும் பூ பத்து நாட்கள் வரை இருக்கும்
Deleteமீண்டும் துளிர்க்கும்..நீங்களும் பதிவிடுவீர்கள்..நாங்களும் பார்த்துப் பதிலிடுவோம்...
ReplyDeleteஇன்றுகாலைஒரு மொட்டு தெரிந்தது பதிவிடுவேன்
Delete