Thursday, June 24, 2021

இதுவே என்கடைசி இடுகை

 

கேள்வியின்நாயகன்

 

1.) உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

எனக்கு இப்போது என் 83-வது வயது ஓடிக்கொண்டிருக்கிறது. என்  பிள்ளைகள் என் நூறாவது வயதின்பொது அவர்களது எழுபதுகளின் தொடக்கத்தில் இருப்பார்கள். என் பேரக்குழந்தைகளும்  திருமணமாகி பெற்றோர்களாகி இருப்பார்கள். ஆகவே பிற்ந்த நாள் கொண்டாட்டம் என்பது அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதன்படியே இருக்கும் என்னைப் பொறுத்தவரை எல்லோரும் கூடி இருக்கும் ஒரு மகிழ்வான நாளாக அது இருக்க வேண்டும் என்பதே விருப்பம்

இன்றுறங்கி நாளை விழிப்பதே நம் கையில் இல்லாத போது இம்மாதிரித் திட்டமிடுதல் .......... இதையே hypothetical கேள்வி என்கிறேன்

2.) என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்.?

என்னதான் கற்றாலும் கற்றது கைம்மண் அளவு என்று தெரியும் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து தெரிந்தது இது ,தெரியாதது இது என்று பிரித்து தெரியாததைக் கற்க முயல்வேன் ஆனால் சிலவிஷயங்களைத் தெரிந்து கொள்ள எனக்கு mental block இருப்பதும் தெரியும்

3.) கடைசியாகச் சிரித்தது எப்போது ? எதற்காக.?

இப்போது. இக்கணமே. இம்மாதிரிக் கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேனே என்பதை நினைத்து..

4.) 24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன.?

இம்மாதிரி பவரே இல்லாமல் சிறுவயதில் வாழ்ந்திருக்கிறேன் நம் முன்னோர்களும் வாழ்ந்திருக்கின்றனர். அதை நினைத்து சமாதானப் படுத்திக் கொள்வேன் முன்பெல்லாம் இந்தப் பவர்கட் குறித்து பலரும் பதிவுகளில் எழுதி இருக்கின்றனர். அவர்களுக்கு பின்னூட்டமாக இயற்கையோடு இசைந்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதி இருக்கிறேன் என்ன... இப்படி வாழப் பழகிவிட்டதால் சில அசௌகரியங்கள் தெரியும் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்

இந்தக் கேள்வியே clear ஆக இல்லையோ என்று தோன்றுகிறது. பவர்கட் என்பது மின் சக்தியைத்தான் குறிக்கிறதா. இல்லை நமக்கிருக்கும் சக்தியைக் குறிக்கிறதா.?ஒரு 24 மணி நேரமா இல்லை நாளும் 24 மணி நேரமா..

5.) உங்களின் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன. ?

என் இரு பிள்ளைகளுக்கும் திருமணமாகி விட்டது. அந்த நாளில் நான் அவர்களிடம் எதையும் சொன்னதாக நினைவில்லை. ஆணும் பெணும் இணைந்து வாழ்வதே திருமண வாழ்வு. வாழ்க்கை என்பது அவர்களே வாழ வேண்டியது. பிறர் உபதேசித்து பின் பற்றக் கூடியது அல்ல. திருமண வாழ்வில் மகிழ்வாக நாங்கள் வாழ்ந்து வருவதை என் குழந்தைகள் பார்த்து வந்திருக்கிறார்கள். எங்கள் வாழ்க்கையே அவர்கள் பின் பற்ற முயல வேண்டியதில் ஒன்று என்று தெரிந்து கொண்டிருப்பார்கள்.

6.) உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்.?

நான் என் பதிவுகள் பலவற்றிலும் ஆதங்கத்துடன் எழுதி வருகிற பிரச்சனை நிலவும் ஏற்ற தாழ்வுகளே. அதற்கென்று எனக்குத் தெரிந்த தீர்வுகளையும் எழுதி வந்திருக்கிறேன் முடிந்தால் நானே ஒரு அவதார புருஷனாகவந்து இவற்றைத் தீர்க்க வேண்டும் ஆனால் நான் படித்துள்ளவரை அவதார புருஷர்கள் யாரையாவது தீர்த்துக்கட்டத்தான் அவதாரம் செய்திருப்பதாகத் தெரிகிறதே தவிர வேறெதுவும் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் ஆண்டவன் என்றைக்கோ அவதாரம் எடுத்திருக்க வேண்டுமே. ஒரு hypothetical ஆன கேள்விக்கு ஒரு சர்ச்சைக்குரிய பதில்

7.) நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்.?

எனக்கு யாரிடமும் அட்வைஸ் கேட்க தயக்கமில்லை. என்னைவிட நன்றாகத் தீர்வு சொல்வார் என்னும் நம்பிக்கை இருந்தால்தான் அட்வைஸ் கேட்பேன்.

8.) உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள் ?

என்னைப் பற்றிய தவறான தகவல் பரப்பப் படுவதாகக் கூறுபவரை முதலில் தவிர்க்க முயல்வேன் . எப்போதுமே போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும் என்னும்கொள்கை உடையவன் இருந்தாலும் ஒரு உண்மையும் சொல்ல வேண்டும் தகவல் தவறானதாக இருந்தால் மனசின் ஒரு ஓரத்தில் வருத்தம் இருக்கும் “ சீசரின் மனைவி......” என்று ஏதோ எண்ணத்தோன்றுகிறது.

9.) உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்.?

கேள்வியே சரியில்லையோ.  இறந்தவரிடம் என்ன சொல்ல முடியும் ? நண்பரிடம் என்றால்... .வார்த்தைகளை விட பரிவும் புரிதலும் மேல் என்று நினைக்கிறேன்

10.) உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்.?

 ஒரு பதிவே எழுதி இருந்தேன்  என்ன செய்வீர்கள் என்பதை விட என்ன செய்தேன்  என்று எழுதி இருக்கிறேன் ப்தில் தெரிய இங்கே” சொடுக்கவும்

 

 

 

 

 

 

 

 


30 comments:

  1. பதில்களுக்கேற்ற கேள்விகள்...   நல்ல உத்தி.  சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. கேள்விக்ளே முதலில்

      Delete
  2. மழை, வெள்ளம் போன்ற சமயங்களில் 2, நாட்கள் 3 நாட்கள் என்று கூட மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கோம். ஆகவே 24 மணி நேரம் என்பதெல்லாம் ஒண்ணுமே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் கீசாவாக முடியுமா

      Delete
  3. நல்ல கேள்விகள், பதில்கள், எல்லாவற்றையும் விட ஈர்க்கும் தலைப்பு. :)

    ReplyDelete
    Replies
    1. தலைப்பு ஈர்க்க வேண்டு மல்லவா

      Delete
    2. வெகு நாட்களுக்குப்பின் உங்கள் வருகை நன்றி b

      Delete
  4. முன்பு உலாவிய தொடர் பதிவுதானை ஐயா தலைப்பு ஏன் இப்படி ?

    பதிவை ரசித்தேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. உண்ஈமையை உரக்க கூற் ஒரு வழி

      Delete
    2. பழை ய பதிவு மூலம் சொல்ல ஒரு செய்தி

      Delete
  5. தலைப்பு தான்...

    நாளைய பதிவில் சந்திப்போம்...

    ReplyDelete
    Replies
    1. பதிவுகள் இருக்காது

      Delete
  6. பதிவை ரசித்தேன் ஐயா
    ஆனால், பதிவின் தலைப்பின் பொருள் புரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. இடுகைகள் வெளீயிடுவது சண்தேகமே

      Delete
  7. சார், கேள்வி பதில்களை ரசித்தேன்.

    4, 5 நாட்கள் கூட மின்சாரம் இல்லாமல் இருந்த தினங்கள் உண்டு.

    தலைப்புதான் டக்கென்று மனதை ...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பொதும்டா சாமி என்று தோன்றியது

      Delete
  8. இதுவே என் கடைசி இடுகை//

    அலுப்பா? சும்மா இப்படி ஒரு தலைப்பு வைப்போம் எனத் தோன்றியதா? சீரியஸ் முடிவெனில், வேறென்ன செய்ய உத்தேசம்? ஓவியம் வரைவது, செடிகொடிகளைப் பராமரிப்பது என்பதுபோல் ஏதேனும் ஐடியா உண்டா?

    ReplyDelete
  9. தானாக எதுவும் செய்ய முடிவதில்லை மேலு நான் எழுதுஅது பொழுது போக்க அல்ல

    ReplyDelete
  10. நீங்கள் இருவரும் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. உடல் நலம் நம்கையிலா என் மனைவி சொல்ப டி வாலாம்பிகேச வைத்யேச
      பவரோக ஹரேதிச
      ஜபேந் நாமத்ரயந் நித்யம்
      மஹாரோக நிவாரணம்…என்றாலுடல்நலம் சரியாகுமா

      Delete
    2. //.. என் மனைவி சொல்படி.. மஹாரோக நிவாரணம். என்றாலுடல் நலம் சரியாகுமா//

      சரியாகாதா? இதுவரை சரியாயிருந்ததுபோல் தெரிகிறதே.. எப்படி? உங்களால்தானா !

      Delete
  11. தவிர்க்கபட முடியாதவை அனுபவிக்க்சப் வேண்டும்என்பதே என் கட்சி

    ReplyDelete
  12. நேற்றே பதிவு பார்த்தேன். ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறீர்கள் என்று நினைத்தேன். அறச்சொற்களை தவிர்ப்பது நலம். முடியும் பொழுது தொடர்ந்து எழுதுங்கள். சரஸ்வதி தேவியே இன்னும் படித்துக் கொண்டிருக்கிறாளாம்.
    மற்றபடி கேள்வி,பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்குஇதிலெல்ல்லாம் நமிக்கை இல்லை மெலும் தீ என்றால் வாய் சுடாது

      Delete
  13. அறச் சொல்லைத் தவிர்ப்பது நல்லது. நம்பிக்கையோடு எழுதும் நீங்கள் தொடர்ந்து நம்பிக்கையோடு இருங்கள்.

    உங்கள் எண்ணவோட்டம் தெரியாமலா இடுகைகளைப் படிக்கிறோம்?

    ReplyDelete
  14. வேண்டும்என்றே எழுடியடு அல்ல

    ReplyDelete
  15. நீண்டநாளின் பின் வந்தேன் தலைப்பு திகைக்க வைத்தது.
    நலமாக இருங்கள். முடிந்தபோது எழுதுங்கள்.

    ReplyDelete