Thursday, March 24, 2022

இரு சிறு கதைகள்

 கதை  1


இரண்டு சுட்டிப் பையன்கள்.குறும்பும் துடுக்கும் நிறைந்தவர்கள். அவர்கள்மேல் வரும் புகார்கள் அவர்களது தாயைக் கவலைப்பட வைத்தது. ஊரிலொரு பெரிய மனிதர்.கம்பீரமான உருவம் கணீர்க் குரல். அவரிடம் தாய் சென்று முறையிட்டாள். அவரும் குழந்தைகளைத் திருத்த ஒப்புக்கொண்டார். ஒருவருக்குப் பின் ஒருவரை அனுப்பச் சொன்னார். முதலில் இளையவனை அனுப்பினாள். பெரிய மனிதர் அந்தச் சிறுவனை நல் வழிப்படுத்த வேண்டி அவனிடம் “கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா.?என்று கேட்டார். சிறுவன் மிரள மிரள விழித்தான். . அவர் சற்றே குரலை உயர்த்தி “ கடவுள் எங்கே.?” என்று கேட்டார். சிறுவன் முகம் வெளிறி பதில் ஏதும் கூறாமல் விழித்தான்.ஊர்ப் பெரிய மனிதருக்குக் கோபம் வந்தது. பதில் ஏதும் தராத சிறுவனை நோக்கி “கடவுள் எங்கே சொல்.? ” என்று சத்தம் போட்டார். சிறுவன் பயந்து போய் ஓடி தன் வீட்டுக்குள் நுழைந்தான். அவனது அண்ணன் அவனிடம் வந்து நடந்தது என்ன என்று கேட்டான் அதற்கு அவன் “கடவுளைக் காணோமாம் நாம்தான்மறைத்து வைத்துவிளையாடுகிறோம் என்று சந்தேகப் படுகிறார்கள் என்றான்

கதை 2 

ஒவ்வொரு முறையும் ஹெலிகாப்டரைப் பார்க்கும் போதும் கணவன் “எனக்கு அதில் பயணம் செய்ய ஆசையாய் இருக்கிறது “ என்பான் .மனைவி “ எனக்குப் புரியுதுங்க. இருந்தாலும் அதில் ஏறிச் சுற்றிப் பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு ரூபாய் என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா “ என்று கூறி அவன் வாயை அடைப்பாள். ஒருமுறை ஒரு திருவிழாத்திடலில் ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஏற்றிக் கொண்டு போவதும் மீண்டும் வந்து வேறு சிலரை ஏற்றிக் கொண்டு போவதுமாய் இருந்தது. கணவன் மனைவியிடம் “ எனக்கு எண்பது வயதாகிறது. இப்போது என்னால் பயணம் செய்ய முடியாமல் போனால் ஒருவேளை எப்போதும் முடியாமல் போகலாம்” என்று குறைபட்டுக்கொண்டான். அப்போதும் மனைவி “ஹெலிகாப்டரில் ஏறிச் சுற்றிப்பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.?என்றாள். இவர்களுடைய சம்பாஷணையை ஹெலிகாப்டர் பைலட் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் இவர்களிடம் “ நான் உங்கள் இருவரையும் ஹெலிகாப்டரில் ஏற்றி சுற்றிக் காட்டுகிறேன்.ஒரு பைசா தரவேண்டாம்.  ஆனால் ஒரு கண்டிஷன். பறக்கும்போது இருவரும் ஏதும் பேசக் கூடாது. மீறி ஏதாவது பேசினால் ஆளுக்கு  ஐநூறு ரூபாய். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.” என்றார். கணவனும் மனைவியும் ஒப்புக்கொண்டு ஹெலிகாப்டரில் ஏறினார்கள். பைலட் ஹெலிகாப்டரை செலுத்தும்போது மிக வேகமாகவும்
திடீரென்று மேலே ஏறியும் அதேபோல் திடீரென்று கீழே இறக்கியும் பல சாகசங்களை நிகழ்த்தினார். கணவன் மனைவி இருவரும் ” மூச் “ ஒரு வார்த்தை பேசவில்லை. பைலட் கீழே ஹெலிகாப்டரை இறக்கியதும் கணவனிடம் நான் என்னென்னவோ சாகசங்கள் செய்தும் நீங்கள் அலறி சப்தம் செய்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ.... I AM IMPRESSED ஒரு சப்தமும் எழுப்பவில்லை” என்றார். கணவன் “ உண்மையைச் சொல்வதென்றால் என் மனைவி கீழே விழுந்ததும் நான் உரக்கக் கூச்சல் போட நினைத்தேன்.ஆனால்.... ஐநூறு என்றால் ஐநூறு ரூய் அல்லவா.”என்றார்.




















 சந்தேகப் படுகிறார்கள் என்றான்....!

12 comments:

  1. இரு கதைகளும் வாசித்து சிரித்துவிட்டேன். இரண்டாவது கொஞ்சம் கூடுதலாகவே.

    கீதா

    ReplyDelete
  2. இரண்டுமே ரசிக்க வைத்தன.

    மிரட்டி கடவுளைப் புரிய வைக்க முடியாது என்பதைக் கூடுதலாக ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் புரிய வைக்கிறார்களா

      Delete
  3. ஆச்சர்யம். நேற்று நான் போட்ட கமெண்ட் என்ன ஆச்சு?

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் அப்படி ஆவதுண்டு

      Delete
  4. முதல் கதையை வேறு விதமாக படித்மிருக்கிறேன் (காந்தி கொலை வழக்கு) என்றாலும் இது கொஞ்சம் புதுசுதான்!

    ReplyDelete
  5. இரண்டாவது அடிக்கடி படித்திருக்கிறேன். எனக்கு வரும் சந்தேகம் ஹெலிகாப்டர் கதவைத் திறந்த வைத்திருப்பார்கள், அவ்வளவு எளிதாகக் கீழே விழ!

    ReplyDelete
  6. எனக்கு தெரியாது

    ReplyDelete