Tuesday, July 5, 2022

vவயதும் பரிணாமும்

 


வயதாவதின் பரிணாமம் பற்றி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதை நாம் விரும்புவது நாம் குழந்தைகளாக இருந்தபோது தான்  பத்து வயதுக்குட்பட்டவரிடம் வயதைக் கேளுங்கள். பளிச்சென்று பதில் வரும்  நாலரை. ஆறரை ஏழரை என்றெல்லாம் வரும் அடுத்தவயதுக்குத் தாவும் அவசரம் அந்தப் பிராயத்தில்தான் இருக்கும் பதினம வயதுகளில் வயதைக் கூட்டித்தான் சொல்வோம் குறைக்கமாட்டொம் பதினாறு பதினேழு வயதிலேயே  நாம் முதிர்ந்தவர்களாக உணர்வோம் (நான் வளர்ந்து விட்டேன் என்னையும் கணக்கில் சேர்க்க வேண்டும்) 21 வயது ஆகிவிட்டால் எனக்கும் எல்லாம் தெரியும்  என்னும் நினைப்பும் கூடவே வரும் முப்பதுகளில் ஏதோ கனவு காண்பது போல்  உணர்வோம்  நாற்பதுக்கு நாட்களைத் தள்ளுவோம் சந்தேகங்கள் கூடவே வரும்  அப்படி இப்படி என்று ஐம்பதை அடைகிறோம் அறுப்துக்கு வந்து சேருகிறோம்  வந்தவேகம் எழுபதில் புலப்படும்  எண்பதுகளில் எல்லாவற்றிலும் ஒரு சுழற்சி இருக்கும்  தொண்ணூறுகளில்  எல்லாமே இப்போது நடந்தது போல் இருக்கும் வந்து போன 1980 ல் இது அப்படி அது இப்படி என்றே எண்ணம் தோன்றும் .  நூறு ஆயிற்றென்றால்  மீண்டும் வயது என்ன என்று  சொல்லும்போது நூறரை  நூற்றி ஒன்றரை என்று ஆகும்
என்றும் இளமையாய் இருப்பது எப்படி.? இந்த எண்களைத் தூக்கிக் கடாசுங்கள்.நல்ல நட்புகளை நாடுங்கள். எதையும் கற்றுக்கொள்ளும் முனைப்போடு இருங்கள் சோம்பிப் போகாதீர்கள் எதையாவது செய்துகொண்டிருங்கள் ஆங்கிலத்தில் An idle mind is a devil’s den என்பார்கள் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அனுபவியுங்கள் கண்ணிர்தரும் நேரங்களையும் எதிர் நோக்குங்கள்  இதம் தரும் சூழ்நிலையை உருவாக்குங்கள் உடல் நலம் பேணுங்கள், மனம் விரும்பும் இடங்களுக்குச்சென்று வாருங்கள் எந்தக் குற்ற உணர்வும் வேண்டாம் அன்பைப் பகிருங்கள். நினைவிருக்கட்டும்  வாழ்வு என்பது நாம் விடும் மூச்சுக்காற்றில் இல்லை நாம் அனுபவிப்பதில்தான் இருக்கிறது.
அவ்வப்போது நான் எழுதிய முதுமை என்பது ஒரு வரம் என்னும் பதிவைப்படியுங்கள்.தெளிவும் கிடைக்கும்

 

10 comments:

  1. 'அன்பை பகிருங்கள் மனம் விரும்பும் இடங்களுக்கு சென்று வாருங்கள் ' 'சோம்பி இருக்காதீர்கள்' நல்ல அறிவுரைகள் மகிழ்ச்சியும் கூட..

    ReplyDelete
    Replies
    1. முடிந்தால் பகிருங்கள்

      Delete
  2. நிறைய யோசித்ததுண்டு சார். அதுவும் வயதாகும் போது எப்படி இருக்கலாம் இருக்க வேண்டும் என்றும் கூட சில வயதானவர்களுடனான அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வதும் உண்டு...

    //நல்ல நட்புகளை நாடுங்கள். எதையும் கற்றுக்கொள்ளும் முனைப்போடு இருங்கள் சோம்பிப் போகாதீர்கள் எதையாவது செய்துகொண்டிருங்கள் ஆங்கிலத்தில் An idle mind is a devil’s den என்பார்கள் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அனுபவியுங்கள் கண்ணிர்தரும் நேரங்களையும் எதிர் நோக்குங்கள் இதம் தரும் சூழ்நிலையை உருவாக்குங்கள் உடல் நலம் பேணுங்கள், மனம் விரும்பும் இடங்களுக்குச்சென்று வாருங்கள் எந்தக் குற்ற உணர்வும் வேண்டாம் அன்பைப் பகிருங்கள்.//

    அப்படியே டிட்டோ செய்கிறேன் சார்.

    பதிவு சிறப்பு
    .
    கீதா

    ReplyDelete
    Replies
    1. பகிர முடிந்தால் பகிருஙள்

      Delete
  3. வயதுக்கேத்தபடி மாறும் எண்ணங்கள், இலட்சியங்கள்..  நானும் நினைத்துப் பார்பபதுண்டு.  இளமையின் வேகம் வயது ஏற ஏற படிப்படியாக குறையும், அல்லது ஒரு கட்டுக்குள் அடங்கும்.  சுஜாதா வார்த்தையில் ப்ராக்ராஸ்ஸிவ் காம்ப்ரமைஸ்!

    ReplyDelete
    Replies
    1. நப்றி சுஜாதா அபிமானியே

      Delete
  4. Ticketmaster is the world's largest ticket distribution company in the US, completely dominating its market niche. The company distributes tickets for more than 17,000 users whose events range from professional wrestling matches and rock concerts to Broadway shows and operas. Tickets are sold at roughly 3,700 outlets worldwide, as well as through 19 telephone call centers and through the Ticketmaster er.com website.
    For more info call Ticketmaster Phone Number Customer Service.

    ReplyDelete
    Replies
    1. அறியேன் நன்றீ எனிவே

      Delete