Wednesday, April 2, 2014

\ஒரு ருசியான பதிவு

ஒரு ருசியான பதிவு
(A SPICEY POSTING )

சில நாட்களாகப் பதிவேதும் எழுதவில்ல. கற்பனைக்கு கடிவாளம் இடப் பட்டதோ என்று எழுதி சில காணொளிகளைப் பதிவு செய்திருந்தேன். உண்மையில் சிந்தித்து எழுதுவதற்கு நேரமில்லை. என் இரண்டாம் மகனின் மகன் . என் இரண்டாம் பேரன் என்னுடன் சில நாட்கள் கழிக்க வந்திருக்கிறான். அவ்வப்போது நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போய் வந்தாலும் விடுமுறை நாட்களில் அவன் மட்டும் இங்கு எங்களுடன் தங்க வந்தது இதுவே முதல் தடவை. இவனைப் பற்றி பல பதிவுகள் எழுதி இருக்கிறேன் நான் பதிவு ஏதும் எழுதிவலைத்தளத்தில் பதிவு செய்ய இயலவில்லை என்று குறை பட்டுக்கொண்டிருந்தபோது “ நான் எழுதித் தருகிறேன் என்று சொல்லி ஒரு கதை எழுதிக் கொடுத்தான் இவனுக்கு இப்போதுதான் வயது ஒன்பது முடிந்திருக்கிறது. “ எழுதிக் கொடு பதிவிடுகிறேன்என்று சொன்னேன். அவன் எழுதிக்கொடுத்த கதை கீழே. இவனுக்குத் தமிழ் படிக்கவோ பேசவோ வருவதில்லை. ஆங்கிலம்தான் ஆகவே கதையும் ஆங்கிலத்தில்தான்.

THIS IS A STORY OF AKBAR AND BIRBAL
Once when Birbal went to Akbar’s court, Birbal teased Akbar for becoming fat.Akbar explained”It is when I see food  I eat it all.”Birbal said,” No Maharaj ;it is because you don’t have any tension”Akbar  didn’t believe it . He said ,”Prove it “Then Birbal said “OK” Birbal went and bought a goat from the market. And fed it well daily. When the king came for inspection he found the goat same and it did not gain or lose any weight.He was surprised…! He asked Birbal ,”How did you do it.?”Birbal said “Every night I tied it to a cage of a hungry lion” Akbar was proud of Birbal;s wit.

என்ன நண்பர்களே கதையைப் படித்தீர்களா.? பலரும் கேட்ட கதையாய் இருந்தாலும் ஒரு கதை சொல்லியின் உத்தி தெரிகிறது இல்லையா.?எழுதிவிட்டேன். இனி பதிவிடத்தான் வேண்டும் என்றுஅவனிடம் சொன்னதும் WHAT ARE YOU GOING TO WRITE ABOUT THE AUTHOR ? என்று கேட்கிறான்.......!

கதாசிரியன்

இவனே அவன் இரு ஆண்டுகளுக்கு முன் 
                                ******************
பேரனின்  கதை ஆங்கிலத்தில் இருந்ததால் இந்தப் பதிவில் ஒரு ஆங்கிலக் கவிதை தருகிறேன். அதை தமிழ்படுத்த வாசகர்கள் முன் வரலாம்  முதலில் ஒரு போட்டியாக அறிவிக்கலாம் என்றிருந்தேன் நல்ல மொழி பெயர்ப்பு அல்லது மொழியாக்கம் எழுதுபவர்களுக்கு ஒரு பட்டப் பெயர் அறிவிக்கப் படும் வாசகர்களுக்கு உதவ கவிதையின் தலைப்பையும் தருகிறேன் எங்கே பார்க்கலாம் எத்தனை பேர் இரு மொழி வல்லுனர்கள் என்று

DRONA

THY flaunted virgin phalanx cleft a two

By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,
 
Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of thine own son. Thou didst but drain
The bitter gall thy vanity had brewed!
                 ********************************
ஹிரண்யகசிபுவின் மனைவியின் கர்ப்பத்தில் ப்ரஹலாதன் இருந்தபோது நாரதரின் நாராயண மந்திர உபதேசங்களைக் கேட்ட ப்ரஹலாதன் தன் சிறு வயதிலேயே அசைக்க முடியாத நாராயண பக்தனாக விளங்கினான் என்னும் கதையை நம்பும் நம்மில் பலரும் இந்த சாத்தியக் கூற்றையும் நம்பத்தான் வேண்டும் . இதோ பார்த்து ரசியுங்கள்.  





23 comments:

  1. தங்கள் பேரனின் கதை சொல்லும்
    திறன் இந்தக் காணொளியை
    ஆச்சரியமற்றதாக்கி விட்டது
    பேரனுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கவிதை நல்லா இருந்தது. உங்கள் பேரனின் கதையும் நன்றாக இருந்தது. கவிதையை மொழி பெயர்க்கும் அளவுக்குத் திறமை இல்லை. தமிழிலேயே கவிதை எழுத வராது! :))))

    இந்த விளம்பரம் தான் தினம் தினம் வருதே. இந்தக் காலத்து இளம்பெண்களுக்கு இந்த விளம்பரம் பிடிக்கவில்லை என முகநூல் மூலம் அறிந்தேன். :)))

    ReplyDelete
  3. நீங்க கூப்பிட்ட உடனே வந்துட்டேன். :))) மின்சாரம் இருக்கணும், அதோட வேறே வேலை இல்லாமலும் இருக்கணும். :))))

    ReplyDelete
  4. உங்கள் ஜீன்கள் அபியிடமும் உள்ளன அல்லவா, கண்டிப்பாகக் கதாசிரியர்தான். காணொளி சுவாரசியம். தமிழாக்கம் பண்ண ஆங்கில இலக்கியப் புலமை மட்டு.

    ReplyDelete
  5. அந்த சின்னஞ்சிறிய 'கதை சொல்லி'க்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    தமிழைப் படுத்த வேண்டாம் என்று நான் அந்த முயற்சியில் இறங்கவில்லை.

    விளம்பரம் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்!

    ReplyDelete
  6. தங்களின் பெயரனுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  7. வளரும் பயிர் முளையிலே என்பார்கள் - தானே!..

    நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. பேரனுக்கு வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  9. பின்னாளில் பேரன் மிகப்பெரிய கதாரிசிரியாராக வருவார்... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. விளையும் பயிரின் திறமைக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  11. இந்த பேரந்தான் அன்று வெளியிட்ட கானொளியில் நடக்க முயற்சித்தவனா?

    ReplyDelete
  12. தங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள். கொஞ்சம் முயன்று தமிழையும் அவனுக்குச் சொல்லிக்கொடுத்துவிடுங்கள். ஏனெனில், தமிழை, மூன்றாம் தலைமுறைக்குத் தெரியாமல் செய்துவிட்டீர்கள் என்ற பழி தங்களுக்கு வந்துவிடலாகாது அல்லவா?

    ReplyDelete
  13. கதை எழுதியது தங்கள் பெயரனல்லவா அதனால் எழுத்துத் திறமை இயல்பாகவே வந்துவிட்டது போலும்.அவருக்கு என் வாழ்த்துக்கள். ஆங்கிலக் கவிதையை தமிழில் மொழியாக்கம் செய்யப் போகிறவருக்காக காத்திருக்கிறேன். ஏனோ தெரியவில்லை காணொளியின் இணைப்பே வரவில்லை.

    ReplyDelete

  14. @ ரமணி
    @ கீதா சாம்பசிவம்
    @ உமேஷ் ஸ்ரீநினிவாசன்
    @ ஸ்ரீராம்
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ துரை செல்வராஜு
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ ஸ்கூல் பையன்
    @ இராஜராஜேஸ்வரி
    @ டி.பி.ஆர் ஜோசப்
    @ செல்லப்பா யக்ஞசாமி
    @ வே. நடன சபாபதி
    அனைவருக்கும் வருகை தந்து என் பேரனை வாழ்த்தியதற்கு நன்றி. இந்த வாழ்த்துக்களைப் பற்றி அவனிடம் சொன்னபோது I am becoming famous என்றான்.தானே எழுந்து நடக்க முயற்சி செய்யும் காணொளியில் கண்டது இவனையே. அவனுக்குத் தமிழ் பேசப்படிக்க எழுத வருவதில்லையே எனும் ஆதங்கம் எனக்குண்டு.என்ன செய்ய?இவன் பெற்றோருக்கே தமிழ் சரியாகவராதே.இரண்டாம் தலை முறைக்கே தமிழ் தெரியவில்லையே.
    இது வரை ஒருவரும் மொழியாக்கம் செய்ய வரவில்லை. பார்ப்போம். சிந்திக்க நேரம் வேண்டுமல்லவா.?அனைவருக்கும் மீண்டும் நன்றி.

    ReplyDelete
  15. உங்களின் பேரன் திறமைசாலியாக இருக்கிறான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. குழந்தைக்கு வாழ்த்துக்குள்.
    வாழ்க வளமுடன்!
    வாழ்க நலமுடன்.

    ReplyDelete
  17. தங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள். முயற்சியைத் தொடர விடுங்கள். அதே சமயம் தமிழிலும் சில பயிற்சிகளைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete

  18. @ தளிர் சுரேஷ்
    @ கோமதி அரசு
    @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைக்கும் கருத்துபதிவுக்கும் என் ஒஏரனை வாழ்த்தியதற்கும் நன்றி

    ReplyDelete
  19. கதை அருமை. பேரனுக்கு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. சுட்டிப் பையனுக்கு வாழ்த்துக்கள். விளையும் பயிர் முளையிலேயே தெரிந்து விட்டது.
    ஆங்கில பக் கவிதையை தமிழ் படுத்த முயற்சி செய்து பார்கிறேன்.

    ReplyDelete
  21. குட்டிக் கண்ணனுக்கு வாழ்த்துகள்.....

    இந்த விளம்பரம் பலருக்கு பிடிப்பதில்லை.... :)

    ReplyDelete
  22. மொழியாக்க முயற்சி செய்கிறேன்.. கவிதையின் ஆங்கிலமும் அமெசூராக இருக்கிறதே..

    ReplyDelete

  23. @ அப்பாதுரை
    விரைவிலேயே மொழியாக்கம் எதிர் நோக்குகிறேன் நலம் தானே. நீன்ன்ன்ண்ட இடைவெளி.?

    ReplyDelete