நிலவைப் பழிக்கும் முகம் _அதில்
நினைவைப் பதிக்கும் கண்கள்
நிலமடந்தை நாணும் எழில் _முத்துச்
சரம் விரித்த முல்லைச் சிரிப்பு _சிந்தக்
கமல மலர் செவ்விதழ் விரிப்பு _ கொண்டு
படர் கொடி வெல்லும் துடி இடை _ என்
இடர் சேர்க்க இடையிடை யாட _மென்னடை
நடந்தென்முன் நின்றாள்_ இன்பக்
கனவினை நனவாக்க எண்ணி _ வந்த
கற்பனைக் கண் கண்ட கன்னி .
பண்ணும் மறந்தேன் ,எனையும் மறந்தேன்
இழுத்துப் பிடித்தேன் என்னிதழ் பதித்தேன்
அவளிதழ் சுவைத்தேன் ,போதை யிலாழ்ந்தேன்
பேதையவள் மிரண்டாள் ,மிரட்சியில் துன்பம்
கோதையவள் கண்டாள் , காட்சியில் இன்பம்
நண்டவள் நரியானேன் நானென்றாள்
கொண்டவள்தானே குறைஇல்லை என்றேன்
தனிமையில்தான் தழைத்திடும் துன்பம்
இருவரும் இணைந்தால் இருக்காது என்றேன்
எனையவள் நோக்கினாள் இரண்டே வினாடிகள்
இசைவினை அறிந்தேன் ஒரு கண்ணசைவிலே
அணைப்பினில் பெற்றாள் இன்பம் _பின்
இணைந்ததும் பெற்றோம் இன்பம்
இன்பம் இன்பம் இன்பம் !
கனவுக் கன்னி காதல் மடந்தை ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete