Saturday, April 30, 2011

ஆலயம் சென்றதனாலாய பயன்..............

ஆலயம்  சென்றதனாலாய பயன்...
----------------------------------------------
      
       என் இளைய மகனின் இரண்டாம் பிள்ளையின் பிறந்த 
நாளுக்கு சென்னையில் இருந்தேன். கேக் வெடடும் பிறந்த  நாளை
விட  வேறு நல்ல முறையில் பிறந்த நாள் கொண்டாடலாம், என்ற
என் பேச்சுக்கு எதிர்ப்பின்றி உடன்பட்டு, ஒரு முதியோர் இல்லத்
துக்கு உணவளித்து மகிழ்ந்தனர். விளைவு என் பதிவு; “ ஹாப்பி
பர்த்டே, விதையாகி பின் விருட்சமாக...” அருகில் இருந்த சந்தான
சீனிவாச பெருமாள் ஆலயத்துக்கும் சென்றிருந்தோம்.ஆலயத்தில்
ஆங்காங்கே கல்வெட்டில் படிப்பினைகள் செதுக்கி வைத்துள்ள்னர்.
அவற்றைக் குறிப்பெடுத்துக் கஷ்டப்படாமல் இருக்க,கைப் புத்தகம்
விற்கிறார்கள். அவற்றை வலையுலக நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன். ஆலயம் சென்றதனாலாய பயன்........

                            மகிழ்ச்சி
                           -------------
ஏழு ஸ்வரங்களை முறையாக வரிசைப் படுத்தினால் இனிய
இசை கிடைக்கும். அதுபோல்:

பேசும் முன் கேள்.
எழுதும் முன் படி.
செலவழிக்கும் முன் சம்பாதி.
முதலீடு செய்யும் முன் விசாரி.
குற்றம் செய்யும் முன் நிதானி.
ஓய்வு பெறும் முன் சேமி.
இ றக்கும் முன் தருமம் செய்.


என்ற ஏழு நியதிகளின் அடிப்படையில் நம் வாழ்க்கையை
அமைத்துக்கொண்டால் இனிதாய் அமையும் அல்லவா..


                            நாகாக்க  காவாக்கால்...
                            -------------------------------
கோபமாய்ப் பேசினால் குணத்தை  இழப்பாய்.
அதிகமாய்ப்  பேசினால்  அமைதியை  இழப்பாய்.
வெட்டியாய்ப் பேசினால்  வேலையை  இழப்பாய்.
வேகமாய்ப்  பேசினால்  அர்த்தத்தை  இழப்பாய்.
ஆணவமாகப் பேசினால்  அன்பை இழப்பாய்.
பொய்யாய்ப் பேசினால்  பெயரை  இழப்பாய்.
சிந்தித்துப் பேசினால் சிறப்பாய்  இருப்பாய்.


                            வாழ்க்கைக்  கணக்கு.
                             ----------------------------
நல்லவற்றைக்  கூட்டிக்கொள்.
தீயவற்றைக்  கழித்துக்கொள்.
அன்பைப்  பெருக்கிக் கொள்
நல் வாழ்க்கையை  வகுத்துக்கொள்.


                              மனிதப்  பிற்வி
                               -------------------
ஜனனம்  என்பது  தாய்  தந்தையர்  படைப்பு.
மரணம் என்பது  இறைவனின்  அழைப்பு.
இடைப்பட்ட வாழ்க்கை  அத்தனையும்  நடிப்பு.


                              பயனில்லா  ஏழு
                               ----------------------
ஆபத்துக்குதவா  நண்பன்.
அரும்பசிக்குதவா  அன்னம்
பெற்றோர்  சொல் கேளா  பிள்ளை.
தரித்திரம்  அறியா  பெண்டிர்
வறியோர்க்குதவா  பொருள்.
எழுத்தறிவில்லா  பிறவி.
பிறர்க்குதவா வாழ்க்கை.


                            செயல்கள்.
                            ---------------
நாம் நம் செயல்களைத் தீர்மானிக்கின்றோம்.
நம் செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன.


                         மாதா,பிதா, குரு ,தெய்வம்.
                         ========================
தாயின்  அருமை,குழந்தையின் பிறப்பில்.
தந்தையின் அருமை ,  பிள்ளையின்  வளர்ச்சியில்.
ஆசிரியரின்  அருமை,  மாணவனின்  படிப்பில்.
இறைவனின்  அருமை,  இயற்கையின் படைப்பில்.


                             அனுபவம்
                              ---------------
அறுபது சொல்வது அனுபவ  நிஜம்.
அதை  இருபது  கேட்டால் ஜெயிப்பது  நிஜம்.


                            கொடுப்பதும்   தடுப்பதும்
                             ---------------------------------
இறைவன்  கொடுப்பதை  யாராலும்  தடுக்க  முடியாது.
இறைவன்  தடுப்பதை  யாராலும்  கொடுக்க  முடியாது.


                              நற்குணம்
                                ------------
விட்டுக்கொடுப்பவர்  கெட்டுப்போவதில்லை.
கெட்டுப்போனவர்  விட்டுக்கொடுத்ததில்லை.


                              விடா  முடற்சி.
                               ------------------
மிகப்பெரிய  சாதனைகள் சாதிக்கப்படுவது
வலிமையினால் அல்ல, விடா முயற்சியால்தான்.
                             
 .                            பொறுமை.
                              --------------
தண்ணீரையும் சல்லடையில்
எடுத்துச் செல்லலாம் அது
பனிக்கட்டியாக உறையும் வரை
பொறுத்த்திருப்போமேயானால்.

                             எதிர்பார்ப்பு
                              ---------------
கடமையைச் செய்யுங்கள்
பலனை எதிர் பாருங்கள்.
மனிதர்களிடத்தில் அல்ல,
இறைவனிடத்தில்.

                            வெற்றி
                            -----------
விழித்து எழுந்தவுடன்
கிடைப்பதல்ல வெற்றி
விழுந்து எழுந்தபின்
கிடைப்பதே வெற்றி

                            முயற்சியின்மை
                             ---------------------=
முயலும் வெற்றி பெறும்
ஆமையும் வெற்றி பெறும்
முயலாமை ஒன்றுதான்
வெற்றி பெறாதது.

                             உயர்வானவை
                              --------------------
பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட
பிறர்க்கு உதவும் கரங்கள் உயர்வானவை.

                           வாழ்க்கை
                           --------------
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது
                                               திருவாசகம்
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது
                                               கீதை
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது
                                               குறள்
அருளாளன் சொல்ல ஞானிகள் கேட்பது
                                               திருவருட்பா
ஞானி சொல்ல ஞானிகள் கேட்பது
                                               திருமந்திரம்
மகன் சொல்ல மகேசன் கேட்பது
                                               பிரணவம்
நல் மனைவி சொல்ல கணவன் கேட்பது
                                               வாழ்க்கை.

=====================================   
 
  என்னுடைய  கணினி  செயலிழந்து இருப்பதால் வலையில்
தொடர்பு கொள்ளவும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்
இயலாத நிலையில், கிடைத்த ஒரு மணி நேரத்தில் , ஏற்கனவே
தட்டச்சில் ஏற்றியதை பதிவாக இடுகிறேன். கணினியை  சரி
செய்து சீக்கிரமே தொடர்பு எல்லைக்குள் வருவேன். நன்றி.  
 














9 comments:

  1. அனுபவமும் ஞான முதிர்ச்சியும் இலவசமாகத் தரும் அரும் முத்துக்கள் இவையெல்லாம்.

    இவற்றில் பல என் பாட்டி தினமும் ஸ்லோகம் போலச் சொல்லிக் கேட்டவை.

    இப்போது இவற்றை உபதேசிக்க யாருமில்லை.

    மிகச் சிறப்பான பகிர்வு.இவற்றைக் கசடறக் கடைபிடித்தாலே வாழ்வு அமிர்தமாய் இனிக்கும்.

    நன்றி பாலு சார்.

    ReplyDelete
  2. தத்துவ முத்துக்கள் அருமை. மிக பயனுள்ளதும் கூட....

    ReplyDelete
  3. ஆலயம் சென்றதனாலாய பயனை எங்களுக்கும் பகிர்ந்தளித்தது குறித்து நன்றி

    "அறுபது சொல்வது அனுபவ நிஜம்.
    அதை இருபது கேட்டால் ஜெயிப்பது நிஜம்"

    Punch வசனம் மாதிரியே இருக்கு.

    ReplyDelete
  4. அத்தனையும் பொன்மொழிகள்.

    ReplyDelete
  5. I don't usually linger around the religious book stores in temples... But there's an Aiyappan Temple in Trichy that I rather like a lot... They sell these posters- (Rs. 1/- back then)... just printout of quotation like those you've mentioned here... All of which are amazing! in this temple I found 2 such amazing words of wisdom... I have never been able to forget them so far...

    "Those who know, do not speak..."(Chinese Proverb)

    "One day I saw a beggar ailing and starving. It disturbed me. I asked God- 'why don't you do something...'? God did not replied...

    That night, God said, quite suddenly... 'I certainly did something... I made you...'...."

    Really good post, sir! Thanks for sharing...

    ReplyDelete
  6. அருமை. சார்.
    எங்கள் வீட்டுத் திருமணங்களில் என் சித்தப்பா சிறு சிறு நூல் பரிசளிப்பார்கள். அதில் என் அருட்கவிகளோடு , இது போன்ற தத்துவ முத்துக்களும் இருக்கும்.
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. //அறுபது சொல்வது அனுபவ நிஜம்.
    அதை இருபது கேட்டால் ஜெயிப்பது நிஜம்.//
    அருமை
    //
    நல் மனைவி சொல்ல கணவன் கேட்பது வாழ்க்கை.//
    :) :)

    ReplyDelete
  8. அனைத்து பொன்மொழிகளும்
    "பொன்" மொழிகள்தான்
    திரும்பத் திரும்ப்பப் படித்தேன்
    திகட்டவே இல்லை
    அருமையான பதிவு
    பதிவிட்டமைக்கு நன்றி
    ....

    ReplyDelete
  9. ஆலயம் சென்றதனாலாய பயன்......
    அருமையான பகிர்வாக்கித்தந்த
    இனிய முத்துகள் பயனுள்ளவை..

    இணைப்பு தந்து மகிழ்வளித்தமைக்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

    ReplyDelete