Sunday, April 24, 2011

KAELVIKKENNA PATHIL.?

கேள்விக்கென்ன  பதில்.?
---------------------------------
தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 
ஆடிக்கொண்டிருந்தாள்  மாது ஒருத்தி. 
யாரந்த அழகி, பேரென்ன அவளுக்கு 
என்று அறியாமல் கேட்டு விட்டேன்  
அருகில் இருந்த சிறுவனை   கவனியாமல். 
   
            பட்டென்று நிமிர்ந்து பார்த்தான் 
            பேர் சொல்ல வந்த பேரன். 
            வீட்டில் மனைவி தவிர மற்றோர் 
            எல்லாம் அழைப்பதென்னை அப்பா என்றுதான். 

ஆங்கிலத்தில் கேட்டான் ஆறுவயது சிறுவன், 
" அப்பா, டூ  யூ லவ் ஹெர்..?"
அதிர்ச்சியில் ஆடிப்போனேன் ஓரிரு கணங்கள் 
"அனைவரும் அன்புக்கு உரியோரே. 
உன்னை, உன் அப்பா, அம்மா, அக்கா 
அனைவரையும்  நான் லவ் செய்கிறேன். 
அதுபோல் உயிரோடிருக்கும் எல்லா 
ஜீவ ராசிகளையும் அன்பு செய்கிறேன்.
அன்புதான் கடவுள்; அன்பே சிவம் என்றெல்லாம் 
கூறி ஒரு உரையே நிகழ்த்தினேன். 

             அவன் எதையும் உணர்ந்தவன் போல் 
              தோன்றவில்லை. அவன் முகத்தில் 
              தெரிந்தன சிந்தனைக் கோடுகள் சில பல. 
              சில நொடிகள் கழித்து சிவந்த முகத்துடன் 
              கேட்டானே ஒரு கேள்வி, பதிலென்ன சொல்ல.?

"லைக்  யூ ஹக் அண்ட் கிஸ் மீ 
 வில் யூ  ஹக் அண்ட் கிஸ் ஹெர் டூ.?"

( "LIKE YOU HUG AND KISS ME, 
 WILL YOU HUG AND KISS HER TOO.?")

என்னைக் கட்டிப் பிடித்து அணைத்து முத்தம்தருகிறாய்
அதுபோல் அவளையும் கட்டி அணைத்து முத்தம் தருவாயா.?
===============================================











 






   


13 comments:

  1. ஆஹா, இந்தப்பொடியன்களிடம் மாட்டினால் போச்சு; அவ்வளவு தான்; நம்மை உண்டு இல்லையெனச் செய்திடுவார்கள். மிகவும் உஷாராகத்தான் இருக்கணும்.

    ReplyDelete
  2. ஹஹா என்ன சொல்வது தெரிய வில்லை ...

    சாதரணமாய் பேசினால் கூட யாட கூடம் ஆகிவிடுகிறது

    ReplyDelete
  3. அன்புள்ள ஐயா வணக்கம் . உங்களின் இந்த பதிவு கண்டேன் இன்றைய சிறுவர்கள் எதிலும் துடுக்கனவர்கள் நல்ல திறமை சாலிகள் இவர்களை உங்கள் போன்ற அனுவமம் நிறைந்தவர்கள் தன் வழி நடத்த வேண்டும் நல்ல வாழ்க்கை முறைகளை கற்று தரவேண்டும் அப்போதுதான் எதிர்காலம் சிறக்கும் பாராட்டுகள்

    ReplyDelete
  4. குழந்தைகள் இன்றைய சூழலைப் ப்ரதிபலிக்கிறார்கள்.நாம் அவர்களுக்குத் தெரியாது என நினைக்கும் துறைகளில் எல்லாம் அவர்களுக்கென ஒரு அழுத்தமான பார்வையும் கருத்தும் இருக்கிறது.

    பேரனுக்கு த்ருஷ்டி சுற்றிப்போடுங்கள்.தாத்தாவின் ஜாடை தெரிகிறது தோற்றத்திலும் பேச்சிலும்.புத்திசாலித்தனமான குழந்தை.தீர்க்காய்சாக இருக்கட்டும்.

    ReplyDelete
  5. Prasad's son Abhi is smarter than the father it seems ! I too experience the same type of queries from my 6 year old son who has caught me on the wrong foot more than once. Ushaar Aiya uashaaru....!

    ReplyDelete
  6. Your Post and the comments above are interesting. I could feel the generation gap.

    ReplyDelete
  7. இப்ப எல்லாம் சிறுவர்கள் அதிகமாக சிந்திக்கிறார்கள் போல்!

    ReplyDelete
  8. //பட்டென்று நிமிர்ந்து பார்த்தான்
    பேர் சொல்ல வந்த பேரன்.
    வீட்டில் மனைவி தவிர மற்றோர்
    எல்லாம் அழைப்பதென்னை அப்பா என்றுதான். //


    உங்களின் இந்த இடுகை வேறுபட்ட கோணத்தில் பார்க்கவைக்கிறது . சிறுவர்களின் மன நிலையை படம் பிடிக்கிறது

    ReplyDelete
  9. எனக்கு அந்தச் சிறுவனின் அன்பில்
    எந்தக் கல்மிஷமும் இருப்பதாகத் தெரியவில்லை
    அந்தப்பெண்ணையும் சிறுவனிடம்
    அன்பு செலுத்துவதைப்போலவே
    அன்புசெலுத்தினால்
    உறுதியாக கட்டி அணைத்து முத்தம் தருவேன் எனத்
    தைரியமாகச் சொல்லலாம்
    நான் சொல்வேன்
    வித்தியாசமான சுவாரஸ்யமான பதிவு
    தொடரவாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அய் அய் ஆசையைப் பாரு.

    இதுக்குத் தான் பசங்களை அவங்க இஷ்டத்துக்கு CN , சுட்டி டிவி , ஜெட்டிக்ஸ் பாக்க விட்டுடனும்கிறது.

    ReplyDelete
  11. கேள்விக்கென்ன பதில் என்பதை விடவும் கேள்விக்கென்ன பின்னணி என்று கேட்கத் தோன்றுகிறது. என்னைப் போல் அவளையும் அணைத்து முத்தமிடுவாயா என்றால் பொறாமையா? பொஸஸிவ்னெஸ்ஸா? சிக்கவைக்கும் தந்திரமா? அல்லது அறியாமையா? கேள்வியின் நாயகனே அறியக்கூடும் கேள்வியின் உள்ளர்த்தம். பாராட்டுகள் பேரனுக்கு.

    ReplyDelete