Sunday, January 26, 2014

வாழ்வியலில் ஒரு பாடம்


                               வாழ்வியலில் ஒரு பாடம்
                                -----------------------------------


ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்தார்.என்ன பாடம் நடத்தப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பில் மாணவர்கள். ஆசிரியர் மேசைக்கு அருகே நின்று  ஒரு கண்ணாடி பாட்டிலை வைத்தார். அதற்குள் கால்ஃப் பந்துகளைப் போட்டு நிரப்பினார். மாணவர்களிடம் கண்ணாடி பாட்டில் நிரம்பிவிட்டதா எனக் கேட்டார். மாணவர்கள் ஆமோதித்தனர். அதன் பின் சில கூழாக்கற்களை கண்ணாடி ஜாரில் போட அவை கால்ஃப்பந்துகளுக்கிடையில் இருந்த காலி இடங்களுக்குள்  போய் அமர்ந்து கொண்டன. இப்போது ஜார் நிரம்பிவிட்டதா என்று கேட்டார். மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆம் என்றனர். பிறகு ஆசிரியர் ஒரு பையில் இருந்த மணலை பாட்டிலுக்குள் இட்டார். மணல் சரிந்து கொண்டு ஜாரில் இருந்த வெற்று இடங்களை நிரப்பியது. இப்போது ஜார் நிரம்பி விட்டதா எனக் கேட்டார். எல்லோரும் கோரசாக ஆம் என்றனர். இன்னும் என்ன செய்யப் போகிறாரோ என்னும் ஆவல் அவர்கள் கண்களில். ஆசிரியர் அவர் கோட்டுப் பைக்குள் இருந்து ஒரு பாட்டில் சாக்கலேட் பானத்தை ஜாரில் விட்டார். ஜாரும் அந்தபானத்தை ஏற்றுக் கொண்டது.  ....





எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. அதில் இருப்பதை பகிர்ந்து கொள்கிறேன். முதலில் விளக்க மாக எழுதலாம் என்று எண்ணினேன். ஆனால் என்னதான் எழுதினாலும் இந்தக் காணொளி விளக்குவது போல் இருக்காது. மனம் மாறி அந்தக் காணொளியை அப்படியே பகிர்கிறேன்.


 ஒரு நிழலாட்டம் என்னவெல்லாம் சொல்கிறது.REALLY INCREDIBLE.!







18 comments:

  1. எதை முதலில், எதை முடிவில் என்று, ஒரு ஜார் மூலம் ஆசிரியர் விளக்கிய வாழ்வியல் பாடம் மிகவும் அருமை...

    நிழலாட்டம் - அற்புதம்...

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சிறுகதை சொல்வது போல ஆரம்பித்து அழகான தத்துவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. வாழ்வியல் பாட காணொளி அருமை.
    கைகள் செய்யும் அற்புதங்கள் மிக அருமை.

    பகிர்வுக்கு நன்றி.


    குடியரசு தின நல் வாழ்த்த்துக்கள்.

    ReplyDelete
  4. நிழலாட்டம் - அற்புதம்...ஐயா
    நன்றி

    ReplyDelete
  5. நிழலாட்டம் - அற்புதம்...ஐயா
    நன்றி

    ReplyDelete
  6. அற்புதமான காணொளிகள்
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  7. இரண்டுமே அருமை. இரண்டாவது பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. இரண்டு காநோளிகளும் அருமை பாலு சார். இரண்டுமே இப்போது தான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. எப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று முதல் காணொளியும் எப்படி ரசனையுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று இரண்டாவது காணொளியும் விளக்கும் விதம் அருமை. கையால் ஓவியம் வரையலாம். கைகளே ஓவியங்களானால்... அற்புதம். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  10. பேராசிரியர் மாணவர்களுக்கு சொன்ன அறிவுரையை முன்னரே படித்திருக்கிறேன். ஆனால் அதை காணொளியில் பார்க்கும்போது அது இன்னும் மனதில்ஆழமாகப் பதிகிறது. நிழலாட்டம் அற்புதம். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

  11. @ திண்டுக்கல் தனபாலன்
    @ ஜம்புலிங்கம்
    @ நண்டு@ நொரண்டு
    @ கோமதி அரசு
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ ரமணி
    @ ஸ்ரீராம்
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ கீதமஞ்சரி
    @ வே. நடன சபாபதி
    வருகை தந்து ரசித்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  12. சிறப்பான பதிவு. அசத்திவிட்டீர்கள் ஐயா!

    ReplyDelete
  13. வணக்கம்
    ஐயா
    சிறப்பான வாழ்வியல் தத்துவம். அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. எல்லாமே அருமை! இனிமை!

    ReplyDelete
  15. REALLY INCREDIBLE.!

    அருமை..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  16. இரண்டுமே மிகச் சிறப்பான காணொளிகள். இரண்டாம் காணொளி முன்பே பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்கத் திகட்டாத ஒன்று...

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  17. எதை, எதை எப்போது எங்கு எவ்வாறு வைக்க வேண்டும் என்பதற்கு இந்த பாடம் அருமையா உதாரணம்.

    ReplyDelete