இவன் இப்படித்தான்
--------------------------------
இவன் ஏன் இப்படி என்று
அடிக்கடி எழும் கேள்வி. மனதில் பட்டதைச் சொல்பவன் எந்த உள் நோக்கமும் இல்லாதவன் பெரும்பாலும்
தவறாகவே புரிந்து கொள்ளப் படுபவன் இதுவே இவனது பலமும் பலவீனமும் என்றும் தெரிந்தவன் இருந்தாலும் இந்த குணத்துக்கு ஒரு காரணம்
இருக்க வேண்டும் அல்லவா.
ஒரு முறை இவன் திருச்சியில் இருந்தபோது ஒரு நகைக்கடையில்
அமர்ந்து ஒரு சிறிய மோதிரம் வாங்கும் பணியில் ஈடு பட்டிருந்தான் இவனுக்கு அருகில் ஒரு வசதி மிக்கவர் போல் தோன்றிய
தம்பதியினர் பல நெக்லசுகளைப்பார்த்து ஒன்றைத் தேர்வு செய்திருந்தனர் அகஸ்மாத்தாக அந்த நெக்லசைப் (மூன்று வரி கற்கள்
பதித்தது) பார்த்தவனுக்கு அதில் ஏதோ குறை இருப்பது போல் பட்டது. சிறிது நேரத்தில் அது என்ன என்றும் தெரிந்து
விட்டது. அந்தத் தம்பதியினர் அதை விலை கொடுத்துப் பெறும் முன்னே இவன்
அவர்களிடம் அது வேண்டாம் என்று கூறினான் கடைக்காரருக்குக் கோபம் வந்தது தம்பதியினர் ஏன்
என்னும் குறிப்பில் இவனைப் பார்த்தனர். பிறகு கேட்கவும் செய்தனர். நெக்லசில் கற்களின் வரிசையில்
ஒன்றிரண்டு கற்கள் காண வில்லை என்றான்
இவன் சொன்னபின்னும் அவர்களால்
அந்தக் குறையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவன் சுட்டிக்காட்டியபின்அவர்களும் கற்கள் சில இல்லாதிருப்பதைக் கண்டனர் பின் நகை ஏதும் வாங்காமல் சென்றனர் கடைக்காரருக்கு அனாவசியமாக இவன் மேல் கோபம் வந்தது சாதாரணமாகக் காணக் கிடைக்காத குறை இவன் கண்ணில் எப்படிப்பட்டது என்றால் அது இவன் செய்யும் தொழில் சார்ந்தது என்று புரியும் இவன் தொழிற்சாலையில் தரக்கட்டுப்பாட்டுத்துறையில் இருந்தான் பொழுது விடிந்து பொழுது போகும் வரை உற்பத்தியாகும் பொருட்களின் தரத்துக்கு இவனே பொறுப்பாளியாகக் கருதப்பட்டான் சாதாரணமாக பிறர் கண்களில் தென்படாத குறை இவனுக்குத் தெரிந்து விடும் அதுபோல்தான் நகைக்கடையிலும் நேர்ந்திருக்கவேண்டும் இவன் அந்தக் குறையைச் சுட்டிக் காட்டும்போது எந்த உள் நோக்கமும் இல்லாதுதான் சொன்னான் குறை கண்ணில் பட்டது சொல்லி விட்டான் வேறு யார் கண்களிலும் பட்டிருந்தாலும் நமக்கேன் வம்பு என்று பேசாமல் இருப்போரே அதிகம்
|
தமிழில் "இங்கிதம்" என்று ஒரு வார்த்தை இருக்கிறது. அதாவது "இடம்,பொருள்,ஏவல்" அறிந்து நடப்பதைத்தான் இங்கிதம் என்கிறார்கள். குறைகள் களையப்படவேண்டியவைதான். ஆனால் முதலில் தன் குறைகளை அடையாளம் கண்டு அவைகளை நீக்கவேண்டும். அதன் பிறகு அடுத்தவர் குறைகளைச் சொல்லலாம். ஆனாலும் அதற்கு பொருத்தமான இடம் காலம் போன்றவற்றை உணர்ந்து சொல்லவேண்டும். அப்போதுதான் அதற்குப் பயன் உண்டு.
ReplyDeleteஒரு குறையை 25 வயது வாலிபன் சொல்வதற்கும் 80 வயது கிழவன் சொல்வதற்கும் வித்தியாசம் வேண்டும்.
உங்கள் பதிவின் இரண்டாம் பகுதி மொபைலிலிருந்து பார்க்கும்போது சரியாக படிக்க முடியாமல் இருக்கிறது.
ReplyDeleteமற்றபடி பொதுவான கருத்தாக, நண்பர்கள் குறையை நயமாக, அதுவும் அவசியம் தேவையாயின், அளவாகச் சொல்லலாம்.
அய்யா ஜி.எம்.பி அவர்களுக்கு வணக்கம். சிலருக்கு வரப் போகும் ஆபத்தை உணரும் சக்தியுண்டு. அதேபோல மற்றவருக்குத் தோன்றாத சில நுட்பமான குறைபாடுகளையும் சிலர் மேம்போக்காக பார்த்தவுடனேயே சொல்லி விடுவார்கள் . அதுபோலத்தான் ஒருவர் சொல்லும் விமர்சனங்களும்; அது நிறையாயும் இருக்கலாம், குறையாயும் இருக்கலாம். இதில் உள்ள ஒரே சங்கடம் என்னவெனில் பலபேர் நமக்கென்ன வந்தது என்று கவலைப் படுவதில்லை; போய்க் கொண்டே இருக்கிறார்கள். (உதாரணத்திற்கு பைக்கில் ஆணும் பெண்ணும் சேர்ந்து செல்லும்போது, சிலசமயம் பெண்ணின் முந்தானை போன்ற துணி, வண்டி சக்கரத்தில் சிக்குவது போல் தொங்கிக் கொண்டு இருக்கும். பின்னால் வரும் வண்டிகளில் வரும் சிலபேர்தான் மெனக்கெட்டு அவர்களிடம் சொல்லி விட்டு போவார்கள்) நீங்கள் எப்போதும் போல இருங்கள்.
ReplyDelete//இவனுக்குப் புரியாத புதிர்தான் ஒரு முக்கியமான பதிவெழுதி கருத்துக் கூற அழைத்தாலும் ஒதுங்கி விடுகிறார்கள்
ReplyDelete( இந்த ஆண்டு தீபாவளி இம்மாதம் 10ம் தேதி வருகிறது அதற்கு அடுத்த நாள் அடியேனின் பிறந்த நாள் கம் மண நாள். ஆக நான் வலை உலகில் இருந்து சில நாட்கள் விலகி இருப்பேன் 11-ம் தேதி என் மகன் என்னை சென்னைக்குக் கூட்டிப்போவதாகக் கூறி உள்ளான் சென்னை நண்பர்களுக்கு இது ஒரு தகவல் மட்டுமே. வழக்கம் போல் நண்பர்களைச் சந்திக்க விருப்பம் ) // பதிவில் இந்தப் பகுதி சரியாகப் படிக்க முடியவில்லை ஐயா! மற்றபடி குறையாகச் சொல்லாமல் முதலில் நிறைகளைப் பட்டியலிட்டுவிட்டுப் பின்னர் அப்படிச் செய்து இருக்கலாமோ என்று சொல்லி விடலாம்.
என்னைப் பொறுத்தவரை நானும் வெளிப்படையாகச் சொன்னாலும் முதலில் பதிவு எழுதி இருப்பவரிடம் உங்கள் பதிவில் இப்படிக் கருத்தைச் சொன்னால் தப்பாய் நினைக்க மாட்டீர்களே என்று கேட்டுக் கொள்வேன். அப்படியே சொன்னாலும் நெருங்கிய நண்பர்கள் பதிவில் மட்டுமே குறைகள், குற்றங்கள் சொல்வேன். மற்றபடி நெருங்கிப் பழகினாலும் சிலருக்குக் குறைகள், குற்றங்கள் சொன்னால் பிடிப்பதில்லை அல்லவா? அப்போது விலகியே இருந்து விடுவேன். குறைகளைச் சொன்னாலும் பின்னர் அதற்காக வருந்துவது இல்லை. சிலருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்து தான் வருந்தி இருக்கேன். :) பிடிக்காதவங்களிடம் இருந்து விலகி இருப்பது இருவருக்குமே நன்மை தரும். மனஸ்தாபங்கள் வராது! :)
ReplyDeleteஅச்சு அசலாக உங்கள் இவனைப் (இவரைப்) போலவே இன்னொருத்தரும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இன்னொருத்தருடனான உறவு இவனுக்கு (இவருக்கு) எப்படி இருக்கும்?..
ReplyDeleteநம்மைப் போலவே இந்த இன்னொருத்தர் இருக்கிறாரே என்று பெருமைப்படுகிற அளவு நெருக்கமாக...
அல்லது நம்மைப் போலவே இன்னொருத்தனா என்ற விலகலுடனா?..
குறைந்தப்பட்சம் இருவருக்கும் ஒரு புரிதலாவது இருக்குமா?..
தமிழ் இளங்கோ ஐயா அவர்களின் கருத்தே என் கருத்தாகும் ஐயா
ReplyDelete// இப்படித்தான் ஆனால் எந்தவிதமான கருத்தும் கூறாமல் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விடுபவர்கள் இவனுக்குப் புரியாத புதிர்தான் //
ReplyDeleteஇதற்கு பிறகு வரும் வரிகள் யார் சரியாக படித்தார்கள்...?
இதோ அந்த வரிகள் :-
ReplyDeleteஒரு முக்கியமான பதிவெழுதி கருத்துக் கூற அழைத்தாலும் ஒதுங்கி விடுகிறார்கள்
( இந்த ஆண்டு தீபாவளி இம்மாதம் 10ம் தேதி வருகிறது அதற்கு அடுத்த நாள் அடியேனின் பிறந்த நாள் கம் மண நாள். ஆக நான் வலை உலகில் இருந்து சில நாட்கள் விலகி இருப்பேன் 11-ம் தேதி என் மகன் என்னை சென்னைக்குக் கூட்டிப்போவதாகக் கூறி உள்ளான் சென்னை நண்பர்களுக்கு இது ஒரு தகவல் மட்டுமே. வழக்கம் போல் நண்பர்களைச் சந்திக்க விருப்பம் )
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteவணக்கம் ஐயா மனதில் தோன்றியவைகளை வெளிப்படையாக எழுதவதில் தவறில்லை என்பது எமது கருத்து அதேநேரம் நாம் சொல்வதை அதேரீதியில் மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் எதிர் பார்க்கும் பொழுதுதான் கருத்து வேறுபாடு தோன்றி விடுகிறது
தெளிவற்ற வரிகளைத் தெளிவாக்கித் தந்த திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. மனதில் தோன்றும் அனைத்தையும் எழுதுவது சாத்தியமா என்பதைச் சற்றே யோசிக்க வேண்டியுள்ளது. அதே சமயம் எதிர்மறைக் கருத்துக்களை மனநிறைவோடு ஏற்பதும் நல்லது.
ReplyDeleteகுற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. இது எல்லோருக்கும் பொருந்தும். எனவே இது குறித்து நீங்கள் வருத்தப்படவேண்டாம். சென்னையில் நீங்கள் இருக்கும்போது சந்திக்க முயல்கிறேன்.
ReplyDeleteகுற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை...குறைகள் சொல்லுவதில் தவறு இல்லை. ஆனால் அதைச் சொல்லும் விதத்தில், இதமாக, நயம்பட உரைத்தல் நல்லது என்பது எங்கள் கருத்து. குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது அதில் தேன் தடவிக் கொடுப்பது இல்லையா அது போலத்தான் சார். எல்லோர் மனதிலும் குழந்தை ஒளிந்துகொண்டுதான் இருக்கின்றது என்னதான் மெச்சூரிட்டி வந்தாலும். எனவே நம் குழந்தைகள் என்றாலும், குடும்பம் என்றாலும், நண்பர்கள் என்றாலும், வெளி மனிதர்கள் என்றாலும் சொல்லுவதற்கும் எல்லை உண்டு. தேவை இருந்தால் மட்டுமெ சொல்லுவதை நயம்படவும் உரைத்தல் நல்லது.
ReplyDeleteபதிவில் சிலவரிகள் தெளிவாக இல்லை! இருந்தாலும் சிரமத்துடன் படித்துவிட்டேன்! குறை நிறை காண்பது அவரவரை பொருத்தது! பிறருக்காக நம் தனித்தன்மையை இழக்க வேண்டியது இல்லை! சில சமயம் விட்டுக்கொடுக்கலாம்! முழுவதுமாக மாறிவிட முடியாது!
ReplyDeleteஅன்புள்ள ஜிஎம்பி அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம். பொதுவாக வலைப்பக்கங்களை வாசிக்கும்போது தட்டச்சுப்பிழைகள் ஏற்படுவதன் காரணம் பலவாகும். என்றாலும் தட்டச்சுப்பிழை என்பது வேறு எழுத்துப்பிழை என்பது வேறு. பலர் எழுததுப்பிழைகள் செய்கிறார்கள். சொன்னால் மனம் வருத்தங்கொள்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி அவர்களிடம் நல்ல கருத்துக்கள் எளிமையாகவும் சிறப்பாகவும் கூறும் ஆற்றல் இருக்கிறது. எனவே அத்தகைய கருத்துரைக்கும் பதிவர்களிடம் மட்டும் நான் ஒற்றுப்பிழைகள், வாக்கியப்பிழைகள், எழுத்துப்பிழைகள் இருந்தால் மனம் நோகாமல் குறிப்பிட்டு எழுதுகிறேன். கவிதைகள் எழுதும் பலர் அடிக்கடி நிறைய எழுத்துப்பிழைகளைச் செய்கிறார்கள். நிச்சயம் அவர்கள் செய்யக்கூடாது. அதனைச் சற்றுக் கடினமாக உரைக்கிறேன். ஏனென்றால் தவறான எழுத்துப்பிழைகளைக் காணும்போது கோபம் வருகிறது. உங்களைப் பொறுத்தவரை எல்லாமும் சரியாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள். உண்மைதான். அது தேவையும்கூட. எந்த சமூகம் தன் தவறுகளைத் திருத்திக்கொள்ள முயலுகிறதோ அதுதான் உருப்படும். அப்படி விரும்பாதவர்கள் பற்றிக் கவலை கொள்ளவேண்டாம். உங்களின் சுட்டிக்காட்டலை எடுத்துக்கொள்கிற மனதுடையவர்களுக்குப் பெரும்பயன். ஏற்காதவர்கள் நட்டம் அடைவார்கள். சிலர் நட்டம் பார்த்து திருந்துவார்கள். சிலர் திருந்தமாட்டார்கள். எனவே உங்களின் மனத்தை அப்படியே இயங்க விடுங்கள். அதுதான் சரி. இதுதான் என் சரியும்கூட. வணக்கம் ஐயா.
பிடித்தவர்களுக்குச் சொல்லுங்கள். தவறுகளை நிறுத்திக் கொள்ள நினைப்பவர்களுக்கு அது உதவும். பிடிக்காது என்று தெரிந்தபிறகு சொல்வதை நிறுத்தி விடுங்கள்.....
ReplyDeleteவடக்கில் அனைவருக்குமே “Sab Chalta he!" attitude. வந்த புதிதில் எனக்கு புதிது. சொல்லிக் கொண்டே இருப்பேன். இப்போதெல்லாம் எனக்கும் அதே அதே.... Sab Chalta he!
சென்னையில் நண்பர்களைச் சந்தித்து மகிழ்ச்சி பெறவும், திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகளும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
ReplyDeleteஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
அன்பு ஜிஎம்பி-சார்,
ReplyDeleteதிருமண நன்னாள் வாழ்த்துக்கள், உங்களுக்கும் உங்களது துணைவியாருக்கும்.
தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும், குடுபத்தினர், நண்பர் அனைவருக்கும்.
அன்புடன்,
ஏகாந்தன், டெல்லி.
பிறந்த நாள் மற்றும் மணநாள் வாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteஉங்கள் விருப்பம் போல் எழுதுங்கள் தலைவரே! யார் என்ன சொன்னாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். வலைபதிவு எழுதும் அனைவருக்கும் இதே மாதிரி பிரச்சினைகள் என்றாவது ஒருநாள் வந்தே தீரும். கவலை வேண்டாம்... - இராய செல்லப்பா
ReplyDelete(வேளச்சேரியில் சாக்கடை நீர் தரையில் ஓடுவது நின்றவுடன் தங்களைச் சந்திக்க விருப்பம்.)
ce la vie!
ReplyDelete
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
என்னவோ சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. எனக்கு எதையும் நேராகச் சொல்லித்தான் பழக்கம் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ ஸ்ரீராம்
தேவை என்று பட்டதைத்தான் எழுதுகிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
ஐயா கருத்துப் பகிர்வுக்கு நன்றி. என் பதிவுகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும் நான் நிகழ்வுகளைத்தான் விமரிசிக்கிறேன் தனிப்பட்டவர்களை அல்ல.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
/இதற்கு மேல் யார் படித்தார்கள்/ என்று எழுதி அதை மீண்டும் படிக்க வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றி
ReplyDelete@ கில்லர் ஜி
நாம் எழுதுவதை எழுதியபடி புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறில்லையே வருகைக்கு நன்றி.
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
எதிர்மறைக் கருத்துக்களைச் சொல்பவன் எதிர்மறைக் கருத்துக்களையும் சந்திக்கத் துணிய வேண்டும் வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ வே நடனசபாபதி
குற்றம் பார்க்கவேண்டும் என்று முயற்சி செய்வதில்லை மனதில் பட்டது எழுத்துக்களில் அவ்வளவே வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ துளசிதரன் தில்லையகத்து
அணுகு முறை பற்றிக் கூறுகிறீர்கள் நிகழ்வுகள் பற்றிக்கவலை வேண்டாமா வருகைக்கு நன்றி சார்.
ReplyDelete@ தளிர் சுரேஷ்
என் குணம் பற்றித்தான் எழுதி இருக்கிறேன் சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது/ தனி மனிதரை நான் குறை கூறுவதைத் தவிர்க்கிறேன் வருகைக்கு நன்றி சார்
@ ஹரணி
ReplyDeleteஐயா வணக்கம் தட்டச்சுப்பிழைகள் எழுத்துப் பிழைகள் என்று சொல்லிப் போகும் விதம் பார்த்தால் எதையோ சொல்ல வருகிறீர்கள் என்று தெரிகிறது நானும் எழுத்துப்பிழைகளைத்தான் சுட்டுகிறேன் என்று நினைக்கிறேன் கருத்துப்பகிர்வுக்கு நன்றி ஐயா
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
தவிர்க்கப்பட முடியாதவைகள் பொறுத்துக் கொள்ளப்படவேண்டும் என்கிறீர்கள் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ அவர்கள் உண்மைகள்
வாழ்த்துக்களுக்கு நன்றி சார்
ReplyDelete@ யாழ்பாவாணன்
வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.
ReplyDelete@ ஏகாந்தன்
வாழ்த்துக்களுக்கு நன்றி சார்
ReplyDelete@ தேன்மதுரத் தமிழ் கிரேஸ்
வாழ்த்துக்களுக்கு நன்றி மேம்
ReplyDelete@ செல்லப்பா யக்ஞசாமி
நான் பெங்களூரு வந்து விட்டேன் அடுத்தமுறை சென்னை எப்பவோ வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ அப்பாதுரை
புரியவில்லையே சார் இது என்ன மொழி.?
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
புரிகிறது மேடம் வருகைக்கு நன்றி
ReplyDelete@ ஜீவி
நான் அந்த ரீதியில் சிந்திக்க வில்லையே இவனைப் போல் இருப்பவர்களும் இல்லாமலா இருப்பார்கள்? வருகைக்கு நன்றி சார் இந்த முறையும் உங்களை சந்திக்கும் வாய்ப்பினை இழந்தேன்
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
திரு தி தமிழ் இளன்கோவுக்கான மறு மொழியே உங்களுக்கும் ஐயா. வருகைக்கு நன்றி