உலகம் சிறியது
----------------------
இந்த உலகமே மிகவும்
சின்னது. ஏது உலக சிந்தனை என்று நினைக்க வேண்டாம் சில நிகழ்வுகள் அப்படி
நினைக்க வைக்கின்றன பதிவுலகில் எழுதுகிற
பலரது ஆசையும் தனது படைப்புகளை மின்னூலாக்க
வேண்டும் என்று நினைப்பது தான் நானும்
விதிவிலக்கல்ல என் ஓரிரு படைப்புகளை முன்னூலாக்கும் முயற்சியில் முக்கால் தூரம் வந்து ஏமாந்தவன்
நான். அதையே ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன் பதிவுலக நண்பர் கரந்தை ஜெயக்குமார் புஸ்தகாவை நாடும்படிக் கூறினார் தொடர்பு கொள்ள
ஒருபெயரையும் தொலை பேசி எண்ணையும்
கொடுத்தார் எனக்கு இம்மாதிரி
விஷயங்களில் சாமர்த்தியம் போதாது இருந்தாலும் முயற்சிப்பொமே என்று அவர்
கொடுத்திருந்த எண்ணை டயல் செய்தேன் என்ன
ஆச்சரியம் மறுமுனையிலெடுத்தவர் என்னைப்
பார்க்கவருவதாகக் கூறி மறு நாள் காலையில் வந்தும் விட்டார் சிறிது நேரம்
பேசிக்கொண்டிருந்தோம் அவரும் பி எச் ஈ எல் குடியிருப்பில் இருந்தவர் என்றார்
வயதில் மிகவும் இளையவர் அவரது
தந்தையின் பெயரைக் கூறினார் நான்
1991 ம் ஆண்டே பி எச் ஈ எல்லை விட்டவன் என்றேன் அவரது தந்தையார் பெயர் சொன்னார் அந்தப்
பெயரில் பலரை எனக்குத் தெரியும்
குறிப்பிட்டுக் கூற அவரால் இயலவில்லை.
மின்னூலாக்க வழிமுறைகள் பலவற்றை கூறினார்
எனக்கு நான் ஏற்கனவே நூலாக்கி
இருந்த சிறு கதைத் தொகுப்பை வெளியிட முடியுமா என்று கேட்டேன் செய்யலாமே என்றார் எனக்குக் கூடவே என் நாவலையும் கவிதைத் தொகுப்புகளையும் வெளியிடும் ஆசை வந்தது நான் செய்யவேண்டியதை விளக்கி தொடர்பில் இருப்பதாகக் கூறிச் சென்றார் அன்று மாலை எனக்கு ஒரு தொலை பேசி அழைப்பு
மின்னூல்,வெளியிடுபவரின் தந்தை
பேசினார் என்னை நன்றாகத் தெரியும் என்றார்
அவரை எளிதில் அடையாளம் காண ஒரு அடைமொழியையும் கூறினார் பெயரும் ராஜகோபாலன் என்றார் எனக்கு நினைவுகள்மனத்திரையில் ஓடியது இந்த
ராஜகோபாலன் நான் இயக்கி இருந்த ஆராமுது
அசடா என்னும் நாடகத்தில் நடித்தவர் அவரது சஷ்டியப்த பூர்த்திக்கு அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறோம்
நாங்கள் இதுதான் நான்
இந்த உலகமே சின்னதுஎன்று நினைக்க வைத்தது மின்னூலை வெளியிட ஒப்புக்
கொண்டவர் பெயர் பத்மநாபன்
ஆராமுது அசடா நாடக புகைப்படம் இடமிருந்து மூன்றாவதாக ராஜகோபாலன் |
இடது ஓரத்தில் ராஜகோபாலன் |
வலது ஓரத்தில் ராஜகோபாலன் |
மின்னூல் பதிப்பாளர் பத்மநாபன் என்னுடன் |
வேறு சில நினைவுகள்
முன்பு வீட்டின் முன்பிருந்த மல்லிகைச் செடியை எடுத்து வேறு ஒன்று வைத்தோம் அது இந்த வருட ம் பூத்துக் குலுங்குகிறது நிறைய
பூக்கள் கடவுளுக்கு வைத்தது போக மீதி இருப்பது என் மனைவியின் தலையிலும்
அண்டை வீட்டாருக்கும்
இதைப் பார்க்கும் போது முன்பு நானெழுதி இருந்த பூவே பூவே பதிவு நினைவுக்கு வருகிறது அது இங்கு மீண்டும்
ஓங்கிப் படர்ந்திருக்கும்மல்லிச் செடி |
இதைப் பார்க்கும் போது முன்பு நானெழுதி இருந்த பூவே பூவே பதிவு நினைவுக்கு வருகிறது அது இங்கு மீண்டும்
சுவரேறிப் படர்ந்து பூத்துக் குலுங்கின
வெள்ளை ரோஜாவும் மல்லியும் முல்லையும்
பல்வேறு நிறங்களில் கண் சிமிட்டும்
செம்பருத்தி;காணக் கண் கோடி வேண்டும்.
ஆண்டுகள் பலவாகிப் போக மராமத்து
வேலைக்காக செடிகளையும் கொடிகளையும்
அகற்றச் சொன்னார் மேஸ்திரி.
மீண்டும் நடும் செடிகளும் புதுப் பொலிவுடன்
பூக்கத்தானே போகிறது எனும் நம்பிக்கையில்
பழைய செடிகள் வெட்டிக் களையப் பட்டன
யார் கண் பட்டதோ, ஆண்டிரண்டாகியும் செடியும்
கொடியும் வளர்ந்தும் பூ மட்டும் பூக்கவில்லை.
பூச்செடிகளிலும் மலடு என்றுண்டோ.?
தளராது நீர் ஊற்றி,நாளும் காத்திருந்து காத்திருந்து
ரோஜாச் செடியொன்றில் செந்நிறத்தில் மொட்டவிழ்ந்து
பூ ஒன்று பூக்கக் கண்டதும் ஆஹா..கொள்ளை அழகு.
ஜென்ம சாபல்யம் அடைந்திருக்கும் பூச்செடியும்.!
----------------------------------------------------------------
என்ன அழகு ஒற்றை ரோஜா |
ஆஹா, மல்லிகையும் ரோஜாவும் பூக்கும் வேளையில் உங்கள் மின்னூல்களும் வெளியாகின்றன. ஸ்ரீராமரின் பிறந்தநாளன்று உங்களுக்கு எவ்வளவு நல்லதெல்லாம் நடக்கிறது பாருங்கள்! (அப்படியே எனக்காகவும் சிபாரிசு செய்யலாமே! நாடகத்தில் நடிக்க அல்ல)
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
நன்றி சார் மின்னூல்கள் வெளியானதும் தெரிவிக்கிறேன்
Deleteமல்லிகை செடி போல உங்கள் நூலும் உலகெங்கும் படர்ந்து படர வாழத்துகள்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி சார்
Deleteநூல் வழியே பழைய நட்பு மகிழ்ச்சியான விடயம் ஐயா வாழ்த்துகள்
ReplyDeleteரோஜா அழகு.
அதைத்தான் உலகம் சிறியது என்றேன் வருகைக்கு நன்றி ஜி
Deleteஉங்கள் பழைய நட்பை சந்திக்க வைத்து விட்டதே மின்னூல்கள் ..இன்னும் அத்தனை படங்களையும் பொக்கிஷமாக வைத்திருக்கிறீர்கள் ..மல்லிகையும் ரோஜாவும் எப்போதும் கண்கொள்ளா கொள்ளை அழகுதான் ..எங்க வீட்ல சம்மருக்கு இங்கே ரோஜாக்கள் பூத்து குலுங்கும் எல்லாம் மெகா சைஸ் ..தலையில் சூட முடியாத அளவு பெரியவை
ReplyDeleteபழைய நட்பை இன்னும் சந்திக்கவில்லை தொடர்பில் இருக்கவும் நினைத்துப்பார்க்கவும் ஒரு வாய்ப்பு.ரோஜா போன்ற பூக்கள் செடியில் இருக்கும் போது அழகே தனி பார்த்து பார்த்து ரசிக்க வைக்கும் வருகைக்கு நன்றி ஏஞ்செல்
Deleteஇன்னும் சந்திக்கவில்லை தொடர்பில் இருக்கவும் நினைத்துப்பார்க்கவும் ஒரு வாய்ப்பு என்றே நினைக்கிறேன் ரோஜா மலர்கள்செடியில் இருப்பதே அழகு பார்த்துப்பார்த்து ரசிக்கலாம் வருகைக்கு நன்றி ஏஞ்செல்
Deleteநட்புகளின் திடீர் மீள் சந்திப்புகள் நிச்சயம் உவகை கொள்ள வைக்கும். உங்கள் நூல்கள் புஸ்தகாவில் இடம் பெறப் போவதற்கு வாழ்த்துகள். தம +1
ReplyDeleteஇன்னும் சந்திக்கவில்லை ஸ்ரீ வாழ்த்துகளுக்கு நன்றி
Deleteமின்நூல் வெளியிட எண்ணி
ReplyDeleteமுன்னே வந்து நின்றது
பழைய நட்பும் படங்களும்
கூடவே ஒரு பதிவுக்கும் வழி வகுத்தது நன்றி சார்
Deleteஉலகம் அழகானது
ReplyDeleteமிக மிக அருமையானது
என்று சொல்ல வைக்கும்
அருமையான பதிவு
எழுத்து பழைய நண்பரை மிக மிக
எளிதாக இணக்கும்படியாக இருக்கும்
இந்த உலகம் நிச்சயம்
சிறியது மட்டுமில்லை
உங்கள் எழுத்து மின்னூலாகி
உலகை வலம் வர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துகளுக்கு நன்றி சார்
Deleteஎதிர்பாரா சந்திப்பு ,நிச்சயம் இனிமை தருமே :)
ReplyDeleteநண்பரின் மகனைத்தான் சந்தித்தேன் அவர் என் நண்பரின் மகன் என்பது கூடுதல் மகிழ்ச்சி வருகைக்கு நன்றி ஜீ
Deleteஆஹா கொஞ்சமாக நினைச்சு ஆரம்பிச்சீங்க, இது அதிகமாகக் கிடைத்ததுபோலாகிட்டுதே.. மிக்க மகிழ்வான நிகழ்வுதான்.
ReplyDeleteவிரைவில் மின் நூல்களை வெளியிடுங்கோ. நீங்கள் நாடகமும் எழுதி இயக்கி இருக்கிறீங்களோ.. பெரிய விசயம்தான்.
நாடகம் இயக்கி நடித்தது எல்லாம் அந்தக் காலம் என் நாடகம் ஒன்று திருச்சியில் பரிசும்பெற்றிருக்கிறதுபதிவில் கூட இரு நாடகங்களை வெளியிட்டிருக்கிறேன்
Deleteஒற்றை ரோஜா மிக அழகு. அதென்ன அப்பூடி உரமாக வளர்கிறது மல்லிகைப்பூ மரம்... இதில் எப்படி பூக்களைப் பறிப்பது... எட்டி எட்டிப் பறிப்பது ஆபத்தாச்சே.. கவனம்... பார்த்து.
ReplyDeleteமல்லிகைப்பூக்களை மொட்டை ம்மாடியிலிருந்துதான் பறிக்க முடியும் பறிக்க முடியாதவெ தரையில் விழுந்து போகும்
Deleteஆகா
ReplyDeleteமின்னூல் முயற்சி கைகூடி இருப்பதோடு
முன்னாள் நண்பர் ஒருவருடன் பேசுவதற்கான வாய்ப்பும் அல்லவா
கிட்டியிருக்கிறது.மகிழ்ந்தேன் ஐயா
உங்கள் மூலம் புதுப்பிக்க முடிந்த நட்பு. மின்னூல் வெளியானதும் தெரிவிக்கிறேன் சார்
Deleteவாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி சார்
Deleteபழைய நண்பரை தொடர்புக்கொண்டதும் அவரது மகனிடமே மின்னூல் வெளியிட சொன்னதும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். அடித்தாற்போல் நடந்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. விரைவில் தங்களது மின்னூல்களை எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteபூக்களும் பூக்களின் கவிதையும் அருமை. இரசித்தேன்.
எதிர்பாரமல் நடந்த நிகழ்வு இது வருகைக்கு நன்றி ஐயா
Deleteவிரைவில் உங்கள் படைப்புகள் மின்னூலாக வெளிவர வாழ்த்துகள். இதன் மூலம் பழைய நட்பைப் புதுப்பித்துக்கொள்ள முடிந்தமைக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteநட்புகளுடன் எதிர்பாரா விதத்தில் மின்னூல் மூலம்தொடர்பு வாழ்த்துகளுக்கு நன்றி மேம்
Deleteகதையில் வருவது போல், நிஜமான ஒன்று நடந்து இருக்கிறது. நீங்களும் எதிர் பார்த்து இருக்க மாட்டீர்கள். உங்களது அந்நாளய நண்பரின் மகனும் எதிர் பார்த்து இருக்க மாட்டார்.
ReplyDeleteவரவிருக்கும் உங்கள் மின்னூல்களுக்கு வாழ்த்துகள்.
Deleteநண்பருடனான தொடர்பு என் அந்த நாளைய நாடக நாட்களை நினைக்க வைத்த்து
Deleteவாழ்த்துகளுக்கு நன்றி சார்
Deleteஎதிர்பாராமல் நடப்பவை நமக்கு இன்னும் மகிழ்வினைத் தரும்..மின்னூல் முயற்சிக்கு பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteஎதிர்பாராமல் நல்லது நடப்பின் மகிழ்ச்சியே வருகைக்கு நன்றி சார்
Deleteபழைய நட்பு மீண்டும் பூக்க மின்னூல் காரணமாய்...
ReplyDeleteமல்லிகை அழகு...
பழைய நட்பின் தொடர்பு கிடைத்திருக்கிறது மின்னூல் வேலைகள் நடக்கிறது வருகைக்கு நன்றி சார்
Deleteஉங்கள் புத்தகம் மின்னூலாக வெளி வருவதில் மகிழ்ச்சி! பழைய நட்பு புதிப்பிக்கப் படுவதற்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன் மகளுக்கு திருமணம் முடிந்த பிறகு எங்கள் உறவினர் அவர்களுக்கும் உறவினராக இருப்பதும், எங்கள் நண்பர்கள் அவர்களுக்கும் நண்பர்களாக இருப்பதும் தெரிய வந்து மகிழ்ந்தோம்.
உணமையில் உலகம்சிறியதுதான் மேம் வருகைக்கு நன்றி
ReplyDeleteசரியான ஆளைப் பிடித்துவிட்டீர்கள்! மின்னூல் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். Final version-ஐ பிழைகள், punctuations போன்றவைகளுக்காக நன்றாக சரிபார்த்து நூலுக்காக அனுப்பவும்.
ReplyDeleteநாம் முனைந்தால், தொடர்பிலிருந்தால் மனிதர்கள் ஒவ்வொருவராகக் கோத்துக்கொண்டு வந்துவிடுகிறார்கள். பெரும்பாலானோர் தொடர்பிலேயே இருப்பதில்லை இந்தக்காலத்தில். கேட்டால், ஆயிரம் காரணம் சொல்வார்கள்.