Thursday, August 3, 2017

அரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்


                                          அரிய படங்கள் நினைவுப்பெட்டகங்கள்
                                           -------------------------------------------------------------
சில பதிவுகளுக்குப் புகைப்படமிட வேண்டும் என்றால்  நிகழ்வுகள் டிஜிடல் புகைப்படங்களுக்கு நான் பழக்கப் படும்முன் நடந்தவை இருந்தாலும்  ஃபில்ம் சுருளிலும்  காணொளியிலும்  இருப்பவை  அம்மாதிரி படங்களுக்காக  தேடியபோது வந்து சிக்கின பல புகைப்படங்கள்  அதன் பின்னணி அந்தப படம்   எடுத்த நிகழ்வுகளையும்  கொண்டு வந்தது  அம்மாதிரியான சில அரிய புகைப்படங்களைப்  பதிவிட்டுப் பகிர்கிறேன் 

இந்தப் புகைப்படம்  1970 வாக்கில் எடுத்தது  திருப்பதிக்கு நாங்கள்  நடந்தே சென்றோம்  ஏறத்தாழ அதுவே எனது முதல் திருப்பதிப் பயணம் நான் என் மனைவி இருமகன்கள் ( குழந்தைகள் ) என்  மச்சினன்  என் நண்பன் அவனது சகோதரன்   ஆகியோர் சென்று வந்தோம் முதல் காரணம் என்  இளைய மகனுக்கு ஒன்றரை வயதிருக்கும்   மொட்டை அடிப்பதே முக்கிய நோக்கம் ஆனால் மனைவி தவிர எல்லோரும்  மொட்டை அடித்துக் கொண்டோம் என் மூத்த மகனுக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. ஆனால் அவனையும்  மீறி அவனுக்கும்மொட்டை அடித்தோம்  அடித்து முடித்து மற்றவர்களுக்கும்  மொட்டைஅடிக்கும்போது இவன் கோபித்துக் கொண்டு போய் விட்டான் குழந்தையை காணவில்லையே எறு தேடியபோது ஒரு மூலையில் அழுதுகொண்டிருந்தான் என்  நண்பன அவனை க்ளிக் செய்த போது வந்தபடம் 




அந்த முறை திருப்பதி போனபோது அங்கிருந்த புஷ்கரணியில் எல்லோரும் குளித்தோம் அதன் பின்  பல முறை போயிருந்தாலும்  புஷ்கரணியில் குளிக்கவில்லை. இப்போதெல்லாம் அனுமதி உண்டா தெரியவில்லை  இதோ நானும் என்  மனைவியும்  புஷ்கரணியில்               .



திருப்பதியில் மொட்டைகள் 




எங்களுக்கு ஒரு மகன் பிறந்த பின்  ஒரு மகளுக்கு ஆசைப்பட்டோம்   ஆனால் ஆசைகளெல்லாம் நிறைவேறுகிறதா என்ன  . இரண்டாம் குழந்தையும் ஆணாகப் பிறந்தது அப்போதுஅவனுக்குப் பெண் உடை உடுத்தி அழகு பார்த்தோம்  என் இரண்டாம் மகன் பெண்குழந்தை உடையில்



  திரு வெங்கட நாகராஜ்  அரக்கு வாலி  பயணம் பற்றி எழுதி வருகிறார்  நாங்கள் சோனாபேடாவில் (கோராபுட்)  என்  நண்பன் ( சகலை) வீட்டுக்குச் சென்றிருந்தோம்  அவன்  எங்களை அரக்கு வாலிக்கு அழைத்துச் சென்றான்  நாகராஜ் விவரிக்கும் எந்தகாட்சியும்  என் நினைவில் இல்லை. ஒரு பிக்னிக் போலப் போய் வந்தோம்   அங்கே இருந்த ட்ரைபல் பெண்கள் எங்களைக் கவர்ந்தார்கள் என்  மனைவிக்கு அவர்கள் உதவியுடன் உடை அணிவித்து ப் பார்த்தோம்   அது இதோ கீழே (1977) 





மூவாறு வயதில்  பாவாடை தாவணியில் பார்த்த உருவம் (1963) 
அம்பர்நாத்தில் பயிற்சியில் இருந்தபோது  நான் ட்யூஷன் எடுத்த  குழந்தைகளுடன் (1957)
சென்ற பதிவில் படகுப் பயணத்தில் விடுபட்ட புகைப்படங்கள்


ஹொகனேகலில்  பரிசலில்
மலை உச்சியில் இருந்து சிறார் குதிக்கத் தயார் 


 








54 comments:

  1. படங்கள் நல்லாத்தான் இருக்கு.

    இப்போவும் புஷ்கரணில குளிக்க அனுமதி உண்டு. என்னிடம் சில வருடங்களுக்கு முன், மொத்த தண்ணீரையும் வெளியேற்றிவிட்டு வெறும் குளமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களும் உண்டு. நான் 70கள்ல குளித்தபோது, உங்கள் படத்தில் இருப்பதுபோல்தான் இருந்தது.

    ஹொகேனக்கல் - பரிசல் பயணம் - ரொம்ப டேஞ்சரானது. நீச்சல் தெரிந்தவர்களுக்குமே, டக்குனு தண்ணீரில் விழுந்துவிட்டால் நிலை சரியாவதற்குக் கஷ்டம்.

    ReplyDelete
    Replies
    1. இந்தப்படங்கள் என் நினைவுகளைத் தொகுக்க உதவியது வர்கைக்கு நன்றி சாஎ

      Delete
  2. அருமையான நினைவுகள்.
    படங்கள் எல்லாம் மிக அருமை.

    //அங்கே இருந்த ட்ரைபல் பெண்கள் எங்களைக் கவர்ந்தார்கள் என் மனைவிக்கு அவர்கள் உதவியுடன் உடை அணிவித்து ப் பார்த்தோம் //

    அழகு.

    ReplyDelete
    Replies
    1. இதைப் பதிவிடுவதை மனைவி விரும்புவாளோ என்னு ம் சந்தேகம் இருந்தது நல்ல வேளை ஷி இஸ் அ குட் ஸ்போர்ட்

      Delete
  3. ஒகேனக்கல் பரிசலில் நானும் போய் இருக்கிறேன் ஐயா

    நல்ல நினைவலைகள் பலரும் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டு ஆண் குழந்தைக்கு உடை உடுத்தி இருக்கிறார்கள் இதில் நீங்களும் விதி விலக்கு அல்ல!

    நானும்தான் ஐயா ஆண் குழந்தைக்கு பாவாடை சட்டை எடுத்து வந்தேன் பிறகு மகள் பிறந்தாள்.
    த.ம.பிறகு கணினியில்

    ReplyDelete
    Replies
    1. நினைவுகளுக்காகத்தானே இஒப்பதிவு ஜி

      Delete
    2. த ம வுக்கு நன்றிஜி

      Delete
  4. நினைவுகளை அசைபோடுவது இன்பம். அவற்றைப் பதிவுலகில் பகிர்ந்து கொள்வது பேரின்பம்! நீங்கள் அடிக்கடி பேரின்பம் எய்தச் சிறியேனின் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பொழுத் இருக்கும்போது அசை போட படங்கள் உதவும் இப்போது பதிவிடவும் உதவியது நன்றி பிரகாசம்

      Delete
  5. திருப்பதிக்குப் பல முறை போய் வந்திருக்கோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம். பரிசலில் ஓரிரு முறையே போனோம். எனக்கு அதில் உட்காருவது கஷ்டம் என்பதால் அதிகம் போனதில்லை. படகில் பல பயணங்கள்! ஸ்டீமரிலும், சின்னக் கப்பலிலும் போயாச்சு! படங்கள் தான் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நாங்களும்பல முறை திருப்பதிக்குச் சென்று-ள்ளோம் பதிவில் சொன்னது முதல் தடவைஎன்று நினைவு

      Delete
  6. பழங்குடியினர் உடையில் உங்கள் மனைவி அழகாய் இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. மனைவியிடம் சொல்லியாச் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  7. ஸார் மிக அழகான நினைவுகள் தாங்கிய படங்கள். இப்போதும் திருப்பதி புஷ்கரணியில் குளிக்கலாம்...

    ஹொக்கேனக்கல் பரிசலில் போயிருக்கிறேன். கொஞ்சம் டேஞ்சர் தான் லைஃப் ஜாக்கெட் ஏன் கொடுப்பதில்லை என்று தெரியவில்லை. பரிசல் என்றால் ஒரு வேளை லைஃப் ஜாக்கெட் கிடையாதோ?!!

    பழங்குடியினர் உடையில் அம்மா மிக அழகாக இருக்கிறார்கள். அம்மாவிடம் சொல்லுங்கள். அது போல பாவாடை தாவணியில்!!! இப்ப பாடுறீங்களா ஸார் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது அப்படினு...!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அப்போது பாவாடை தாவணியில் பாட்டுள்ள படம் வந்தாச்சா மனைவியிடம் கருத்துகளைக் காட்டினேன் நன்றி கீடா

      Delete
  8. இனிய நினைவுகள் ஐயா... படங்களை பார்க்கும் போது மிகவும் சந்தோசம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி

      Delete
  9. பழைய படங்கள் என்றும் இனிய நினைவுகள்.

    ஒகேனக்கல் பரிசலில் நாங்களும் சென்று வந்தோம் இனிய அனுபவம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அனுபவம் யாழிலிருந்து கொழும்புக்கு பகீரென்றது

      Delete
  10. ahaa ! ahaa! padangkaL azagu athuvum pavadai thavaniyil partha uruvamum, tribal gal m kuttip pennum ( paiyanum kollai azagu ) periyavan aluvathu ennamo pol irukku. enakku pasangka alutha romba kashtama irukkum :(

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றி மேம் வீட்டில் திருமண மும்முரம் ஓய்ந்ததா

      Delete
  11. such lovely pictures!
    திருப்பதிக்கு நடை பயணமா? எங்கிருந்து? எல்லாருமா நடந்தீங்க?

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகளுடன் திருப்பதியிலிருந்து திரு மல்சௌக்கு நடந்து சென்றோம் வேறு எப்படி நினைத்தீர்கள் சார்

      Delete
    2. மலையடியிலிருந்தா? அதுவும் நீண்ட நடைதான்.

      Delete
  12. சுவாரஸ்யமான நினைவலைகள். ஆண்ட்ராய்ட் போனில் CamScanner எனும் App மூலமாக, பழைய போட்டோக்களை Scan செய்தால் போட்டோக்கள் இன்னும் தெளிவாக கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. முதலில் ஆண்ட்ராய்ட் ஃபோன் வேண்டும் பிறகு காம் ஸ்கானர் தரவிரக்க வேண்டும் இருப்பதை வைத்து வெளியிட்ட படங்கள் சில படங்களை கணினியில் காணொளியை ஓடவிட்டு புகைப் படமாக எடுத்தது ஆலோசனைக்கு நன்றி சார்

      Delete
  13. அருமையான புகைப்படங்கள் ஐயா
    கடந்த கால நினைவலைகளில் நம்மை மூழ்கித் திளைக்கச் செய்யும் படங்கள்
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார் வருகைக்கு நன்றி

      Delete
  14. அழகிய புகைப்படங்கள். கருப்பு வெள்ளைப் படங்களுக்கு தனி அழகு உண்டு. ஹோகேனக்கல் சென்றதுண்டு என்றாலும் புகைப்படங்கள் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. கறுப்பு வெள்ளை படங்களை இப்போது காண முடிவதில்லை வருகைக்கு நன்றி சார்

      Delete
  15. சுவாரஸ்யமான நினைவுகள். இளவயதிலும் மிக அழகாக இருக்கிறீர்கள். சுற்றி போடச் சொல்லுங்கள்! திருப்பதி கீழிலிருந்து மேல்மலைக்கு நடந்தே ஏறியிருக்கிறேன் - ஒரே ஒருமுறை 2002 இல். அப்போது நடந்த சிறுபிள்ளை விளையாட்டில் என் இடது முழங்கால் பாதிக்கப்பட்டது! இன்னமும் இருக்கிறது!

    தம நான்காவது வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. இவரைவிட இவர் மனைவி தான் அழகாக இருக்கிறார் ஸ்ரீராம்.. அதுவும் அந்த பழங்குடிப் பெண் அலங்காரம்.. அவங்களுக்குத் தான் சுற்றிப் போடச் சொல்லணும்.. அதனால ஜிஎம்பி சார்.. நீங்களே சுத்திப் போட்டுருங்க. you must have been a beautiful couple together.. உங்க ரெண்டு பேர் சின்ன வயசுப் போட்டோ பார்க்கலாம் அடுத்த முறை சந்திக்கிறப்போ.

      Delete
    2. திருப்பதி இப்போது எவ்வளவோ மாறி விட்டது நான் அழகாகைருக்கிறேனோ இல்லையோ அசிங்கமாக இல்லை என்பது தெரியும் ஸ்ரீ தம வுக்கு நன்றி

      Delete
    3. @ அப்பாதுரை we are a understanding couple நீங்கள் தான் பெங்களூர் வந்தாலும் சுவடே தெரியாமல் போய் விடுகிறீர்கள் மீண்டும் சந்ஃதிக்க ஆசை நன்றி சார்

      Delete
    4. உண்மை தான். பெங்களூர் டிராபிக் என்னால் பொறுக்கவே முடியவில்லை. அதனால் தான் இரண்டு நாள் வந்தாலும் ஏர்போர்ட்-ஹோடல்-வேலை-ஹோட்டல்-ஏர்போர்ட் என்று ஓடிவிடுகிறேன்.
      அடுத்த முறை பார்க்கலாம்.

      Delete
    5. கொஞ்சம் திட்டமிட்டால் சமாளிக்கலாம் சார் உண்மையாகவே சொல்கிறேன் சீக்கிரமே சந்திக்க வாருங்கள் நன்றி

      Delete
  16. என்றுமே பழைய நினைவுகள் ஆனந்தம் தான்..

    பழைய படங்களைப் பார்க்கையில்
    அந்த நாட்கள் மீண்டும் வாராதா - என்றிருக்கின்றது...

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. அந்த நாட்களின் நினைவில் மூழ்குவதும் இன்பமே வருகைக்கு நன்றி சார்

      Delete
  17. புகைப்படங்கள் அனைத்துமே அருமை. வழக்கம்போல தங்கள் பாணியில் பகிர்ந்த விதம் எங்களை ஈர்த்தது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி டாக்டர்

      Delete
  18. நிஜமாகவே அரிய படங்கள்தான். கடந்துபோன காலத்தையும் காலரைப்பிடித்திழுத்து முன்னிறுத்துபவை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டம் ரசிக்கும் படி இருக்கிறது நன்றி சார்

      Delete
  19. இன்னும் பழைய படங்களை பத்திரமா வைத்திருக்கிறீர்களா, ஐயா? அருமை...

    ReplyDelete
    Replies
    1. முந்தைய படங்கள் எல்லாம் ஃபில்ம் சுருளில் எடுத்தவை பெரும்பாலும் பத்திரப்படுத்தி விட்டேன் இப்போதெல்லாம் டிகிடல் கணினியிலேயே சேமிக்கிறேன் வருகைக்கு நன்றி கார்த்திக்

      Delete
  20. அருமையான படங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி....! நன்றி மேம்

      Delete
  21. புகைப்படங்கள் அருமை. தங்களது புகைப்படங்களை பார்த்ததும் எனக்கும் எனது பழைய படங்களைப் பார்க்க ஆஸி வந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆசை வந்துவிட்டது என படிக்கவும்

      Delete
    2. நிறைவேற்ற முடிகிறாஅசைதானே ஐயா புகைப்படங்களைப் பார்க்கும் போது அதன் பின்னணியும் நினைவுக்கு வரும்

      Delete
    3. தெரிகிறது ஐயா ஆசை என்றுதான் படித்தேன்

      Delete
  22. திருப்பதி புஷ்கரணியில் குளிக்கும்போது கூட்டமே இல்லையே! விசேஷ குளியல் சேவா என்று ஆர்ஜிதசேவை ஏதாவது அப்போது இருந்ததோ? நிறைய செலவழித்தீர்களோ?
    பளபளக்கும் உங்கள் மொட்டையின் அழகே தனி! - இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  23. I do not know what you are saying Wehad shaved our heads and took bath in the pushkarani Tahannks for your comments

    ReplyDelete