Monday, August 7, 2017

நீருக்கு நன்றி



                                                                   நீருக்கு நன்றி
                                                                   ---------------------
 
நீருக்கு நன்றி
 அண்மையில் சிலரது பதிவுகளில் ஆறுகள் நீரின்றி வறண்டு இருப்பது கண்டு ஆதங்கத்துடன் எழுதி இருந்தார்கள் நானும்  ஆடிப்பெருக்கு என்பதெல்லாம் வருங்காலத்தில் நம் கலாச்சாரத்தின்  நினைவுகளாவும் எச்சங்களாகவும்  மாறலாம் என்றும்  பின்னூட்டமிட்டிருந்தேன் இன்று ஞாயிறு பொதிகைத் தொலைக்காட்சியில் நீருக்கு நன்றி என்னும்  விழா எடுத்து நேரடி ஒளிபரப்பினார்கள் மித்ரஷிவா என்னும்  குருவின் வேண்டுகோளுக்கு இணங்கி கங்கையிலிருந்துசிலகுருமார்கள் கல்லணையிலும்   கங்கைக்கு ஆர்த்தி எடுப்பது போலவே நீருக்கு நன்றி சொல்லும் விதமாக ஆர்த்தி எடுத்து விழா எடுத்தார்கள்கல்லணை நீரின்றி வற்றி வறண்டிருக்கும்  என்று எண்ணி கொண்டிருந்த நான் அங்கு நீருக்கு நன்றிசொல்லும்  விதமாக ஆரத்தி எடுப்பது கண்டும்   கல்லணையில் நீர் இருப்பதுகண்டும்  மகிழ்ச்சி அடைந்தேன்
ஏழெட்டு பேர் ஒரே சிங்க்ரனைசிங்காக  எடுத்தனர் மொத்தம் ஏழு பேர்  இருந்தனர் என்று நினைக்கிறேன்  எல்லா தூப தீபங்களும் காட்டப்பட்டன.சாமரமும்வீசப்பட்டது தொலைகாட்சிப் பெட்டியில் கண்டதைப் புகைப்படமாக்கி இருக்கிறேன் மனசுக்கு இதம்  தரும்   நிகழ்வல்லவா

தொலைக்காட்சியில்  ஒளிபரப்பானதை  புகைப்படமெடுத்தது


இந்த நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களுக்காக இப்பதிவு 








  
                                                 
                

36 comments:

  1. நல்லதொரு நிகழ்வுதான் ஐயா நான் பார்க்கவில்லை பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எதேச்சையாகப் பொதிகைச் சானலில் இதைப் பார்த்தேன் உடனே பகிரத் தோன்றியது வருகைக்கு நன்றி ஜி

      Delete
  2. நல்லதொரு நிகழ்வு பற்றி இங்கே தெரிவித்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பொதிகைச் சானலைப் பார்ப்பவர்கள் பதிவுலகில் குறைவு என்று தோன்றியது ஆகவே நான்பார்த்ததைப் பகிர்ந்தேன் நன்றி சார்

      Delete
  3. ரொம்பவே நல்லதொரு நிகழ்வு! நீருக்கு நன்றி சொலல் என்பது எவ்வளவு உயர்வான ஒன்று. இயற்கை தரும் தங்கத்தையும் விட விலைமதிப்பில்லாத ஒன்று இல்லையா...டநிகழ்ச்சியைப் பார்க்கவில்லை

    பகிர்விற்கு மிக்க நன்றி சார்

    கீதா

    ReplyDelete
  4. ஒவ்வொரு சொட்டு நீரையும் நான் வீணாக்காமல் இருந்தாலே அதன் உண்மையான மதிப்பினை நாம் அறிந்துள்ளோம் ஒவ்வொரு சொட்டு நீருக்கும் நாம் நன்றி சொல்லுவோம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. திருச்சியில் வருடங்கள்பலவற்றைச் செலவு செய்த எனக்கு கல்லணையில் நீரைப் பார்த்ததும் உற்சாகம் எழுந்து பகிர வைத்தது வருகைக்கு நன்றி கீதா

      Delete
  5. நல்ல அறிவுரையுடன் கூடிய பதிவு.

    ReplyDelete
    Replies
    1. அறிவுரையா அப்படி ஏதும் தெரிகிறதா ஐயா

      Delete
  6. நான் பார்க்கவில்லை ஐயா...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நிகழ்வு பற்றியாவது பதிவர்கள் அறிய இப்பதிவு. நன்றி டிடி

      Delete
  7. கல்லணையில் நடந்த ஆரத்தி நிகழ்ச்சியை முன்னதாக அறிந்திருந்தால் நேரில் சென்றிருப்பேன்..

    தங்களுடை பதிவின் வழியாகக் கண்டேன்..

    ReplyDelete
    Replies
    1. நானும் எதேச்சையாகவே கண்டேன் இப்போது தஞ்சையிலா சார்

      Delete
  8. உங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  9. நல்ல நிகழ்வு....தொடரட்டும்..

    ReplyDelete
    Replies
    1. நீர்வரத்து வந்து தொடர வாழ்த்துங்கள் மேடம்

      Delete
  10. நாங்கள் நேரடி ஒளிபரப்பைக் கண்டோம். முதல் நாளே பொதிகையில் அறிவிப்பு வேறே கொடுத்திருந்தார்கள். பொதிகை அதிகம் பார்ப்பதால் இது குறித்து முன் கூட்டியே தெரியும்! :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இது புதுமையாக இருந்ததால் பகிர்ந்தேன் நன்றி மேம்

      Delete
  11. நீருக்கு ஆரத்தி - அட ... நீரைத் தொழுவது நன்று. இது தமிழகத்துக்குப் புதிது இல்லையோ?

    ReplyDelete
    Replies
    1. கங்கையில் ஆர்த்தி தினமும் நடக்கும் இங்கு இது ஒரு சாம்பிள் நிகழ்வு என்று நினைக்கிறேன் ஆடிப் பெருக்கில் தமிழகத்திலும் நீருக்கு நன்றி சொல்வது இருக்கத்தானே செய்கிறது சார்

      Delete
  12. நான் பார்க்க வில்லை த ம 4

    ReplyDelete
  13. நேரடி ஓளிபரப்பை உங்கள் மூலம் பார்த்து விட்டேன் நன்றி.
    எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் செய்ய போவதாய் சொன்னார்கள் அது எப்போது என்று தெரியவில்லை.



    ReplyDelete
    Replies
    1. எப்படி ஆனாலும் இது ஒரு சிறு பதிவே படங்கள் எடுக்க நான் இம்முறையைக் கையாண்டேன் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்

      Delete
  14. பகுத்தறிவுக்குப் புறம்பான கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தமிழர்கள். அதனால்தான் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பெரியோரையும் இயற்கைக் கூறுகளையும் மட்டுமே வணங்கும் மரபும் கொண்டு விளங்கினர். அந்தப் பெருமைக்குரிய பண்பாடு இத்தகைய விழாக்கள் மூலம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது என்றாலும் இயற்கை அழிந்து வருகிறது. நீங்கள் கூறியிருப்பது போல் கல்லணையில் நீர் இருப்பது குறித்து உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி! அடுத்தாண்டு இன்னும் எல்லாப் பகுதிகளிலும் நீரும் நல்ல காற்றும் இயற்கைச் செழுமையும் நிறையட்டும்! நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. ஒரு வருத்தம் என்னவென்றால் கங்கையில் ஆரத்தி எடுக்கும் சிலரை இங்கு கூட்டி வந்து விழா எடுத்ததுதான் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி பிரகாசன்

      Delete
    2. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தமிழர்களா?

      Delete
    3. ஒரு ரைடர் வைத்திருக்கிறாரே கவனித்தீர்களாசார் (பகுத்தறிவுக்குப் புறம்பான)

      Delete
  15. காணொளி ஓடவில்லை! பொதிகைத் தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. நீருக்கு நன்றி சொல்லும் விழா நல்ல விஷயம். ஒரு பொருள் இல்லாமல் போகும் என்னும் நிலை வரும்போதுதான் அதன் அருமை புரியும் என்று தெரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. டீவி ஓடிக் கொண்டிருந்தபோது எடுத்தது ஒரு முயற்சிதான் வருகைக்கு கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  16. நமது முன்னோர் நீர் மேலாண்மையில் சிறந்தவர்கள்
    நாமோ ஏரி குளங்களை எல்லாம் , மனையாக்கி விற்றுக் கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் அந்த நாட்களைப் பற்றியே ஏக்கம் கொள்வது சரியா சார் வருகைக்கு நன்றி

      Delete
  17. பார்க்கத் தவறிய நிகழ்ச்சியை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  18. பொதிகை தொலைக்காட்சியில் வந்ததை அநேகம்பேர் பார்த்திருக்க மாட்டார்கள் எதேச்சையாக நான்பார்த்தேன் பகிரத் தோன்றியது வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete