கதையல்ல நிஜம்
அண்மையில் திருமதி பானுமதி ஒரு பதிவு
எழுதி இருந்தார் அதன்பின்னூட்டத்தில்
நான் எழுதி இருந்த இப்படியுமா கதை அல்ல
நிஜம் என்னும்பதிவு பற்றிக் கூறி இருந்தேன்
பெங்களூரில் ஒரு ஃப்ரென்ச்
தூதரக அதிகாரியை அவர் மனைவி அவர்கள் மகளையே வன்புணர்வு செய்ததாக புகார்
செய்திருந்தார் அந்த வழக்கு முடிவுக்கு
வந்ததா தெரியவில்லை எனக்கு நான் எழுதி
இருந்த இப்படியுமா கதை அல்ல நிஜம் என்னும்
பதிவு நினைவுக்கு வந்தது
இப்படியுமா.....? கதை அல்ல
நிஜம்..
================================
உறவுகள் பற்றியும், அதன் திரிபுகள் பற்றியும் ,
யார் யாரோ, என்னவெல்லாமோ எழுதி விட்டார்கள்.
நானும் எழுதி இருக்கிறேன்.
உணர்வுகள் திரிந்து ஏற்படும் உறவுகள் -மனசாட்சி
துணையுடன் நியாயப்படுத்தப்படும் செயல்கள்,
நிகழ்வுகளைத் தடுக்க இயலாத ,காரணகாரியங்களை
================================
உறவுகள் பற்றியும், அதன் திரிபுகள் பற்றியும் ,
யார் யாரோ, என்னவெல்லாமோ எழுதி விட்டார்கள்.
நானும் எழுதி இருக்கிறேன்.
உணர்வுகள் திரிந்து ஏற்படும் உறவுகள் -மனசாட்சி
துணையுடன் நியாயப்படுத்தப்படும் செயல்கள்,
நிகழ்வுகளைத் தடுக்க இயலாத ,காரணகாரியங்களை
அலசி
ஆராயும் மனோபாவங்கள் எல்லாம் மீற
எண்ணத்தறியில்
ஏதேதோ
எண்ணங்கள்
முன்னுக்குப்பின் முரணாய் முற்றும் கற்பனையாய்
சில
சமயம்
பாழாய்
பழம்
பொய்யாய்,பகற்கனவாய்,
சிலநேரம் எதிர்கொள்ள வொண்ணா
சீற்றத்துடன்
நம்பவே
முடியாத நிகழ்வுகள் கண்
முன்னே
விரிகிறது.
உள்ளத்து உணர்ச்சிகளுக்கு, வார்த்தைகளில்
உயிரூட்டினால் உண்மையில் ஜொலிக்கும்
நிஜங்களில் கற்பனை கலந்தால் வீரியம் குறைந்து,
உண்மை நிலை மங்கிப் போகாதோ.
இதுவும் அயல்தேசத்தில் நடந்த இந்தியக் கதை அல்ல,
நிஜம்.உணரப்பட வேண்டிய உண்மைகள் இருப்பதால்
பகிர்ந்து கொள்கிறேன்.
உயிரூட்டினால் உண்மையில் ஜொலிக்கும்
நிஜங்களில் கற்பனை கலந்தால் வீரியம் குறைந்து,
உண்மை நிலை மங்கிப் போகாதோ.
இதுவும் அயல்தேசத்தில் நடந்த இந்தியக் கதை அல்ல,
நிஜம்.உணரப்பட வேண்டிய உண்மைகள் இருப்பதால்
பகிர்ந்து கொள்கிறேன்.
மணம் முடித்து மனைவி குழந்தையுடன்
வசிக்கும் தன் மகனைப் பார்க்கச் சென்ற
பெரியவர் அவனைச் சிறையில் சந்தித்தார்.
மாமனாரைப் பார்க்க மருமகள் விரும்பவில்லை.
எங்களுக்குள் சிறு பிணக்கம், பெரிது படுத்த
வேண்டாம், வெளியில் வருவேன் சடுதியில்
கவலை வேண்டாம் என்று உறுதி அளித்த
மகன் சொல் கேட்டு ஊர் திரும்பி வீடு
சேரும் முன் வந்தது மகன் தன்னைத்தானே
தூக்கிலிட்டு மாய்த்துக் கொண்டான் என்ற
பேரிடிச் செய்திஒன்று.
மறுபடியும் பறந்து சென்று, விசாரித்து அறிந்தால்
கிடைத்தது அதனினும் பெரிய பேரிடிச் செய்தி.
பெற்ற மகளிடம் வன்புணர்ச்சி கொண்டான் கணவன்
என்ற மனைவியின் வாக்குமூலம் பெற்றுத்தர
இருக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்க அவன்
தேர்ந்தெடுத்த வழியே தற்கொலை
( வக்கிர உணர்வுகளின் எல்லை
மீறிய
வெளிப்பாடு
இப்படியுமா.. என்ற
ஆதங்கத்தில் பகிர்ந்தது. )
என்னைப் போல்
ஒருவன்
இப்படியுமா?
ReplyDeleteஇது ஒரு உண்மைக் கதை ஸ்ரீராம்
Deleteமனதுக்கு வேதனை தருகிறது!
ReplyDeleteஅயல் தேசமானதால் தப்பிக்க முடியாது என்னும் பயம்தான் தற்கொலைக்குக் காரணம் நம்நாட்டில்தான் நான் குறியிருக்கும் ஃப்ரென்ச் தூதரக அதிகாரியின்கேஸ் இன்னும்தெளிவு வேண்டி முற்றுப் பெறாத நிலையில் இருக்கிறது
Deleteஅனைத்தும் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஆனா நிஜக் கதைகள், இப்படி பலபல கதைகள் கேள்விப்பட்டதுண்டு.
ReplyDeleteஊரில் மனைவியை இழந்து தனியே இருக்கிறாரே இங்கு வந்து பேரக் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கட்டுமே என தந்தையை மகன் அழைத்திருக்கிறார்.
மகன் மருமகள் இருவரும் வேலைகுப் போபவர்கள்... சில மாதங்களில் 12..13 வயது நிரம்பிய மகள் கற்பமாகி விட்டா.. அக்குழந்தைக்கு எதையும் சொல்லத் தெரியவில்லை..
குழந்தையின் தந்தை, தன் நண்பனோடும் சில சமயம் ஸ்கூலுக்கு மகளை அனுப்புவதுண்டாம்.. அதனால நண்பனோடு சண்டைக்குப் போயிருக்கிறார்..
முடிவில் விசாரித்தால் காரணம் தாத்தா.... என்ன பண்ணுவது என பேசாமல் அவரை ஊருக்கே பிளேன் ஏற்றி விட்டுவிட்டார்களாம்.... இப்படி வெளியே சொல்ல முடியாத அருவருப்பான கதைகள் எத்தனை எத்தனை..
ஆனால் இப்படி பகிர்ந்து கொண்டால்தான் விழிப்புணர்வு இருக்கும் மக்களிடையே.
இந்தக் கதையின் நிகழ்வுகளம் இங்கிலாந்து
Deleteஇல்லை ஆனா யூரோப்பில் ஒரு நாடுதான்.
Deleteஇங்கிலாந்துதான் எனக்குத் தெரியும் ஐடெண்டிடியை மறைக்க வேண்டி உள்ளது
Deleteஇப்பொழுது யாரையும் நம்பி பெண் குழந்தைகளை விட முடியவில்லை.
ReplyDeleteதற்பொழுது நிறைய இடங்களில் இந்த மாதிரி நம்ப இயலாத செயல்கள் நிகழ்கின்றது.
சிலநேரங்களில் நிஜங்கள் கற்பனையை வெல்கிறது
Deleteஇதற்கு காரணம் மனித மனம் பாழ்படுவதே என்பேன்.. முன்பு எல்லாம் ஆன்மிக சொற்பொழிவுகள் நல்ல பெரியோரின் பேச்சுகள் நல்ல புத்தங்கள் எல்லாம் மனதை பன்படுத்தின. ஆனால் இப்போது அதெல்லாம் ஒழிந்து போய் இந்த கணனி & ஸ்மார்ட் போன் போன்றவைகள் வந்தவுடன் பல அசிங்கங்கள் வண்டி வண்டியாக் பெட் டூமிற்குள்ளும் வந்துவிட்டது அதன் மூலம் படிப்பவைகள் பார்ப்பவைகள் மனதில் பதிந்து வெளியே தெரியாதவரை எதுவும் தப்பில்லை என்று ஆகிவிட்டது அதனால்தான் இந்த அசிங்கங்கள் நிகழ்கின்றன..
ReplyDeleteஅடுத்தாக கணவன் மனைவிக்கிடையான செக்சுவல் உற்வுகளுக்கிடையே கூட ஒரு புரிதல் இல்லை. குழந்தை பிறந்த சில வருடங்களுக்கு அப்புறம் அந்த மாதிரி உறவை வைத்து கொள்வதும் தவ்று என்ற மனப்பான்மை பெண்களுக்கிடையே வருவதால் பலரும் உற்வை விரும்புவதில்லை ஆனால் ஆண்களின் நிலமையோ வேறு இயற்கையாகவே அவர்களின் உடம்பில் ஹார்மோன் அதிகமாக வேலை செயவ்தால் அவர்களுக்கு உறவுகள் தேவை படுகிறது அதோடு இந்த ஸ்மார்ட் போன் போன்ற கண்றாவிகள் எல்லாம் வந்து சேர்ந்தால் மனம் வக்கிறமாகி போய் தாங்கள் எண்ண செய்கிறோம் அது தவ்று என்று அந்த சம்யத்தில் புரியாமல் செய்துவிடுகிறார்கள். தரமான பேச்சை புத்தங்களை எண்ணங்களை வளர்த்து கொள்ளாததால் இப்படி எல்லாம் நேர்கிறது என்று நான் நினைக்கிறேன் ப்ளஸ் மேலை நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவதும் காரணம் என நினைக்கிறேன்
காரணகாரியங்களை நான் ஆராயவில்லை/ /நிகழ்வுகளைத் தடுக்க இயலாத ,காரணகாரியங்களை
Deleteஅலசி ஆராயும் மனோபாவங்கள் எல்லாம் மீற
எண்ணத்தறியில் ஏதேதோ எண்ணங்கள்
முன்னுக்குப்பின் முரணாய் முற்றும் கற்பனையாய்
சில சமயம் பாழாய் பழம் பொய்யாய்,பகற்கனவாய்,
சிலநேரம் எதிர்கொள்ள வொண்ணா சீற்றத்துடன்
நம்ப முடியாத நிகழ்வுகள் கண்முன்னே விரிகிறது /என்று எழுதி இருக்கிறேன்
நெகட்டிவ் சமாச்சாரங்களில் மனம் பதியாமல் பார்த்துக் கொண்டால் அதுவே மன ஆரோக்கியமாக நம்மில் மலர்கிறது என்று மனவியல் நிபுண்ர்கள் பரிந்துரைக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக அதற்கான பயிற்சிகள் வாசிக்கும் விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதிலும், எழுதுவதிலும் எனக்கு பேருதவி புரிந்திருக்கின்றன.
ReplyDeleteஎழுதி இருப்பவை நிதர்சன உண்மைகள் ஆலோசனைகள் கேட்கப்படாமலே நிகழ்ந்த செயல்கள்
Deleteவேதனை ஐயா
ReplyDeleteஎழுதியவை ஒரு புரிதலுக்காகவே
Deleteவேதனையும் அதிர்ச்சியும் தந்த பதிவு.
ReplyDeleteஒரு விழிப்புணர்வு பதிவாகக் கொள்ளலாம்
Deleteவேதனை....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
Deleteநம் கலாச்சாரத்தில் பெண் குழந்தைகள் ஆண்களுடன் இருக்கும் சந்தர்ப்பம் மிகக் குறைவு. அவர்களைத் தொட்டுப் பேசும் சந்தர்ப்பமும் குறைவு. இவைகள் தேவையில்லாத வாய்ப்பினைக் கொடுப்பதில்லை.
ReplyDeleteவயது வந்த மகளைஉக் கூட தொடக் கூடாது என்னும் சமூகம் ஆனால் குழந்தைகளை அல்லவே தந்தை மகள் உறவா என்பதே அதிர்ச்சி தருகிறது
Deleteஐயோ.................. :-(
ReplyDeleteஇப்படிய்ம் நடக்கிறதே
ReplyDelete