என்னைப் போல் ஒருவன்
----------------------------------------
நம் எண்ணங்களைப் போல்
ஒருவருக்கும் நம் குணத்தோடு ஒத்து
போகிறவரையும் கண்டால் பிடிக்கும்தானே
எனக்கு நம் நாட்டில் நிலவும் உயர்வு தாழ்வுகள் பிடிக்காது அதன் மூல காரணத்தைஆராய்வதை விட்டு அதைஒழிக்கும் முறை
என்ன என்று சிந்திக்கும் போது
அடிப்படையில் நம்கல்வியை மாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது இன்றைக்கு
வளர்ந்துஇருப்பவகளில் பெரும்பாலோர் மூளைச் சலவைசெய்யப்பட்டவர்களே நம்முன் னோர்கள் கூறியது தவறாக இருக்காது நம்
சாத்திர சம்பிரதாயங்கள் தவறாக இருக்க முடியாது என்னும் நிலைப் பாட்டை உடையவர்களாகவே இருக்கிறார்கள்
அதன்நீட்சியே இந்த ஏற்ற தாழ்வுகளையும் சிந்திக்க விடாமல் செய்கிறது இதை மாற்ற என்ன வழி என்று யோசிக்கும்போது சிறு வயதிலேயே அவர்களதுசிந்தனைகளை நேர்
வழிப்படுத்த வேண்டும் என்னும் கட்டாயம்
ஏற்படுகிறது இனம் சாதி மொழி
போன்றவைகள்சொல்லி மாற்ற முடியாதது அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும் அதுதான்கல்விமூலம் செய்ய முடியும் ஐந்திலேயே வளைக்க முற்பட வேண்டும்
கல்வியிலும் அநேக ஏற்றதாழ்வுகள் ஒரே வயதுள்ளவன் கல்விமூலம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான் ஆக்கப்
படுகிறன் எல்லோருக்கும் சமகல்வி
என்னும்நிலையைக் கொண்டு வர வேண்டும் கல்வி வியாபாரமாக்கப்படுவதை தவிர்க்க
வேண்டும் பள்ளி இறுதி படிப்பு வரை அதாவது
சுமார் பதினாறு வயது வரை எல்லோரும் சமம் என்னும்
எண்ணம் உருவாக்கப் படவேண்டும் இலவசமாக என்னவெல்லாமோ தருகிறார்கள்கல்வி
ஏன் இலவசமாகக் கூடாது எல்லோரும்
சமம் என்னும் எண்ணம் பிஞ்சு மனதிலேயே விதைக்கப் படவேண்டும் அதற்கு எல்லோருக்கும் எல்லோருக்கும் என்பதை அடிக்கோடிட்டுச்சொல்கிறேன்
இலவசக் கல்வி இலவசசீருடை இலவச உணவு என்பவை
கட்டாய மாக்கப் பட வேண்டும் இவை ஏற்ற தாழ்வு எண்ணாங்களை குறைக்கும் அதே நிலையில்
வளரும் சிறார்கள் மனதில் உயர்வுதாழ்வு
எண்ணம் வரும் வாய்ப்பு குறையும் அடுத்த தலைமுறை மக்களாவது உயர்வு தாழ்வு பற்றி நினைக்கும் சாத்தியக்
கூறுகள் குறையலாம்
பிறப்பொக்கும்
என்னும் நிலை வரலாம்
ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்துவது சிரமம் என்று தெரியும் கல்வி வியாபாரிகளின் எதிர்ப்பு கூடும் மத
வாதிகளின் கூக்குரலும் ஏறும்
இருந்தாலும் இதை நடத்திகாட்டினால்
சமுதாயம் ஏற்றதாழ்வு இல்லாமல் இருக்கும்
இதெல்லாம்
உதோப்பியன் கனவுகளாகத்
தோன்றலாம் எதற்கும் ஒரு ஆரம்பம்
தேவைதானே
அதற்கு
ஒத்த எண்ணங்கள் உடையவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் அவர்கள் சார்ந்து இருக்கும் கட்சியோ ஆட்சியோ
இதை செயல் படுத்த வேண்டும்
அரசியல் ஒரு சாக்கடை என்றுகூறி தப்பித்துக்
கொள்ளாமல் சேவை மனப்பான்மையோடு செயல் படவேண்டும்
இந்த நிலையில் ஒரு கட்சி ஆரம்பிக்கும்போதே அதன் கொள்கைகளாக உயர்வு தாழ்வு இல்லாத சாதி
மதம்பார்க்காத சிறந்த கல்வி முறையே நாட்டம் என்று கூறபொபடுவதைக் கேட்கும் போது விடியல் அருகில் இருப்பதாகத்
தோன்றுகிறது
இதைதான் பதிவின்
ஆரம்ப வரிகளில் கூறி இருக்கிறேன் அரசியல் சேவை செய்வதற்கே ஆன்மீக
ஏற்றத்துக்கு அல்ல ஆன்மீகம் என்று சொல்லி மக்களை ஏமாற்றியது போதும்
இன்னதுதான்
குறை அதைத்தான் களையமுற்பட வேண்டும்யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல
என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியம்
பல ஆண்டுகளுக்கு முன் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள் என்னும் ஒரு சினிமா மலையாளத்தில் வந்த நினைவு
என்னை இப்படி சிந்திக்க வைப்பதும் இன்றைய அவலநிலையே
.
ஆன்மிகம் என்றால் என்ன என்பது பற்றி உங்களிடமிருந்து ஒரு தனிப்பதிவு எதிர்பார்க்கலாமா?
ReplyDeleteகனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு. காணலாம். நடக்குமா?
ஆனால் இந்த வேறுபாடுகள் எல்லாம் இருந்தால்தான் அரசியல் நடக்கும். அவர்களுக்கு பிழைப்பு ஓடும். யாரும் வந்து சரிசெய்யப் போவதில்லை!
வீணாய்ப் போகாத, நூறாண்டுகளுக்கு மேலும் உழைக்கும் பல்ப் தயாரித்துக் கொண்டிருந்தார்களாம். சில காலத்துக்குப் பிறகு யாருமே பல்ப் வாங்குவதில்லை. வியாபாரம் படுத்து விட்டது. அப்போது ஒன்று கூடி முடிவெடுத்தார்களாம். "வியாபாரத்த்தில் நேர்மை, சுத்தம் கூடாது. அப்பத்தான் நம்ம பொழப்பு ஓடும்!" அரசியலும் வியாபாரமே.
நான் ஒரு ஆப்டிமிஸ்ட் நல்லவை நடக்கும் என்று நம்புகிறேன் எனது ஏறத்தாழ 80 வயதுகாலத்தில் எத்தனையோ மாற்றங்களைக் கண்டு விட்டேன் 35 வயதுக்கும் குறைவான சராசரி வயதிருந்த இந்தியாவில் இப்போதுசரசரி வயது 65 வயதுக்கும் மேல் எங்கள் கிராமத்தில் தெருவில் காலணியோடு நடக்க அனுமதிக்கப்பட மாட்டாத தாழ்ந்த குலத்தோர் இப்போது அக்கிரகாரத்தில் வீடு வாங்கி குடி த்தனம்செய்கின்றனர் என் 15 வயதுவரை பேனா பார்க்காத நான் இருந்த நிலை இப்போது இல்லை ஆக வேறு பாடுகள் மறைகின்றன ஆனால் காலமெடுக்கிறது ஆனால் கொள்கை ரீதியாகவே அதை நிலைப்படுத்த முயல்வது காணும்போது எழுந்தசிந்தனைகளே பதிவில் எல்லாம்வியாபாரம் என்று நம்பத்தொடங்கிவிட்டால் முன்னேற சமயம் பிடிக்கும் அரசியல் வியாபாரமாகிவிட்டது என்று நினைக்கும் நாம் அதுதான் உண்மை என்று நம்பத்தொடங்கிவிட்டோம் அது அப்படி அல்ல என்று உணர்த்தவே என் எளிய முயற்சி ஒரு மன மாற்றத்துக்கு வழிவக்குக்கலாம் என்பதே எண்ணம் இதை கனவு என்று ஒதுக்கித் தள்ளியே காலம் கடந்து விட்டது கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னால் ஆதரிக்கிறோம் கனவு மெய்ப்பட வேண்டும் அதற்கு யாராவதுகுரல் கொடுக்க வேண்டாமா ஆன்மீகம் மதம் சம்பிரதாயம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு நாம் ஏமாறக் கூடாது என்பதைச் சொன்னால் ஆன்மீகம் பற்றிய
Deleteபதிவு வருமா என்று கேட்கிறீர்கள் உன்னிலிருக்கும்கடவுளை முதலில் அடையாளம்கண்டு கொள் ஆன்மீகம் சரியான பொருளில் தெளிவாகும் மறு மொழியே ஒரு சிறிய பதிவுபோல் ஆகி விட்டது
ஐந்திலேயே வளைக்கப்பட வேண்டும். நல்ல விஷயம்.
ReplyDeleteஎல்லாம் இங்கே வியாபார மயம் தான் - அரசியலும்! எல்லோருமே காசுக்குத் தான் மாரடிக்கிறார்கள்! சேவை செய்யப் போகிறேன் என்று வந்தவர்களும் வரப்போகிறவர்களும் அப்படியே தான். புதியவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை காலம் தான் நமக்குக் காண்பித்துக் கொடுக்கும்.
அப்படி எல்லாம் சொல்ல முடியாது சார் ஸ்ரீராமின் எங்கள் ப்ளாகில் நல்ல மாற்றங்களை அரசியல் வாதிகளல்லாதவர்கள் செய்து காட்டுவது வருகிறதே
Deleteஇன்னதுதான் குறை அதைத்தான் களையமுற்பட வேண்டும்யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியம்
ReplyDeleteஉண்மை
உண்மை ஐயா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
Delete//சிறு வயதிலேயே அவர்களதுசிந்தனைகளை நேர் வழிப்படுத்த வேண்டும் என்னும் கட்டாயம் ஏற்படுகிறது இனம் சாதி மொழி போன்றவைகள்சொல்லி மாற்ற முடியாதது அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும் அதுதான்கல்விமூலம் செய்ய முடியும் ஐந்திலேயே வளைக்க முற்பட வேண்டும்//
ReplyDeleteஉண்மைதான் சார்.
//இன்னதுதான் குறை அதைத்தான் களையமுற்பட வேண்டும்யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியம்//
சரியாக சொன்னீர்கள் சார்.
எல்லோரும் சமுதாயத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைக்க வேண்டும்.
நல்ல பதிவு.
சிறுவயதிலேயே பிறந்தவர்கள் எல்லாம் சமம் என்று நாம்குழந்தைகள் மனதில் எண்ணங்களை விதைக்க வேண்டும் செய்கிறோமா
Deleteஅரசியல்வாதிகள் எதைச் சொல்லி ஆட்சியை பிடித்தாலும் சரி.
ReplyDeleteஆனால் யாருமே எதையும் நிறைவேற்றினார்களா ?
என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது.
நிறையவே நிறை வேறி இருக்கிறது பட்டியல் இட ஒரு பதிவு போதாது நம் கண்களுக்கு எல்லாமே அர்சியலாகத் தோன்று கிறது
Deleteஅதிகாரத்தைக் கையில் கொள்வதற்கு ஒரு காரணம். அவ்வளவுதான் ஐயா.
ReplyDeleteநமை விளைத்திட அதிகாரம் தேவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டஒன்று
Deleteஅருமை
ReplyDeleteதவறு நண்பரே! யார் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சொல்பவரால்தான் செய்துகாட்டவும் முடியும் என்பதே அரசியல் தளத்தில் நாம் காணும் யதார்த்தமாகும். உதாரணமாக, தமிழ் ஈழம் பெற்றுத்தருவேன் என்று வைகோ அல்லது விஜயகாந்த் சொன்னால் அது நடந்துவிடுமா? அதே வார்த்தையை நரேந்திர மோடியோ, டிரம்ப்போ சொன்னால் அது நடக்கும் வாய்ப்பு அதிகம் உண்டல்லவா?
ReplyDeleteசொல் என்பதற்குத் தனியான வலிமை கிடையாது. சொல்பவனைப் பொறுத்தே சொல் வலிமை பெறுகிறது. அதனால்தான் வள்ளுவரும் 'பிறிதோர் சொல் அதனை வெல்லும்சொல் இன்மை அறிந்து சொல்லுக சொல்லை' என்றார்.
(கோபிக்க மாட்டீர்கள் தானே?)
- இராய செல்லப்பா சென்னை.
செல்லப்பா சார்... அப்படி இல்லை.
Deleteஎண்ணவும் வேண்டும். அதற்கான முயற்சியும் வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கிய நடையும் முக்கியம். இவைகள் இருந்தால், யாராலும் எதையும் மாற்றமுடியும் என்பதே வரலாறு கற்றுக்கொடுக்கும் உண்மை.
இந்த காந்தி என்பவருக்கு என்ன பின்புலம்? ஆனால் அவர் எப்படி ஒரு நாட்டுக்கு 'தந்தை' ஆக முடிந்தது? லட்சியம், அதுவும் சுய நலமில்லாத லட்சியம், அதை நோக்கிய நெடும் பயணம், இடையில் வரும் துன்பங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு முன்னேறுவது. இந்த 'சங்கரன்' என்னும் சிறுவன்(ர்), 34 வயதுக்குள் எப்படி பெரிய மடங்களை ஸ்தாபித்து 1000 வருடங்களுக்கு மேல் அவர் பெயரைச் சொல்லும்படி வாழ்ந்தது? சிவனைப் பூஜிக்கும் குலத்தில் பிறந்து, வைணவம் தழைக்கச் செய்ததுமல்லாமல் ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் அவரது புகழ் மங்காமல் இருக்கச் செய்தது எது? உயர் லட்சியம், அதன் மீதான விசுவாசம், நம்பிக்கை, அதை நோக்கிய பயணம்
இந்த விசயகாந்த், விசயம் இல்லாத காந்துக்கள் எல்லாம் அரசியல் பேச்சாக பேசுவதால்தான் (சொல்லில் பயனிலாச் சொல்) அவைகள் வெறும் வாய்ச்சவடால்களாக இருக்கின்றன.
செல்லப்பா இதே பதிவை யாராவது ஒரு பிரபலம் சொல்லி யிருந்தால் அதை கொண்டாடுவோம் எண்ணம் சொல் முதலியவையே செயலுக்கு முதல் படி நான் ஒரு சாதாரணன் எந்தபின்புலமும் இல்லாதவன் சொல்வதே சரியில்லையோ கருத்துக்கு நன்றி சார்
Deleteநெத ஒருவராவது புரிந்து கொள்ள முயற்சி செய்கிறீர்களென்பதுமகிழ்ச்சி
Deleteஉங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு. இந்தியா மெதுவாகத்தான் மாறும் என்று தோன்றுகிறது.
ReplyDeleteநிறையவே மாற்றங்களைப் பார்த்து விட்டேன் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு வருக்கும் வெவ்வேறு அளவு கோலில் இருக்கிறது
Deleteபடித்தேன்.. கருத்துச் சொல்லத் தெரியவில்லை.
ReplyDeleteசில சீரியசான விஷயங்களில் கருத்து சொல்லாமல் போவதே சிறந்ததா
Deleteஇது ஒரு மீள் பதிவோ?.. தலைப்பு சம்பந்தமில்லாமல் இருக்கிறதே?
ReplyDeleteஇது மீள்பதிவு அல்ல படிக்கும்போது தலைப்பு புரியுமே
Delete"மனிதனை மனிதன் சாப்பிடறாண்டா-- தம்பிப்பயலே
ReplyDeleteஇது மாறுவதெப்போ, தீருவதெப்போ-- நம்ம கவலை.."
-- இது எந்தக் காலத்துப் பாட்டு?.. இன்னும் இது தீரவில்லை என்பதைத் தவிர அதிகரித்திருக்கிறது என்பது தான் உண்மையாய் இருக்கும் பொழுது, எந்த மாற்றம் விளைந்து என்ன பயன்?.. மனிதத்துவத்தை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுதுங்கள்..
பதிவே என் ஆதங்கங்களைப் பற்றியது மனிதத்துவம் என்றுஇருக்கிறதா
Deleteஅடுத்த பதிவுக்கு திரு.ஸ்ரீராம் ஒரு நல்ல தலைப்பைப் பரிந்துரைத்திருக்கிறாரே?.. முயற்சி செய்து தான் பாருங்களேன்.
ReplyDeleteஸ்ரீராமுக்கு எழுதி இருக்கும் மறு மொழியைப் பாருங்கள் ப்ளீஸ்
Deleteஎன்ன மாற்றம் விளைந்து என்ன பயன் என்ற கேள்வியிலேயே விளைந்திருக்கிற மாற்றங்கள் மனிதத்துவத்தை மலர்ச் செய்ய வில்லை என்பது புரியவில்லையா?.. மனிதர்கள் மனிதர்களாய் மதிக்கப்பட்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதில் உங்களுக்கு ஆதங்கம் இல்லையா?.. ஏற்ற தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பதற்கு அதானே அர்த்தம்?
ReplyDeleteபதிவிலிருந்து விலகிய பின்னூட்டம் நான் போடவில்லை.
மனிதர்களை மனிதர்களாக நினைக்கும் பக்குவம் சிறுவயதிலேயே குழந்த்சைகளுக்குப் போதிக்கப் ப்;அட வேண்டும் அதகைய முயறசியை உண்டாக்க கல்விமுறை மாற்றப்பட வேண்டும் ஏதோ பதிவு எழுத வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது அல்ல
Deleteகல்வி முறையில் என்ன மாற்றம் ஏற்பட வேண்டும்? பின்னூட்டத்தில் தான் சொல்ல வேண்டும் என்றில்லை.
ReplyDeleteஅவசரம் தேவையில்லை. தனிப் பதிவு போட்டுச் சொல்லுங்களேன்.
நான் பதில் சொல்வதற்கு மன்னிக்கவும்.
Deleteமேற்கத்தைய கல்வி முறை, அதுவும் அரசாங்கப் பள்ளிக் கல்விமுறை நமக்கு அப்படியே வரவேண்டும். கல்லூரி மட்டும் தனியாரிடமும் இருக்கலாம். அரசாங்கப் பள்ளி/கல்லூரியில் பயிலாதவர்கள் அரசு வேலைக்கு வரத் தகுதியற்றவர்கள் என்ற சட்டம் வேண்டும். தன் மகனை/மகளை தனியார் பள்ளி/கல்லூரியில் படிக்க வைப்பவர், முதலில் அரசாங்க வேலையை ராஜினாமா செய்யணும் என்ற நிலை வரவேண்டும்.
ஜீவி என்பதிவு சிந்தனையை தூண்டுகிறது என்பதே மகிழ்ச்சி மார்ரம் வேண்டும் என்னும்போதே எவ்வித மாற்றம் என்பதையும் சொல்லி இருக்கிறேனே
Delete@நெத நமக்கெல்லாம் நம் சிந்தனையை ஒத்துப்போகும் சிலர் இருப்பதே மகிழ்ச்ச்சிதானே மாற்றங்கள் இவால்வ் ஆகும்
Deleteஉலகில் எந்த நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை? அதைச் சுட்டிக்காட்டினால் நன்றியுடையவளாக இருப்பேன். நம் நாட்டை விட மோசமான ஏற்றத்தாழ்வுகள் உள்ள நாடுகள் பல இருக்கின்றன. அவற்றிற்கு எல்லாம் நாம் என்ன செய்யப் போகிறோம்? பிறப்பிலேயே இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை எப்படிக் களைவோம்? எல்லோரும் விரும்பியா ஒருத்தர் பணக்கார வீட்டிலும், ஒருத்தர் சுமாரான குடும்பத்திலும், ஒருத்தர் நடைபாதையிலும் பிறக்கிறோம்? இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகள் சுமார் 300 ஆண்டுக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை! குருகுலப் படிப்பு என்றைக்கு ஒழிக்கப்பட்டதோ அப்போது தோன்றியவையே இந்த ஏற்றத் தாழ்வுகள்!
ReplyDeleteநான் கூறுவது எந்தமாதிரியான ஏற்றதாழ்வுகள் என்பது உங்களுக்க்த் தெரியும் என்பதும் எனக்குத் தெரியும் ஏற்றதாழ்வுகள்எப்போது ஏற்படுத்தப்பட்டவை என்பது சர்ச்சையல்ல இருக்கிறது என்பதே நிதர்சன உண்மை
Delete//http://www.samanvaya.com/dharampal/frames/downloads/3beautiful-tree.zip // ஏற்கெனவே உங்களிடம் இந்தப் புத்தகம் குறித்துப் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். இந்தப் புத்தகத்தை முடிந்தால் தரவிறக்கிப் படித்துப் பார்க்கவும். இந்தியர் ஒருவராலேயே அதுவும் காந்தியின் சீடரால் எழுதப்பட்டது.
ReplyDeleteஅந்த தொடுப்பில் என் தளத்தில் எதுவும் வருவதில்லை. இதை நான் முன்பே கூறி இருக்கிறேன்
Deleteஉங்க தளத்துக்கு எதுவும் தானாக வராது. உங்கள் பேரன் அல்லது பிள்ளை மூலம் அந்தத் தளம் சென்று குறிப்பிட்ட புத்தகத்தைத் தரவிறக்கிப் படிக்க வேண்டும். முடிந்தால் செய்யுங்கள். எத்தனையோ பேருக்கு அனுப்பி உள்ளேன். எல்லோரும் தரவிறக்கிப் படித்துள்ளனர். உங்களுக்கு எதுவும் வருவதில்லை என்பதே ஓர் ஆச்சரியம் தான்! :)))))
Deleteதானாக வராது என்பது எனக்குத்தெரியவில்லை பாருங்கள் யார் எழுதி இருந்தால் என்ன
Deleteநல்ல கருத்துகள் ஸார்.
ReplyDeleteநம் நாட்டில் மட்டும் இல்லை சார் எல்லா நாட்டிலுமே பிரிவினை வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. நம் நாட்டில் ஜாதி அடிப்படையில் அல்லது பணக்கார ஏழை அடிப்படையில் என்றால் பிற நாடுகளில் இன அடிப்படையில், மத அடிப்படையில் இருக்கத்தானே செய்கிறது சார். அதுவும் நம் நாட்டைவிடக் கேவலமாகவே இருக்கிறது எனலாம்..ஆப்பிரிக்க நாடுகளில் நிகழ்வது, இலங்கையில் நிகழ்ந்தது... சமீபத்திய சிரியா நிகழ்வுகள் எல்லாம் உற்றுப் பார்த்தால் நாம் எவ்வளவோ நன்றாக சொர்க்கத்தில் இருப்பதாகத்தான் படுகிறது....அதற்காக நம் நாட்டில் நிகழ்வதை நியாயப்படுத்தவில்லை.
கல்வியில் மாற்றம் வந்தே தீர வேண்டும் உங்கள் கருத்து மிகவும் சரியே....மாற்றங்கள் கண்டிப்பாக வரும் ஆனால் நிறைய கால அவகாசம் தேவைப்படும். அந்த மாற்றங்களைக் காண எங்கள் தலைமுறை கூட இருக்குமா என்று தெரியவில்லை....
கீதா
வாய்ப்புகள் மறுக்கப்படுவதிலும் இவற்றை மாற்றமுடியது என்று நிலவும் கருத்தும் கவனிக்கப்பட வேண்டியவை இந்த மன வேறு பாடுகளின் காரணங்களை அகற்றவே என்பதிவு சொல்கிறது வருகைக்கு நன்றி மேம்
Delete// 35 வயதுக்கும் குறைவான சராசரி வயதிருந்த இந்தியாவில் இப்போதுசரசரி வயது 65 வயதுக்கும் மேல் //
ReplyDeleteதவறான தகவல்.50 சதத்தினர் 25 வயதிற்கு கீழ்.
65சதத்தினர் 35 வயதிற்கும் கீழ்.
இந்த காணொளியை பாருங்கள்
https://www.youtube.com/watch?v=kcW4ABcY3zI
unemployment/under employment/unrelevant-employment is an important factor. unskilled/semi-skilled labour from places like Bihar,Assam,orissa etc coming down south is an important factor for conflicts/crimes
இருப்பவர்களில்50 சதவீதம் பேர் 25க்கும்கீழே65 சதவீதப் பேர் 35 வயதுக்கும் கீழே என்பதுமொத்த ஜனத் தொகையினரின் சராசரி வயது65 வயதுக்கும் மேல் என்பதாகவும் இருக்கலாமெ முதல் வருகை (?) க்கு நன்றி
ReplyDeletewiki says
DeleteIndia has more than 50% of its population below the age of 25 and more than 65% below the age of 35. It is expected that, in 2020, the average age of an Indian will be 29 years, compared to 37 for China and 48 for Japan;
unquote
current average is far lower than 65
இதில் தவறு இருக்கிறது ஸ்டாடிஸ்டிக்ஸ் பல நேரங்களில் குழப்பும் எந்த விஷயங்கள் இதை தீர்மானிக்க எடுக்கப்படுகிறதுஎன்பதே முக்கிய காரணம்
DeleteVery thought provoking. As I don't have wifi connection, it is difficult to write reply. Let me write a blog on this later.
ReplyDeleteஎன்னைப் போல் ஒருவன் என்று எழுதப் போகிறீர்களா
ReplyDelete