Wednesday, March 6, 2019

தொடரும் நினைவுகள்




                                தொடரும் நினைவுகள்
                               ---------------------------------------

ஏதேதோ எண்ணங்கள் தொடருகிறது திருச்சியில் நாங்கள் இருந்தபோது எங்கள் வட்டத்தில் இவரை என்பெயர் சொல்லிச் சொன்னால்தான் தெரியும்அங்கிருந்த போது எனக்கு வீட்டு வேலைகள் தவிர நிறையவே பொழுது போக்குகள் இருந்தன மகளிர் சங்க வேலைகள் அதில் அடக்கம்காலையில் இவரை அலுவலகத்துக்கு அனுப்பிய கையோடு அருகே இருந்த கோவில் அது முடிந்து லேடிஸ் க்ளப் நண்பிகளுடனான சந்திப்பு நான் அங்கே லயன்ஸ் கிளப் மகளிர் பிரிவில் காரியதரிசியாக இருந்தேன்   அவ்வப்போது முதியோர் இல்லங்களுக்கு போய் அவர்களுக்கு உணவளிப்போம் ஆனால் இப்போது நாங்கள் இருப்பதே முதியோர் இல்லம்போல் தானிருக்கிறது இருவயதான முதியவர்கள் அவ்வளவுதான் வித்தியாசம்
 மகளிர் சக்திஅங்கு ஒங்கி இருந்தது திருச்சி வானொலியில்  சில நிகழ்ச்சிகள் கொடுத்திருக்கிறோம்  மதியம் பூவையர் பூங்கா என்று ஒலிபரப்பாகும்   ஒருமுறை பீட் ரூட் ஹல்வாவில் ஒரு அழுத்தம் கொடுத்து சொன்னதை கேலி செய்ததும் நினைவில் நாடகங்கள் என்றும்  நாட்டியம் என்றும் ஏக பிசிதான்  முறைப்படி நாட்டியம் கற்கவில்லையானாலும்   பள்ளியில் படிக்கும்போது நானும் என் அக்காவு ம் திரை இசைப்பாடல்களுக்கு ஆடுவோம் பள்ளியில்  படிக்கும்போது  வஞ்சில் லோட்டை வாலிபன்படத்தில்வரும்  கண்ணும்  கண்ணும் கலந்து என்னும் பாடலுக்கு பத்மினி வைஜயன்ந்தி மாலா ஆடுவது போல நானும்  என் அக்காவும்  ஆடியது நினைவில் அப்போதெல்லாம்  ஃபோட்டொ எடுத்து வைத்துக் கொள்ள வீட்டில் யாருக்கும் இந்டெரெஸ்ட்இருக்க வில்லை    அதுவே திருச்சியில் இருந்தபோது நடன நிகழ்ச்சிகள் சேர்ந்த நாடகங்களில் நடிக்க உதவியது மகளிர் சார்பில் திருச்சியிலிருந்து டெல்லி சென்று கலா மிலன் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருக்கிறேன்  அது என்னவோ என் கணவருடன் பல இடங்களுக்குச்  சென்றி ருந்தாலும்   லேடிஸ் க்ளப் நண்பிகளுடன்  சென்று வந்ததே அதிகம் நினைவுக்கு வருகிறது டெல்லியில் இந்திரா காந்தியை அவரதுஇல்லத்தில் சந்தித்தது  மறக்க முடியாது திருச்சியில் மகளிர் பிரிவில் பல நாடகங்களில் நடித்ததும்நினைவுக்கு வருகிறது திருச்சியில்  என்கணவர் பல நடகங்களைப்போட்டிருக்கிறார்  என்னையும் ஒரு நாடகத்தில் நடிக்கக் கூப்பிட்டார்  நானும் மேடையில் பேசாமலேயே  ஒரு மருத்துவராக மேடைக்கு  பின்னால் நடித்திருக்கிறேன்  திருச்சியில்  துவாக்குடியில் இருக்கும் ஃபூட்க்ராட் கல்லூரியில்  சேர்ந்து சர்டிஃப்கேட்டும்  வாங்கி இருக்கிறேன் என்னென்னவோ நினைவுகள்  திருச்சியை விட்டு பெங்களூர்  வந்தது அவ்வளவாக  திருப்தி தரவில்லை  விஜயவாடா  நினைவுகளும்   வருகின்றன அவை இன்னொரு பதிவில் 
ஒரு நாடகத்தில்

மாறு வேடத்தில் 
       

கிராமிய நடனம்

பாரத மாதாவுக்கு வந்தனம் 

பெண்களுக்கு நாட்டியப் பயிற்சிn

பின்னல் கோலாட்டம்


டெல்லி கலாமிலான் இந்திரா காந்தியுடன் 







22 comments:

  1. இதற்கு முந்தைய பதிவுகளுக்கு வராமல், இந்தப் பதிவின் முதல் வரியைப் பார்த்ததும் குழம்பினேன்- நான் இப்போது யாருடைய தளத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன் என ஒரு கணம் திகைத்து, ஓ..ஆண்சக்தியின் தளத்தில், பெண்சக்தியின் நினைவுத் தடங்களா.. சரி! -என நினைத்துத் தொடர்ந்தேன். உங்கள் மனைவி, வீட்டிற்கு வெளியேயும் ரொம்பவும் ஆக்டிவாக இருந்த காலகட்டம் ஓரளவு மீள்காட்சி தருகிறது. நன்றாக வந்திருக்கிறது.

    நிறைய படங்கள் எடுத்து, ஜாக்ரதையாக வைத்திருந்திருக்கிறீர்கள். பின்னால் வலைப்பதிவராவோம் என நாடி ஜோஸ்யம் ஏதாவது..!

    ReplyDelete
    Replies
    1. இதற்குமுண்டைய படிவிலென்மனைவி சொல எழுதியபடிதன் தொடர்கிறேன் புகைப்படங்கள் நினைவுகளை மீட்டெடுக்க உதவும் எனீடம் இருக்கும்படங்கள் பதிவு எழுத துணை போகிறது படங்கள் இல்லாத பதிவுகள் சுவாரசியக் குறைவு குழப்பம்தீர்ந்திருக்குமென நம்புகிறேன்

      Delete
  2. அடடே விடயங்கள் சுவாரஸ்யமாக செல்கிறது ஐயா
    தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. என்மனைவியின் நினைவலைகள் என் எழுத்தில்

      Delete
  3. அருமையான பதிவு. உங்கள் மனைவி இவ்வளவு திறமைசாலியாக இருந்தும் எவ்வளவு அடக்கமாக இருக்கிறார். வெளியில் காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக இருந்து வருகிறார். அவரைப்பார்த்து நானெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாப் படங்களையும் பத்திரமாகப் பாதுகாத்தும் வந்திருக்கிறீர்கள்.படங்கள் சேதமில்லாமல் வந்திருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. அவளை ஒரு நிறை குடம் என்றால் அது புகழ்ச்சி போல் இருக்கும் புகைப்படங்கள் எழுத்துக்கு வலு சேர்க்கிறது

      Delete
  4. ஆரம்பத்தில் இருந்து வாசிக்கணும்... இரவு வாசித்துவிட்டு வரேன்...

    ReplyDelete
    Replies
    1. சௌகரியம்போல் செய்யுங்கள் சார்

      Delete
  5. எங்கள் ஏரியாவிலும் என் மனைவிதான் தினசரி கோவில் செல்லும் வகையில் ஊருக்குள் ப்ரபலம்.

    வானொலியில் ஒருமுறை என் குரலும் வந்தது!

    படிக்கப் படிக்க அம்மா ஒரு பல்சுவை வித்தகி என்று தெரிய வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் அவளுக்கும் நினைவுகளெ துணை நிற்கின்றன அவளது குரலையும் டிஜிடைஸ் செய்து வெளி யிட்டிருக்கிறேனே

      Delete
  6. ஸ்வாரஸ்யம். நினைவு தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக் கிறேன் சார்

      Delete
  7. நினைவுகள் என்றென்றும் இனிமையானவை
    படங்களும் பகிர்வும் அருமை
    தொடருங்கள்

    ReplyDelete
  8. தொடர்ந்து வாசிக்கிறேன் ஐயா. உங்களின் நடையில், பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. பராட்டுக்கு நன்றி சார்

      Delete
  9. அம்மா முதலில் உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள். ஆப்ட் பதிவு இத்தினத்திற்கு. ஒரு காலத்தில் திறமைகளில் கலக்கிய பெண்மணி!!!

    உங்களைப் படத்தில் கண்டுபிடித்துவிட்டேனே....ஈகிதான்

    முதல் படத்தில் சுடிதார்

    இரண்டாவது படத்தில் வலப்புறம் லுங்கி ஆண் வேஷம்

    மூன்றாவது படத்தில் இடப்புறம் ஆண் வேஷம்

    பாரதமாதா படத்தில் இடப்புறம் முதலாவது

    பயிற்சி படத்தில் கொஞ்சம் சந்தேகமாக இருக்கு நீங்க இல்லைனு தோனுது..

    பின்னல் கோலாட்டத்தில் நீங்கள் பின்னாடிதான் இருக்கீங்க ஆனால் தெளிவா இல்லாததால சொல்ல முடியலை...

    கடைசி க்ரூப் படத்தில் இடப்புறத்தில் இரண்டாவது!!!

    தொடருங்கள் உங்கள் அருமையான நினைவுகளை...நாங்களும் தொடர்கிறோம்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. படங்களிலும் அடையாளம்காட்டியது சிற்ப்பு வருகைக்கு ம் கருத்துக்கு நன்றி

      Delete
  10. அம்மா கலக்கறீங்க!! ஆனா வெரி சிம்பிள் நீங்க. எதுவுமே தெரியாதது போல அத்தனை அடக்கம். ஸ்வீட் அம்மா! உங்ககிட்டருந்து கத்துக்க நிறைய இருக்கு!!

    ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது அந்தக் காலம் நினைவுகளின் மீட்டெடுப்புதான்

      Delete