மகளிர் சக்தி
-----------------------
உலக மகளிர் தினத்தை ஒட்டி என்ன எழுதலாமென்று யோசித்தபோது
எனக்குத் தெரிந்த என்னைத் தெரிந்த வலை உலக மகளிர்களின் பட்டியல் தயார் செய்து குறிப்பிட்ட
சில கேள்விகளை குறிப்பிட்ட சிலரிடம் கேட்கலாம்
என்று தோன்றியது உடனே செயல் படுகிறேன் பட்டியல் தயார் செய்யும்போது பல வலைப்
பதிவர்களை என்பதிவின் பின்னூட்டங்களில் காணமுடிவதில்லை
ஏறத்தாழ எட்டாண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன் பல வித பதிவர்களை பின்னூட்டங்களில் பார்த்தாகி விட்டது சிலர் பற்றிய சில அபிப்பிராயங்களும் உண்டு அவை சரியாக இருக்கலாம் தவறாக ஆக இருக்கலாம் என் அபிப்[பிராயங்கள் முக்கியம் அல்ல
முதலில்
பட்டியல் பார்ப்போம் மனதில் வரும்பெயர்களே முதலில் வேறு முக்கியத்துவமில்லை எல்லோரும் சமமே
1) கீதா சாம்பசிவம் இவரைஒரு முறை அவர் வீட்டில் சந்தித்திருக்கிறேன்
ஒரு பதிவர் இவரை துறை போகியவர் என்று குறிப்பிட்டு இருந்தார் இவரிடம் நான்கேட்க விரும்பும் கேள்வி நீங்கள் ஆன்மீகவாதியா ஆஸ்திக வாதியா? எந்தக் கேள்விக்கும் ஒரு பதில் இவரிடமிருக்கும் எனஎதிர்பார்க்கலாம் அரசியலில்
கருத்து கூறும்போது நீங்கள் எதை நம்புகிறீர்கள்
கேட்டு அறிந்ததா பட்டறிந்ததா
2)
துளசி
கோபால் இவரை என்வீட்டிலும் பதிவர் மாநாட்டிலும்சந்தித்து இருக்கிறேன் என்னை சந்தித்ததை சிங்கத்தின் குகையில் என்று கூறி
இருந்தார் அதுசரி மேடம்பலரும் உங்களை டீச்சர்
என்கிறார்கள் பள்ளி ஆசிரியரா எங்கே எப்போது?பதிவுகளில் எழுதும்போது நம்பிக்கையே முக்கியம்
என்று எழுதுகிறீர்கள் அதுவும் பல நம்பமுடியாததாக இருந்தாலும்!
நீங்கள் ஒரு விஷ்ணு பக்தையாகவே தெரிகிறீர்கள் சைவ சித்தாந்தங்கள்
பற்றி ஏதும்சொல்வதில்லையேஇல்லாவிட்டால் பாடல் பெற்ற இடங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து ஏன்செல்கிறீர்கள் நியூ ஜிலாந்தில் எப்போது இருப்பீர்கள்
3) கீதா ரெங்கன் இவரைப் பலமுறை சந்தித்ததுண்டு
இவர் இப்போதுபெங்களூர் வாசியான பின் சந்திக்க வில்லை மேடம் நீங்கள் உங்கள் பின்னுட்டங்களில்
பலரோடு ஒத்துப்போவதையே காண்கிறேன்உங்களுக்கென்று அபிப்பிராயமிருந்தாலும்சொல்லாமல் போவதே
மேல் என்று நினைக்கிறீர்களா பெரும்பாலான இடங்களில் நீங்கள்சொல்ல வந்ததை ஏற்கனவெ வேறு
சிலர் சொல்லி இருப்பதாக நீங்கள் எழுதுவதைப் பார்க்கிறேன் கர்நாடக சங்கீதம்முறைப்படி
பயின்றவரா நீங்கள் சொல்ல வருவதை சுருங்க சொல்ல மாட்டீர்களா
4) பானுமதி வெங்கடேஸ்வரன் இவர் எனக்கு உறவு முறையும் கூட இவரது மகள் திருமணத்துக்கு
சென்றபோதுதான் இவரும்வலையில் எழுதுகிறார் என்று தெரிந்தது அப்போதெல்லாம் இவரது பதிவு பலருக்கும் தெரியாமல் இருந்தது என்பதிவுக்கு
வரும்பின்னூட்டங்க்களில் இருந்து பலநண்பர்களை
உருவாக்கினார் என்று இவர் சொன்னதாக நினைவு உங்கள் கருத்துக்கு மாறாகஎழுதினால் உணர்ச்சி
வசப்படுவீர்களோ என்று தோன்றுகிறது
5)
கோமதி
அரசு மயிலாடு துறையில் இவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன் அங்கு எங்களுக்கு மிகவும் உதவியாய் இருந்தார் திரு
நாவுக்கரசரும் இவரைப் போலவே எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்
எதிர்மறை எண்ணங்கள் என்றாலும் தாண்டி போய்விடுபவர் எல்லோருக்கும் நல்லவராக இருக்க முயற்சி செய்பவர் வேதாத்ரி சுவாமிகளின் எழுத்துக்களைமிகவும் நம்புபவர் மயிலாடு துறையில் அப்போதுநான் எழுதி இருந்த இது
என் ஏரியா அல்ல என்னும்பதிவில் பட்டினத்தார் பற்றிக் கேள்விப்பட்டதைஎழுதி இருந்தேன்
இது என் ஏரியா இல்லைஎன்றுசொல்லியே பட்டினத்தார்
பற்றி எழுதி இருக்கிறார்என்று அப்போது அவர் சொன்னது எனக்கு ஏதோ சர்காஸ்டிக்காகத்தோன்றியது
நான் தவறாகவும் இருக்கலாம்
6)
ராமலஷ்மி
இவர் ஒரு புகைப்படக் கலைஞர் இவரை பெங்களூரில் ஒரு பதிவர் சந்திப்பில்பார்த்திருக்கிறேன் அற்புத புகைப்படக் கலைஞர் இவரது பதிவுகள் எனக்குப்
பிடிக்கும் தானாக எழுதுவதை விட பிறரது கொடேஷன்களை வெளியிடுவார் திரு நெல்வேலிக் காரர்
என்றும் ஒரு முதுகலைப் பட்டதாரி என்றும்தெரிகிறது
7)
திரு
நெல்வேலிக் காரர் என்றதும் அமெரிக்காவில் இருந்து
வெட்டிப்பேச்சு என்னும் தளத்தில் எழுதி வந்த சித்ராவும் நினைவுக்கு வருகிறார் இப்போதெல்லாம் அவரைக் காண்பதில்லை
8)
கீதா
மதிவாணன் இவர் ஆஸ்திரேலியாவில் இருப்பவர் அங்கிருந்துஅவருக்கு
முடிந்த அளவில் தமிழுக்கு தொண்டாற்றி வருகிறார் அவரது சிலபதிவு என்னைக் கவர்ந்தது சிலபூக்களின்ந்படங்களைக் காட்டிஅது பற்றிக் கேட்டிருந்தேன் இவர்தான் அது பற்றி எனக்கு எடுத்துச் சொன்னவர் திரு
ஞானசம்பந்தம் என்னும் மூத்தபதிவர் இவருக்கு மாமனார் முறை எனக்கு ஓரோர்சமயம் அவரது சிந்தனைகள்
எனதுபோல் தோன்றும்
9)
அன்புடன்
மலிக்கா இவர் என்னிடம்பெண் எழுத்து என்னும்தொடர்
பதிவில் கலந்துகொள்ளச் செய்தார் ஆணெழுத்து பெண் எழுத்து என்னும் பேதம்அறியாமல் நானும் எழுதி இருக்கிறேன்
10) இவர்களைத்தவிர சாதிகா என்பவருமென் பதிவுகளில்
பின்னூட்ட உற்சாகம்தந்தவர்
11) புதுக் கோட்டையில் சந்தித்த சசிகலாவும் ஒருவர் நான் எழுதி இருந்த ஒருபதிவின் வரிகளை நினைவில் வைத்துகோண்டு
புதுக்கோட்டையில் என்னை திணர அடித்தவர் இன்னும்பலர் உண்டு பதிவின் நீளம்கருதி எழுதவில்லை
எனக்கு ஒரு சந்தேகம் உண்டு பெண்களெப்போதும் ஆண்களைச்சார்ந்திருப்பதுதான் இந்தியக் கலாச்சாரம் என்று
மஞ்சுபாஷிணி வல்லி சிம்மன் மனோ சாமிநாதன் திருமதி காமாட்சி போன்றோரும் என்பதிவுக்கு வந்தவர்கள் திருமதி லக்ஷ்மி என்பவர்
அம்பர் நாத் வாசி பயண்ப் பதிவுகள் எழுதுவார்
இப்போதெல்லாம் காண்பதில்லை திருமதி ராஜராஜேஸ்வரிமறக்க முட்யாதவர் கோவை வாசி ஒருகால்
கோவையிலும் ஒரு கால் ஆஸ்திரேலியாவிலுமாகைருந்து படிவிடுவார் இப்போது இல்லை மறைந்து
விட்டார் ஆன்மீகப் பதிவுகள் எழுதுபவர் அவருக்க்கு
ஜீனியஸ் என்னும் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தி இருக்கிறேன் இப்போது காரைக் குடியில்
இருக்கும் தேனம்மை லக்ஷ்மணன்நிறையவே எழுதுகிறார் பல நூல்களை வெளியிட்டவர் அவரது சாட்டர் டே போஸ்டுக்கு என்னிடம் எழுதி வாங்கி இருந்தது நினைவுக்கு வருகிறது பதிவு எழுதத்துவன்கியபோது இருந்த மனநிலைஎழுத எழுத மாறி
விட்டது பெண்களுக்கு 33 சத வீதம் இட ஒதுக்கீடு என்பது ஒரே மாய்மாலம் என்று தோன்றுகிறதுசரிபாதி
இட ஒதுக்கீடுஇருக்க வேண்டும் அல்லவாஇப்போதுபதிவுஎழ்களெழுதிவருக் பலரும் நகைச்சுவை என்று
நினைத்து ஏதேதோ எழுதுகிறார்களோ என்னு சந்தேகம்வருகிறது தனகுத்தானே பல பட்டப்பெயர்கள் கொடுத்துக் கொண்டு
எழுதும் அதிரா ஏஞ்செல் என்பவரை நான் அஞ்சலை என்றுஅழைக்கலாமா என்று கேட்டிருந்தேன் என்புகைப்படத்தில்
என் மீசை பயமுறுத்துகிறது என்பதை கேட்டதும் மீசையின் இன்னொருமுக்கியத்துவமும் தெரிந்தது
எது எப்படியோ இந்தவயதில் நானும் எழுதுவதற்கு
தூண்டு கோலாயிருக்கும் மகளிர் சக்தி வாழ்க என்று கூறி முடிக்கிறேன்
சார் வணக்கம் வாழ்க வளமுடன்.
ReplyDeleteஎங்களைப் பற்றி எழுதியது உங்கள் நல்ல உள்ளத்தைச் சொல்கிறது.
நான் உங்களை வஞ்சப்புகழ்ச்சி எல்லாம் செய்யவில்லை.
என் ஏரியா இல்லை என்று சொல்லியே நிறைய பதிவுகள் கடவுளைப் பற்றி நன்றாக எழுதி இருப்பீர்கள்.
கண்ணன் பற்றி பாட்டு எழுதி இருந்தீர்கள். நான் கூட அந்த பாட்டை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.
உங்களின் துணைவியார் நல்ல இறை பக்தி உடையவர் அவருக்காக நீங்கள் அவர்களுடன் கோவில்கள் சென்று வருகிறீர்கள். அவர்களை மதித்து வாழ்பவர். அது ஒன்று போதுமே ! உங்கள் நல்ல குணத்திற்கு.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நன்றி. என் கணவரையும் இங்கு நீங்கள் குறிப்பிட்டது மகிழ்ச்சி.
நான் சாதாரணன் ராமாய்சணம்முதல் எல்லா அவதாரக் கதைகதைகள் எழுதி இருக்கிறேன் பக்தியால் அல்லஎழுத நிறைய ரெஃபெரன்ஸ் கிடைக்கும்கற்பனையை விட எழுதும் திறனுக்கு சவாலாக இருக்கும் உங்கள் வீட்டுக்கு வந்ததையும் உங்கள் இட்லியையும் மறக்க முடியுமா உங்கள் கணவரும் கூடவே வந்து உதவிகள் செய்தார்
Deleteஅலசல் சுவாரஸ்யம் ஐயா.
ReplyDeleteஅலசல் அல்ல ஜீ பதிவுலக பெண்களைப்பற்றிய ஒருபதிவு
Deleteஅலசல் அருமை
ReplyDeleteஎன்ன அலசி இருக்கிறேனோ தெரியவில்லை
Deleteசுவாரஸ்யமான தொகுப்பு.
ReplyDeleteவலையுலக பெண்பதிவர்கள் பற்றி என் எண்ணத்தில் உதித்தது அவ்வளவே
Deleteநல்லதொரு தொகுப்பு ஐயா...
ReplyDeleteநன்றி சார்
Deleteஹா ஹா ஹா ஜி எம் பி ஐயா, இவ்ளோ ஞாபகமாக பழையோர் எல்லோரையும் நினைவில் வச்சு எழுதியிருக்கிறீங்க... இன்னும் பலர் இப்படிக் காணாமலே போய் விட்டனர்..
ReplyDeleteஆம் பதிவர்கள் பலரும் வலைத்தளத்தை துற்ந்து விட்டனர்
Deleteஅதுசரி மகளிர்தினம் எனில் வாழ்த்துத்தானே சொல்லோணும்:), இப்பூடிக் காலை வாரிவிடுவதோ மகளிர்தினம் என்பது?:).. மூத்தவராகிய நீங்கள் இப்பூடி எழுதுவதைப் பார்க்க எனக்கு மகளிர்தினம் என்றால் என்ன? எனும் கேள்வி எழுந்துவிட்டது:)) ஹா ஹா ஹா.
ReplyDeleteஆனாலும் ஜி எம் பி ஐயா, உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, நீங்கள் என்ன எழுதினாலும், எப்படி நெகடிவ்வாக நம் கொமெண்ட்ஸ் க்குப் பதில் தந்தாலும், உங்களை எங்களுக்குப் பிடிக்கிறது .. அது உங்களின் வயசுதான் முக்கிய காரணம். அதனால கோபம் வருவதில்லை, கோபம் வந்தாலும் அது நிலைப்பதில்லை:)).. நீங்கள் எதையாவது இப்படி எழுதிக்கொண்டிருப்பது பார்க்க மகிழ்ச்சி.
வாழ்த்துதான் சொல்லோணம் என்று ஏதாவது இருக்கிறதா அவர்களை நினைவில் வைப்பதே வாழ்த்துக்குச்சமம் உங்களுக்கு என்னைப் பிடிக்கிறது ஏன் என்றால் என்வயடு அல்ல நான்நல்லவன் என்பதாலேயே
Delete///உங்களுக்கு என்னைப் பிடிக்கிறது ஏன் என்றால் என்வயடு அல்ல நான்நல்லவன் என்பதாலேயே//
Deleteஹையோ ஹா ஹா ஹா என்னை ஆராவது இப்பவே தூக்கிப்போய்த் தேம்ஸ்ல வீசுங்கோ.. உங்களுக்கு 7 குடும்ப ஜென்மத்திலும் நல்லது நடக்கும்[நன்றி கெள அண்ணன்:)] ஹா ஹா ஹா...
ஜி எம் பி ஐயா, இந்த உலகில் யாரும் 100 வீதம் நல்லவர்களுமில்லை, 100 வீதம் கெட்டவர்களுமில்லை..
///எந்தக் கேள்விக்கும் ஒரு பதில் இவரிடமிருக்கும் எனஎதிர்பார்க்கலாம்//
ReplyDelete//கர்நாடக சங்கீதம்முறைப்படி பயின்றவரா நீங்கள் சொல்ல வருவதை சுருங்க சொல்ல மாட்டீர்களா//
///உங்கள் கருத்துக்கு மாறாகஎழுதினால் உணர்ச்சி வசப்படுவீர்களோ என்று தோன்றுகிறது///
//தனகுத்தானே பல பட்டப்பெயர்கள் கொடுத்துக் கொண்டு எழுதும் அதிரா ஏஞ்செல் என்பவரை நான் அஞ்சலை என்றுஅழைக்கலாமா என்று கேட்டிருந்தேன் //
ஹா ஹா ஹா சிரிச்சு உருண்டு விட்டேன்ன்ன்ன்....
எனக்கு ஒரு திருக்குறள்தான் நினைவுக்கு வருகிறது..
“இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய்கவர்ந் தற்று”:)
இன்னாதது எது என்று சொல்லாமலேயே குறளைக் கோட் செய்கிறீர்களே
Delete//எனக்கு ஒரு சந்தேகம் உண்டு பெண்களெப்போதும்
ReplyDeleteஆண்களைச்சார்ந்திருப்பதுதான் இந்தியக் கலாச்சாரம் என்று
நினைக்கிறார்களா அவர்களுக்கென்று கருத்துஏதுமில்லையா இருந்தாலும் ஏன் சொல்ல வேண்டுமென்றுநினைத்துஒதுங்கிப் போகிறார்களா//
எதை வைத்துச் சந்தேகப் படுறீங்க? வலையுலகில் உலாவரும் பெண்கள் எல்லாம், நம் கருத்தைத்தானே சொல்லுகிறோம்.. ஓடிப்போய் ஆண்களிடம் கேட்டுவிட்டு வந்தோ எழுதுகிறோம் ஹா ஹா ஹா.. முடியல்ல ஜி எம் பி ஐயா:)).
அது வேறு, ஆனால்,
“பெண் ஒருவரால் கொடியாகத்தான் படர முடியும், கொடி படரக் கொம்பு தேவை”- கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்:).
/“பெண் ஒருவரால் கொடியாகத்தான் படர முடியும், கொடி படரக் கொம்பு தேவை”- கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்:) அதாவது ஆண்களைச் சர்ந்துதானிருப்பதைஒப்புதல் வாக்கு மூலம் அல்லவா .
Deleteஜி எம் பி ஐயா, உங்கள் வயதையும் அனுபவத்தையும் வச்சு நீங்கள் எங்களுக்கும்/உங்கள் மருமகள்களுக்கும் சொல்ல வருவது என்ன? ஆண்களைச் சார்ந்திருகாமல் நீங்களே முடிவெடுங்கோ.. நீங்களே உங்கள் பாட்டில் வெளியே போய் வாங்கோ.. ஆண்களிடம் கேட்டு எந்த முடிவும் எடுக்காதீஇங்கோ என்பதா?
Deleteஉங்கள் மனைவியோ இல்ல நீங்களோ ஒருவரை ஒருவர் சாராமலா இருக்கிறீங்க? எந்த ஒரு விசயத்தையும் கலந்து ஆலோசிக்காமல் தனித்தனியேயா முடிவெடுப்பீங்க? அப்படி எனில் அது ஒரு நல்ல குடும்பத்துக்கு ஆரோக்கியமானதா?:)
நம் நாடென்றில்லை, வெளிநாடுகளிலும் குடும்பம் எனில் ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் சார்ந்திருந்தால்தான் அது அழகு, பாதுகாப்பு.
அதுக்காக கொமெண்ட் போடுவதுக்கும் அப்படி என நினைக்கக்கூடாது, கொமெண்ட்ஸ் போடுவதென்பது ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வீட்டில் குடுத்திருக்கும் சுகந்திரம். இதையும் கேட்டுக் கேட்டுத்தான் போடுவதென்றால், புளொக் எழுதவோ கொமெண்ட் போடவோ முடியுமா?
என்வயதும் அனுபவமும்என்சொந்தங்களுக்குப் பாடம் வைத்தால் குடுமி சரைத்தால் மொட்டை என்ற ஒரு சொல் உண்டுஒருவரைஒருவர் சார்ந்துஇருப்பதன் அர்த்தமேவித்தியாசமானப் புரிதல் உங்களுக்கு எதியு தமாஷாக அணுகுவதுஎப்போதும்நல்லது அல்ல
Deleteஎங்காவது தன்னிச்சையாக முடிவெடுக்கச் சொல்லி இருக்கிறேன
Delete//எங்காவது தன்னிச்சையாக முடிவெடுக்கச் சொல்லி இருக்கிறேன//
Deleteஅதைத்தான் நானும் சொல்ல வந்தேன், கொமெண்ட்ஸ் போடுவதிலும் ஆண்களைச் சார்ந்து போடுகிறோம் என நீங்க சொன்னதுக்கே பதில் சொன்னேன்.
மிகவும் அருமையான தொகுப்பு சார் :)
ReplyDeleteபொதுவாகவே நான் பெரியவங்களுக்கு கொஞ்சம் பயந்த சுபாவம் :)
நல்ல விஷயங்களை உள்வாங்கி கற்றுக்கொள்வேன் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன் .உங்கள் மீசை மீது வைத்திருப்பதும் பயம் கலந்த மரியாதைதான் :)
//எனக்கு ஒரு சந்தேகம் உண்டு பெண்களெப்போதும்
ஆண்களைச்சார்ந்திருப்பதுதான் இந்தியக் கலாச்சாரம் என்று
நினைக்கிறார்களா அவர்களுக்கென்று கருத்துஏதுமில்லையா இருந்தாலும் ஏன் சொல்ல வேண்டுமென்றுநினைத்துஒதுங்கிப் போகிறார்களா//
எங்களுக்கு சொந்த கருத்து இல்லையென்றெல்லாம் சொல்ல முடியாதது . இங்கே வலைப்பதிவில் வெளியாவது அனைத்தும் எனது சொந்த கருத்துக்களே .
மேல் பின்னூட்டடத்தைப் பார்த்தீர்களா/:).கண்ணதாசன் சொன்னதைத்தான்சொல்ல முடிகிறது மேலும் சில கேள்விகள் சிலருக்காகஎன்று எழுதி இருக்கிறேன்
Deleteதுளசி டீச்சர் என் வீட்டுக்கு வந்துள்ளார்.
ReplyDeleteஅவரதுபதிவில் படித்திருக்கிறேன்
Deleteஅருமையான பதிவு. முதலில் என்னைக் குறித்துச் சொன்னதுக்கு பதில் சொல்கிறேன். நான் எந்தத் துறையிலும் துறை போகியவர் இல்லை. நான் கண்டது, கேட்டது, படித்தது, எனத் தெரிந்த விஷயங்களைத் தான் என்னோட எண்ணங்களின் படி பகிர்கிறேன். மற்றபடி ஆன்மிகமோ, ஆஸ்திகமோ இரண்டும் என்னிடம் இல்லை என்பதே உண்மை. ஆஸ்திகவாதி என்றாலே இப்போதெல்லாம் ஏதோ அவப் பெயர் போல ஆகி இருக்கிறது. என்னிடம் இருப்பது வெறும் பக்தி, அது சார்ந்த நம்பிக்கை மட்டுமே! ஆன்மிகத்தின் அடிப்படைக்குக் கூட நான் போகவில்லை. அது குறித்த அறிவு சிறிதும் என்னிடம் இல்லை. மற்றபடி அரசியலில் கருத்துச் சொல்ல ஏதுமில்லை என்றாலும் ஆதார பூர்வமானப் பல செய்திகள் தெரியும். பகிர்ந்தது இல்லை. பகிர்ந்து கொள்வதனால் ஏதும் பலன் இல்லை. :)))))
ReplyDeleteவிளக்கத்துக்கு நன்றி மேம்
Deleteபெண் வலைப்பதிவர்களில் துளசி தான் தொடர்ந்து பதிவுகளில் எழுதி வந்தவர் என நினைக்கிறேன். அப்புறம் வந்தவர்கள் அவரிடம் சந்தேகங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டதால் "டீச்சர்" என்றிருக்கலாமோ? தெரியவில்லை/ ஆனால் நான் அவரைப் பதிவுலகப் "பிதாமஹி" என அழைத்திருக்கிறேன். அது தான் ஓரளவு உண்மையும் கூட.
ReplyDeleteதில்லையகத்து கீதா முறைப்படி சங்கீதம் பயின்றவர். நன்றாகப் பாடுவார். சுப்புத்தாத்தா வீட்டுக்குச் சென்றபோது இவரும் சுப்புத் தாத்தாவும் ராகங்களை அலசிப் பாடிக்காட்டி என அமர்க்களப்படுத்தி இருப்பாங்க. சுப்புத்தாத்தா அந்த வீடியோவை எனக்கு அனுப்பி இருந்ததோடு முகநூலிலும் பகிர்ந்திருந்தார். இப்போது தான் சில மாதங்களாக சுப்புத் தாத்தாவைக் காண முடியவில்லை. தொடர்பு கொள்ளவும் முடியலை.
சிலர் வயது ஆனால் எதற்கு வம்பு என்று எழுத்துப்பக்கமே வருவதில்லை என்பதே என்கருத்து
Deleteகீதாக்கா நான் கர்நாடக சங்கீதம் முறையாக ஒழுங்காகக் கற்றுக் கொண்டதில்லை. ஒரே ஒரு முறை ஒரு 8 மாதங்கள் போனதோடு சரி. ஜலதரங்கம் சீதாலக்ஷ்மி மாமியிடம். அதுவும் ரொம்ப முறையாகக் கற்றுக் கொள்ளவில்லை. அதுவும் இடையில் நிறைய வகுப்புகள் இல்லாமல் போனது.அப்போதே அவருக்கு 80 வயது. அவர் கணவர் தவறியதும் அதுவும் நின்றது. சிறு வயதில் என் பாட்டி ஏற்பாடு செய்தார் அந்த வாத்தியார் பாவம்...எனக்குக் கற்றுக் கொடுக்க முடியாது என்று போய்விட்டார். அப்போது பாட்டி பாவம் எனக்காக ஏற்பாடு செய்து கற்க வைத்ததை நான் சீரியஸாக எடுக்காமல் கற்றுக் கொள்ளாமல் விட்டதை நினைத்துப் பின்னால் மிகவும் வருந்தியிருக்கிறேன். பின்னால் கற்க நினைத்த போது மற்றொரு பாட்டி பாட்டு சோறு போடாது என்று கற்க அனுமதிக்கவில்லை. அப்படியே போய்விட்டது..
Deleteகீதா
மஞ்சுபாஷினி குரல் அத்தனை இனிமை. நேரில் சந்திச்சதில்லை. வித்தியாசமான மகளிர் தின பதிவு. நன்று
ReplyDeleteமஞ்சு பாஷிணியிடம்தொடர்பில் இருக்கிறேன் சந்திக்காதவரின் குரல் பற்றி சிலாகிப்பதுஅதிசயம்நானும் சந்தித்ததில்லை
Deleteஎன்னது கீதா ரங்கண் பாடுவரா நல்லவேளை அவர் சந்தித்தது என் டூப்பை நல்ல வேளை என்னை சந்தித்து என் முன்னால் பாடியிருந்தால் நான் சிவ தாண்டவம் எடுத்து ஆடி இருப்பேன் ஹும்ம்ம்ம்
ReplyDeleteமதுரை ஹா ஹா ஹா ஹா சே அப்படி ஒரு சிவ தாண்டவத்தை மிஸ் செய்துட்டனே!!!!!
Deleteஏஞ்சல் அதிரா ஓடி வாங்க நான் பாடினால் மதுரை சிவதாண்டவம் ஆடுவாராம்!! அதைப் பார்த்து நாமெல்லாம் எஞ்சாய் செய்வோம் அதுக்காகவேனும் நான் பாடுறேன்...
நீங்க டுப்புன்னா நானும் டூப்புத்தான்!!! ஹிஹிஹி!!!!!
சிரிச்சு உங்களை கற்பனைல சிவதாண்டவம் ஆடுறாப்புல நினைச்சு சிரிச்சுப்புட்டேன் மதுரை!!!
கீதா
மதுரைத் தமிழரே, உண்மையிலேயே ஒரு கச்சேரி செய்யும் அளவுக்குத் திறமை உடையவர் தி/கீதா! :))) அடக்கமாக இருக்கிறார்.
Delete@மதுரைத் தமிழன் சில சந்தேகங்களைத்தெளிவுபடுத்திக்கொள்ள எழுதியது நகைச் சுவைக்காக அல்ல
Delete@கீதா எல்லா வற்றையும்நகைச்சுவையாக்கும் பதிவர்கள்போல் என்னால் இருக்க முடிய வில்லையே
Delete!கீதா சாம்பசிவம் தில்லையகத்துகீடாவைநல்ல பழக்கமுண்டு அவருக்கு பாட வருமென்பதுதெரியாது பல பதிவுகளில் ராகங்கள் பற்றிக் கூறி இருப்பார் அதை தெளிவு செய்யவே எழுதினேன்
Deleteமதுரைத் தமிழரே, உண்மையிலேயே ஒரு கச்சேரி செய்யும் அளவுக்குத் திறமை உடையவர் தி/கீதா! :))) அடக்கமாக இருக்கிறார்.//
Deleteஹையோ கீதாக்கா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ மீக்கு மயக்கமே வந்துருச்சு!!!!!!..இப்படி சொல்லிப்பூட்டீங்களே..என் மேல அம்பூட்டு நம்பிக்கையா அக்கா..!!!!!!!!!!!அக்கா உண்மையா எனக்குக் கச்சேரி செய்யும் அளவுக்கு சங்கீத ஞானம் கிடையாது அக்கா...உங்கள் நன்மதிப்பிற்கு மிக்க நன்றி...
சுப்புத்தாத்தா சும்மா நான் பாடுவதை வைத்து கவிநயாம்மாவின் பாடல்களுக்கு மெட்டு போடச் சொல்லி பாடி அனுப்பச்சொன்னார் அம்மன் பாடல்கள். இப்போது இங்கு வந்த பிறகு அதுவும் நின்றுவிட்டது. தொண்டை ஒத்துழைக்கவில்லை இப்போதுதான் கொஞ்சம் பரவாயில்லை. அவருக்கு என் மீதான அன்பில் தாத்தா அப்படிச் சொல்லிருக்கார்...ஆவியும் அன்றுவந்திருந்ததால் களை கட்டியது...
ஆனால் மீண்டும் நான் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறென் கச்சேரி செய்யும் அளவு ஞானம் கிடையாது. ஏன் தெரியுமா கச்சேரி செய்யனுன்னா கணக்குல புலியா இருக்கனும்...மீ கணக்குல பூஜ்ஜியம்...ஹிஹிஹி
மிக்க மிக்க நன்றி கீதாக்கா....நான் மிகவும் கொடுத்து வைத்தவள் இப்படியான அன்பான நட்புகள் கிடைத்திருப்பதற்கு!!
கீதா
ஜி எம் பி சார் ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க என் கருத்துகள் பெரிசானதுக்கு....
Deleteகீதா
ட்றுத் இப்பவும் டூப்புத்தான் பிக்கோஸ் அவருக்குத்தான் அஞ்சலிப் போஸ்டர் ஒட்டிக் கழட்டிட்டமே ஹையோ ஹையோ:)).
Delete//@கீதா எல்லா வற்றையும்நகைச்சுவையாக்கும் பதிவர்கள்போல் என்னால் இருக்க முடிய வில்லையே//
ஜி எம் பி ஐயா, எங்களுக்கும் சீரியசாகவும் முகத்திலடிப்பதுபோலவும்.. உங்களைப்போல எழுதத்தெரியும், ஆனா சபை நாகரிகம் கருதியும், ஒரு மரியாதைக்காகவும் பலதை நகைச்சுவையாக்கிக் கடந்து விடுகிறோம்.....
இந்த வயதில் அதிராவுக்கு வந்த ஞானம், ஜி எம் பி ஐயாவுக்கு இன்னும் வரவில்லையே:)).. ஹையோ என்னைக் கலைக்கிறார் அடிக்க.. மீ ஓடிடுறேன்ன்:))
///ஜி எம் பி சார் ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க என் கருத்துகள் பெரிசானதுக்கு....
Deleteகீதா//
ஹா ஹா ஹா சிரிச்சு முடியல்ல கீதா.. உண்மையைச் சொன்னால் ஜி எம் பி ஐயாவுக்கும் பெரிய கொமெண்ட்ஸ்தான் பிடிக்குது, ஆனா அதை தன் பக்கத்தில் போடாமல் விடும்போதுதான் கோபமடைகிறார்போலும்:)..
வர வர எங்கட நிலைமை தெனாலி ரேஞ்சுக்குப் போகுது:)) அங்கு டிடி அடிக்க வாறார்ர்.. போஸ்ட்டைப் படிக்காமல் கொமெண்ட் போடாதே என ஹா ஹா ஹா முடியல்ல:))
//@மதுரைத் தமிழன் சில சந்தேகங்களைத்தெளிவுபடுத்திக்கொள்ள எழுதியது நகைச் சுவைக்காக அல்ல//
Deleteசந்தேகம் எனில் கீதாவை நேரடியாகவே கேட்டிருக்கலாமே ஜி எம் பி ஐயா? கொமெண்ட்ஸ் உடன் ஒப்பிட்டுப் பேச வேண்டிய தேவை என்ன? அதுவும் மகளிர் தினத்தில்...
ஜிஎம் சார் எனக்கு எதையும் கிண்டல் கேலி செய்வதுதான் பிடிக்கும் அதனால் என் கருத்துக்கள் அப்படித்தான் இருக்கும் அதிலும் கீதா ஏஞ்சல் மற்றும் அதிரா என்றால் உரிமையாக கிண்டல் செய்வேன் . நான் இணைய தளம் அருவது பொழுது போக்கவே யாரையும் சிந்திக்க வைக்க அல்ல அதுபோல எதிர்மறை கருத்துகள் சொல்லி வீண்விவாதம் பண்ணுவதும் என் பழக்கம் அல்ல
Delete///நான் இணைய தளம் அருவது பொழுது போக்கவே யாரையும் சிந்திக்க வைக்க அல்ல ///
Deleteஹா ஹா ஹா ட்றுத்... ஹா ஹா ஹா பலமாகச் சிரித்து விட்டேன்ன்.. ஹையோ இன்று ஜி எம் பி ஐயாவின் போஸ்ட்டால் என் ஆயுள் கூடிப் போச்சூஊஊஊ ஹா ஹா ஹா:)..
// அதிலும் கீதா ஏஞ்சல் மற்றும் அதிரா ,,///
Deleteதேங்க்ஸ் ட்ரூத் :) நாங்களும் உரிமையுடன் கலாய்ப்பது உங்களை ஸ்ரீராம் நெல்லைத்தமிழனை :)
@மதுரைத்தமிழன் ..கீதாவின் குரலில் //தலைவாரிப்பூச்சூடி உன்னை // கேளுங்க பாட்டு முடிஞ்சபின்னும் ரீங்காரமிடும் குரல்
Delete
Deleteஏஞ்சல் நாங்க்ள் இருவரும் நட்பாக பழகுவது உங்களுக்கு பிடிக்கவில்லையா என்ன? என் குழந்தை கர்நாடக சங்கீத பாட்டு கற்று கொள்ள ஆரம்பித்து வீட்டுல் பாடி பிராக்டிஸ் பண்ணுச்சு அப்ப சொன்னனேன் நீ பாடினால் வீட்டை விட்டு வெலியே போயிருவேன் என்று சொன்னேன் அதன் பின் பாட்டு க்ளாஸிற்கு போவதையே நிறுத்திவிட்டாள் நமக்கும் பாட்டுக்கும் நிறைய தூரம்...
ஜிஎம்பி சார் தோழி கிரேஸ் பற்றி ஏதும் சொல்லவில்லை அவரையும் உரிமையோடு பேஸ்புக்கில் கலாய்ப்பேன்
Deleteசிறப்பான தொகுப்பு.
ReplyDeleteநீங்கள் இங்கே குறிப்பிட்டவர்களில் சிலரை நேரில் சந்தித்து இருக்கிறேன்.
மகளிர் தினத்தில் வித்தியாசமாக இந்தப் பதிவு.
வாழ்த்துகள்.
நான்சொல்ல மறந்து பொனபெயர்கள் பல உண்டு எழுதும்போது நினைவுக்கு வரவில்லை
Deleteவித்தியாசமான மகளிர் தினச் சிந்தனை. பதிவர் ராஜியை விட்டுவிட்டீர்களே (அங்க உங்க பின்னூட்டம் பார்த்திருக்கிறேன்)
ReplyDeleteராஜியை சந்தித்ததுமில்லை மெயில் தொடர்பும் இல்லை மறதி க்கு வருந்துகிறேண் ஆனால் ராஜியின் எழுத்ட்க்ஹுகளை நான் வாசிப்பதுண்டு அவ்வப்போது தோன்றுவதைக்கருத்தாகவும் எழுதுவேன்
Deleteஹா ஹா ஹா ராஜிதான் ஏதோ நல்ல குருமாற்றத்தால் தப்பித்து இருந்தா:) அவவையும் நெல்லைத்தமிழன் இழுத்து விட்டிட்டுப் போயிட்டார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது தேவையோ.. இது தேவையோ:)) ஹா ஹா ஹா..
Deleteஇதைத் தான் சீண்டு முடிதல் என்பார்கள்
Delete//இதைத் தான் சீண்டு முடிதல் என்பார்கள்//
Deleteஹா ஹா ஹா அதேதான்.. நெல்லைத்தமிழனுகு முசுப்பாத்தி பார்க்க ஆசையாக இருக்காம்.
ஜி எம் பி ஐயா உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்.. ஆண்கள் தினத்திலும் இதேபோல ஒரு போஸ்ட் நீங்க போட வேண்டும்.. முக்கியமாக நெ.தமிழன், ஸ்ரீராம், மதுரைத்தமிழனை மறந்திடாதீங்கோ.. மறதி எனில் கேளுங்கோ நான் லிஸ்ட் தாறென் ஹா ஹா ஹா:)).. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்:))
//முக்கியமாக நெ.தமிழன், ஸ்ரீராம், மதுரைத்தமிழனை மறந்திடாதீங்கோ..//
Deleteஅதிரா... என்ன ஒரு ஆர்வம்!!!
ஆண்கள் தினம் வரும் வரை என்னால் பொருத்து இருக்க முடியாது அத்னால் ஜிம் சார் உடனே பதிவிட வேண்டும்
Deleteஆமாம் ஆமாம் மதுரை....நீங்க பூரிக்கட்டை அடி வாங்கி ரொம்ப நாளாச்சுல்ல!!!!!!!!
Deleteகீதா
பட்டினத்தார், பட்டினத்து அடிகள் என இருவர் உண்டு. பட்டினத்தார் தான் ராஜா பர்த்ருஹரியின் குரு என நினைக்கிறேன்.தாயைப் பற்றி அவர் இறந்ததும் பாடி, வாழைமட்டையால் எரித்தவர் , திருவொற்றியூரில் சமாதி அமைந்தவர் பட்டினத்து அடிகள் என என் கருத்து!
ReplyDeleteஇந்தமாதிரி பல பேர் உண்டு ஔவையார் போல
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசார் நல்ல பதிவு! அதற்கு வாழ்த்துகள். என்னையும் உட்படுத்தியமைக்கும் மிக்க நன்றி...
Deleteகடைசி கேள்வியிலிருந்து போகிறேன். பொதுவாக என் விரிவான கருத்துகள் என்பது எல்லாத் தளத்திலும் இருக்காது. எனக்குச் சொல்லத் தோன்றும் பதிவுகளா இருந்தால் சொல்வதுண்டு. சுருக்கமாக அருமை நன்று என்று சொல்வதை நீங்கள் விரும்புகிறீர்களா?
உங்கள் கருத்துகள் பல எனக்கு நெகட்டிவாகத் தோன்றும். நாங்கள் சொல்லுவதற்கு உங்கள் பதில்களும் நெகட்டிவாக இருப்பது போல் இருக்கும். அதனால் இங்கு பதில் சொல்வதில் சில சமயம் எனக்குச் சங்கடம் தோன்றும். என்றாலும் உங்களை எங்கள் எல்லோருக்குமே பிடிக்கும் சார்.
நேற்று அம்மாவின் நினைவுகள் பதிவிற்கு நான் ரசித்துப் பதில் சொல்லிருந்தேன். அதை நீங்கள் பெரிய கருத்து என்றால் அதை நான் சும்மா நன்றாக இருக்கு என்று சொல்லிவிட்டுப் போவதுதான் சரி என்று நீங்கள் நினைத்தால் அப்படியே செய்கிறேன்...ஹா ஹா ஹா ஹா சார் சும்மா இது
கீதா
பல பின்னூட்டங்களில் நான்பார்த்ததை எழுதினேன் சொல்லவரும் கருத்துகள் உங்களுடையதாக இருக்கும்போதுநெகடிவ் பாசிடிவ் எங்கே வந்தது மேலு உங்களல் சுருக்கமாக கருத்து சொல்ல முடியாதா என்றும் கேட்டிருக்கிறேன் உண்மை சுடுவதுபோல் தெரியலாம் ஆனால் என்னை அறிந்தவர்களுக்கு தெரியும்நோ இண்டென்ஷண்ஸ் இண்டெண்டெட்
Delete//அதை நீங்கள் பெரிய கருத்து என்றால் அதை நான் சும்மா நன்றாக இருக்கு என்று சொல்லிவிட்டுப் போவதுதான் சரி என்று நீங்கள் நினைத்தால் அப்படியே செய்கிறேன்...////
Deleteஹா ஹா ஹா கீதா... அடுத்தவர்களுக்கு எது சந்தோசத்தைக் கொடுக்கிறதோ அதைத்தானே நாங்க செய்யோணும், அப்போ ஜி எம் பி ஐயாவுக்கு பெரிய கொமெண்ட்ஸ் பிடிக்கவில்லை எனில், சின்னதாக் கொடுத்திட்டால் போச்சு.. எங்களால் முடியாதா என்ன:).. ஹா ஹா ஹா..
கீதாவுக்கு வக்காளத்தோ என ஐயா கேட்பார்ர்:).. பின்ன பெண்களுக்குப் பெண்களே சப்போர்ட் பண்ணாட்டில்.. ஆரு நெல்லைத்தமிழனோ வந்து பண்ணுவார்?:).. அவர் இன்னும் எண்ணெயை எல்லோ ஊத்திட்டுப் போவார்ர்.. ஹா ஹா ஹா:)..
என் தளத்தின்முகப்பைப்பாருங்கள் அதுவே எனெழுத்த்ன் தாரக மந்திரம் ஒருவரது கருத்துஇன்னொருவருக்குப் பிடிக்காமல் போகலாம்ஆனால் எதுவும் உள்ளத்தில் இருந்துவரவேண்டும்
Deleteஹையோ அதிரா பெண்களுக்குப் பெண்கள் சப்போர்ட்டிவாகத்தான் இருக்கணும் அம்மாவா இருப்பதோ, மனைவியா இருப்போதோ விட அதுதான் முக்கியம் என்று பெண்கள் தினத்தன்று ஒரு வாட்சப் வீடியோ வந்தது...அதிரா மிக்க மிக்க மிக்க நன்றி....
Deleteஉங்களின் முதல் கருத்துகளை இப்பத்தான் வாசித்தேன் உங்கள் கருத்துக்கும் ஹைஃபைவ் அதிரா!!!!!!!!!!
கீதா
சில சமயங்களில் நமக்கு எதுக்கு வம்பு என நினைத்து ஒதுங்கிட முடியாதெல்லோ.. சொல்ல வேண்டிய இடத்தில் சிலதை சொல்லித்தான் ஆக வேண்டும்.. குட்டக் குட்டக் குனியக்கூடாது என நினைப்பேன்:)..
Deleteஆமாம் அதிரா அதனால்தான் நானும் இன்று கொஞ்சம் பொயிங்கிட்டேன்!!!! ஹா ஹா ஹ ஹா
Deleteகீதா
//அவர் இன்னும் எண்ணெயை எல்லோ ஊத்திட்டுப் போவார்ர்.. ஹா ஹா ஹா:).// - ஹல்ல்ல்ல்ல்ல்ல்லோ.... கீதா ரங்கனுக்கு நான் சப்போர்ட் பண்ணாம யாரு பண்ணுவாங்க? (அதுக்கு ஒரு காரணம் இருக்கு. என் மனதில் என்றும் நிறைந்திருக்கும் என் நெருங்கிய உறவினரிடத்தில்-அப்பா ஸ்தானம், அவர் சில மாதங்கள் கற்றுக்கொண்டிருந்திருக்கிறார். அதுனால கீதா ரங்கன் எனக்கு மிகவும் மனதளவில் நெருங்கிய அக்கா.
Delete///நெருங்கிய அக்கா.//
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்ன ஒரு அழகா ஆரம்பிச்சு.. நானே கை கால் எல்லாம் வெலவெலத்து நிற்க:) முடிவில கவிட்டுப் போட்டாரே கீதாவை ஹா ஹா ஹா.. கீப் இற் மேலே:) நெ.தமிழன்:))
அதே அதே அதிரா.....நானும் பார்த்தேன் அட நல்லாத்தானே போயிட்டுருந்துச்சு!! நெல்லை என்ன அழகா சொல்லிருக்கார்னு புளகாங்கிதம் அடைஞ்சப்ப டப்!!! என்னைய அக்கா நு சொல்லிப்புட்டாரே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Deleteஹா ஹா ஹா ஹா
கீதா
அக்கானு கூப்பிட்டாலும் மிக்க நன்றி நெல்லை!! அண்ணே!!
Deleteகீதா
//கீதாவுக்கு வக்காளத்தோ என ஐயா கேட்பார்ர்:).. பின்ன பெண்களுக்குப் பெண்களே சப்போர்ட் பண்ணாட்டில்.. ஆரு நெல்லைத்தமிழனோ வந்து பண்ணுவார்?:)//
Deleteஹையோ இன்னிக்குனு பார்த்து வீட்டில் விசிட்டர்ஸ் .இங்கே கலந்துக்க முடியலை .நானும் கீதாவுக்கு சப்போர்ட் .தேங்க்ஸ் நெல்லை தமிழன் பெரியண்ணா :)))))))
/// .நானும் கீதாவுக்கு சப்போர்ட் //
Deleteசெல்லாது செல்லாது:) கூட்டம் கலைஞ்ச பிறகு ஓடி வந்து சைன் பண்ணினால் அது செல்லாது:)..
நீங்களெலாம் அவரை அண்ணா எண்டால், இனி நான் சித்தப்பாஆஆஆஆஆ எண்டுதான் கூப்பிடோணுமாக்கும்:))
Deleteசென்ற கருத்து பெரிதாகி விட்டதால் இதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.
ReplyDeleteகர்நாடக சங்கீதம் நான் முறையாகக் கற்கவில்லை.
கீதா
ஆனால்ராக தேவதை போல் சில எழுத்துகளே இப்படி கேட்க வைத்தது
Deleteஎன் எதிர்மறைக் கருத்துகளையும் நான் சொல்வதுண்டே. ஆனால் அதை நான் விவாதமாகவோ நெகட்டிவாகவோ சொல்லாததால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது. நம் எதிர்க் கருத்தைக் கூட நயமாகச் சொல்லலாம். எல்லோருடைய கருத்தின் கூடவும் ஒத்துப் போவது என்றில்லை. ஒவ்வொருவரது சிந்தனை ஆங்கிளும் ஒவ்வொரு மாதிரி என்பதால் நாம் அதையும் ஏற்று யோசித்துப் பார்ப்பதில் தவறில்லை என்பது என் கருத்து. ஆனால் எனக்கு நெகட்டிவ் கருத்துகள் சுத்தமாகப் பிடிப்பதில்லை சார்.
ReplyDeleteகீதா
எதிர்மறாஐக் கருத்டுகள் ஏன் விவாதமாகவேண்டும் சிலநேரங்களில் எம்ஃபஸைஸ் அது பற்றிக்கூற நேரலாம் எல்லோருக்கும் ஒரே கருத்துஇருக்க வேண்டிய அவசியம் இல்லையே
Deleteஎதிர்மறைக் கருத்துகளில் தவறில்லை. எல்லோரது கருத்துகளும் ஒரே கருத்தாக இருக்கனும் என்று அவசியமும் இல்லை. சேம் தாட்ஸ் பலருக்கும் வருவதுண்டு. பிறர் கருத்துகளை ஏற்பவரும் உண்டு. அதில் தவறில்லையே சார் பிறர் கருத்துகளையும் நாம் கேட்கனும் இல்லையா. எல்லாவற்றிற்கும் விதண்டாவாதம் செய்தால் ஒரு லிமிட் தாண்டும் போது கொஞ்சம் தொய்வு வரும் தான்...அது நட்பாக இருந்தாலும் சரி குடும்பமாக இருந்தாலும் சரி...
Deleteஆரோக்கியமான விவாதமாக இருந்தால் நல்லது. பொதுவாக நம் நட்பு வட்டத்தில் கருத்துகள் எதிர்மறையும் வருமே ஆனால் அது ஆரோக்கியமாகத்தான் இருக்குமே அல்லாமல் விவாதமாக அதாவாது சர்ச்சையாக மாறியதில்லை.
ஆனால் ஒரு சில தளங்களில் அது சர்ச்சையாக மாறுவதையும் பார்க்க முடிகிறது. எனவேதான் ஜாலியாக இருப்பதை விட்டு ஏன் சர்ச்சைகளில் சிக்க வேண்டும் என்றுதான்.
அதிராவை நாங்கள் எல்லோருமே கலாய்ப்பதுண்டு. அவரும் எங்களைக் கலாய்ப்பார் ஆனால் அதை அவர் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார் நாங்களும் நகைச்சுவையாகத்தான் எடுத்துக் கொள்வோம். அதனால்தான் எல்லோருக்குமே ஒரு மகிழ்ச்கி...
நீங்களே இப்ப ஒரு கருத்தில் சொல்லியிருக்கீங்க இங்கேயே
//@கீதா எல்லா வற்றையும்நகைச்சுவையாக்கும் பதிவர்கள்போல் என்னால் இருக்க முடிய வில்லையே//
இதே இதே தான் நாங்கள் கையாள்கிறோம்...மகிச்சி முக்கியம் அதே சமயம் கருத்தும் முக்கியம். அந்தக் கருத்துகள் மற்றவர் மனதை நோகாமல் நயமுடன் சொல்லுவது அதோடு நகைச்சுவையும் கலந்து...பாசிட்டிவாக போவதுதான் மகிழ்ச்சி ..நம்மால் நாலு பேர் சந்தோஷமாக இருக்காங்கனா அதுதானே முக்கியம் சார்...
சார் மீண்டும் மன்னிப்பு. நிறைய கருத்துகள் பெரிதாகிவிட்டன என்னால் சுருங்கச் சொலத் தெரியவில்லை இது போன்ற பதில் கருத்துகளுக்கு. எனவே மன்னிக்கவும்.
கீதா
ஏற்கனவே வேறு யாரேனும் சொல்லிருந்தது என் கருத்டைப் போல் இருந்து அது என் கண்ணில் பட்டுவிட்டால் அதை நான் மீண்டும் ரிப்பீட் செய்ய வேண்டாமே என்று அதைச் சொல்லிவிடுவேன். கண்ணில் படவில்லை என்றால் சில சமயம் ரிப்பீட் ஆவதுண்டு.
ReplyDeleteஎனக்கென்று கருத்துகள் உண்டு சார். எதை பொதுவெளியில் சொல்ல முடியுமோ அதை மட்டுமே சொல்வதுண்டு. இங்கு நட்பு வட்டம் தான் எனக்கு முக்கியம். எல்லோரும் சந்தோஷமாக இருப்பதுதான் முக்கியம் சார். வீணான விவாதங்கள் எனக்கு விருப்பமில்லை சார்.
கீதா
எழுத வந்தபின் மறைத்தும் குறைத்துமேன் எழுத வேண்டும் வலைத்தளமே பொதுவெளிதானே மாற்றுகருத்து கொண்டவர்கள் நட்பாயிருக்கமுடியாதா இதைத்தான் நான்பலைடங்களில் முன்வாயில்சிரித்து கடைவாயைக்கடிக்கிறாகள் என்று சொல்வதுண்டு
Delete//எழுத வந்தபின் மறைத்தும் குறைத்துமேன் எழுத வேண்டும்//
Deleteநீங்கதானே ஐயா, பெரிய கருத்து வேண்டாம் என்கிறீங்க.. இப்போ குறைத்து ஏன் எழுதுகிறாய் என்கிறீங்க ஹையோ இன்று ஜி எம் பி ஐயா பக்கம் மழை:))
பெரிய கருத்துக்கும் உண்மை கருத்துக்கும் வேறுபாடு உண்டு
Deleteஉண்மை என எதைச் சொல்றீங்க? மனதை நினைப்பதைத்தானே எழுதவேண்டும் என்கிறீங்க? அதைத்தானே எழுதுகிறோம்.. நாம் சொல்வது உண்மை இல்லாததுபோல உங்களுக்குத் தோன்றினால் அது நம் தப்பு அல்லவே...
Deleteசார் கண்டிப்பாகக் கருத்து வேறுபாடுகளினால் நட்பாக இருக்க முடியாது என்றுசொல்லவே மாட்டேன். அப்ப்டி இருந்தால் ஒரு குடும்பமே இருக்க முடியாது.
Deleteஉங்களை நானோ அல்லது நம் நட்பு வட்டமோ தனியாக நாம் மட்டும் சந்திக்கும் போது கருத்து வேறுபாடுகளை விவாதிக்கலாம்...வெளிப்படுத்தலாம்....
ஆனால் வலையுலகில் ஓரளவுதான் வெளிப்படுத்த இயலும். இதற்குப் பெயர் நடிப்பல்ல. பொய்யல்ல....வீண் விவாதங்கள் என்பதை விட சர்ச்சைகளைத் தவிர்க்கத்தான். அதுவும் பொதுவெளியில். ஏனென்றால் நம்மை அறிந்த நட்புகளுக்கு நம்மைப் பற்றித் தெரியும். உலகமே நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் ஒன்றும் பெரிய புள்ளிகள் அல்லவே சார்...
இன்னொன்று வலையில் சர்ச்சைகளை எழுப்புபவர்கள், காரசாரமாக எழுதுபவர்கள் நேரில் ரொம்பவே மாடெஸ்ட்டாக இருப்பதையும் அறிவேன் சார்.
கீதா
சார் மற்றபடி எங்கள் எல்லோருக்குமே உங்களைப் பிடிக்கும். உங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு.
ReplyDeleteஅதனால்தான் நான் உங்கள் வீட்டுக்கு வர விருப்பபட்டு இன்று வர நினைத்து வேறு பணிகள் வந்ததால் வர இயலவில்லை. அடுத்த வாரம் வர முயற்சி செய்கிறேன் சார்...
கீதா
என்னைப் பலருக்கு பிடிப்பது நான் அணியும் உண்மை எனும் ஆடைதான்முடிந்தால் கணவருடன் வாருங்கள் அவரையும் நான் சந்திக்க ஒரு வாய்ப்பாகும்
Deleteசார்..என்னைப் பலருக்கு பிடிப்பது நான் அணியும் உண்மை எனும் ஆடைதான்முடிந்தால் //
Deleteஅப்படினா மத்தவங்க எல்லாரும் பொய் சொல்றாங்க அல்லது நடிக்கறாங்கனு அலல்து உண்மை சொல்வதில்லைனு நினைக்கறீங்களா சார்...
அப்படி இங்கு நம் நட்புகளில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. சார் வலையில் நான் நேர்மையானவன்/ள் உண்மையானவள்/ன் என்று எழுதினால்தான் நாம் உண்மையானவர், நேர்மையானவர் என்று அர்த்தமா? இல்லை அதைச் சொல்லனுமா எப்போதும்? எதற்கு சார் நம்மைப் பற்றி நாமே சொல்லிக் கொள்ள வேண்டும் எழுத்துகளில். அது நம் செயல்களில் தெரிந்தால் போதுமே.
மனதிலிருந்து தான் எழுதுகிறோம். ஆனால் சர்ச்சைக்குறிய கருத்துகளை தவிர்க்கிறோம் அவ்வளவுதான் சார்.
கீதா
விட்டுப்போன மறு மொழிகளுக்குப் பதிலாக இதுஒருவர் கருத்து சொல்ல அதற்கு பதில் சொல்ல என நீண்டுகொண்டே போவதைத் தடுக்கவும் இருக்கும்நல்ல எண்ணத்தை டக்க்லச் வைத்துக் கொள்ளவும் எல்லோருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்யாரையும் நோகடிக்குமெண்ணம் இல்லை என் எண்ணங்களைப் பகிர எழுதுகிறேன் அதில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு பின்னூட்டமிருப்பதில்லை விவாதங்கள் எங்கெல்லாமோ செல்கிறது
ReplyDeleteவணக்கம். என் மகனின் வீட்டு கிரஹப்ரவேசத்தில் பிசியாக இருந்ததாலும், கணினியில் இணைய பிரச்சனை இருந்ததாலும், வலைப்பக்கம் வரமுடியவில்லை. இன்றுதான் விட்டுப்போன பதிவுகளை படித்தேன். மகளிர் சக்தி என்னும் பதிவில் நீங்கள் என்னைப்பற்றியும் கருத்து கூறியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஅதில், //அப்போதெல்லாம் இவரது பதிவு பலருக்கும் தெரியாமல் இருந்தது என்பதிவுக்கு வரும்பின்னூட்டங்க்களில் இருந்து பலநண்பர்களை உருவாக்கினார் என்று இவர் சொன்னதாக நினைவு//.
உண்மைதான். உங்களின் வலைப்பூ மூலமாகத்தான் நான்
எ.பி.க்கு அறிமுகமானேன். அதற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
//உங்கள் கருத்துக்கு மாறாகஎழுதினால் உணர்ச்சி வசப்படுவீர்களோ என்று தோன்றுகிறது//
ReplyDeleteஎனக்கு சரி என்று படும் விஷயங்களை கூற நான் தயங்குவதில்லை. அப்படி கூறுவதையும் பாயிண்ட் பிளாங்க் ஆக, கூறுவதால் நான் உணர்ச்சிவசப்படுவதுபோல தோன்றுகிறது. என் வார்த்தை பிரயோகமும் அதற்கு ஒரு காரணம்.
இதனால் சில பாதிப்புகளையும் சந்தித்திருக்கிறேன். இருந்தாலும் இதுதான் என்னுடைய குணச்சித்திரம்.
அனைவரும் ஒருசேர நினைத்து அவர்களுடைய சிறப்புத்தன்மைகளைக் கூறிப் பகிர்ந்த விதமும் உங்களுடைய நினைவாற்றலும் என்னை வியக்கவைத்தது. உங்களின் இந்த எழுத்து அவர்களுக்கு மட்டுமல்ல என்னைப் போன்றோருக்கும் மென்மேலும் எழுத ஊக்கம் தரும் என்று நம்புகிறேன்.
ReplyDelete