Wednesday, February 29, 2012

இன்னும் ஒரு காதல் கதை.


                                    இன்னும் ஒரு காதல் கதை
                                    -------------------------------------
                           (. எனக்கு மின் அஞ்சலில் ஒரு கதை வந்தது. இதை
                             தமிழாக்கி பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.)

                                      Description:
                    cid:7FE152C4A67F4A4285EE6F0C3D08AE11@yourf78bf48ce2                                   

       அது ஒரு சுறுசுறுப்பான காலை வேளை.மணி 8.30- அளவில்
இருக்கலாம்.அப்போது ஒரு எண்பது வயது பிராயமுள்ள ஒரு
முதியவர், அவர் கையில் தையல் பிரிப்பதற்காக வந்தார்.
அவருக்கு ஒன்பது மணியளவில் ஒரு appointment இருப்பதாகவும்
அவசரத்தில் இருப்பதாகவும் கூறினார். ஆரம்பப் பரிசோதனை
முடித்து நான் அவரை அமரச் சொன்னேன்.அவர் தன் கைக்கடி
காரத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பது கண்டு நான் அவருடைய
காயத்தைப் பரிசோதித்தேன்.நன்றாக ஆறியிருந்ததால் ,தையலை
பிரிக்கத் தேவையான பொருட்களைக் கொண்டுவர நர்ஸிடம்
பணித்தேன்.காயத்தைப் பரிசோதிக்கும்போது, அந்த முதியவரிடம்
பேச்சுக் கொடுத்தேன்.

     அவர் அவருடைய மனைவியுடன் காலை உணவு கழிக்க வேறு
ஒரு ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும் என்றார்.அவர் மனைவி
உடல் நலம் பற்றி விசாரித்தேன்.

 Description:
                    cid:4B7E1CC62DDF40CCB5395F61E645F748@yourf78bf48ce2


       அவர் மனைவி சில காலமாக ஆஸ்பத்திரியில் இருப்பதாகக்
கூறி அவர் மறதி நோயினால் (ALZHEIMER DISEASE)பாதிக்கப்பட்டு
இருப்பதாகக் கூறினார் பேசிக் கொண்டு இருக்கும்போது ,நேரம்
தாமதமானால் மனைவி கோபித்துக் கொள்வாளா என்று
கேட்டேன் அவளுக்கு அவர் யாரென்று அடையாளம் மறந்து
போய் ஐந்து வருடங்கள் ஆகிறது என்றார்.

   
உங்களை யாரென்று தெரியாதிருந்தும் நீங்கள் தினமும் காலை
உணவை அவருடன் கழிக்கிறீர்களா என்றேன்.அவர் என் கை
மேல் கை வைத்து முறுவலுடன் சொன்னார்.” அவளுக்கு நான்
யாரென்று தெரியாவிட்டாலும் எனக்கு அவளைத் தெரியுமே”.
Description:
                    cid:24D1EA3D693143EBB417BFCBCCC5EF9A@yourf78bf48ce2


  என் கண்களில் நீரைக் கட்டுப் படுத்த நான் சிரமப் பட்டேன்..
என் தொண்டையில் ஏதோ அடைத்தது.

     இந்த மாதிரிக் காதல்தான் வாழ்வில் வேண்டும். உண்மைக்
காதல் உடல் சம்பந்தப் பட்டது மட்டும் அல்ல. உண்மைக் காதல்
இருப்பது. இருக்கப் போவது, இல்லாமல் இருக்கப் போவது என
எல்லாமே அடங்கியது
Description:
                    cid:A6DFC76C5E4E40A6B06F5041D0A94B6C@yourf78bf48ce2

        வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள்,  எல்லாம்
அடைந்தவர்கள் அல்ல.இருப்பதில் எல்லா மகிழ்ச்சியும்
காண்பவர்களே.

       வாழ்க்கை என்பது புயலில் இருந்து தப்பிப்பது மட்டும் அல்ல.
மழையில் நடனமாடவும் தெரிய வேண்டும்.

      நாம் எல்லோரும் முதுமை அடைகிறோம்.
      நாளை நீங்களும் அடையலாம். 

( நான் முன்பொரு பதிவு :" நினைவுகள் தவறி விட்டால் "
  என்று எழுதி இருந்தேன்..விழிப்புணர்ச்சி வேண்டும்
 என்று. .அதைத் தொடர்ந்து இதை வாழ்வியல் கதையாகக்
 கருதலாம் ) .




 
                                                                                                             







16 comments:

  1. அருமையான காதல் கதை.

    ReplyDelete
  2. //அவர் என் கை
    மேல் கை வைத்து முறுவலுடன் சொன்னார்.” அவளுக்கு நான்
    யாரென்று தெரியாவிட்டாலும் எனக்கு அவளைத் தெரியுமே”.//

    மிகவும் மனதைத் தொட்ட இடம்.

    நானும் இந்தக்கதையைப் படித்துள்ளேன்.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  3. மின் அஞ்சலில் இருந்து ஃபோடோக்களையும் இணைத்திருந்தேன். முதல் பதிவிடும்போது இருந்தது. இப்போது வெறும் அவுட்லைன் மட்டுமே உள்ளது. புரியவில்லை.

    ReplyDelete
  4. அவளுக்கு நான்
    யாரென்று தெரியாவிட்டாலும் எனக்கு அவளைத் தெரியுமே”.//

    அந்த வார்த்தைகளில் தான் என்ன அன்பு! என்ன பரிவு!
    கதை அருமை.

    வாழ்க்கை என்பது புயலில் இருந்து தப்பிப்பது மட்டும் அல்ல.
    மழையில் நடனமாடவும் தெரிய வேண்டும்.//

    எந்த சூழ்நிலையையும் ரசிக்க தெரிந்தால் போதும் வாழ்க்கை நம் கையில்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள், எல்லாம்
    அடைந்தவர்கள் அல்ல.இருப்பதில் எல்லா மகிழ்ச்சியும்
    காண்பவர்களே.

    வாழ்க்கை என்பது புயலில் இருந்து தப்பிப்பது மட்டும் அல்ல.
    மழையில் நடனமாடவும் தெரிய வேண்டும்.

    அருமையான வாழ்வியல் தத்துப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. //G.M Balasubramaniam said...
    மின் அஞ்சலில் இருந்து ஃபோடோக்களையும் இணைத்திருந்தேன். முதல் பதிவிடும்போது இருந்தது. இப்போது வெறும் அவுட்லைன் மட்டுமே உள்ளது. புரியவில்லை.//

    போட்டோக்களை தனியாக உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கவும். போட்டோவின் மேல் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்தால் Save as என்று ஒரு ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் Pictures போல்டரில் சேமித்துக் கொள்ளவும். பிறகு பதிவு போடும்போது ஒவ்வொரு போட்டோவாக பதிவில் சேர்க்கவும்.

    ReplyDelete
  7. @டாக்டர் கந்தசாமி,

    என்னென்னவோ செய்து ஒருவழியாகப் படங்களை மீட்டுவிட்டேன். இனி தேவைப் படும்போது நீங்கள் வழிகாட்டியபடி செய்வேன். மிக்க நன்றி
    எனக்கு இந்த நோய் பாதிக்கப் பட்டவர்களைப் பற்றியும் , அதனால் குடும்பத்தவர் படும் வேதனையும் பரிச்சயம் உண்டு. அதுவே நான் இது பற்றி முன்பு ஒரு பதிவு எழுதக் காரணமாய் இருந்தது. இது என் மனசைத் தொட்டபடியால் பகிர்ந்து கொண்டேன். வருகை தந்து நெகிழ்ந்தவர்கள் அனைவருக்கு, என் நன்றி.

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு. தமிழாக்கத்துக்கு நன்றி.

    ReplyDelete
  9. மறதி மனிதனுக்கு மட்டுமே சொந்தம்!
    ஆனால் மறக்காமல் இருப்பது நல்ல மனத்திற்கு சொந்தம்!
    நல்ல பகிரிவு. நன்றி ஐயா!

    ReplyDelete
  10. முதலில் நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்.
    மிக அருமையான பகிர்வு.
    இது தான் உண்மையான காதல்.

    ReplyDelete
  11. அவளுக்கு நான்
    யாரென்று தெரியாவிட்டாலும் எனக்கு அவளைத் தெரியுமே”//.


    மனம் கவர்ந்த அருமையான காதல் கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. காதலின் ஆழத்தைத் தொட்டுப் பார்க்கும் கதை.நெகிழ்ச்சி பாலு சார்.

    ReplyDelete
  13. உண்மைக்காதலின் உன்னத வெளிப்பாடு. அந்த முதியவரின் காதல்மனம் போற்றத்தக்கது. பகிர்வுக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  14. @டாக்டர் கந்தசாமி,
    @கோபு சார்,
    @ஸ்ரீராம்,
    @கோமதி அரசு,
    @இராஜராஜேஸ்வரி,
    @ஷக்தி பிரபா,
    @அருணௌ செல்வமே,
    @சிவகுமாரன்,
    @ரமணி,
    @சுந்தர்ஜி,
    @கீதமஞ்சரி
    அனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete