Sunday, February 28, 2021

be bold and cheerful



  BE BOLD  AND CHEER FUL 

பதிவு ஏன் எழுதுகிறாய்

எண்ணங்களைக் கடத்துவதற்குதானே

உன் எண்ணங்களுக்கு  குறிப்பிட்ட டார்கெட்  ஆடியென்ஸ்  உண்டா

அப்படித்தான்   நினைத்துக் கொண்டிருந்தேன்சில காலம்  முன்பு வரை இப்போதில்லையா

மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது

 ஏன் 

பதிவில்படிப்ப வர்களை நாம் தேர்வு செய்யவாமுடியும்  யார் வேண்டுமானாலும் [படிக்க்சலாம்    அநேகமாக அறுபதுகளில் இருப்பவர்கள் உலக  அனுபவம் மிக்கவர்கள்  அவர்கள் எண்ணங்கள்  உரமேற்றப்பட்டவை  பெரும்பாலும் எல்லாம்    தெரிந்தவர்கள் பொழுது  போகவே  எழுதுபவர்கள்படிப்பவர்கள் அவர்கள் கருத்தினை மாற்ற விரும்பாதவர்கள்

உனக்கு எப்படி தெரியும்

இனி புதிதாய் தெரிய ஏது மில்லாதவர்கள்வித்தியாசமாய் ஏதாவது  இருந்தால் சும்மாதாண்டிப்போவார்கள் எனக்கு வரும்  பின்னூட்டங்கள் கதைகள்கூறும் இவர்களை எப்படி டார்கெட் ஆடியென்ஸ் என்று சொல்வது நன் எழுதுவது பெரும்பாலும் அனுபவ நிஜங்களே பெரும்பாலும் அவை பல விஷயங்களை சொல்லிப் போகும்இப்போது நானெழுதப் போவதும் அ ப்படி ஒன்றுதான் பயன்  பெறுபவர் பெறலாம்

முதன்  முதலாக எச் எ எல் லில் பயூற்சி பெற விண்ணங்கள் கோரி இருந்தார்கபயிற்சி  முடிந்ததும்  மூன்றாண்டுகளுக்கு பிறகு  Bமெகானிக் காக்ச பதவி தரப்படும்மெகாச்னிக்  என்றாலேஏதோ காருக்கு அடியில்படுத்து  வேலை என்பதே நினைவுக்கு வரும் நாங்க்சள் நீலகிரி  வெல்லிங்டனில்  இருந்தோம்  தேர்வு நடை பெற்  இருந்தது  மெட்ராசில் அப்பொது ரயில் சத்தம்  ரூ பத்து என்று நினைவுஅதற்கே வழி இல்லாத நேரம்எனக்கு பர்மாஷெல்லில் ஒருவர் சுப்பிரமணியமென்று பெயர்  என்னை விரும்புபவர் அவரிடம் சென்று  விஷயம்கூறினென் எல்லா ம் சரியாகும் என்று ஆறுதல்கூற்னார்  கூறினார்அவருக்கு ஈரோடில்ஒரு பணி என்றும்   அதுவரை அவரது காரில்  பயணம்என்றும்  அங்கிருந்து மதராசுக்கு ரயிலில்அனுப்புவதாகவும்சொன்னார்திரும்பிவர அப்பாவின்பொறுப்பு என்றும்  சொன்னார்எனக்கு ஒரு டையும்  நேர்க்சாண்லில் அணிய  கொடுத்தார் ஈரோடுக்கு  காரில் பயணிக்கும்  போது நேர்காணல்  பயிற்சியும் கொடுத்தார்முக்கியமாக பயமே கூடாது  என்று  சொன்னார்நேர்காண்லில்நம்மை சோதிப்வர்கள் நம்மிடம் கற்கவே கேள்வி  கேட்கிறார்கள் என்று  நாம் நினைக்க வேண்டுமென்றும்  கூறினார் ஏற்கனவே பயம்  தெரியாதவ நான் எனக்கு கொம்பு சீவி விட்டமாதிரி இருந்தமெட்ராசில் என்சித்தப்பாவீட்டுக்கு நடந்தே போனேன்

நேர்காணலில்  காலில் செருப்புடன் டை அணிந்து சென்றவன் நான்  ஒருவனே

 

நேர்காணலும் வந்ததுநான்  பணியில் இருப்ப;து முக்கியம் என்று கூறினேன்  என்படிப்பு பற்றிக் கேட்டார்கள் நான் பள்ளி இறுதியில் காம்போசிட் கணிதம் பயின்றவன்  என்றேன் அதில் என்ன விசேஷம் என்று கேட்டார்கள்  அல்ஜீப்ரா  ஜியாமெட்ரி எல்லாம்படித்தவன்  என்றேன்  பித்தாகொரஸ் தீரம் தெரியுமா என்றுகேட்டார்க்சள் நான்  தமிழ் வழி கல்வி பயின்றவன் என்பதால்  தமிழில்கூறினேன்   இங்லிஷில் சொல்லமுடியுமா என்று கேட்டார்கள் நான் அதைஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன் கைதட்டிபாராட்டினார்கள்ஒன்று சொல்ல வேண்டும் நான் தமிழில் படித்திர்ந்தாலும் ஆங்கிலத்தில் உரையாடினேன் அது அவ்ர்களை  கவர்ந்திருக்க வெண்டும்

பிறகு என்ன தேர்வு செய்யப்பட்டேன்   அதன்  பின்  நடந்தது எல்லாம் சரித்திரம்கற்றபாட  என் தந்தை சொல்வதுபோல் Be bold and cheerful   

 



 

                  

 

 

 

 

    

  .

 

  

 

 

 

 

 

 

  



o


 

                  

 

 

 

 

    

  .

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

          

.
----------------------------------------------------------------------

 

 

 

 

 

          

.
----------------------------------------------------------------------

Tuesday, February 23, 2021

நாட்டு நடப்பு

 


நாட்டு நடப்பு

அரசியல் என்றால் என்ன என்று சிறுவன் கேட்டான்.

அப்பாவும் விளக்கமாகக் கூறத் தொடங்கினார்.

நான் செலவுக்குப் பணம் ஈட்டி வருகிறேன் ஆகவே முதலாளி.

ஈட்டிய பணத்தை செலவு செய்யும் உன் தாய் அரசு

தாத்தா எல்லாவற்றையும் கவனிக்கிறார் யூனியன் எனலாம்

வீட்டு வேலைக்காரி தொழிலாளி என்று சொல்லலாம்

எல்லோரும் பாடுபடுவது உனக்காக, ஆக நீ பொதுஜனம்

உனக்கு அடுத்துப் பிறந்த குட்டிப் பாப்பா எதிர்காலம்

 

மகனே-இங்கு நடப்பதைப் புரிந்து கொண்டால் அரசியல்

என்ன என்று விளங்கும் ஓரளவு தெரிந்து கொள்வாய்.

புரிந்ததைக் கொஞ்சம் எனக்குக் கூறு என்று கேட்டார் தந்தை.

ஒரு இரவு அசைபோட அவகாசம் கேட்டான் தனையன்.

 

உறங்கச் சென்ற சிறுவன் தம்பியின் அழுகுரல் கேட்டு விழித்தான்.

ஒன்றுக்கும் இரண்டுக்கும் போய் முடை நாற்றத்தில் மிதந்தான் தம்பி

செய்வதறியாது பெற்றோரின் படுக்கையற்க்குச் சென்றான் இவன்.

ஆழ்ந்த உறக்கத்தில் தாய், அருகே தந்தை இல்லை.

தாயை எழுப்ப முயன்று தோற்ற தனையன் வேலைக்காரி

இருக்குமிடம் சென்று பார்த்தால் தந்தையின் பிடிப்பில்

கட்டுண்டு கிடப்பவளை பலகணி வழியே ரசிக்கும் தாத்தா.

இவன் வந்ததே தெரியாமல் அவரவர் பணியில் அவரவர்.

ஏதும் செய்ய இயலாமல் இவனும் மீண்டும் உறங்கப் போனான்.

 

மறுநாள் மகனிடம் தந்தை கேட்டார். அரசியல் பற்றி அறிந்தது கூற.

அறிந்தது புரிந்தது என்று மகனும் விளக்க முற்பட்டான்.

“முதலாளி தொழிலாளியைக் கசக்குகிறான். யூனியன் கண்டும்

காணாமல் இருக்கிறது அரசு உறக்கத்தில் இருக்கிறது.

பொதுஜனம் புறக்கணிக்கப் படுகிறது. எதிர்காலமோ

முடை நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

 




 

                  

  

 

 




 

                  

 

 




 

 

    

  .

 

  

 

 

 

 

 

 

    

  .

 

  

 

 

 


Sunday, February 21, 2021

பிடித்த பாடல்கள் இஷ்ட தெய்வம்


 



கண்ணன்  எங்கள் கண்ணன்

  கண்ணன்  எங்கள் கண்ணனாம்

பொன் மேனி வண்ணனாம்

குருவாயூர்  கண்ணனாம் 

நாளும் என் இல்லாளின் நாவில் அமர்பவனாம்

தெய்வஙகள் பல இருப்பினும்  இவனுக்கு

ஒரு தனி மவுசு கீதாச்சசரியன்   அல்லவா


எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்

சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,

ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்

நடுவே பளீரிடப் புன்னகைக்கும் கண்ணனின் முகம்

கண்ணன் எங்கள் கண்ணன் பொன் மெனி வண்ணன்  

 


மென் கழுத்தில் மணிமாலைகள்

மலர்மாலைகள் தொங்க

நிற மாலைகளில் வண்டினம் வந்தாடும்

கண்ணன் எங்கள் கண்ணனாம்  பொன் மெனி வண்ணனாம்

நாளும்  என்  இல்லா;ள் நாவில் அமர்பவனாம் 

 

 

 









Friday, February 19, 2021

கதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

 



யாராவது எப்பொழுதாவது ‘சும்மா; இருக்கிறார்களா.? சும்மா இருப்பது என்பதே இல்லை. ஏதும் செய்யாதபோதும் சிந்தனைகளின் ஓட்டம் இருந்து கொண்டுதானிருக்கிறது.
 SCOUTS  பயிற்சியின் போது ஒரு விளையாட்டு

( அது விளையாட்டா. ?) நடக்கும். சுமார் இருபது முப்பது பேர் வரிசையாகவோ  வட்டமாகவோ , ஒருவர் பேசுவது மற்றவர் கேட்காத தூரத்தில் அமர்த்தப் படுவார்கள். முதலில் இருப்பவரிடம் ஒரு செய்தி சொல்லப் படும். அதை அவர் அடுத்தவருக்குச் சொல்ல வேண்டும். இப்படி சொல்லப் பட்ட செய்தி கடைசியாக கேட்பவரிடமிருந்து முதலில் ஆரம்பித்தவருக்கு வரும்போது செய்தி மாறி இருக்கும். செவி மூலம் பரவும் செய்திகளுக்குக் காதும் கண்ணும் சேர்க்கப் பட்டிருக்கும். இதை யோசிக்கும்போது, எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. முன் காலத்தில் எழுதும் முறையும் அதைப் பாதுகாக்கும் முறையும் இல்லாதிருந்த காலத்தில் செவி வழியாகவே செய்திகள் சொல்லப் பட்டிருக்க வேண்டும். ஏன், நம்முடைய வேதங்களும் இம்முறையில்தான் தலைமுறை தலைமுறையாக சொல்லப் பட்டு வந்திருக்க வேண்டும். அவை ஆதியில் சொல்லியபடியே நமக்குக் கிடைத்திருக்கிறதா.. அவற்றின் நம்பகத் தன்மை எவ்வளவு. இதனால் தானோ என்னவோ வடக்கில் கார்த்திகேயன் எனப் படும் முருகன், பிரம்மசாரி.... விநாயகருக்கு இரண்டு மனைவிகள். . தெற்கே நேர் எதிரான கதை. ..!, சாஸ்திரம் என்கிறார்களே , அது குறித்த புத்தகங்கள் ஏதாவது உண்டா, .மனு சாஸ்திரமும் அர்த்த சாஸ்திரமும் கேள்விப்பட்டது. படித்ததில்லை. அவையும் செவி வழிச் செய்திகள்தானா. ? இன்று நிலவும் பேதங்களுக்கு அந்த மனுநீதிதான் முக்கிய காரணமோ என்று தோன்றுகிறது.  

ஆனால் இப்போதெல்லாம் எந்த செய்தியானாலும் உம்.. என்பதற்குள் சொல்லியபடியே எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் போய்ச் சேரும். தவறான செய்திகள் போய்ச் சேருவதால் மக்கள் பயந்து கூட்டங் கூட்டமாக அடித்துப் பிடித்து வெளியேறுகிறார்கள்.

 வலையில் எழுதுவது பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. எழுதுபவனின் எண்ணங்களைக் கடத்த எழுதும்போது, எண்ணங்கள் கடத்தப் படுகிறதோ இல்லையோ, எழுதுவது சரியென்று எண்ணாதவர் யாருமில்லை. மாற்றுக் கருத்துக்களை சொல்பவர் , முதலில் ஏதோ தவறு செய்வதுபோல்  எண்ண வேண்டுமா. “ நீங்கள் அப்படி நினைத்தால் நான் இப்படி நினைக்கிறேன் என்று சொல்வதில் என்ன தயக்கம். இருந்தால்தானே எந்தவிதமான எண்ணங்கள் நிலவுகின்றன என்பது தெரியும். புகழாரம் இல்லாவிட்டால் இகழாமல் கருத்து சொல்லப் பட வேண்டும் என்பது என் எண்ணம். நூறு பேர் படித்தால் மூன்றோ நான்கோபேர் கருத்திடுகிறார்கள். புகழ்ந்துதான் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களே அதிகம். செய்தியில் உடன்பாடு இல்லை என்றால் ஏதும் கூறாமல் இருப்பது உத்தமம் என்று நினைக்கிறார்கள் போலும். அப்படிப் பார்க்கும்போது எழுதுவதில் உடன்பாடு அடுத்தவருக்கு இல்லை என்றே கொள்ள வேண்டுமா. ?

 

சில விஷயங்கள் விவாதிக்கப் படும்போது கருத்துக்கள் வெளிப்பட்டால்தான் விவாதம் முற்றுப் பெறும். அதாவது எழுதுவது முகம்நோக்காத க்ரூப் ஸ்டடி. !பங்கேற்றல் அவசியம். 

                      சரணாகதி- ஒரு கதை.
                      -----------------------                        

உங்களுக்கு பூனைக்குட்டி, குரங்குக்குட்டி கதை தெரியுமா. ? பூனைக்குட்டி எல்லாப் பொறுப்பும் தன் தாய்ப் பூனையிடம் விட்டு விடும். குட்டி வளர்ந்து பெரிதாகும்வரை பூனை தன் குட்டியை வாயினால் கவ்விக்கொண்டு பாதுகாக்கும். ஆனால் குரங்குக் குட்டி தன் தாயை அழுத்திப் பிடித்துக் கொண்டு அதன் அரவணைப்பிலேயே வளரும் பூனைக் குட்டியைப் போல் மனிதனும் தன்னை ஆண்டவனிடத்தில் அர்ப்பணித்து விட வேண்டும் என்பார்கள். ஆனால் மனிதனுக்கு கண்காண முடியாத தெய்வத்திடம் தன்னை அர்ப்பணிப்பதில் அநேக சங்கடங்கள் உண்டு, அவன் தன்னை  தன் தாய் காப்பாற்றும் என்று நம்பி இறுகிப் பற்றிக் கொள்ளும் குரங்குக் குட்டி போல் ஆண்டவன் நம்பிக்கையைப் பற்றிக் கொள்கிறான். , இதையே சற்று வேறு விதமாகக் கூறினால். ---தந்தையின் கையைப் பற்றிக் கொண்டு போகும் சிறுவன் கீழே விழக் கூடும். ஆனால் தந்தையே அவன் கையை பற்றிக்கொண்டு போனால் அவன் விழமாட்டான். தன்னம்பிக்கைக்கும் ஆண்டவனைச் சார்ந்திருப்பதற்கும்  உள்ள வித்தியாசம் இதுதான். 

  பாட்டியும் முட்டைத் தலையும்

.” பாட்டி இவ்வளவு அருகில் பேப்பரை வைத்துக் கொண்டு படித்தால் கண்ணுக்குக் கேடு” என்று கூறி பாட்டியின் கையிலிருந்த “ ப்ரஜாவாணி “ பேப்பரை சற்றே இழுத்தேன்.. பேப்பரை தரையில் வீசி எறிந்தாள் பாட்டி ” என்ன பாட்டி, படித்தது பிடிக்கலையா, இழுத்தது பிடிக்களையா “ என்று கேட்டேன்.

 ” படித்ததுதான் “ என்ற பாட்டி, “ பாலா....!, குழந்தைகள் முட்டை சாப்பிடுவது அவர்கள் ஆரோக்கியத்துக்கும் , உடல் வலுவுக்கும் நல்லதுதானே

நடத்திய ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்கிறது.. பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் எல்லா தரப்புக் குழந்தைகளுக்கும் சமமான உணவு, என்பதும் நல்லதுதானே.” என்றேன்.

” சீருடையில் மாத்திரம் சமமென்பதைவிட, உணவிலும் சமம் என்றால் மாணவர்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்லவா. ஏழைக் குழந்தைகளுக்கு வீட்டில் முட்டை சாப்பிடுவது முடியாத காரியமாகும். 

“ பாட்டி, பள்ளியில் முட்டை போடாததன் காரணம் மத சம்பந்தப் பட்டது ஆனதால்தான் இருக்கும்..அதுதான் பள்ளிகளில் முட்டை கொடுக்காததன் காரணம் என்கிறார்கள். 

மதமாவது கிதமாவது.....! அதெல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும். நாளொரு முட்டை உடலுக்கு நல்லது என்று இந்த முட்டைத் தலையர்களுக்குத் தெரியாதா. மக்களுக்கு நல்லது செய்வதில் இந்த மாதிரி எண்ணங்கள் கூடாது. இதே ரீதியில் போனால் வெள்ளிக்கிழமைகளில் காலை 11- மணிக்கு புறப்படும் ரயில்களை “ராகு காலம் “ என்று சொல்லி தாமதப் படுத்துவார்கள் என்று போட்டாளே பாட்டி..இதையெல்லாம் தடுக்கும் ஜனங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் புஷ்டியான முந்திரி, பாதாம் , பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களை கோயில்களில் பிரசாதமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் குறைந்தா போவார்கள்.” பாட்டி சரியான ஃபார்மில் இருந்தாள்.

” பாட்டி உங்கள் சளி எப்படியிருக்கிறது..? இப்போது தேவலாமா.?

 சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ என்று இரண்டு மூன்று வாரங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டேன். என்னவெல்லாமோ கஷாயங்கள் மருந்துகள்னு போதும் போதும் என்றாகி விட்டது. நீ கொடுத்த மருந்து சாப்பிட்டவுடன் அநேகமாக சரியாகி விட்டது.

எனக்கும் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது பாட்டி. இருந்தாலும் பார்க்கலாம் என்றுதான் அந்த வெளி நாட்டுக் கஷாயம் கொடுத்தேன். 

 இரண்டே நாளில் பலன் தந்தது உன் கஷாயம். சரி ....அது என்ன மருந்தப்பா...

“ வெளிநாட்டுக் கஷாயம் பாட்டி. இரண்டு ஸ்பூன் ப்ராண்டி...

. அடப் பாவி மனுஷா.... ! எனக்கு ப்ராண்டியா கொடுத்தே.

  பாட்டி என்னென்னவோ மருந்தெல்லாம் சாப்பிட்டும் குணமாகாத உன் சளியும் இருமலும் இரண்டு ஸ்பூன் ப்ராண்டியில் குணமாயிற்று. .சின்னச் சின்ன விஷயங்களில் பிரச்சனை பண்ணக்கூடாது பாட்டி. குழந்தைகளுக்கு நாளொரு முட்டை தராதவர்கள் முட்டைத் தலையர்கள் என்றாயே. நல்லது என்று தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத முட்டைத் தலை இல்லையே உனக்கு...!

  “நான் பால் குடிப்பதில்லை. அது நீர் மாமிசம். நான் ஒரு வெஜிடேரியன். ஆகவே ஒரு பெக் மது அருந்துவேன் “ என்று கன்னட எழுத்தாளர் டி.பி. கைலாசம் அவர்கள் கூறுவாராம். . அதை ஒட்டி எழுந்த கதை நீங்கள் மேலே படித்தது.) .

  







 






 



 

 







                     
                  



 

  
                              


                              


 


 

“  

“ 

 

(