Sunday, March 23, 2014

தமிழ் தெரியுமா........?


                              தமிழ் தெரியுமா.......?
                               ---------------------
நம்மில் பலருக்கும் தாய்மொழி தமிழ். பேசுகிறோம் எழுதுகிறோம். பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றோம் கற்கிறோம். நானும் சிறிது தமிழ் கற்றிருக்கிறேன் ஆனால் இதில் வரும் கேள்விக்கு என்னால் உரிய பதிலைத் தரமுடியவில்லை யான் பெற்ற இன்பம் (?) நீங்களும் பெறப் போகிறீர்களா. ?பார்க்கலாம்.....!.

தமிழ் மொழியில் மொத்த எழுத்துக்கள் 247
(அவை உயிர் எழுத்து 12 மெய்யெழுத்து 18 உயிர்மெய் எழுத்து216 ஆய்த எழுத்து 1)



தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் எத்தன எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன? அதாவது இந்த ஓரெழுத்துச்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் தனியாகப் பொருள் உண்டு. எத்தனை தனிப் பொருளுடன் இருக்கும் எழுத்துக்கள் உங்களால் கூற முடியும். பார்ப்போம் யார் அதிகமாகத் தெரிந்துள்ளார்கள் என்று. விடைகள் நான் தெரிந்து கொண்டது பிறிதொரு பதிவில்.. வாழ்க தமிழ் மொழி., வளர்க தமிழ் அறிவு..! 




25 comments:

  1. வாழ்க தமிழ் மொழி., வளர்க தமிழ் அறிவு..!

    ReplyDelete
  2. 42 எழுத்துக்களுக்கு நேரடியாக பொருள் உண்டு. இங்கே நான் அறிந்தவை 30 :-
    ஆ, ஈ , உ (சிவபெருமான்)
    ஐ (ஐந்து), ஓ (வினா)
    கா (சோலை ), கூ (கூவுதல்) கை ,
    கோ (அரசன், இறைவன் )
    சா(மரணம்) சீ , சே (எருது),
    தா , தூ (வெண்மை ) தே (தெய்வம்) தை ,நா , நீ ,
    நை(நைதல்),நோ(நோவு),பா ,
    பூ ,பை , போ ,மா , மை , வா , பூ, வை , வௌ (கௌவுதல்)

    ReplyDelete
  3. துரை செல்வராஜூ ஐயா சொன்னதும் சரி... எப்போதோ குறித்து வைத்தேன்... மீண்டும் மீண்டு வருகிறேன்...

    ReplyDelete
  4. 01. - சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
    02. - பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
    03. - சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
    04. - பறக்கும் ஈ, தா, குகை, தேனீ
    05. - சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
    06. - இறைச்சி, உணவு, ஊன், தசை
    07. - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
    08. - அம்பு, உயர்ச்சிமிகுதி
    09. - அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை
    10. - மதகு, (நீர் தாங்கும் பலகை)
    11. - பூமி, ஆனந்தம்
    12. - வியங்கோள் விகுதி
    13. கா - காத்தல், சோலை
    14. கி - இரைச்சல் ஒலி
    15. கு - குவளயம்
    16. கூ - பூமி, கூவுதல், உலகம்
    17. கை - உறுப்பு, கரம்
    18. கோ - அரசன், தந்தை, இறைவன்
    19. கௌ - கொள்ளு, தீங்கு
    20. சா - இறத்தல், சாக்காடு
    21. சீ - லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
    22. சு - விரட்டடுதல், சுகம், மங்கலம்
    23. சே - காலை
    24. சை - அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
    25. சோ - மதில், அரண்
    26. ஞா - பொருத்து, கட்டு
    27. தா - கொடு, கேட்பது
    28. தீ - நெருப்பு, தீமை
    29. து - உண்
    30. தூ - வெண்மை, தூய்மை
    31. தே - கடவுள்
    32. தை - தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
    33. நா - நான், நாக்கு
    34. நி - இன்பம், அதிகம், விருப்பம்
    35. நீ - முன்னிலை ஒருமை, நீக்குதல்
    36. நூ - யானை, ஆபரணம், அணி
    37. நே - அன்பு, அருள், நேயம்
    38. நை - வருந்து
    39. நோ - துன்பப்படுதல், நோவு, வருத்தம்
    40. நௌ - மரக்கலம்
    41. - நூறு
    42. பா - பாட்டு, கவிதை
    43. பூ - மலர்
    44. பே - நுரை, அழகு, அச்சம்
    45. பை - கைப்பை
    46. போ - செல், ஏவல்
    47. - சந்திரன், எமன்
    48. மா - பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்
    49. மீ - மேலே, உயர்ச்சி, உச்சி
    50. மூ - மூப்பு, முதுமை
    51. மே - மேல்
    52. மை - கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
    53. மோ - மோதல், முகரதல்
    54. - தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
    55. யா - ஒரு வகை மரம், யாவை, இல்லை
    56. - நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
    57. வா - வருக, ஏவல்
    58. வி - அறிவு, நிச்சயம், ஆகாயம்
    59. வீ - மலர், அழிவு
    60. வே - வேம்பு, உளவு
    61. வை - வைக்கவும், கூர்மை
    62. வௌ - வவ்வுதல்
    63. நோ - வருந்து
    64. - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
    65. ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
    66. று - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் என்பதன் வடிவம்

    ReplyDelete
  5. மூன்று ஓரெழுத்துச்சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன...

    A - ஒரு அல்லது ஒன்று என்பதை குறிக்கப் பயன்கிறது.
    I - இன்றைய உலகப் பிரச்சனை அனைத்திற்கும் காரணமான நான் ஹிஹி...
    O - கவிதையியலில் பயன்படும் ஒரு வியப்பிடைச் சொல்.

    குறிப்பு 1 "I" (நான்) எனும் எழுத்தையும், "O" எழுத்தையும் கெப்பிட்டல் (Capital) எழுத்தில் மட்டுமே எழுதவேண்டும்.

    குறிப்பு 2 இலத்தீன் மொழி வழக்கில் "O" எழுத்தை ஒரு வியப்பிடைச் சொல்லாக கவிதையியல் பயன்படுத்தப்படுகின்றது; ஆங்கில மொழி இலத்தின் மொழியையும் தன்னகத்தே கொண்டு உருவான மொழி என்பதால் அப்பயன்பாடே ஆங்கிலத்திலும் காணப்படுகின்றது.

    முக்கிய குறிப்பு 3 தமிழாக இருந்தாலும் சரி... ஆங்கிலமாக இருந்தாலும் சரி... இன்றைய இளம் தலைமுறையினர் தோற்றுவித்துள்ளவை பலப்பல... நமக்கு புரியாது... கற்றுக் கொள்ள வேண்டும்... ஹா... ஹா...

    நன்றி : இணையம் + முக்கியமாக தங்களுக்கு ஐயா...

    ReplyDelete
  6. நண்பர் துரை செல்வராஜ் அவர்களும் DD யும் விடைளைச் சொல்லி விட்டார்கள்.

    ReplyDelete
  7. துரை செல்வராஜு ஐயா அவர்களுக்கும், திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கும் ஒரு வணக்கம் செலுத்திவிட வேண்டியதுதான். இருவரது பதில்களையும் copy paste செய்து கொண்டேன் ஐயா. நன்றி

    ReplyDelete
  8. அன்பின் தனபாலன் அவர்களின் பணி மகத்தானது. வாழ்க.. என்னையும் குறித்த அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  9. திண்டுக்கல் தனபாலன் போன்ற நிறைகுடங்களுடன் நாம் போட்டிபோடுவது தகாது என்பதால் நான் விடை சொல்ல வரவில்லை என்பதை அறியவும்.

    ReplyDelete
  10. சிந்தனைக்கு வித்திட்ட தங்களின் சிறப்பான முயற்சியினால்
    நாமும் பயன் பெற்றோம் வாழ்த்துக்கள் ஐயா .வாழ்த்துக்கள்
    துரை செல்வராஜூ ஐயாவிற்கும் ,சகோதரர் திண்டுக்கல்
    தனபாலன் அவர்களுக்கும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  11. நல்லா வம்பில மாட்டி வைக்கறீங்க GMB.

    ReplyDelete
  12. கேள்வியும் விடைகளும் பயனுள்ளவை.

    ReplyDelete
  13. தங்களுடைய கருத்தை எதிர் பார்க்கிறேன்!

    ReplyDelete
  14. உண்மையில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான்.
    தனபாலன் அவர்கள் குறிப்பிட்டதை தண்டி வேறு ஒன்றை சொல்லும் அளவுக்கு எனக்கு தமிழ் அறிவு போதாது
    உங்கள் பதிலையும் அறிய ஆவல்

    ReplyDelete
  15. அறியாமையைக் கொல்ல
    அறிந்து கொள்ள வேண்டிய
    அரிய பதிவு...
    42 கேட்ட இடத்தில்
    66 அள்ளிவீசிய
    திண்.தனபால் ஐயாவுக்கும்
    நன்றி

    ReplyDelete
  16. திண்டுக்கல் தனபாலன் அண்ணன் சொன்ன தகவல்கள் அனைத்தும் புதிது.

    ReplyDelete
  17. டி.டியின் தமிழார்வம் நன்கு தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. பயனுள்ள பதிவு. டிடிக்கும் துரை செல்வராஜுக்கும் மிக்க நன்றி. எல்லாரும் பதில் சொன்னப்புறமா மெதுவா வந்து பார்த்தேனோ, பிழைச்சேன்! :))))

    ReplyDelete
  19. நரகலுக்கான ஒற்றெழுத்து தமிழா, இல்லையா?

    ReplyDelete
  20. நண்பர் ஒருவர் பதிவில் கண்டது, என்னைப் போலவே பலரும் இருப்பது மகிழ்ச்சி (?) அளிக்கிறது. துரை செல்வராஜு 42 எழுத்துக்களில் 30 தெரியும் என்று கூறி அவற்றை எழுதி இருக்கிறார். திண்டுக்கல் தனபாலன் 60 எழுத்துக்கள் தனித்து பொருள் கொடுக்கும் என்று பட்டியல் இட்டிருக்கிறார். இவர்கள் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டார்கள் என்று நம்புவோம் நண்பரின் பதிவில் நான் கண்டது 47 எழுத்துக்ள் பிறிதொரு பதிவுக்கு காக்க வைக்கப் போவதில்லை. நம்பகமான தமிழ் அகராதியில் சரி பார்க்க முடியுமா. துரை செல்வராஜுக்கும் தனபாலனுக்கும் ஒரு பெரிய ”ஓ “ போடுவோம் இப்போது நான் படித்துத் தெரிந்து கொண்டது கீழே,
    1)அ -----> எட்டு
    2)ஆ -----> பசு
    3)ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
    4)உ -----> சிவன்
    5)ஊ -----> தசை, இறைச்சி
    6)ஏ -----> அம்பு
    7)ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
    8)ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
    9)கா -----> சோலை, காத்தல்
    10)கூ -----> பூமி, கூவுதல்
    11)கை -----> கரம், உறுப்பு
    12)கோ -----> அரசன், தலைவன், இறைவன்
    13)சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
    14)சீ -----> இகழ்ச்சி, திருமகள்
    15)சே -----> எருது, அழிஞ்சில் மரம்
    16)சோ -----> மதில்
    17)தா -----> கொடு, கேட்பது
    18)தீ -----> நெருப்பு
    19)து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
    20)தூ -----> வெண்மை, தூய்மை
    21)தே -----> நாயகன், தெய்வம்
    22)தை -----> மாதம்
    23)நா -----> நாக்கு
    24)நீ -----> நின்னை
    25)நே -----> அன்பு, நேயம்
    26)நை -----> வருந்து, நைதல்
    27)நொ -----> நொண்டி, துன்பம்
    28)நோ -----> நோவு, வருத்தம்
    29)நௌ -----> மரக்கலம்
    30)பா -----> பாட்டு, நிழல், அழகு
    31)பூ -----> மலர்
    32)பே -----> மேகம், நுரை, அழகு
    33)பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
    34)போ -----> செல்
    35)மா -----> மாமரம், பெரிய, விலங்கு
    36)மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
    37)மு -----> மூப்பு
    38)மூ -----> மூன்று
    39)மே -----> மேன்மை, மேல்
    40)மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
    41)மோ -----> முகர்தல், மோதல்
    42)யா -----> அகலம், மரம்
    43)வா -----> அழைத்தல்
    44)வீ -----> பறவை, பூ, அழகு
    45)வை ---- வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
    46)வௌ------
    47)கௌவுதல்கொள்ளை
    திரு.பக்கிரிசாமியின் கேள்விக்கு யார் பதில் தருவார்கள். ?அனைவரது வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete

  21. கடைசி எழுத்து வௌ என்பதன் பொருள் கௌவுதல் ,கொள்ளை. எழுத்தைக் கொடுக்காமல் பொருள் மட்டும் கொடுத்திருந்தேன் பிழைக்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  22. சுவாரஸ்யமான தொகுப்பு..

    ReplyDelete