Thursday, March 10, 2016

அம்பர்நாத் பயிற்சி பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு


                                   ATS AMBERNATH ALUMNI MEET
                                   -------------------------------------------------
முன்னைய பயிற்சி மாணவர் சந்திப்புஃபெப். 27-ம் தேதி காலை எட்டரை மணியிலிருந்து துவங்கும்  என்று நிகழ்ச்சி நிரல் கூறியது நானும் மனைவியும் போய்ச் சேரும்போது மணி ஒன்பது ஆகி இருந்தது போனவுடன் வருகைப்பதிவு செய்யச் சொன்னார்கள்பெயரைச் சொன்னவுடன்  ஒரு எண்ணைக் கொடுத்தார்கள் அந்த எண்ணை இன்னொரு கவுண்டரில் கொடுத்தபோது எங்கள்  பெயர் கொண்ட அடையாள அட்டையும் ஒரு ஹாண்ட் பாகும் கொடுத்தார்கள் அடுத்துக் காலை உணவாக இட்லி வடை பொங்கல் போன்றவை பஃப்ஃபே முறையில் எடுத்துக் கொண்டோம்  அதன் பின் சில புகைப்படங்களைக் க்லிக்கினேன் முதலில் அடையாளம் தெரிந்தவர்கள் . பிறகு வந்த கூட்டத்தின்  ஒரு பகுதி என்று 
  சந்திப்பு விழாவில் வழக்கம் போல் கடவுள் துதி குத்து விளக்கு ஏற்றல், வரவேற்புரை, பிரதம விருந்தினராக NTTF ன்  டைரெக்டர் திரு வேணுகோபால் அவர்களின் சின்ன உரை ( நீண்ட உரைகளைக் கேட்டு வெறுத்துபோன எனக்கு அது பெரிய ரிலீஃப் )   பின் பயிற்சிப் பள்ளியின்  anthem   என்று நிகழ்ச்சிகள் நடந்தேறின
 வெரைட்டி எண்டர்டெயின்மெண்ட்  என்று துவங்கும்  முன் முன்னாள் மாணவர்களில்  எண்பது வயதைத் தாண்டியவர்களுக்கு  கர்நாடகத்தின் வழக்கப்படி பேட்டா என்னும் தலைப் பாகை அணிவித்து கௌரவித்தனர் அவர்களின் துணைவியருக்கு ஷால் போர்த்தினர்.
Spastic society of Bangalore –லிருந்து  சிறார்களும்  சிறுமிகளும் விழாவில் அவர்களது  திறமைகளை காட்டினர்  வாய்ப்பாட்டு வாத்திய இசை நாட்டியம் என்று அசத்திவிட்டார்கள் ஒரு சிறுவன் பாட ஒரு சிறுவன் படம் வரைய என்று நெகிழ்த்தி விட்டார்கள் அந்த சொசைட்டிக்காக  நிதி வசூல் என்றதும் ஒரு மனதாக கூடி இருந்தோர் பணத்தை  அள்ளிக் கொடுத்தார்கள் அவ்விடத்திலேயே அந்த சிறுவன் வரைந்த படமும் விலை போயிற்று. இன்னும் மக்கள் மனதில் ஈரம் இருக்கிறது என்பது புலப்பட்டது சில நிமிடங்களில் ரூ 30,000/-க்கும் மேல் வசூலாயிற்று. என் மனைவியும் ரூ ஆயிரம் கொடுத்தாள்
 இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதிய உணவுக்காக நேரம் அறிவிக்கப்பட்டது பஃப்ஃபே முறையில் உணவு. அனுமார் வால் போல் நீண்ட வரிசை. பூரி புலவ் நான் குருமா கட்லெட்  சாம்பார் ரசம் தயிர் சாதம்  என்று வகை வகை நினைவுக்கு வரவில்லை. இனிப்பாக பாசந்தி ஐஸ்க்ரீம்  பப்பட் சலாட்  வகையறா வகையறா எல்லோர் சுவைக்கு ஈடாக அமைந்திருந்த உணவு
உணவு முடிந்தபின் பிசினஸ் மீட் என்று பொறுப்பாளர்கள் கூடிப் பேசினர்  அதே நேரம் பெண்களுக்காக தம்போலா விளையாட்டு நடந்தது என் மனைவிக்கு அதிர்ஷ்டம் இருக்கவில்லை
 முடியும் நேரத்தில் தேனீர் இடைவேளையும் வர அவரவர்கள் அறிந்த நண்பர்களைத் தேடி உரையாடினர்  நாங்கள் தேனீர் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து விட்டோம் இப்படியாக முதல் நாள் சந்திப்பு இனிதே நடந்தது                                  

  
                              
வருகைப்பதிவு
காலை உணவு
விழாமேடை
நிகழ்ச்சி நிரல் 
வருகை தந்தோரில் ஒரு பகுதி


நண்பர்கள்

சிலநண்பர்களுடன் நான் 



விழா பொறுப்பாளர்களில் சிலர்

கௌரவிக்கப்பட்ட மூத்தவர் ஒருவர் 

                                         மூத்தவர்களுக்கு மரியாதை (காணொளி)
ஸ்பாஸ்டிக்  சொசைட்டிஆஃப் பெங்களூருவின் வித்தகர்கள் சிலர் 
வாத்திய இசை
நடனமாடிய சிலர் 

பாடல் ஒலி கேட்டுக் கொண்டே படம் வரைபவர் 

ஆன் த ஸ்பாட்டில்  வரைந்த படம் 



அடுத்த நாள் 28-ம் தேதி நாங்கள் காலையிலேயே வந்து விட்டோம்காலை உணவாக ப்ரெட் ஜாம் ஆம்லெட் இட்லி வடை பூரி  இருந்தது மதிய உணவுக்குப் பின் என் பேரனின் பிறந்த நாளுக்குச் செல்லதிட்டம் அன்று பொதுவாக எந்த நிகழ்ச்சியும் வரையறுக்கப் படவில்லை அந்தநேரத்தை முகமறியா  பள்ளி முன்னாள் மாணவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ள உபயோகித்தோம்எங்களைப் பார்க்கவென்றே ஒரு அழையா விருந்தாளியும் கண்ணாடி தடுப்புக்கு வெளியே  வந்திருந்தார் புகைப்படம் என் மனைவி எடுத்தது என் ஹாண்டி காமிராவை எடுத்துவர மறந்து விட்டேன்
அந்தக் கூட்டத்தில் இருவர் ஒரே மாதிரி உடை உடுத்து அங்கும் இங்கும் உலவுவதைப் பார்த்து பரிச்சயப்பட்டோம் கொல்கத்தாவிலிருந்து வந்தவர்கள் எங்களுக்கு மிகவும் ஜூனியர்கள் ஒருவர் பெயரும் மற்றவர் பெயரும் கூட ஒரே மாதிரி ஒலித்தது இரட்டையர்கள் அதே பள்ளியில் பயின்றவர்கள் ஒருவர் டிபேஷ்  இன்னொருவர் தேபஷ்  (DIPESH DEBASH)
 சும்மா தமாஷுக்கு இருவரும் இரட்டையர்களை மணந்தார்களா என்று கேட்டோம் மிகவும்பலமாகச் சிரித்து இல்லை என்றனர்
 என் நண்பர் ஒருவரும் என் மகன் வீடு வழியே போக இருந்ததால் அவரையும் கூட்டிக் கொண்டு சீக்கிரமே கிளம்பி விட்டோம்  இடையே வந்திருந்தோரை குரூப் குரூப்பாகப் புகைப் படம் எடுத்தார்கள்

 ஒருவழியாய் இரண்டு நாள் ஆலும்னி மீட் முடித்துக் கொண்டோம்
ஆந்தயார் தெரிகிறதா
 
கொல்கத்தா இரட்டையர்கள்
 
மகன் வீட்டில் ஆலிலைக் கண்ணனா?
   
                            










27 comments:

  1. இது மாதிரி விசேஷங்களில் ஒரு சிரமம் இருக்கிறது. பழைய விஷயங்களைத் தொடர்ந்து பேசவும் முடியாது. முக்கால் நினைவில் இருக்காது. யாரும் அதை விரும்பவும் மாட்டார்கள் (அவர்களுக்கும் நினைவிருக்காதோ என்னவோ) இப்போதைய விஷயங்கள் பேசுவது என்பதும், இந்தக் கலை நிகழ்ச்சிகளும் ஒரு வழக்கமான விழாவாக அமைந்து விடக் கூடும்! எப்படியோ பழைய நண்பர்களுடன் கலந்து பேசி மகிழ்ந்திருக்கிறீர்கள். புகைப்படங்கள் அருமை.

    ReplyDelete
  2. இனியதொரு சந்திப்பு.. ஆனாலும் திரு. ஸ்ரீராம் அவர்கள் சொல்வதும் ஏற்றமுடையது..
    மகிழ்ச்சியான தருணங்கள்.. வாழ்க நலம்!..

    ReplyDelete
  3. மகிழ்வான தருணங்கள் ...

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா அருமையான சந்திப்பு மகிழ்ச்சியான விடயம் தொடரட்டும் மென் மேலும் சந்திப்புகள்
    ஆலிலைக் கண்ணனைக் கண்டேன் ஸூப்பர் ஸ்டில் ஐயா.

    ReplyDelete
  5. இதுபோன்ற தருணங்களே வாழ்வின் இனிமையான நினைவுகளை மீட்டுத்தரும்

    ReplyDelete
  6. ஆஹா நண்பரே
    படங்களை பார்க்கும்போதே
    புரிந்தது எவ்வளவு
    சந்தோஷமான தருணம் என்று....

    ReplyDelete
  7. ஆஹா நண்பரே
    படங்களை பார்க்கும்போதே
    புரிந்தது எவ்வளவு
    சந்தோஷமான தருணம் என்று....

    ReplyDelete
  8. நன்கு திட்டமிட்ட மகிழ்ச்சியான நிகழ்ச்சி. பெரும்பாலும் தொழில் நுட்பம், விவசாயம், மருத்துவம் சார்ந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பே அதிகம் நடைபெறுவதாகத் தெரிகிறது. மற்றபடி ஆர்ட்ஸ் (பி.ஏ; எம்.ஏ) குரூப் மாணவர்கள் இதுபோல் சந்தித்துக் கொள்வதாகத் தெரியவில்லை.

    ReplyDelete

  9. அம்பர்நாத் ATS இல் பயிசி பெற்ற நண்பர்கள் சந்திப்பில் பழைய நண்பர்களைப் பார்க்கும்போது ‘அந்த நாள் ஞாபகம்’ நெஞ்சிலே வந்து மகிழ்வைத் தந்திருக்கும். காணொளியையும் கண்டேன். படங்கள் அருமை. அதுவும் அந்த ஆலிலைக் கண்ணன் அருமை.
    (சென்ற பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தில் ATS என்பதற்கு பதிலாக ATM
    என தட்டச்சு செய்துவிட்டேன். எல்லாம் பழக்க தோஷம்தான்! தாங்களும் அது குறித்து சரியாக சொல்லிவிட்டீர்கள்.)

    ReplyDelete
  10. இனியதொரு நிகழ்வு ஐயா...
    சந்தோஷ தருணங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

  11. @ஸ்ரீராம்
    வந்திருந்த பேர்களில் பரிச்சயப் பட்டோர் எண்ணிக்கை மிகக் குறைவே மேலும் இம்மாதிரி நிகழ்வுகளில் நமக்கு நினைவில் இருப்பது அவர்களுக்கு நினைவில் இருப்பது இல்லை. முகம் நினைவில்லா நண்பர்களையும் பரிச்சயப் படுத்திக் கொள்ள இந்த சந்திப்பு வழிவகுத்தது வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  12. @ துரை செல்வராஜு
    ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது(57 ஆண்டுகள்) பலரும் எனக்கு ஜூனியர்களே அந்த பயிற்சிப்பள்ளிதான் அனைவரது வாழ்வுக்கு அடிகோலி. அதை நினைத்தே பலரும் வந்திருந்தனர் அவரவர் மனைவிமார்களும் ஊக்கப் படுத்தி உள்ளனர் வ்வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  13. @ அநுராதா ப்ரேம்
    ஆம் மகிழ்வான தருணங்கள்தான் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  14. கில்லர் ஜி
    அடுத்த சந்திப்பு கோவாவிலோ கொச்சியிலோ இருக்கலாம் பார்ர்க்கலாம் ஆலிலைக் கண்ணன் தலைப்பு ஒரு ஃப்லாஷ் ஐடியாதான் பாராட்டுக்கு நன்றி ஜி.

    ReplyDelete

  15. @ கரந்தை ஜெயக்குமார்
    இந்த சந்திப்பு என் போன்றோருக்கு நம் வாழ்வின் அஸ்திவாரத்தை நினைவூட்டியது வருகைக்கு நன்றிசார்

    ReplyDelete
  16. @ அஜய் சுனில்கர் ஜோசப்
    வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி சார்

    ReplyDelete

  17. @ தி தமிழ் இளங்கோ
    பெரும்பாலும் நண்பர்களது முகவரி இல்லாததே காரணம் என்று நினைக்கிறேன்
    என் மகன் படித்த பள்ளியின் பொன்விழா ஆண்டை பழைய மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று நடத்தியதை என் மகன் நினைவு கூர்ந்தான் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  18. @ வே நடனசபாபதி வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா சென்ற பதிவின் பின்னூட்டத்தில் எனக்குத் தெரியும் தட்டச்சுப்பிழை என்று . சும்மா தமாஷுக்கு உங்கள் வங்கிப் பணியைக் குறிப்பிட்டேன்

    ReplyDelete

  19. @ பரிவை சே குமார்
    வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  20. இந்த மாதிரியான கூடல்கள் என்றுமே இனிமையானவை. அவை அந்த பழையநாட்களுக்கே நம்மை இழுத்து, அந்நாளின் தெம்பையும் கொஞ்சம் மீட்டெடுத்து உடன்கொண்டு வரும்.
    இப்படி கொண்டாடவேண்டிய சந்தர்பங்களை நீங்கள் விடுவதில்லை என்று உங்கள் பதிவுகள் மூலம் அறிந்திருக்கிறேன். கைகொள்ள வேண்டிய பண்பு.!

    ReplyDelete

  21. @ மோகன் ஜி
    இந்தமாதிரி சந்திப்புகள் நாம் இருந்த வாழ்க்கையை நினைவு படுத்தஉதவுகிறது சில சந்திப்புகள் ஏமாற்றத்திலும் முடிந்திருக்கிறது ஆல் இன் த கேம்

    ReplyDelete
  22. நல்லதொரு நினைவுமீட்டல் சந்திப்பு. புகைப்படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

    ReplyDelete

  23. @ ஏகாந்தன்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    ReplyDelete
  24. இனிய சந்திப்பினைத் தங்களது பாணியில் பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது. நன்றி ஐயா.

    ReplyDelete
  25. நல்லதொரு சந்திப்பு போல் தெரிகின்றது சார். அந்த அழையா விருந்தாளி ஆந்தையார் தானே??!!

    அந்த ஸ்பாஸ்டிக் சொசைட்டிக் குழந்தைகளின் நிகழ்ச்சி சந்தோஷமாக இருந்திருக்கும் இல்லையா சார்.

    எங்களுக்கெல்லாம் இப்படியொரு மீட் இல்லை சார். எபோதேனும் ஓரிருவர் சந்திப்பதுண்டு ஏதேச்சையாக.

    ReplyDelete

  26. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி சார்

    ReplyDelete

  27. !@ துளசிதரன் தில்லையகத்து
    நிகழ்ச்சி முழுவதும் சந்தோஷமாக இருந்தது. வந்தவர்களிலும் நடத்தியவர்களிலும் யார் உயர்ந்தவர் என்னும் எண்ணம் இருக்கவே இல்லை.எல்லோரும் அந்த ஆல்மா மாட்டரின் வெளியீடுகள் என்னும் உணர்வே மிகுந்து இருந்தது சந்திப்புகளை மகிழ்ச்சியாக்கிக் கொள்ள வேண்டும் வருகைக்கு நன்றி துளசி /கீதா

    ReplyDelete