பிரதமரே இதையும் கொஞ்சம் கேளுங்கள்
---------------------------------------------------------
பிரதமர் நரேந்திர மோடி ( நன்றி கூகிள்) |
(நன்றி த ஹிந்து) |
அன்புமிகு
பிரதமர் மோடிக்கு ஒரு சாதாரணனின்
கருத்துகள் செவிக்கு எட்டாது என்றாலும் தெரிவிக்க வேண்டிய ஒரு நப்பாசையால்
எழுதுவது. முதலில் என் வாழ்த்துகள் யார்
எப்படிப் போனாலும் என்ன நடந்தாலும்
நினைத்ததை முடிக்கும்
பெரும்பான்மை இருப்பதால் நீங்கள் செய்திருக்கும் இமாலய சாதனை பாராட்டப்பட
வேண்டியதே 56 அங்குல மார்பு என்று பெருமைப்படும்
நீங்கள் அதைத் தட்டிக்கொள்ளலாம் யார் கேட்கமுடியும் ஒருவரைப் பற்றிய ஒரு பெர்செப்ஷனைச் சார்ந்தே கருத்துகள்
தெரிவிக்கப்படுகின்றன. கருப்புப் பணமும்
கள்ளப்[ பணமும் நாட்டின் நிலையை மிகவும் பாதிக்கிறது என்பது சரியே ஆனால் அதை
ஒழிக்க நீங்கள் எடுத்திருக்கும் வழிமுறைதான் கேள்விக்குரியது உங்கள் முடிவைப்
பலரும்பாராட்டலாம் ஏன் என்றால் எல்லோருக்கும்
கருப்புப் பணத்தையும் கள்ளப்
பணத்தையும் ஒழிக்க வேண்டும் என்னும் ஆவல்தான் ஆனால் இந்த வழிமுறைகளில் சந்தேகம்
எழுகிறது
நாட்டில்
உலவும் பணப்புழக்கத்தில் சுமார் 86% வங்கிகளில் செலுத்தப்பட்டு ஈடாக புது பணம்
பெற்றுக் கொள்ள வேண்டும் கள்ளப் பணம் வைத்திருப்போர் வாங்கிகளில் செலுத்தத்
தயங்குவார்கள் கேள்விகள் எழலாம் ஆனால்
கள்ளப் பணம் வைத்திருப்பவர்கள் ஜகஜ்ஜாலக் கில்லாடிகள் நீங்கள் கோலத்தில் போனால் அவர்கள் தடுக்கில்
போவார்கள் இல்லாமலா கோடிக்கணக்கில் அயல் நாட்டு வங்கிகளில் வைத்திருப்பார்கள் முதலில் அதை வெளிக்கொணர
நீங்கள் முயற்சி செய்திருக்க வேண்டும் உள்ளூரில் வைத்திருப்பவர்களுக்குத்
தெரியும் கருப்பை வெள்ளையாக்கும் வித்தை இந்த
நடவடிக்கையால் சங்கடப்படுவது கீழ்த்தட்டு மக்களே
அவர்களிடம் பணமில்லாப் பரிவர்த்தனை என்று சொன்னால் சரியா. இந்தியாவில் எழுதப்படிக்கத்தெரிந்தவர்கள்
சுமார் 74 % என்கிறார்கள் கவனிக்கவும் எழுதப் படிக்கத்தெரிந்தவர்கள்
என்றுதான் சொல்கிறேன் இவர்களிடம் போய் பணமில்லாப் பரிவர்த்தனை
செய்யுங்கள் என்று எல்லோரது கஷ்டங்களையும்
கேட்டுப் பார்த்தபின் சொல்வது சரியில்லை என் என்றால் இந்த நுட்பங்கள் படித்தவர்களுக்கே தெரிவது
பிரச்சனை எல்லோருக்கும் வங்கிகள்
மூலம் பணம் பெற முடியுமா சிந்தியுங்கள் எல்லோரும் அவரவர் ஊரில் இருந்தால்
வங்கிக்கணக்கைத் திறக்க முடியலாம் ஆனால் இடம் பெயர்ந்து வேலை செய்பவர்கள் வங்கிக்
கணக்குத் திறக்க எத்தனையோ கட்டுப் பாடுகள் ப்ரூஃப் ஆஃப் அட்ரெஸ் இல்லாமல் கணக்குத் திறக்க முடியுமா வங்கிகள்
செய்யுமா. அப்படியே யார் யாரையோ பிடித்து
கணக்குத் திறந்தால் அவரவர் சம்பளம் அதில்
போகும் ஆனால் எதற்கும் காசு வேண்டுமே எல்லா செலவுகளையும் பணமில்லப்
பரிவர்த்தனை செய்ய முடியுமா
பிரதமர் அவரது ஹை பெடஸ்டலில் இருந்து கொஞ்சம்
கீழிறங்கவேண்டும்
பிரதமர்
நாட்டு மக்களிடம் சில கேள்விகள் கேட்டு
பதிலை எதிர்பார்க்கிறார் ஆனால் இவற்றுக்கெல்லாம்
பதில் சொல்ல அவரதுகட்சி சார்ந்தவர்களும்
சமூக வலைத்தளங்களில் உலவி வரும் சிலரால் மட்டுமே முடியும் கேள்விகள்தான் என்ன
கருப்புப் பணம் ஒழிய வேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதா என்பது
போன்றவை எல்லோருக்கும் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் விருப்பம்
இருக்கும் வாக்காளர்களில் சுமார் முப்பது சதவீதம் பெற்று ஆட்சிக்கு
வந்தவர்கள் அவர்களுக்கு எதிராக எழுபது சதவீதம்
பேர் வாக்களித்திருக்கிறார்கள்
என்பதையும் சிந்திக்க வேண்டும் நிதி நிலைமை குறித்த வல்லுனர்கள் எல்லோரும்
என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டாமா. ஐயா ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று
அறிவிக்கும்போதே மாற்று பணமும்
கிடைக்கும் வழி செய்திருக்க வேண்டாமா
இருக்கும் ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை
வங்கிகளில் கொடுத்து மாற்றுப்பணம் வாங்கி கொள்ளச் சொல்கிறார்கள் பொதுவாகவே சாதாரணனுக்கு
பணப்பரிவர்த்தனை நூறு அதற்கும் குறைவான தொகையிலுமே நடக்கிறது ஐநூறு ஆயிரம்
என்று இருந்தாலும் பணக்காரர்கள்
தவிர மற்றவர் புழங்குவது நூறுக்கும்
குறைவான பணத்தில்தான் பெருந்தொகை
நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும்
போதே அதற்கு ஈடாக மக்கள் புழங்கும்
பணத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டாமா மக்களின்
கஷ்டங்களைப் பார்த்தபின்தான் தானியங்கி மெஷின்களை இப்போது வெளியாகி
இருக்கும் பணத்தை ஹாண்டில் செய்ய வில்லை
என்னும் ஞானோதயமே வந்திருக்கிறது வங்கிகளில் பணம்
எடுக்கப் போனால் அங்கும்
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளே
கொடுக்கப் படுகின்றன அதை வாங்கி நம்மால் எளிதில் மாற்றிப் புழங்க முடிகிறதா வங்கிகளிலேயே நூறு ஐநூறு ரூபாய்த் தட்டுப்பாடு
அதனால்தானோ என்னவோ பணமில்லாப் பரிவர்த்தனை
என்று சொல்கிறீர்களோ தெரியவில்லை
சிறுவியாபாரிகள்
சிறு தொழிற்சாலை நடத்துபவர்கள் அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளிகளுக்குச்
சம்பளம் கொடுக்க முடியாமல் தொழிலாளிகள் சொந்த ஊருக்கே திரும்புகிறார்கள்
என்னும் செய்தி கவலை தருகிறது இப்போது வங்கிகளிலேயே சமாளிக்கப் போதிய பணம் இல்லை என்று கேள்விப்படுகிறேன் ஐம்பது
நாட்கள் கேட்டிருக்கிறீர்கள் இந்த ஐம்பது நாட்களில் நிலைமை சீரடைய பலரும் நம்பும் அந்த ஆண்டவன்தான் அருளவேண்டும் எல்லா விஷயங்களையும் நகைச்சுவையாக
எடுத்துக் கொள்ளும் சமூக வலையாளிகளின்
கருத்துகள் உண்மையானவை அல்ல சமூக வலைத் தளங்கள் பொழுது போக்க உதவுபவையே
தவிர செய்திகள் சரியாகப் பறிமாரும் இடம் அல்ல.
அங்கெல்லாம் வள்ளுவரையே
பலரும் நினைக்கிறார்கள் இடுக்கண்
வருங்கால் நகுக. என்று கருப்புப் பணம் ஒழிகிறதோ இல்லையோ சிறிது காலத்துக்கு கள்ளப் பணம் புழங்குவது குறையலாம்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் ஆனால்
சிரித்துக் கொண்டே அழும் கலை நன்கு தெரிந்த பிரதமரே ஒன்று சொல்லிக் கொண்டு முடிக்கிறேன் தவிர்க்கப்பட முடியாதவை அனுபவித்தே
தீரவேண்டும் உங்களது உத்தரவை திரும்பப் பெறுவதில் இதைவிட சங்கடங்கள் இருக்கலாம்
ஆகவே எல்லா வங்கிகளிலும் மக்கள் புழங்கும்
பணம் கிடைக்க வழி செய்யுங்கள்
உங்களது கொள்கைகள் அணுகு முறை தெரியாமல் மக்கள்
உங்களை அரசு கட்டிலில் அமர வைத்திருக்கிறார்கள் அந்த நம்பிக்கை பொய்க்காமல்
இருக்கும் வகையில் ஆட்சி நடத்துங்கள்
ஆட்சிக்கு வந்ததும் நீங்கள் ஒரு கட்சியின்பிரதமர் அல்ல. மக்களின் பிரதமர் இதை
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் .
.
சாமானியர்கள் தாங்கொணாத சிரமத்தை அனுபவித்து விட்டனர்..
ReplyDeleteஏழைகளின் பாடு பெரும்பாடாகி விட்டது..
பதிவின் கடைசியில் - வைர வரிகள்..
உங்கள் ஆதங்கங்களை, யோசனைகளை வரிசையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteநல்ல பதிவு. சாமானியனுக்கு ஐநூறு, ஆயிரம் தேவையில்லை எனில் அந்தப் பணம் அவர்களிடம் ஏற்கெனவே புழங்கிக் கொண்டிருக்கவே இல்லையா? இந்த ஐநூறு, ஆயிரம் செல்லாது என்று அறிவித்த பின்னர் தான் அவங்களுக்கு நூறு, ஐம்பது, இருபது, பத்து தேவைப்படுகிறதா? இத்தனை நாட்களாகச் செலாவணியில் இருந்தது நூறில் தான் என்று நீங்களே சொல்கிறீர்கள். ஐநூறும், ஆயிரமும் நடுத்தர, மேல் நடுத்தர, மத்திய நடுத்தர மக்களிடம் தான் என்றும் தெரிய வருகிறது. அப்போ சாமானியன் ஏன் கஷ்டப்படணும்! அதான் புரியலை! மண்டையிலேயே ஏறலை! :(
ReplyDeleteஐம்பது நாட்களில் நிலைமை சீரடைய பலரும் நம்பும் அந்த ஆண்டவன்தான் அருளவேண்டும் //
ReplyDeleteஆண்டவன் கண்டிப்பாய் அருள்வார் என்று நம்புவோம்.
நம் பணத்தை நம் தேவைக்கு எடுக்க முடியவில்லை ,என்ன திட்டமிடலோ ?இவ்வளவு கஷ்டப்படும் மக்களுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்காவிட்டால் வருகிற தேர்தலில் ஆப்பு அடித்து விடுவார்கள் :)
ReplyDelete// நீங்கள் கோலத்தில் போனால் அவர்கள் தடுக்கில் போவார்கள் //
ReplyDelete‘நீங்கள் தடுக்கின் கீழே போனால் அவர்கள் கோலக்த்தின் கீழே போவார்கள்’ என்றிருக்கவேண்டும்.
// ஆகவே எல்லா வங்கிகளிலும் மக்கள் புழங்கும் பணம் கிடைக்க வழி செய்யுங்கள்.//
// ஆட்சிக்கு வந்ததும் நீங்கள் ஒரு கட்சியின்பிரதமர் அல்ல. மக்களின் பிரதமர் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.//
சொல்லவேண்டியவற்றை சொல்லிவிட்டீர்கள். உங்களின் வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகாமல் இருந்தால் நல்லது.
ம்... கஷ்டகாலம் விரைவில் தீரட்டும்...
ReplyDeleteஎந்த ஒரு நடவடிக்கையிலும் சிக்கல்கள் இருக்கலாம். அவை விரைவில் தீர்ந்துவிடும் என நம்புவோம்.
ReplyDeleteஎன்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம் ஐயா
ReplyDeleteநாம் ஊதற சங்கை ஊதித்தான் ஆகணும்!
ReplyDeleteஇதனால் கள்ளப்பணம் ஒழியும் என்ற நம்பிக்கை இன்னும் முழுவதுமாக எனக்கில்லை. அதுக்கெல்லாம் இந்நேரம் புதிய வழி கண்டுபிடித்து வெற்றிகரமா நடத்தி இருப்பார்கள்!
தினமும் போய் வங்கியில் நிற்பது நேரவிரயம் நமக்குதான்...:-(
அனுபவ பூர்வமான அலசல். கருப்புபணம் ஒழிப்பு என்ற பெயரில் பண பரிவர்த்தனையைக் குறைப்பு செய்ததில் சரியான திட்டமிடல் இல்லை.
ReplyDeleteஉங்கள் கருத்தினை பதிவு செய்தது நல்லது......
ReplyDeleteஎல்லாவற்றிலும் அரசியல். வேறென்ன சொல்ல....
சிறந்த ஆய்வு
ReplyDeleteஅருமையான பதிவு
திட்டமும் நோக்கமும் சரிதான்
ReplyDeleteஆனால் அமலாக்கத்தில் இத்தனை
குளறுபடிகள் இருந்திருக்க வேண்டாம்
விரிவாக எழுதியவிதம் நன்று
௦% சதவீத திட்டமிடல்.....ஆனால் 1௦௦% பலனை எதிர்பார்த்தல்...மேலாண்மையில் ஏதாவது ஒரு விதி கண்டுபிடிக்கவேண்டும்....!
ReplyDelete
ReplyDelete@ துரைசெல்வராஜு
சமூக வலைத்தளங்களில் பலரும் மோடிக்குக் கொடி பிடிக்கிறார்கள் அவர்களால் பிறரது கஷ்டங்களை உணரமுடிவதில்லை.கட்சி ஆட்சி ச்டெய்வதுதான் தெரிகிறது வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ ஸ்ரீராம்
ஆதங்கங்கள் சரி யோசனை ஏதுமில்லையே வருகைக்கு நன்றி
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
அந்த நூறும் ஐம்பதும் கண்ணாமூச்சி ஆடுகின்றனவே வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ கோமதி அரசு
என்னால் அந்த அளவுக்கு நம்பமுடியவில்லை மேம்
ReplyDelete@ பகவான் ஜி
வருகிற தேர்தல் வரை இந்த நிலை நீடிக்குமா ஜி வருகைக்கு நன்றி
ReplyDelete@ வே நடனசபாபதி
பிரதமருக்கு என்று எழுதி விட்டாலும் அது உண்மையில் பிரதமரின் ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் எழுதியதே சில சொல் வழக்குகள் தவறாக எழுதி விட்டேன் போல வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
ம்.. கஷ்டகாலம் தீரட்டும்
ReplyDelete@டாக்டர் ஜம்புலிங்கம்
சிக்கல்கள் புரிந்து கொள்ளப்படவேண்டும் நான் எழுதி இருப்பது போல் ஹை பெடெஸ்டலில் இருந்து பார்க்கக் கூடாது வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
நாம் வெறும் பார்வையாளர்களாகி விட்டோம் . வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ துளசி கோபால் வங்கியில் போய் நின்றாலும் தேவையான பணம் கிடைப்பதில்லையே இப்போதே கருப்புப் பணம் ஜேஜே என்று வெள்ளை ஆவதாகப் படிக்கிறேன் இதிலும் தொழில் நுட்பங்கள் வருகைக்கு நன்றி மேம்
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
இனி சம்பளப்பட்டுவாடாவும் வங்கிகள் மூலம்தானாம் வங்கிக்கணக்கு இல்லாதவன் அல்லது தொடங்க முடியாதவன் பாடு அம்போதான்
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
நான் எழுதியது அரசியல் அல்ல . வருகக்கு நன்றி சார்
ReplyDelete@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
எல்லோரும் நினைப்பது நான் எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ ரமணி
கருப்புப் பணமும் கள்ளப்பணமும் ஒழியுமா சந்தேகமே தோன்றியது எழுத்தில் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@இருதயம்
முதல்(?) வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்
நோக்கம் நல்லதாக இருந்தாலும் வழிமுறை சரியில்லை. உங்கள் கருத்துக்கள் மிகவும் சரியே சார். முதலில் வெளிநாட்டில் உள்ள பணத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும். அதில் தானே பெரிய முதலைகள் இருக்கின்றன...
ReplyDeleteகீதா ஏடிஎம் இல் பணம் இல்லை அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் போடுகிறார்கள் அந்த நேரத்திற்குள் நாம் சென்றால்தான் எடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் எப்போது என்று தெரிவதில்லை. வீட்டின் அருகில் இருக்கும் ஏடி எம் இல் பணமே போடுவதில்லை. அடையாருக்குச் சென்றால்தான் வங்கிக்குச் சென்று பணம் எடுக்க முடியும் ஆனால் இன்னும் வரிசை இருக்கத்தான் செய்கிறது. எனவே பந்திக்கு முந்திக்கோ என்பது போல் வங்கி திறக்கும் முன்னரே அங்கு சென்று நின்று எடுத்துவிடுகிறேன். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்றாலும் சமாளித்து வருகிறேன். ஒரு நன்மை என்னவென்றால் செலவு குறைந்துள்ளது!
இன்றும் எங்கள் வீட்டருகில் உள்ள ஏடி எம் களில் இரண்டாயிரம் ரூபாய்தான் குறைவாகக் கேட்டால் வழங்குவதில்லை பிரதமர் புத்திசாலி யாரும் கருப்புப் பணத்துக்கு எதிராகக் கருத்து சொல்ல மாட்டார்கள் அதுவே அவரது செயல் சரி என்று நினைக்கச் செய்கிறது பாவம் சாதாரணனும் சிறு தொழிலதிபர்களும் வியாபாரிகளும்
Deleteஅலசல் நன்று!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி ஐயா
Delete