அரசியல் ஆதங்கங்கள்
----------------------------------
எனக்குப்
புரியாத ஒன்று இந்த பணமில்லாப் பரிவர்த்தனை என்று சொல்லப்படுவது . 56 அங்குல
மார்புடைய பிரதம மந்திரி அவருடைக மார்பை
தட்டிக் கொண்டு காய்களை நன்றாகவே நகர்த்துகிறார் இவர் கூறும் காசில்லாப் பரிவர்தனை
ஒரு சராசரி இந்தியனுக்கு விளங்க, அவனுக்கு ஓரளவாவது இந்த நுட்பங்கள் தெரிய, அதிகம்
படிப்பறிவில்லவர்கள் புரிந்து கொள்ள இன்னும்
பல நாட்களாகும் இல்லை மாதங்களாகும் முன்னேறிய நாடுகளில் கூட முழுவதுமாக
இந்த காஷ்லெஸ் ட்ரான்ஸாக்ஷன்ஸ்
புழக்கத்தில் இல்லை. அதிகப் பணம் கொடுக்க வேண்டிய இடங்களில் இது
நடக்கலாம் தினசரி வாழ்க்கையில் எண்ணிப்பார்க்க முடியாத
ஒன்று. பிரதமரின் பழைய பண விலக்கலை சாதாரணன மனிதன் ஏற்றுக் கொண்டாலும் அது ஊழலையும் கருப்புப்பணத்தையும்
கள்ளப் பணத்தையும் ஒழிக்க என்று
கூறும்போது அதற்கு எதிராகக் கூற
மாட்டார்கள் என்பது தெரிந்ததுதானே பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விலக்கிக் கொள்ள
முடிவு செய்தபோது இன்னும் முன் எச்சரிக்கையுடன்
இருந்திருக்கவேண்டும் 86% பணப்புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டால் அதற்கு ஈடாக புதிய நோட்டுகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் படி ஏற்பாடுகள் செய்திருக்க
வேண்டும் இப்போதெல்லாம்2000 ரூபாய் நோட்டுகளே வங்கிகளில் கொடுக்கிறார்கள் 500
ரூபாய் நோட்டுகளை நான் இன்னும்
காணவில்லை. மனதோடு உறவாடும் நம் பிரதமர்
அவர் நாட்டில் கருப்புப் பணத்தையும்
கள்ள பணத்தையும் ஒழித்து விட்டதாக
மார் தட்டிக் கொள்கிறார் எல்லோரும் இப்போது சுபிட்சமாக இருக்கிறார்கள்அவர் வாக்களித்திருந்த அச்சே தின் வந்து விட்டது கள்ளப்பணமும் கருப்புப் பணமும் ஒழிந்து விட்டது என்னதவம் செய்தமோ மோடி நம் பிரதமராக வரவும் தொடரவும்....!
எனக்கு
நான் பள்ளியில் படித்த நக்கீரரின்
அகப்பொருளுரை நினைவுக்கு
வருகிறது அந்தக் காலத்தில் பாண்டிய நாடு
பன்னீரியாண்டு வர்கடஞ்சென்றது அரசன் தன் சிட்டரை எல்லாம் அழைத்து யான் உங்களை எல்லாம் புறந்தரகில்லேன் நீவீர் உமக்கறிந்தவாறு சென்று புக்கின் நாடு நாடாயின ஞான்று என்னை உள்ளி வம்மின் “ என்றானாம் அது போல் நம் மதிப்புக்குரிய
பிரதமர் நம்மை சரியாகப் புரந்தரவல்லாது இருக்கிறார் ஆனால் பாண்டியனின் மன வளம் சிறிதும் இல்லை அவருக்குப் பின்பாட்டுப்பாட பீஜேபி மந்திரிகள்
இருக்கிறார்களே யார் எப்படிப் போனால் என்ன அவர்களுக்கு பெரும் பானமை
இருக்கிறது இன்னும் மூன்றாண்டுகளுக்கு
அவர்களை யாரும் அசைக்க முடியாது திடீர் திடீரென்று அவருக்கு ஞானோதயம் ஏற்படுகிறது
இப்போது மத்திய மாநில அரசுகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது
ஒன்றாகும் ஆதியில் அப்படித்தானே இருந்தது
அதிகார ஆசையில் மாநில அரசுகள் கலைந்து
நடுவிலேயே தேர்தல்கள் வந்தன. அது மாதிரி
இப்போதும் நடக்காது என்பது என்ன உத்தரவாதம் அது போகட்டும்
“
இன்றைக்கு கண்டுபிடிக்கப்படும் கருப்புப் பணம்
எங்கிருந்தது என்று தெரியாமலா இத்தனை நாள் இருந்தார்கள் இவர்களை வேட்டையாடத் தடை செய்தது என்ன என்னவோ
இந்தப்பணமெல்லாம் இப்போதுதான் பதுக்கப்பட்டு
கண்டெடுக்கப்பட்டது போல் ஒரு ஜோடனை. த ஹிந்து ஆங்கில நாளிதழில்
இருந்த இருக்கும் நிலைகளை
விரிவாகக் காட்டி இருகிறார்கள் மோடியின் இந்த அதிரடி அறிவிப்புக்குப் பின் பல இடங்களில் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்
என்பது தெரிகிறது பெருவாரியான ஹிந்துக்கள் வசிக்கும் நமது நாட்டில் காவிகள் கை ஓங்கி இருப்பது தெரிகிறது சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெருமை அடைந்த பலரது பெயர்களை கண்டெடுத்து வெளியிட இருந்த தகவலை அரசின் கைத்தடிகள் நிறுத்தி இருக்கிறார்களாம் காரணம் அதில் பலரும் இஸ்லாமியர்களாம் கட்சி அரசியலைத்
தாண்டி குறுகிய எண்ணங்களைத் தாண்டி நினைக்கவோ செயல்படவோ இவர்கள் தயாராய் இல்லை.
விஷயம் தெரிந்தவர்களின் கூற்றும் ஒதுக்கப்படுகிறது பல முறைகேடுகள்
நடந்தேறுகின்றன இவர்களுக்குத் துணை போக இவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும்
இவர்கள் கைப்பாவையாகி விடுகிறாகள் இது
மாநில மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளில் தெரிகிறது
க்ள்ளப்பணமும் கருப்புப் பணமும் படைத்தவர்கள் ஒரு சதவீதம் பேர் இருப்பார்களாஅவர்களை இனம் கண்டுகொள்ள 99% பேர் துன்பத்துக்கு உள்ளாகிறார்கள் எலியைப் பிடிக்க மலையைக் கெல்லுவது போல
க்ள்ளப்பணமும் கருப்புப் பணமும் படைத்தவர்கள் ஒரு சதவீதம் பேர் இருப்பார்களாஅவர்களை இனம் கண்டுகொள்ள 99% பேர் துன்பத்துக்கு உள்ளாகிறார்கள் எலியைப் பிடிக்க மலையைக் கெல்லுவது போல
எடுக்கப்பட்ட
முடிவுகள் கடைகோடியில் இருப்பவனைக் காயப்படுத்துகிறது என்பது தெரிந்தும்
ஒப்புக்கொள்ள தயக்கம் காட்டும் இவர் ஏதோ மோடி வித்தை மாதிரி புதிய கருத்துகளை
ஒவ்வொரு நாளும் சொல்லி வருகிறார்/ மீடியாக்களும் தங்கள் டி ஆர் பி ரேட்டிங்கை
உயர்த்த பொது நலம் கருதாமல் பீப்பீ
ஊதுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு இந்த புள்ளிவிவரங்கள் தெரியாது ஆனால் பட்டறிவு
உண்டு மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு கோபமில்லை என்னும்
பொருளல்ல பொதுவாகவே நாம் இந்தியர்கள் சாத்வீக குணம் உடையவர்கள் ஆனால் ஒருநாள் பொறுத்தது போதுமென்று
பொங்கி எழுவோம் அப்படி ஏதும் நடக்கும்
முன் நிலைமைகள் சீர்செய்யப்பட்டால்
எல்லோருக்கும் நல்லது
அருமையாக அலசியுள்ளீர்கள் ஐயா உண்மை பொங்கி எழும் காலம் நிச்சயம் வரும்
ReplyDeleteசில இடங்களில் படிக்க கஷ்டமாக இருக்கின்றது ஐயா
@கில்லர்ஜி
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி ஜி. எழுத்துருக்கள் இப்போது சரியாகி விட்டன என்று நினைக்கிறேன்
இன்றைய நிலையை சரியாக அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்!
ReplyDeleteதேர்தலில் நிற்கும்போது வாக்குகளைப் பெற கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியாத நிலையில், அரசின் பொறுப்பில் உள்ளோர் மக்களின் கவனத்தை திசை திருப்ப நடத்திய நிகழ்வு இது.
என்னைப் பொறுத்து மட்டும் சொல்ல வேண்டுமானால் எனக்கு கஷ்டம் எதுவும் தெரியவில்லை. என்ன ஆகிறது என்று பார்ப்ப்போம்.
ReplyDeleteநல்லதொரு கட்டுரை.....
ReplyDeleteம் ...
ReplyDeleteபாலை அடுப்பில் வைத்ததும் பொங்கி விடும் என்று எதிர்பார்ப்பதெப்படி?
ReplyDeleteநீர், நீராவியாகக் கூட அதற்கேற்பவான கொதிநிலை அடைய வேண்டும்ல்லவா?
ஐம்பது நாட்களில் இதன் பலன் தெரியும் என்றார் ,ஆனால்விலைவாசி குறையவில்லை !நீண்ட நாள் மக்கள் பொறுமையாய் இருக்க மாட்டார்கள் :)
ReplyDeleteமக்களின் அன்றாட வாழ்வியலோடு விளையாடுகிறார்கள்
ReplyDeleteபார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று
ReplyDelete@ வே நடனசபாபதி
தேர்தலில் வெளிநாட்டில் ஒருக்கும் கருப்புப்பணத்தை வெளிக் கொணர்வோம் என்றார்கள் அதைச் செயல் படுத்தமுடியாமல் ஏதேதோ சொல்கிறார்கள் செய்கிறார்கள் அட செய்யட்டும் அதனால் ஏற்படப்போகும் கஷ்டங்களை முதலிலேயே யோசித்திருக்க வேண்டும் அல்லவா இதையெ நான் எலியைப் பிடிக்க மலையை கெல்லுதல் என்றேன் வருகைக்குநன்றி ஐயா
@ ஸ்ரீராம்
ReplyDeleteகாய்கறிக்கடையில் பணமில்லாப் பரிவர்த்தனை யோசிக்க முடிகிறதா எனக்கு பாதகமில்லை என்று எல்லோரும் கூற முடியவில்லையே வருகைக்கு நன்றி ஸ்ரீ
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
இந்தப் பொருண்மையில் யார் எழுதினாலும் நன்றாய் இருக்கும் வருகைக்கு நன்றி சார்
@நண்டு @ நொரண்டு
ReplyDeleteஇந்த ம் க்கு பொருள் தெரியவில்லையே
ReplyDelete@ ஜீவி
எதிர்பார்ப்புகள் யாருக்கு . கள்ளப்பணம் ஒழிந்ததா இப்போது செய்யும் செயல்கள் முன்பே செய்திருக்க முடியாதா இதெல்லாம் செயல்பட முடியாதவர்களின் சால்ஜாப்பு என்றே சொல்வேன் வருகைக்கு நன்றி சார்
@பகவான் ஜி
ReplyDeleteஐம்பது நாட்கள் என்ன இன்னும் சில மாதங்களானாலும் பலன் தெரியுமா என்பதே கேள்வி. காஷ்லெஸ் ட்ரான்சாக்ஷன்ஸ் நம் நாட்டில் நடக்கக் கூடியதா நான் எழுதி இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள் இந்த நுட்பங்கள் நம் கலாச்சாரத்துக்கு ஏற்றவை அல்ல வருகைக்கு நன்றி ஜி
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
என்ன நடக்கும் தொடர்ந்து மக்கள் கஷ்டங்களை அனுபவிப்பார்கள் சிறிது காலத்தில் அதுவும் பழகி விடும் நம்மேல் சவாரி செய்வது என்ன கஷ்டமா. வருகைக்கு நன்றி சார்
எல்லோருக்கும் உண்டான ஆதங்கங்களை சொல்லி இருக்கிறீர்கள். முழுக்க, முழுக்க பணமில்லாத பரிவர்த்தனை என்பது இந்தியாவுக்கு ஒத்து வராது.
ReplyDeleteமிக நல்ல அலசல் .உங்களுக்கு இது எல்லாம் அரசியல் ஆதங்கங்கள் ஆனால் தலைவர்களுக்குகோ அரசியல் ஆதாயங்கள்....
ReplyDeleteசட்டசபை, பாராளுமன்றம் இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்துக் கருத்துக் கூறுகையில் இது முன்னர் இப்படித் தான் நடந்து வந்தது என்பதையும், பின்னர் வந்த காங்கிரஸ் அரசு தான் இதைத் தனித்தனியாக நடத்த ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். இதற்கும் மோதி அரசு தான் பொறுப்பேற்க வேண்டுமா? மேலும் இது அரசு முடிவு செய்தாலும் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் இல்லைனா ஒண்ணும் செய்ய முடியாது. நிர்வாக ரீதியாகத் தனித்தனியாகத் தேர்தல்களை நடத்துவதே அவர்களுக்குச் சௌகரியம். :)
ReplyDeleteகறுப்புப் பணம் குறித்துப் பேசுகையில் இதுவரை வெளியில் வந்த பணத்தின் மதிப்பிலிருந்து எளிதாகப் பாமரன் கூடப் புரிந்து கொள்கையில் உங்களுக்குப் புரியவில்லை என்பதே நகைப்புக்குரியதாக இருக்கிறது. நேற்றுக் கூட ஒரு தொலைக்காட்சியில் இதைக் குறித்த புள்ளி விபரங்கள் சொல்லப்பட்டன.
ReplyDeleteமேலும் இப்போதெல்லாம் கொத்தனாரிடம் கூட ஆன்ட்ராய்ட் ஃபோன், ஐஃபோன் போன்றவை இருக்கின்றன. கிராமத்துக்காரர்கள் பலரிடமும் பல தொழில்நுட்பத் தகுதிகள் வாய்ந்த அலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே பணமில்லாப் பரிவர்த்தனை அவங்களுக்கெல்லாம் கஷ்டமாக இருக்கும்னு தோணலை.
ReplyDeleteமேலும் முழுதாகப் பணமில்லாப் பரிவர்த்தனை என்றும் சொல்லவில்லை. கூடியவரை குறைக்கத் தான் முயல்கிறார்கள். ஆட்டோ, டாக்சி போன்றவற்றுக்கு இப்படிப் பரிவர்த்தனை நடத்தப்பட்டால் யாராலும் கூடுதல் கட்டணம் வாங்க முடியாது. இங்கே யு.எஸ்ஸில் எல்லோரிடமும் பணம் இருந்தால் கூடக் கூடியவரை கார்டுகள் மூலமே பரிவர்த்தனை நடக்கிறது. இதைக் குறித்து ஆனந்த விஜயராகவன் என்னும் கோவை ஆவி அவர்கள் விகடன் புத்தகத்தில் எழுதிய கட்டுரையை முகநூலில் பகிர்ந்திருந்தார். அதைப் படித்தால் உண்மை நிலவரம் புரியும்.
முழுமையாகப் பணமில்லாப் பரிவர்த்தனை உலகில் எங்குமே சாத்தியமில்லை. அமெரிக்கா உட்பட. எனவே, படிப்படியாக அமல்படுத்துவதே அறிவுடைமை. முதலில், வணிகர்கள், தமது turnover இல் குறைந்தது 25 சதமாவது cashless transactions செய்தால் அவர்களுக்கு வருமான வரியிலோ அல்லது விற்பனை வரியிலோ கணிசமான தள்ளுபடி தரப்படும் என்று அறிவித்தால் அவர்களே வாடிக்கையாளரைத் தூண்டிவிட்டு பணமில்லாப் பரிவர்த்தனை செய்ய முன்வருவார்கள். இந்த நிலைமை ஸ்திரப்படுவதற்கு மூன்றாண்டுகள் தேவைப்படலாம். அடுத்தகட்டத்தில் turnover இல் குறைந்தது 5௦ சதமாவது cashless transactions இருந்தால்தான் அத்தகைய வரித் தள்ளுபடி கிடைக்கும் என்று உயர்த்தலாம். அடுத்த மூன்றாண்டுகளில் இது வெற்றிகரமாக ஸ்திரப்படும் என்பது உறுதி. - இராய செல்லப்பா நியுஜெர்சியிலிருந்து.
ReplyDeleteராஜா சிம்மாசனத்தின் மீது ஏறினான் என்று
ReplyDeleteபரதேசி திருவோட்டின் மீது ஏறினானாம்!..
- என்று சொல்வழக்கு உண்டு...
அது ஏன் இப்போது நினைவுக்கு வந்தது என்று தெரியவில்லை!..
பதிவு வெளியானதும் படித்து விட்டேன்..
இணைய வேகம் சரியில்லாததால்
உடன் கருத்துரையிட முடியவில்லை..
எதனிடமோ - தப்பிப் பிழைத்து
எதனிடமோ சிக்கிக் கொண்டதைப் போல இருக்கின்றது..
ReplyDelete@ தி தமிழ் இளங்கோ
சிலருக்கு இது ஏனோ புரிவதில்லை வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ அவர்கள் உண்மைகள்
வருகைக்கு நன்றி சார் ஆட்சி அமைப்பதுதானே ஆதாயம்
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
சட்டசபைக்கு பாராளுமன்றத்துக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்து வந்தது அது மாறக்காரணம் சில சட்ட சபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்த வேண்டி வந்தது இந்த ஆயா ராம் கயா ராம் பற்றிக் கேள்விப்பட வில்லையா.?இப்போதும் ஒரே சட்டசபைக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த முடியவில்லை
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
இந்தகறுப்புப் பண வேட்டை டிமானிடைசேஷனுக்கு முந்தியும் நடத்தி இருக்கலாம் எலியைப் பிடிக்க மலையை கெல்லி இருக்கிறார்கள் அயல் நாடுகளில் பதுக்கப்ப்ட்டிருக்கும் பணம் பற்றி மூச்சே இல்லை
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
ஆட்டோகாரர்களும் டாக்சிகாரர்களும்தான் வரவைக் கணக்கில் காட்டுவதில்லை போலும்
ReplyDelete@ செல்லப்பா யக்ஞசாமி
இந்த யோசனைகள் முன்பும் செய்யக் கூடியதுதானே வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ துரை செல்வராஜு
கறுப்புப் பண முதலைகள் அவர்களைச் சுற்றியே இருக்கிறார்கள் அதனால்தான் ஏதும் செய்ய முடியாமல் எல்லாம் செய்வது போல் பாவ்லா காண்பிக்கிறார்கள்
இந்த சூழலுக்கெல்லாம் அப்பாற்பட்டு பொங்கி எழுவது சாத்தியமா என்று நினைக்கும்போது எனக்கு சற்று ஐயமே ஏற்படுகிறது.
ReplyDeleteஎதற்கும் முடிவு ஒன்று உண்டு...
ReplyDeleteநல்ல முடிவு...? - சேதாரம் அதிகம்...!
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
சரியான ஐயமே ஏனென்றால் நாம் சாத்வீகமானவர்கள் பொறுமைசாலிகள் வருகைக்கு நன்றி சார்
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
அது கண்கெட்டபின் செய்யும் சூரிய நமஸ்காரமாக இருக்கக் கூடாது வருகைக்கு நன்றி டிடி
எலியைப் பிடிக்க மலையைக் கெள்ளுவது என சரியாகச் சொன்னீங்க பாலா சார்.
ReplyDelete
ReplyDelete@ தேனம்மை லக்ஷ்மணன்
உங்கள் வரவும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது மேம்
"இன்றைக்கு கண்டுபிடிக்கப்படும் கருப்புப் பணம் எங்கிருந்தது என்று தெரியாமலா..." என்ற வரிகள் பலவற்றைச் சிந்திக்க வைக்கிறது.
ReplyDelete@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
ReplyDeleteவாருங்கள் ஐயா வாசகரை சிந்திக்கத் தூண்டவே இப்பதிவு. வருகைக்கு நன்றி சார்
ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது என்பது தான் என் கருத்து. அவங்க வரி கட்டுவதைக் குறித்து எதுவும் சொல்லவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை இங்கே கொண்டு வருவதில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள் குறித்து எல்லா தினசரி, தொலைக்காட்சிகளிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. :)))) கறுப்புப் பணத்தை வசூலிக்கத் தானே வருமான வரித்துறை தேதி குறிப்பிட்டு அதற்குள்ளாகத் தங்களிடம் இருக்கும் கணக்குக் காட்டப்படாத வருமானத்தைக் குறித்த தகவல்களைச் சொன்னால் வருமான வரி அபராதத்துடன் செலுத்தினால் போதும் என்று செப்டெம்பர் வரை நேரம் கொடுத்திருந்தது. இதைக் குறித்த பல அறிவிப்புக்களும் அரசாலும் வருமான வரித்துறையாலும் செய்யப்பட்டு வந்தது. இப்படியான முறையான பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னரே 500 ரூ ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்னும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ReplyDeleteமுன் கூட்டியே அதற்கேற்றாற்போல் நோட்டுக்களை அச்சடித்து வெளியிட்டிருந்தால் இந்த அறிவிப்பின் நோக்கமே பாழ் பட்டுப் போயிருக்கும். பணம் புரள்வதைக் குறைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டதன் மூலம் வெளி வரும் பணம் பதுக்கப்படுவதையும் கண்டு பிடிக்க முடிந்ததோடு அல்லாமல் பணப்புழக்கத்தைக் குறைத்து கட்டுக்குள் கொண்டு வரவும் முடிந்திருக்கிறது. இவ்வளவு தான் செலவுக்குப் பணம் என்னும் ஓர் கட்டுப்பாடும் அனைவருக்கும் வந்திருக்கிறதே!
ஆனால் அதற்காகச் சுற்றுலாப் பயணிகளின் வரவோ, செலவோ வியாபாரங்களோ குறைந்ததாகத் தெரியவில்லை. நானும் இந்த அறிவிப்பின் பின்னர் மும்பை, சென்னை, ஶ்ரீரங்கம், திருச்சி போன்ற பல நகரங்களில் பார்த்தவரை வியாபாரம் சுறுசுறுப்பாகவே இருந்தது.
கறுப்புப் பணம் எங்கிருக்கிறது என்று தெரிந்து எடுக்கும் நடவடிக்கைகளையும் குறைதான் சொல்லுவார்கள். அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதாகச் சொல்லுவார்கள். ஆக மொத்தம் செய்தாலும் தப்பு, செய்யாவிட்டாலும் தப்புத் தான்! :) இப்போதும் பல்வேறு நபர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை நீங்கள் அறியவில்லை போலும்! :)
ReplyDelete@கீதா சாம்பசிவம்
ReplyDeleteமுதலில் ஆட்டோ ஓட்டுனர்களும் டாக்சி ஓட்டுனர்களும் மீட்டர் படி வருகிறார்களா என்று பார்க்க வேண்டும் பிறகு அவர்கள் இந்தக் காசில்லா பரிவர்த்தனைக்குத் தயாரா என்று பார்க்க வேண்டும் அவர்கள் தயாராய் இருந்தாலும் பயணிகள் தயாரா தெரியவேண்டும் எல்லாமே அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்பது போல் தான் கருப்புப் பணத்தை வசூலிக்க வருமானவரித்துறை செய்யும் செயல்களை முன்னாலேயே செய்திருக்கமுடியும் என்பது தானே பதிவில் இருப்பது டிமானிடைசேஷனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது பத்திரிகைகளும் மீடியாக்கலும் அரசியல் வாதிகளும் சொல்வதில் நமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதைப் புறக்கணிக்கக் கூடாது
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு என்றிலிருந்து ஒரு பிஆர் ஓ வாக மாறினீர்கள். நான் அரசியலே பேசவில்லை என் ஆதங்கங்களைத்தான் எழுதி இருக்கிறேன் எந்த கட்சியையும் போற்றவில்லை வருகைக்கு நன்றி நீங்கள் நெப்போதும் சொல்வது போல் நானும் சொல்லட்டுமா. உங்கள் கருத்தையும் தெரிந்து கொள்கிறேன் அவ்வளவுதான்