Sunday, October 15, 2017

மனைவியை நேசிப்பவர்கள்............


                                மனைவியை நேசிப்பவர்கள்
                            --------------------------------------------------
இந்த மாதம்  ஆறாம் தேதி என் வீட்டில் மீண்டும்  மகளிர் சக்தியைக் கண்டேன் மூன்றாம் முறையாக என்வீட்டில் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடை பெற்றது பலருக்கும் இது கேள்விக்குறி எழுப்பலாம் மனைவியை நேசிப்பவன் நான் அவள் விருப்பத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலுமா. ?என் வழியிலேயே சிந்தித்துப் பார்த்தேன் என் மனைவிக்கு  என்ற தேவைகள் மிகச் சொற்பமே எனக்கும் அம்மாதிரியே ஊருக்கு உபதேசம் உன்  வீட்டில் மட்டும் ஏன் இப்படி?ஒரே பதில் மனைவியை நேசிப்பவர்களுக்கு ……… இதனால் உண்டாகும்  சாதக பாதகங்களைப்பட்டியல் இடுகிறேன்    முதலில் சாதகங்கள்  என் மனைவிக்கு சோஷியல் நட்புகளை  வளர்க்க உதவுகிறது உரக்கச் சொல்லும் போது  அதுவே ஒருபயிற்சியாகிறது ஒரு நிகழ்ச்சியை ஆர்கனைஸ் செய்யும்  பலத்தையும்  பெருமையையும்  தருகிறது என்றாவது வீட்டுக்கு வரும் உறவுகளை ஒருகாரணம் கொண்டு வரவேற்க  உதவுகிறது நட்புகள் மத்தியில் தன்னைப் பறை சாற்றிக் கொள்ள உதவுகிறதுஎன்னையும்  பலருக்குத் தெரிவிக்க உதவுகிறது
பாதகங்களாக…. வரவே இல்லாதவனுக்குச் செலவுகள் கூடுகிறது (என் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மனைவி சொல்லுவாள்)
இவர்கள் பாராயணம் செய்யும் போது சுமார் மூன்று மணிநேரம் எனக்கு ஹவுஸ் அரெஸ்ட் இவளது நட்புகள் என்னையும்  பங்கு கொள்ளச் சொல்லி வற்புறுத்துவார்கள்  இல்லாவிட்டால் நான் என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்  அது மனைவிக்கு விருப்பமில்லாதது  நான் மனைவியை நேசிப்பவன் ………………முடிந்தவரை என் கருத்துகளை என்மனைவிக்குச் சொல்வேன்  அவளும்  என்னை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது
வந்தவர்களுக்கு  வெற்றிலை பாக்கு பழம்  கூடவே பதினொரு ரூபாய்பணம்  அதென்ன பதினொன்று 
இரு இனிப்புகள்  ஒரு காரம் கூடவே ஒரு ஸ்டீல் டப்பா 
மகளிர் சக்தியினர் சிலர் 
இன்னொரு படம் 
என் வீட்டில் நடந்த விஷ்ணு சகஸ்ர நாம பாராயணத் தொகுப்பு படங்களும்  காணொளிகளும் 
பாரா யணத்துக்கு ரெடி






மேலே பாராயணக் காணொளிகள் கீழே மனதை ஒருமுகப்படுத்த ஒரு காணொளி








   


50 comments:

  1. வணக்கம் ஐயா
    உங்கள் வீட்டில் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடை பெற்றமைக்கு வாழ்த்துகள்
    புகைப்படங்கள் அருமை மூன்று காணொளியும் கண்டேன்.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. இதில் வாழ்த்த என்ன இருக்கிறது வருகைக்கு நன்றி ஜி

      Delete
  2. மனைவியை நேசிப்பவர்க்கு மனைவியின் மனநிம்மதி முக்கியம். சகஸ்ரநாமப் பாராயணமும் வேறு சில மகளிர் மன்றங்களும் தொடரும். நீங்கள் செய்வதற்கு இதில் ஏதுமில்லை படமெடுப்பதைத்தவிர!

    மனதை ஒருமைப்படுத்த என்று நீங்கள் போட்ட காணொலியைப் பார்க்க ஆரம்பித்தேன். நன்றாக இருந்தது. மனது ஒருமைப்படுமா இதில் என்று யோசிக்க ஆரம்பிக்கையில் மனைவியின் அழைப்பு: ‘கொஞ்சம் வாங்க இங்க!’ மனது இருமைப்பட்டுவிட்டது ..

    ReplyDelete
    Replies
    1. இதுவும் மனைவியை நேசிப்பவர்கள் படும் பாடுகளில் ஒன்று வருகைக்கு நன்றி சார் கடக மால தியானம் அதிகமாகப் பேசப்படுகிறது

      Delete
  3. அத்தனையும் அருமையாக இருக்கு... வீடியோக்கள் பார்க்கவில்லை..
    உங்கள் வீட்டிலும் எல்லாமும் நடக்கிறது ஆனா சிலவற்றுக்கு மனைவியைச் சாட்டி விடுறீங்கள் போல தோணுது:)... அதாவது எனக்கிதில் இஸ்டமில்லை மனைவிக்காகவே பண்றோம் எனச் சொல்லுவது...

    சிலபேர் தமக்குப் பிடித்த உணவைக்கூட, சாப்பிடும்போது சொல்வதுண்டு ... எனக்கிதில் விருப்பமில்லை... ஆனா மனைவி விரும்பிச் சமைக்கிறாவே எனச் சாப்பிடுகிறேன் என.

    மனைவியை விரும்புவோர் மனைவிக்காக தன்னையும் கொஞ்சம் மாத்தலாமே:)..

    ReplyDelete
    Replies
    1. மனைவியை விரும்புவோர் அவர்களுக்காக விட்டுக் கொடுப்பதைத்தான் சொல்லி இருக்கிறேன் மனைவியைச் சாட்ட வில்லை இருப்பதைத்தான்சொல்லி இருக்கிறேன் காணொளியைப் பாருங்கள் பெயரில் அப்பாவி என்று சேர்த்டுக் கொண்டால் அப்பாவியாகி விட முடியுமா. நீங்களா அப்பாவி.........!

      Delete
    2. இதற்கு என்ன அர்த்தம் ஆமா இல்லையா

      Delete
  4. ​நீங்கள் சொல்லும் சாதகமான அம்சங்கள்தான் எல்லா பக்திக் கொண்டாட்டங்களிலும் பார்க்கப்பட வேண்டியது. பாதகங்கள் கூட பாதகங்கள் இல்லை. நம்மால் நாலு வியாபாரிகள் பயன் பெறுகிறார்கள் என்பது போலத்தான் அவற்றையும் பார்க்கவேண்டுமென்றே நான் நினைக்கிறேன்.​

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலான பக்திக் கொண்டாட்டங்களில் பக்தியே இல்லை வெறும் சடங்குகள்தான் இருந்தாலும் வீட்டில் மன அமைதிவேண்டும் அல்லவா மேலும் விட்டுக் கொடுத்தல் இன்றியமையாதது

      Delete
  5. மனைவியைத் தொடர்ந்து நேசித்து உரிய பலன் பெறுவதற்கு எமது வாழ்த்துக்கள்!- இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
    Replies
    1. 53 ஆண்டுகளுக்கும் மேலாக நேசித்து வருகிறேன் எல்லாப்பலன்களும் பெறுகிறான் நன்றி சார்வாழ்த்துகளுக்கு

      Delete
  6. பொதுவாக வீட்டுக்கு வருபவர்களுக்கு வெற்றிலை, பாக்கில் பணம் வைத்தால் ஒற்றைப்படையில் தான் வைப்பார்கள். எங்க ஊர்ப்பக்கம் ஒன்றேகால் ரூபாய் என்ற கணக்கில் கொடுப்பதும் உண்டு. இப்போதெல்லாம் மறைந்து வருகிறது. ஒரு ரூபாயே கொடுக்க மாட்டோம். ஐம்பது ரூபாய் எனில் ஒரு ரூபாய் சேர்த்து ஐம்பத்தி ஒன்று. பூரணமாக இருக்கக் கூடாது என்பார்கள். உறவும் தொடரவேண்டும். நமக்குக் கொடுக்கும்படியாகப் பணமும் தொடர்ந்து வரவேண்டும் என்பதற்காக பின்னமாகக் கொடுக்கச் சொல்லுவார்கள். நான் இப்போதும் அப்படித்தான் கொடுத்து வருகிறேன். ஐந்து ரூபாய் என்றால் மட்டும் அப்படியே கொடுப்பேன். ஐந்து ஒற்றைப்படை என்பதாலும் பூரணமாக இல்லை என்பதாலும். இது பெரும்பாலும் தென்மாவட்டங்களிலேயே உள்ளது என்றும் நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதற்கென்ன சாங்டிடி என்பதே தெரிவதில்லை நன்றி மேம்

      Delete
    2. அதில் புனிதம் குறித்து ஏதும் இல்லை. பின்னமாக இருந்தால் உறவுகள் தொடரும் என்னும் நம்பிக்கை தான்! தொடர்ந்து நானும் கொடுக்கணும், நீயும் கொடுக்கணும். இருவரின் உறவும் விட்டுப் போகாமல் தொடரவேண்டும் என்பதே! முழுதாகக் கொடுத்தால் அத்தோடு முடிந்தது என்பார்கள்! அதான்! வேறே ஏதும் இல்லை!

      Delete
    3. அதாவது வலைப்பதிவுகளிலும் திருமணங்கள் போன்ற விசேஷங்களிலும் வைக்கும் மொய் போன்று தொட்ரும் என்னும் நம்பிக்கை....!

      Delete
  7. ஏனெனில் என் புக்ககத்தில் 10, 20, என்றே கொடுப்பார்கள். கூடவே ஒரு ரூபாய் வைக்கும் வழக்கம் அவர்களிடம் இன்றளவும் இல்லை! மனைவிக்காகவோ இல்லை பொதுவாகவோ வீட்டில் நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடைபெறுவது நல்லது தானே! மனது சாந்தி அடையும்! தொடர்ந்து இம்மாதிரி நடைபெறப் பிரார்த்தனைகள்!

    ReplyDelete
    Replies
    1. இவையெல்லாம் காரணம் தெரியாமலேயே பின்பற்றப்படும் வழக்கங்களே எவை நல்ல விஷயம் எது அல்லாதது என்பதைத் தீர்மானிக்க அளவுகோல்கள் இருக்கிறதா

      Delete
  8. Replies
    1. அப்படி இருக்கவே விரும்புகிறேன் வருகைக்கு நன்றி சார்

      Delete
  9. இப்பொழுதெல்லாம் நவராத்திரி தொடர்ந்து லலிதா சகஸ்ரநாம பாராயணம் சக்கை போடு போடுகிறது. பாராயணத்தைத் தொடர்ந்து மினி மீல்ஸ் வேறு அரேஞ்ச் பண்ணி விடுகிறார்கள்.
    வீட்டு சிறைப்பறவைக்கும் ஒரு தட்டு பார்சலாய்.. (இனிமேல் வீட்டுக்குப் போய் எதற்கு ஒரு சமையல்?.. அவரும் பாவம் தனியாய் இருக்கிறார் இல்லையா?) கேட்டரிங்கிலிருந்து சகலத்தையும் ஏற்பாடு பண்ணி விடுகிறார்கள்.

    சென்னையில் அபார்ட்மெண்ட் கலாச்சாரத்தின் மகிமையும் முக விலாசமும் இது. இவர்களின் கூட்டுறவும் அன்பும் பல சமயங்களில் பெருமையாகக் கூட இருக்கின்றன.
    ஆண்களால் சாதிக்க முடியாத பல விஷயங்கள் பெண்களின் கூட்டுறவால் வெகு சுலபமாக சாதித்து விடும் காலம் இது.
    ஒரு மல்டி பர்பஸ் ப்ரொஜெக்ட் இது. நிறையச் சொல்லலாம்.

    உங்களுக்கு ஒரு பதிவுக்கு விஷயம் ஆனது உடனடிப் பலன், இல்லையா?..

    ReplyDelete
    Replies
    1. இவை எல்லாம் அவரவர்மனம் பொறுத்த விஷயம் ஒரு கதைஉண்டு கேரளத்தில் ஒரு ராஜாவைப்புகழ்ந்துபாடி பரிசில் பெற்றார்களாம் ஒருவனுக்கு எதுவும் பாடவராது ஆனால் பரிசிலும் வேண்டும் அவன் அங்கிருந்த ஒளி விளக்கை பார்த்து ( தீபஸ்தம்பம் மகாச்சரியம் எனிக்கும் கிட்டணம் பணம்) என்று மன்னனிடம்கூறிப்பரிசில் பெற்றானாம்

      Delete
    2. நான் சொன்னதே வேறு. அப்பார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் பெண்களின் கூட்டு முயற்சிகள் பற்றி.
      (உங்கள் பதிவைத் தொட்டு)

      Delete
    3. நானும் கூட்டு வழிபாட்டின் உண்மை நிலையை விளக்க முயன்றேன் எல்லோரும் வழிபடுகிறார்கள் நமக்கும் பலன் கிடைக்கட்டுமே என்று ஒரு வேளை சரியாகச் சொல்ல வில்லையோ

      Delete
  10. படங்களும் அருமை ஸார்.

    கணவன் மனைவிக்குள் புரிதல் இருந்தால், நேசித்தல் இருந்தால், ஒருவரது விருப்பத்தை மற்றவர் மதித்து குறை சொல்லாமல் இருந்தால், விருப்பங்கள் வேறாக இருந்தாலும் அங்கு அன்புதான் மேலோங்கும்.

    புகைப்படங்கள் நன்றாக இருக்கிறது...காணொளியும் நன்றாக இருக்கிறது ஸார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மனதை ஒருமுகப்படுத்த முயற்சித்தீர்களா வருகைக்கு நன்றி

      Delete
  11. தனக்கு விருப்பம் இல்லையென்றாலும் மனைவியின் விருப்பத்திற்கு மதிப்பு அளிக்கும் உங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

    கூட்டு வழிபாட்டால் பல வித நன்மைகள் உண்டு.
    காணொளிகள் பார்த்தும், கேட்டும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இல்லையென்றால் இத்தனை ஆண்டு குடும்பம் நடத்தி இருக்கமுடியுமா இது ஒரு பரஸ்பர மதிப்பு ஆகும்

      Delete
  12. புகைப்படங்கள் வீடியோ என கலந்து கலக்கியிருக்கும் சகஸ்ர நாம பாராயணப் பதிவு சிறப்பு ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் ஹவுஸ் அரெஸ்டில் இருந்த நான் செய்ய முடிந்ததுபடங்கள் எடுப்பதும் காணொளிகள் எடுப்பதும்தான் கருத்துக்கு நன்றி குமார்

      Delete
  13. சிறப்பு ஐயா
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி சார்

      Delete
  14. முன்பொரு முறை இதுபோன்ற பதிவினைப் பார்த்த நினைவு. அபாரமாகவும் இயல்பாகவும் பகிர்ந்துள்ளீர்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நினைப்பது சரியே இது எங்கள் வீட்டில் நடந்த மூன்றாவது பாராயணம் முன்பு நடந்தபோதும் படங்கள் வெளியிட்டிருக்கிறேன்

      Delete
  15. >>> பெரும்பாலான பக்திக் கொண்டாட்டங்களில் பக்தியே இல்லை வெறும் சடங்குகள்தான்.. இருந்தாலும்... <<<

    இது தான் அருமை..

    ReplyDelete
    Replies
    1. இவற்றை எல்லாம் மனைவிக்கும் எடுத்துச் சொல்லி இருக்கிறேன் இருந்தாலும் அவள் அந்தவழியையே விரும்புகிறள் வருகைக்கு நன்றி சார்

      Delete
  16. ஹீஹீஹி மனைவியை நேசிப்பவர் மனைவியின் விருப்பத்திற்காக ஏற்பாடு செய்த பூஜையா அல்லது மனைவியின் தோழிகளை பார்ப்பதற்காக மனைவியை நேசிப்பவர் ஏர்பாடு செய்த பூஜையா ?

    இப்படி ஏடாகூடமாக அடிக்கடி நான் பேசுவதால்தான் என் மனைவி எப்போதும் பூரிக்கட்டையால் பூஜை இருக்கிறார்

    ReplyDelete
    Replies
    1. இந்த வயது எனக்கு அனுகூலமாக இருக்கிறதோ நன்றி சார்

      Delete
  17. மனைவியை நேசிப்பவர்கள்............

    தலைப்பே அழகாக இருக்கு ஐயா...

    மனைவியை நேசிப்பவர்கள்....
    மனைவியை மகிழ்விக்க எது செய்தாலும் சரிதான்...(அமைதியாக விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் பார்த்தாலும்)..

    ReplyDelete
    Replies
    1. என் மனைவிக்குத் தெரியும் எனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று அவளும் தெரிந்தே நடந்து கொள்கிறாள் வருகைக்கு நன்றி

      Delete
  18. படமும் கருத்தும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா

      Delete
  19. பாராயண பதிவும், படங்களும், காணொளியும் நன்றாக இருக்கின்றன. மனதை ஒருமிக்க உதவும் இந்த காணொளி வாட்சப்பில் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. காணொளி வாட்ஸப்பில் வந்தாலும் கடக மாலா தோத்திரத்தில் மனம் லயித்தீர்களா வருகைக்கு நன்றி

      Delete
  20. @கீதா அக்கா: தஞ்சை பகுதிகளில் திருமணம் போன்ற விசேஷங்களில் ஓதியிடும் போது 51,101,1001 என்று இப்படிதான் தருவார்கள். மற்றபடி சாதாரணமாக வீட்டிற்கு வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்கு தரும் பொழுது இதை கடை பிடிப்பது இல்லை.
    இப்போதெல்லாம் திருமணம் போன்றவற்றிர்கு பரிசளிப்பதற்காக விற்கப்படும் மொய் கவர்களில் கூட ஒரு ரூபாய் இணைக்கப்பட்டுத்தான் வருகின்றன.

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே அவரவர் சௌகரியம் என்று ஆகிவிட்டபோது சிலவழக்கங்களைக் கட்டிக்கொண்டு ஏன் அழவேண்டும்

      Delete
  21. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மிகுந்த பலன் அளிக்க கூடிய ஒன்று! மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றி ஆதர்ஷ புருஷனாக ஆகியிருக்கிறீர்கள்! அருமை! படங்கள் சிறப்பு! மிக்க நன்றி ஐயா! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் சொல்லி ப்போவதில் நான் சொல்லி இருக்கும் சாதகங்களைவிட வேறு என்ன இருக்கப் போகிறது நீண்டைடைவெளிக்குப் பின் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது

      Delete
  22. நல்லதொரு சந்திப்பாகவும் அமைகின்றன இது போன்ற நிகழ்வுகள்.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  23. பெண்கள் சந்திக்க ஒரு வாய்ப்பு வருகைக்கு நன்றி மேம் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete