Sunday, March 11, 2018

அடைப்புக் குறிக்குள் மேற்கோள் காட்ட


                        அடைப்புக் குறிக்குள் மேற்கோள் காட்ட
                        --------------------------------------------------------------

 நான்  இல்லாவிட்டால்  என்னாகும்.? நானே  என்  நினைவாக  மாறி  விடுவேன்அதுவும்  சில  நாட்களுக்குத்தான்.. இருநதால்  என்ன   சாதிப்பேன் .? 

சாவைப் பற்றி நினைப்பதே சங்கடம் கொடுக்கக் கூடிய ஒன்று தான். அதை எதிர்கொள்கையில் பயம் மட்டும் கூடாதென்பதற்குத் தான் இந்த தேசத்து ஆன்மீக சிந்தனைகளே, மரணத்தை வெல்வோம் என்று கூறுகிறது. வெல்வோம் என்பது அந்த பயசிந்தனையிலிருந்து மீள்வோம், மீள்வதின் மூலமாக அதை வெற்றி கொள்வோம் என்கிற அர்த்தத்தில்.

 உலகோரே   உங்களிடம்   கேட்கிறேன் 
வயோதிகம்   என்பது  செய்யாத   குற்றத்துக்கு 
விதிக்கப்பட்ட   தண்டனையா..?

          ஊனென்றும் உயிரென்றும் ஆன்மா என்றும்
         ஆயிரம்தான் கூறினாலும், அதெல்லாம் ஒன்றின் 
         வியாபிப்பே என்று மெய்ஞானம் கூறுகிறது

அறிந்தவர்கள் என்று அறிந்தவர்கள் கூறும் 
மெய்ஞான சூக்குமம் வசப்படும் முன் நானும் 
மண்ணோடு மண்ணாய்  மக்கிப் போவேன்
அறிய முற்படுவோர் நிலையும்  அதுதான்

            என்றோ எவனோ வரைந்து முடித்த வட்டத்தின் 
            தொடக்கப்புள்ளி தேடி ஏன் சோர்வுற வேண்டும்.?
            அறியாமை இருளில் இருப்பதே சுகம்.

அரசியல்  நடத்தும்  அநியாயம் 
ஊழல்   சாக்கடை   என்றெல்லாம் 
எதிர் மறை  எண்ணங்கள் 
கோஷம்  இட்டே  வந்தாலும் 
உழைப்பும்  ஊக்கமும்   ஒன்றானால் 
அடைவோம்   இலக்கை   நிச்சயமாய் .

            காணும்   கனவுகள்  நனவாக
           
வேணும்   உறுதி   உள்ளத்தில் 
            
இருப்போம்  நாமும்  நல்லவராய்
           
அதுவே  வழி  காட்டும்

நரம்புகளின்   முருக்கேற்றம் நடத்துகிற போராட்டம் வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின்   அரங்கேற்றமாக படிக்கப் படிக்க மகிழ்வூட்டும் திறன்


 கஷ்டத்திலும்  இல்லாமையிலும்  இருந்தே  பழ்ச்கிவிட்ட  எனக்கு , நான் சம்பாதிக்கும்  காசை செலவு  பண்ண மனசு  வரமாட்டேங்குது . ஐயோ  எவ்வளவு  கஷ்டப்பட்டு  சம்பாதிச்சது , இதை செலவு  செய்யலாமாநமக்கு தேவைதான் என்ன ... உடுக்க ஏதோ  துணியும்  உயிர்  வாழ உணவும்  போதாதா ? தேவைக்கு மேல் செலவு செய்பவன்  எங்கோ  ஒரு பிச்சைக்காரனையோ  திருடனையோ  உருவாக்கு  கிறான் என்று காந்தி  சொன்னதாகப்படித்த  ஞாபகம் .

எப்பவுமே ஆண்களையே சார்ந்திருக்கும் பெண்கள் அவர்களின்
நலனுக்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள்.சோமவார
விரதம், காரடையான் நோன்பு, ரக் பந்தன், இத்தியாதி
இத்தியாதி....ஆனால் இந்த ஆண்கள் பெண்களின் நலன் வேண்டி
ஏதாவது செய்கிறார்களா என்ன.?

  விழுவது எழுவதற்கே என்றே உணர்ந்து விட்டால்
   உடலம் விழும்போது காலனிடம் கூறலாம்,
  "வாடா, உன்னை சற்றே மிதிக்கிறேன் என் காலால்"

-. செயல்பாடுகள் (ACTIVITIES )உன்னை
  
மும்முரமாக்கும். பயன்பாடுகள் (PRODUCTIVITY )பலனை
    
தரும்.செயல்பாடுகள் நேரத்தைக் குடிக்கும். பயன்பாடு
   
அந்தத் தளையிலிருந்து விடுவிக்கும்.

:-முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.
   
வாழ்க்கையை வாழ். அதை ஆராய்ச்சிசெய்வதே அதை
 
சிக்கலாக்கும்.

வலி தவிர்க்க முடியாதது; ஆனால் வேதனையாக
 
எண்ணுவது நாமே தேடுவது. ( PAIN IS INEVITABLE. BUT
 SUFFERING IS OPTIONAL )

-சோதனைகள் என்பதுமனோதிடத்தை அதிகரிக்க 
 
உதவும் ,விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் 
 
பாடங்களேபோராட்டங்களிலும் சகிப்பிலுமே மன
 
வலிமை வரும். சோதனைகள் இல்லாதபோது அல்ல.

வெற்றி என்பது மற்றவர் தரும் குறியீடு. கடக்கப்போகும்
பாதையை உணர்ந்து, நீ நிர்ணயிக்கும் திருப்தி எனும்
வெற்றியின் அளவுகோல் கடந்துவந்த பாதையினால்
 
ஏற்பட்டதைவிட சிறப்பாக இருக்கும்.நீ திசைமானியை
 
உபயோகி. மற்றவர்கள் கடிகாரத்தை உபயோகிக்கட்டும்.

- நீ யார் என்று கேள்வி கேட்டு வீணாகாதே. நீ யாராக
 
வேண்டும் என்று தீர்மானி. ஏன் வந்தேன் என்று
 
கேட்காதே. காரணத்தை ஏற்படுத்து. வாழ்க்கை என்பது
 
கண்டுபிடிப்புகளின் ( DISCOVERY ) தொகுப்பல்ல.
  
தோற்றுவிப்பின் செயல்பாடே. (WORK OF CREATION.)


ஒரு காலத்தில்  நாட்டை அரசன் ஆண்டான். பின் அந்தணன் ஆண்டான், பின் பெருந்தனக் காரன் ஆண்டான், ஆள்வதாகவும் மனப்பால் குடிக்கிறான். வேதம் கூறும் நான்கு சாதியினரில் மூவரின் காலம் சிறந்திருக்கிறது இதுவரை. இப்போது, இது , எங்கள் காலம், ஏழைத் தொழிலாளிகளின் காலம். நிறம் மாறும் பச்சோந்திப் பண மூட்டைகளுக்கு சாவு மணி அடிக்கும் எங்கள் காலம்..பாட்டாளிப் பெரு மக்களின் பொற்காலம்.



           





22 comments:

  1. சிந்திக்க வேண்டியவை! அது சரி, அந்தணன் எப்போ ஆண்டான்? எந்த வருஷத்திலிருந்து எந்த வருஷம் வரை? எத்தனை நூற்றாண்டுகள்?

    ReplyDelete
    Replies
    1. பெனாமி என்னும் வார்த்தை நினவுக்கு வரவில்லையா மேம் நேராக ஆட்சி செய்தால்தான் ஆட்சியா

      Delete
  2. கீசா மேடம்... சாணக்கியன் சந்திரகுப்த மௌரியரை நினைத்து எழுதியிருப்பாரோ?

    ReplyDelete
    Replies
    1. உலகம் முழுவதும் நடந்திருக்கிறது

      Delete
  3. உங்கள் சிந்தனைகளில் அனேகம் மிகுந்த அர்த்தம் உள்ளவை. காலா எதிரில் வா உன்னைக் காலால் மிதிப்பேன் என்பதன் அர்த்தம் தான் இறப்பைக் குறித்து கவலை கொள்ளவில்லை என்பது. எல்லோருக்கும் அன்றைக்கு விழித்தெழும்போது இன்று எனக்கு ஒரு நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றெண்ணி கடமையைச் செய்தாலே போதும். தடுக்க முடியாதவை பற்றி சிந்தனைக்கு இடமேது?

    ReplyDelete
    Replies
    1. குற்ப்பிட்டுள்ள வரிகள் ஆங்காங்கே என் பதிவுகளில் வந்தவை

      Delete
  4. >>> நீ யார் என்று கேள்வி கேட்டு வீணாகாதே...<<<

    கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்காதே!...

    அருமை.. அருமை..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி சார்

      Delete
  5. உங்கள் இந்த பதிவு, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அருமையான வரிகள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பதிவுகளில் வெளிவந்த வாசகங்கள் அப்போதுஎந்த இம்போர்டும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை ஆகவே இப்போது

      Delete
  6. இத்தனை எண்ணங்களா?
    அத்தனையும் அருமை!
    எனது மூளை - இப்ப
    இயங்குவதை உணருகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

      Delete
  7. கருத்து முத்துக்கள் அனைத்தும் நன்று.

    பல நேரங்களில் நானும் இப்படி நினைப்பேன் ஐயா எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தோம் அதை வெட்டியாக செலவு செய்யலாமா ? என்று பலமுறை தவிர்த்து இருக்கிறேன்.

    அதேநேரம் பிறருக்கு செலவு செய்ய நொடிகூட யோசிக்க மாட்டேன் இது எனது சிறிய அகவை முதல் உள்ள பழக்கம்.

    எனக்கு செலவு செய்து கொள்வதில் நானொரு கஞ்சன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஜி

      Delete
  8. அறியாமை இருளில் இருப்பதே சுகம். அருமை. எனக்கும் தோன்றும். அனைத்தும் படிக்க நன்றாயிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அவ்வப்போது வந்த பதிவுகளில் இருந்த செய்திக்சள் தான் நன்றி ஸ்ரீ

      Delete
  9. //உலகோரே உங்களிடம் கேட்கிறேன்
    வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு
    விதிக்கப்பட்ட தண்டனையா..?//

    அப்படிப்பார்த்தால் குழந்தைப் பருவம் கூட தண்டனைதான் இல்லையா?

    சமீப காலங்களில் உங்கள் பதிவுகளில் முதுமை பற்றியும், மரணம் பற்றியும் நிறைய வருகிறதே..?

    //
    கஷ்டத்திலும் இல்லாமையிலும் இருந்தே பழகி விட்ட எனக்கு, நான் சம்பாதிக்கும் காசை செலவு பண்ண மனசு வரமாட்டேங்குது .//

    "சிறு வயதில் கஷடப்படுவது என்பது பூண்டு வைத்த பாத்திரம் போல, எத்தனை தேய்த்து அலம்பினாலும் வாசம் போகாது." இப்படி சொல்லியிருப்பது லா.ச.ரா.

    ReplyDelete
  10. நிறைய சிந்தித்து எழுதியிருக்கிறீங்க... இன்றைய நாளை மட்டும் நினைச்சு வாழ்ந்திட்டால் கவலை இல்லை.. வரப்போவதை எண்ணி, இருக்கும் சந்தோசத்தை இழந்திடக்கூடாது..

    ReplyDelete
  11. //முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.
    வாழ்க்கையை வாழ். அதை ஆராய்ச்சிசெய்வதே அதை
    சிக்கலாக்கும்//

    உண்மையான வரிகள்... நாம் உயிரோடிருக்கும் வரை மரணம் வரப்போவதில்லை:), மரணம் வந்திட்டால் நாம் இருக்கப் போவதில்லை பிறகெதுக்கு வீணான யோசனைகள்:)..

    ReplyDelete
  12. சிந்தனையோட்டம் அருமை
    அனுபவம் பேசுகிறது ஐயா

    ReplyDelete
  13. அனைத்தும் அனுபவ பொன்மொழிகள் ஐயா...

    ReplyDelete
  14. அலைபேசியிலிருந்து இரண்டு பின்னூட்டங்க்கள் போட்டேன் காணவில்லை இங்கு.

    உங்கல் அனுபவ உரைகள் அருமை.

    ReplyDelete