சென்னையும் -----------
-----------------------
சென்னைக்குச் சென்றிருந்தேன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் எதிர் பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் ஏமாற்றம் தானே நினைத்தது நினைத்தபடிநடக்க
வில்லை ப்ளான் யுவர் வர்க் அண்ட் வர்க் யுவர் ப்ளான் என்று சொல்லும்நான் சரியாக கணிக்க வில்லை எல்லாவற்றுக்கும் பிறர் உதவியை
நாட வேண்டிய நிலையில் இருக்கும்
நான் என்னைப் பற்றிமட்டுமே நினைத்தது பெரிய தவறுதானே பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு
செய்த்ததாகநினைக்கும்நான் சரியாகச்செய்யவில்லை
நேரம்காலம் என்பதுஎல்லோருக்கும் உண்டு என்பதை நினைக்காமல் இருந்துவிட்டேனோ எல்லாவற்றிலும் ஒரு நிறைவு என்னவென்றால் என்னைத்தேடி நண்பர் செல்லப்பா துணைவியாருடன் என் வீட்டுக்கு
வந்ததுதான் மிகுந்த மகிழ்ச்சி தந்தது
சென்னை சீதோஷ்ணமே என்னை அங்கு வர விடாமல்
தடுக்கும் என்னால் எங்கும் தனியாகப்போக
முடியாத நிலை நண்பர் அப்பாதுரை சென்னை வந்திருந்தாராம் திரு ஜீவியிடம் தொலைபேசி
எணை வாங்கி நானாவது எப்படியாவது சென்று
பார்க்கலாம் என்றிருந்தேன் அவரிடம்பேசும்
முன் அவர் ஊருக்குப் போயிருந்தார் எப்போதும்
இன்னொரு வாய்ப்பு இருக்கும் என்றுநம்புபவன் நான் அடுத்த முறை எண்ணியது கை கூடும்
என்று நினைக்கிறேன் என்மகன் டூரில் இருந்ததால் எங்கும் கூட்டிப்போகவில்லை சென்னையின் மாலை சூரியனை படம்பிடித்தேன் ஒன்றிரண்டு
படங்கள் எடுக்கக் கற்றேன்
சிலசமயம் என் எழுத்துகளின்
பலருக்கும் ஏன் அவநம்பிக்கை என்று தோன்றும்
ஆனால் என் எண்ணங்கள் சரியேன்று நினைக்கும் விதமாக 23ம் தேடி த ஹிந்து
பேப்பரில் வந்த செய்தியின் கட்டிங் பதிவிடுகிறேன்
பெங்களூர் வரும்போது சதாப்தியில் வந்தோம்காலையில் தேனீர் நாமே போட்டுக் குட்க்க வேண்டும்\ முதலில் என்ன செய்வதுஎன்று தெரியாமல் விழித்தேன் பின்னர் ஓரளவு சுதாரித்துக்கொண்டு டீ போட்டுக்குடித்தேன்
பெரும்பாக்கம் காசா கிராண்ட் குடியிருப்பில் சூரியோதயம்
பெரும்பாக்கம் காசா கிராண்ட் குடியிருப்பில் சூரியோதயம்
குட் மார்னிங். இந்த முறை உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ReplyDeleteநான் இதைப்பார்க்கும்போது மார்னிங் போய் நண்பகல் ஆகிறது ஆகவே குட் டே என்றே கூறு கிறேன் உங்கள் ப்ரொகிரம்பற்றி ஏற்கனவே தெரிவித்தீர்களேட்
Deleteஇனிய காலை வணக்கம்.
ReplyDeleteநானும் சந்திக்க நினைத்தாலும் இது வரை முடியவில்லை.
உங்களைக் குறை கூற வில்லை டெல்லியிலும் ஸ்ரீ ரங்கத்திலும் இருக்கும் உங்களை சென்னையில் வருவீர்களென்று எதிர்பார்க்கவில்லை நோ ரிக்ரெட்ஸ்
Deleteசென்னையின் சீதோஷ்ணம் பெரும்பாலோரால் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. பதிவர் சந்திப்புக்குத் திட்டமிட்டிருந்தால் ஒருவேளை நடந்திருக்கலாம். மற்றபடி தனியாய் உங்களால் எங்கும் போக முடியாது. ஆகவே இதில் வருந்துவதற்கு ஏதும் இல்லை. அப்பாதுரை வந்திருப்பது எனக்குத் தெரிந்து அவரைத் தொடர்பு கொள்வதற்குள்ளாகத் திரும்பிச் சென்று விட்டார் போல! எனக்கும் அவர் வந்தது தெரியாது.
ReplyDeleteஎதைச் செய்யவும் என்னால் முடியவில்லை என் சென்னை தங்களெ மிகவும்குறைவான நாட்களாகிவிட்டது
Deleteபடங்கள் பற்றிய கருத்தே காணோமே
Deleteஅடுத்த முறை எண்ணியது எல்லாம் கை கூடட்டும் ஐயா...
ReplyDeleteதேர் இஸ் ஆல்வேஸ் இன்னொரு முறை வருகைக்கு நன்றி சார்
Deleteநீங்கள் சந்திக்க நினைப்பவர்களை நிச்சயம் சந்திப்பீர்கள் ஐயா.
ReplyDeleteநான் சந்திக்க நினைத்து பலரையும் சந்தித்திருக்கிறேன் இம்முறைதான் கை கூட வில்லை
Deleteஐயா
ReplyDeleteதவறாக என்ன வேண்டாம். தற்போதைய தமிழ் வலையுலகம் மிகவும் சுருங்கிவிட்டது. இன்ட்லி வலைச்சரம் கீற்று திண்ணை போன்று வலையில் ஜொலித்தவை மறைந்துவிட்டன. தற்போதைய காலகட்டத்தில் உங்களைப்போன்று நாட்களை எண்ணிக்கொண்டு பொழுது போக்க வலையுலகில் எழுதி அல்லது மேய்ந்து வருபவர்கள். ஆகவே நட்பு என்பது ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் நட்பே. இது பற்றி வருந்த வேண்டாம்.
Jayakumar
இப்படிலாம் பதிவர்களை பற்றி குறை சொல்லவேண்டாம். இப்பவும் எல்லோரும் முகநூலில் நட்பாய் இருக்கிறோம். சரியான திட்டமிடலுடன் முன்கூட்டியே சென்றால் பெரும்பாலும் எல்லாரையும் சந்திக்கலாம், வீட்டிற்கே வந்தும் சந்திக்கும் நட்புகள் இருக்கு.
Deleteநான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருக்கேன். என் மகன் தாம்பரம்ல ஒரு கல்லூரியில் படிக்குறான் அவனுக்கு DSLR கேமரா தேவைப்பட்டது. முகநூலில் பகிர்ந்தேன். இத்தனைக்கும் வாடகைக்கு கிடைக்குமான்னுதான் முகவரி கேட்டேன்.
என்கிட்ட இருக்குன்னு ஆரூர் மூனா வலைப்பூவில் எழுதும் செந்தில்தான் கேமரா தந்து உதவினார். அதனால், பதிவர்களை பட்டுன்னு குறை சொல்லாதீங்க.
ஜேகே /தற்போதைய காலகட்டத்தில் உங்களைப்போன்று நாட்களை எண்ணிக்கொண்டு பொழுது போக்க வலையுலகில் எழுதி அல்லது மேய்ந்து வருபவர்கள்/ அப்ஜெக்ஷன் சார் உலகில் எல்லோரும்நாட்களைஎண்ணிக்கொண்டு இருப்பவர்களே மேலும் நான் எழுதுவது ஒரு பக்கம்பொழுது போக்கவும் என்றாலும் எண் எழுத்துகளில் என்னை வெளிப்படுத்திக் கொள்கிறேன்என்றக்கும் வலையுலகில் நட்பை விட அறிமுகங்களே அதிகம் இந்த அறி முகங்களைநட்பாக்கநான்முயற்சிக்கிறேன் என்பதே உண்மை
Delete@ராஜி நான் எங்கே பதிவர்களைக் குறை கூறினேன் என்னையே அல்லவா நொந்து கொண்டு எழுதி இருக்கிறேன்
Deleteதம்பதி சமேதராகத் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மொழிபெயர்ப்புகளில் மூழ்கி இருக்கும் காரணத்தால் என்னால் வலைப் பதிவைச் சில மாதங்களாகத் தொடர முடியாமல் உள்ளது.இன்றைய பட்ஜெட்டில் வரிச்சலுகை தந்திருப்பதால் அந்த உற்சாகத்தில் இந்தவாரம் முதல் எழுத முயற்சிப்பேன். நன்றி.
ReplyDeleteஇராய செல்லப்பா
The pleasure was mine Thank you sir
Deleteஅப்பாதுரை மற்ற எல்லோருக்கும் தொடர்பு எல்லைக்குள் இருக்கின்றார்?
ReplyDeleteதிரு அப்பாதுரை எங்கள் ப்ளாக் வாட்ஸ் ஆப் க்ரூப்பில் இருக்கிறார் நானவருக்கு செய்திஅனுப்பி இருந்தேன் அவரு மறு மொழி கொடுத்திருந்தார்
Delete//எல்லாவற்றுக்கும் பிறர் உதவியை நாட வேண்டிய நிலையில் இருக்கும் நான்...// நினைத்தபடி செயல்பட முடியாததற்கு இதுதான் முக்கிய காரணம். மற்றபடி சென்னை விஜயம் த்ருப்திகரமாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteசென்னை விஜயமே வலை நட்புகளை சந்திக்கலாம் என்றுதான் மேற்கொண்டேன் மற்றபடி சென்னை விஜயம் சோ சோ தான்
Deleteஉங்களால் தனியாகப் போக முடிந்திருந்தால், நீங்களே சென்று பலரைப் பார்த்திருப்பீர்கள்தான். படங்கள்பற்றி இன்னும் எழுதியிருக்கலாம்.
ReplyDeleteகன்னடக்கவி பற்றிய பேப்பர் கட்டிங் இங்கே எப்படித் உங்களோடு தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது? புரியவில்லை.
படங்கள் ஒன்றில் நான் எனொரே மனைவியை இருபுறமும் இருத்திய படம் அதேபோல் என்பேரனின்மனைவியும் ஒரே படத்தில் இருபுறமும் இருக்கிறாள் கன்னடக் கவி எழுதி இருப்பதுநான் பலமுறை பகிர்ந்தச் இலவச படிப்பு மற்றும் இலவச உணவாலும் அவர் மேம்பட்டதைக் கூறி இருக்கிறார்
ReplyDeleteமுதுமையில் ஓய்ந்து கிடக்காமல் பயணிப்பதற்கு மனத் திடம் வேண்டும் ; அது உங்களிடம் இருக்கிறது . பாராட்டுகிறேன் .
ReplyDeleteஎவ்வளவு மனதிடமிருந்தாலும் உடல் ஒத்துழைக்க வேண்டுமே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
ReplyDelete