Wednesday, January 15, 2020

பொங்க ல் வாழ்த்து


                        பொங்கல் வாழ்த்து
                       ---------------------------------


        மார்கழிப் பனி விலக
         
பாவையர் நோன்பு முற்ற,
         
தையலே தைப் பெண்ணே-வருக
         
உன் வரவால் வழி பிறக்க

         
முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
         
கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
         
புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
         
பொங்கலாக்கிப் படைத்திடவே

         
பகலவனும் பாதை மாறிப்
         
பயணம் செய்யத் துவங்கும்
         
இந்நாளில் பொங்கும் மங்களம்
         
எங்கும் தங்க வணங்குகிறோம்
 இது ஒரு மீள் பதிவு
 இருந்தால் என்ன  ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் மீண்டும்   மீண்டும் வருவதில்லையா எனக்கு ஒருசந்தேகம் தமிழர்களுக்கு தை மாதம்தான் ஆண்டு பிறப்பா  அனாதிகாலமாய் சித்திரையில்தான் தமிழ் ஆண்டு பிறப்பதாக நினைத்துக்   கொண்டிருந்தேன் இனி ஒருவிதி செய்வோம் இனி தைமாதத்தில்தான் ஆண்டு பிறக்கும் வேண்டுமானால் அரசாணைபிறப்பிக்கலாம்
தை மாதப்பிறப்பு  மகர சங்கராந்தி என்று  வேறு சில மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது மாட்டுப்பொங்கல் போல் கர்நாடகத்தில்  எருதுகள் அன்று தீயில் ஓட்டப்படும் அதனால் அவை நலமாக இருக்குமென்பதும் நம்பிக்கை       


24 comments:

  1. //எருதுகள் அன்று தீயில் ஓட்டப்படும் //
    ஐயா இது வீதியில் என்று வரணுமோ ?

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. தீயில் என்பது சரியே

      Delete
  2. நற்கவிக்கு நன்றி.    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பொங்கல் வாழ்த்துகள்

      Delete
  3. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைகும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  4. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  5. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  7. பொங்கல் வாழ்த்து . மாட்டைத் தீயில் ஓட்டுவது பற்றிக் கொஞ்சம் விளக்குங்களேன்

    ReplyDelete
    Replies
    1. https://www.timesnownews.com/mirror-now/society/article/bizarre-cattle-made-to-walk-through-flames-in-this-ritual-in-karnataka-kicchu-hayisuvudu/348647 இந்தசுட்டியில் பார்க்கவும்

      Delete
  8. மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. பொங்கல் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்குநன்றி

      Delete
  10. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

    தமிழகத்திலும் இந்த வழக்கம் உண்டு. தீ மேல் நடக்க வைக்காமல் தாண்ட வைப்பது. சிறு வயதில் எங்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட மாடுகளை மாட்டுப் பொங்கல் அன்று சிறிது வைக்கோலில் தீ வைத்து அவற்றைத் தாண்ட வைப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் இணயத்தில் படித்தது திரு ஞான சம்பந்தமவர்களுக்கானமறு மொழியில் சுட்டி கொடுத்திருக்கிறேன்

      Delete
  11. அன்பான சங்கராந்தித் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

      Delete
  12. // அரசாணை பிறப்பிக்கலாம்... //

    நண்பரின் பதிவு : http://hiddenhistroy.blogspot.com/2017/08/blog-post_38.html

    ReplyDelete
    Replies
    1. மக்கள் ஏற்றுக்கொள்ளாத எதுவும் நிலைத்து நிற்காது

      Delete
  13. பொங்கல் வாழ்த்துகள். எங்க மாமனார் வீட்டில் தொழுவத்தில் மாட்டுப் பொங்கல் அன்று இதே போல் தீ மூட்டி மாடுகளைத் தாண்ட வைப்பார்கள். அங்கே இதை மாடு மிரட்டல் என்பார்கள்.

    ReplyDelete
  14. சுட்டி வாசித்துத் தகவல் அறிந்தேன் . நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் நாட்டிலும் ஆங்காங்கே இந்த பழக்கம் இருப்ப து தெரிகிறது

      Delete