எண்ணத் தறியில் எழில் நினைவுப் பின்னிப்
பிணைந்திழையோட இழையோட
கன்னக்குழியில் வண்ணக்குமிழ் கொப்பளிக்க
பைந்தமிழ் மொழிபேசி மொழிபேசி
மின்னலிடையில் மனந்திளைத்த எனைப்
புன்னகை ஒளிவீசி ஒளிவீசி
இன்னலிடை யின்றவள் மீட்டாள்
காதல் பண்பாடி பண்பாடி |
கொஞ்சும் விழிகள் வேல்போல் தாக்க
எஞ்சிய உறுதியும் காற்றில் பறக்க
தஞ்சமேனப்புகு என மனமும் நினைக்க
மிஞ்சியதென்னில் அவள் திருஉருவம் |
அன்ன நடையழகி ஆடிஎன்முன் நிற்க
பின்னிய கருங்குழல் அவள் முன்னாட
என்ன நினைததனோ அறியேன் அறிவேன்
பின்னர் நிகழ்ந்தது அதனைக் கூறுவன் கேளீர் |
இருமன மொன்றாய் இணைய _அதனால்
இறுகிப் பதித்த இதழ்கள் கரும்பினுமினிக்க
இன்சுவை உணர ஊறி கிடந்தேன்
இறுதியில் உணர்ந்தேன் கனவெனக் கண்டது
கண்ட கனவு நனவாக இன்று
காரிகையே அழைக்கின்றேன் ; அன்புக்
கயிற்றால் பிணைக்கின்றேன்; கண்ணே
கட்டும் பிணைப்பும் பிரியாது உறுதி |
Tuesday, August 31, 2010
engum nee
கனவில்தான் நினைவில்தான் உன்னைத்தான்
எண்ணித்தான் உருகுவேனோ |
இல்லைத்தான் உன்னைத்தான் நேரில்தான்
கண்டுத்தான் பேசுவேனோ |
இருகண்ணைத்தான் காட்டித்தான் என்னைத்தான்
கவரத்தான் ஹுஹும் நீயும்
உன்மனசில்தான் எண்ணித்தான் என்றுதான்
முடிவுந்தான் செய்தாய் பேபி |
எண்ணித்தான் உருகுவேனோ |
இல்லைத்தான் உன்னைத்தான் நேரில்தான்
கண்டுத்தான் பேசுவேனோ |
இருகண்ணைத்தான் காட்டித்தான் என்னைத்தான்
கவரத்தான் ஹுஹும் நீயும்
உன்மனசில்தான் எண்ணித்தான் என்றுதான்
முடிவுந்தான் செய்தாய் பேபி |
Monday, August 30, 2010
inaivinil inbam
நிலவைப் பழிக்கும் முகம் _அதில்
நினைவைப் பதிக்கும் கண்கள்
நிலமடந்தை நாணும் எழில் _முத்துச்
சரம் விரித்த முல்லைச் சிரிப்பு _சிந்தக்
கமல மலர் செவ்விதழ் விரிப்பு _ கொண்டு
படர் கொடி வெல்லும் துடி இடை _ என்
இடர் சேர்க்க இடையிடை யாட _மென்னடை
நடந்தென்முன் நின்றாள்_ இன்பக்
கனவினை நனவாக்க எண்ணி _ வந்த
கற்பனைக் கண் கண்ட கன்னி .
பண்ணும் மறந்தேன் ,எனையும் மறந்தேன்
இழுத்துப் பிடித்தேன் என்னிதழ் பதித்தேன்
அவளிதழ் சுவைத்தேன் ,போதை யிலாழ்ந்தேன்
பேதையவள் மிரண்டாள் ,மிரட்சியில் துன்பம்
கோதையவள் கண்டாள் , காட்சியில் இன்பம்
நண்டவள் நரியானேன் நானென்றாள்
கொண்டவள்தானே குறைஇல்லை என்றேன்
தனிமையில்தான் தழைத்திடும் துன்பம்
இருவரும் இணைந்தால் இருக்காது என்றேன்
எனையவள் நோக்கினாள் இரண்டே வினாடிகள்
இசைவினை அறிந்தேன் ஒரு கண்ணசைவிலே
அணைப்பினில் பெற்றாள் இன்பம் _பின்
இணைந்ததும் பெற்றோம் இன்பம்
இன்பம் இன்பம் இன்பம் !
நினைவைப் பதிக்கும் கண்கள்
நிலமடந்தை நாணும் எழில் _முத்துச்
சரம் விரித்த முல்லைச் சிரிப்பு _சிந்தக்
கமல மலர் செவ்விதழ் விரிப்பு _ கொண்டு
படர் கொடி வெல்லும் துடி இடை _ என்
இடர் சேர்க்க இடையிடை யாட _மென்னடை
நடந்தென்முன் நின்றாள்_ இன்பக்
கனவினை நனவாக்க எண்ணி _ வந்த
கற்பனைக் கண் கண்ட கன்னி .
பண்ணும் மறந்தேன் ,எனையும் மறந்தேன்
இழுத்துப் பிடித்தேன் என்னிதழ் பதித்தேன்
அவளிதழ் சுவைத்தேன் ,போதை யிலாழ்ந்தேன்
பேதையவள் மிரண்டாள் ,மிரட்சியில் துன்பம்
கோதையவள் கண்டாள் , காட்சியில் இன்பம்
நண்டவள் நரியானேன் நானென்றாள்
கொண்டவள்தானே குறைஇல்லை என்றேன்
தனிமையில்தான் தழைத்திடும் துன்பம்
இருவரும் இணைந்தால் இருக்காது என்றேன்
எனையவள் நோக்கினாள் இரண்டே வினாடிகள்
இசைவினை அறிந்தேன் ஒரு கண்ணசைவிலே
அணைப்பினில் பெற்றாள் இன்பம் _பின்
இணைந்ததும் பெற்றோம் இன்பம்
இன்பம் இன்பம் இன்பம் !
Sunday, August 29, 2010
pirivin vaattam
ஓடிக்களைத்து ஊணுக்கலைந்து தேடிச்சோறு நிதம் தின்று
வாடி அலையும்நிந்தன் கொழுநன் பாடிப்பகரும் அல்லைக்கேளடி !
ஊரடங்கி பேயாடும் நேரம் போரடித்து வளைய வரும் வேலை
சாகடித்து கொல்லாமல் கொல்லும்--உன் பிரிவு
நோகடிக்குதே எண்ண எண்ண !
வந்து நோக்கின் நீஇட்ட மஞ்சமில்லை !நானிட்ட பஞ்சணையில்
வீழ்ந்து பட்டால் நித்திரை இல்லை !
சோர்ந்து பட்ட உடலுக்கு உயிரூட்ட காப்பி இல்லை டி இல்லை சோறில்லை !
மாறுபட்ட சுழ்நிலையில் வாழ்ந்து வரும் எனைக்காண நீயுமில்லை !
என்செய்வேன் ? சொல்லடி !
வாடி அலையும்நிந்தன் கொழுநன் பாடிப்பகரும் அல்லைக்கேளடி !
ஊரடங்கி பேயாடும் நேரம் போரடித்து வளைய வரும் வேலை
சாகடித்து கொல்லாமல் கொல்லும்--உன் பிரிவு
நோகடிக்குதே எண்ண எண்ண !
வந்து நோக்கின் நீஇட்ட மஞ்சமில்லை !நானிட்ட பஞ்சணையில்
வீழ்ந்து பட்டால் நித்திரை இல்லை !
சோர்ந்து பட்ட உடலுக்கு உயிரூட்ட காப்பி இல்லை டி இல்லை சோறில்லை !
மாறுபட்ட சுழ்நிலையில் வாழ்ந்து வரும் எனைக்காண நீயுமில்லை !
என்செய்வேன் ? சொல்லடி !
amaidhi vaendum
வானில் நிலவில் ஒழுக்கொடும் ஆற்றுநீரில் மன்றத்தாடும் தென்றலில் அமைதி
ஊரில் உலகில் உள்ளத்தில் தெளிவாய் உலவிவரும் உணர்ச்சிகளில் அமைதி
இயலில் இசையில் இனிமை உணர்வூட்டும் நிகழ் நாட்டிய நிரலில் அமைதி
அன்பில் பண்பில் ஆர்வமுள்ள உழைப்பில் நிகரிலா சேவைத்திறனில் அமைதி
அமைதிதான் எத்தனை வகை ? எல்லாம் வேண்டும் இறைவா !
அமைதி வேண்டும் தலைவா !