திரு செல்லப்பாவின் ஸ்ரீமந் நாராயணீயம் நூல்
------------------------------------------------------------------------------
ஸ்ரீமந் நாராயணீயம் நூல் முகப்பு அட்டை |
ஒரு
நூலுக்கு விமர்சனம் எழுதுவதென்றால் அந்நூல் முழுவதும் படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும் அதிலும் ஒரு பக்தி
நூலுக்குவிமர்சனமென்றால் அந்த இறைபக்தியில் ஈடுபாடு வேண்டும் ஆனால் இது எதும்
இல்லாத நான் திரு செல்லப்பா யக்ஞஸ்வாமியின்
நாராயணீயம் நூல் பற்றி எழுதுவது
என்றால் எனக்கு என்ன தகுதி இருக்கிறதுஎன்று எண்ண வைக்கிறது என் மனைவி நாராயணீயம் பாராயணம் செய்பவள்
பூவுடன் சேர்ந்த நாரும் வாசம் பெறும் என்பதுபோல்தான் இருக்க
வேண்டும் அதுவுமல்லாது என் வீட்டிலேயே
நாராயணீய பாராயணம்நடை பெற்றிருக்கிறது
குருவாயூரில்
பெங்களூரில் இருந்து சென்ற ஒருகுழுவில் என்மனைவியும் இருந்தாள் நானும் அவளுடன் குருவாயூர்
சென்று இருந்தேன் அது பற்றியும் எழுதி இருக்கிறேன்தசாவதாரக்
கதைகள் பற்றி பதிவுடும்போதுகிருஷ்ணாவதரக் கதையை
கிருஷ்ணாயணம் என்றும் பதிவிட்டிருக்கிறேன்
அதற்கான விவரங்களை நான் நாராயணீயத்தில் இருந்துதான் கையாண்டேன் ஆக நாராயணீயம்பற்றி
எழுத எனக்கு ஓரளவு தகுதி இருப்பதுபோல் பட்டதால் துணிந்து விமர்சனம் செய்கிறேன் நான்
நாராயணியம் பாராயணம்பற்றி பதிவு எழுதி இருந்தபோது மீரா ஆநந்த் என்னும்பெண்மணி நாராயணியம் பாராயணத்தை சப்தாஹமாக செய்ய என்ன முறை என்று கேட்டிருந்தார்
நானும் ஏதோ பதில் கூறி இருந்தேன் திரு செல்லப்பா
அதுபற்றிஅவரது நூலில் கூறி இருக்கிறார் எப்படி
என்றுநான்சொல்லப் போவதில்லை அவரது நூலை வாங்கிப் படிக்க இது ஒருவழி அல்லவாஒன்று மாத்திரம்
சொல்கிறேன் நாராயணீயத்தை சப்தாகமாகவோ நவொகமாகவோ
பாராயணம் செய்யலாம் என்கிறார் அவரது நூலி,ல்
சதகத்தில் வரும் பாட்டுகளுக்கு மெட்டும் பரிந்துரைக்கிறார் கவனிக்கவும் ராகம் அல்ல
மெட்டு
மொத்தமாக
நூலை சம்ஸ்கிருத வார்தைகளுடனும் தமிழ் உரையுடனும்
எழுதி இருக்கிறார் சம்ஸ்கிருத உச்சரிப்புகளுக்கு
குறிப்பும் உண்டு. நாராயணியத்தில் ஏறத்தாழ பாகவதக் கதைகளாகவே இருக்கிறது நான்சில கதைகளைப்படித்துவிட்டு பாகவதம்படித்து விட்டதாகவும்
நினைத்திருக்கிறேன்
நூலின் கடைசியில் கண்ணனைப் பற்றியபாடல்களின் இணைப்புமுண்டு நடு நடுவே படங்களும் இருப்பது மோனோடனஸாக இருக்காமல்
இருக்க உதவும் ஒரே பிரச்சனை என்ன வென்றால்
நூலை சம்ஸ்கிருத வடிவில் படிப்பதா அல்லது தமிழ்
உரையை படிப்பதா என்பதாகும் எனக்குத் தெரிந்தவரை அர்த்தம் புரிகிறதோ இல்லையோ சம்ஸ்கிருத வார்த்தைகளில் படிப்பதேபொதுவாக இருக்கும் வழக்கம்
பொருள்தெரிந்து கொள்ள உதவும் செல்லப்பாவின் நூல் பரிந்துரைக்கிறேன்
தங்கத்தாமரை
பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இந்நூல்
720 பக்கங்கள் விலை ரூ 500.- இப்புத்தக வெளியீட்டில் பதிவர் பாலகணேசின் பங்களிப்பும்
உண்டு
( அட்டையில் படம் திருவல்லிக் கேணி தேர்ப்பாகன் பார்த்த சரதி கிருஷ்ணனின் படமா என்னும் சந்தேகம் குருவாயூரப்பனல்லவா இருந்திருக்க வேண்டும்) )
( அட்டையில் படம் திருவல்லிக் கேணி தேர்ப்பாகன் பார்த்த சரதி கிருஷ்ணனின் படமா என்னும் சந்தேகம் குருவாயூரப்பனல்லவா இருந்திருக்க வேண்டும்) )
அருமையான விமரிசனம். மொழிபெயர்த்த திரு செல்லப்பா அவர்களுக்கும் உதவி செய்த பாலகணேஷுக்கும் வாழ்த்துகள். விமரிசனம் அருமையாக எழுதிய உங்களுக்கும் பாராட்டுகள். நன்றி.
ReplyDeleteவிமரிசனம் என்பதை மாற்றி கருத்து என்று கூறிக் கொள்கிறேன் வருசைக்கு நன்றி மேம்
Deleteநூலை எனக்கு விபிபியில் திரு செல்லப்பா ஸார் அனுப்பி வைத்தால் தன்யனாவேன்.
ReplyDeleteஇதை திரு செல்லாப்பாவிடமே தெரிவிக்கலாம் என் மனைவி இந்நூல் பற்றிக் கேட்டபோது தன்கத்தாமரை படிப்பகமே அனுப்பும் என்றார்
Deleteசெல்லப்பா சாரை, நூல் வெளிவந்தாச்சான்னு கேட்ட போதெல்லாம் அமைதியா இருந்துட்டார். ஒரு இடுகைகூட போடலை.
ReplyDeleteநீங்கள் சொன்ன அட்டைப்பட விஷயம் சரியான கவனிப்பு. குருவாயூரன் படத்தை எப்படி மறந்தார்கள்?
இப்போது தெரிந்து கொள்ளுங்கள் நூல் வெளியாகிவிட்டது தேவையானால் செல்லப்பாவைக் காண்டாக்ட் செய்யலாம்
Deleteதமிழிலோ இல்லை சமஸ்கிருத்த்திலோ வாசிக்கலாம். தவறில்லை, சுந்தரகாண்ட பாராயணம் போல். நல்ல முயற்சி
ReplyDeleteபெரும்பலானவர்கள் சம்ஸ்கிருத த்திலேயே பாராயண்ம் செய்கிறார்கள் அர்த்தம்புரிகிறதோ இல்லையோ தமிழ்தெரிந்தவர்களுக்கு தமிழ் உரைபிரயோசனமாகும்
Deleteஅருமையான விமர்சனம் ஐயா
ReplyDeleteசற்றே மாற்றிக் கொள்கிறேன் ஐயா விமரிசனம் அல்ல கருத்து
Deleteவார்த்தை அமைப்பில் ஒரு சின்ன தவறு இருக்கிறது. நீங்கள் ஸ்ரீமந்
ReplyDeleteநாராயணீயம் நூலுக்கு விமரிசனம் எழுதவில்லை. திரு, செல்லப்பா அவர்களின் மூலத்திற்கு தமிழ் உரை ஆக்கத்திற்கு தான் விமரிசனம் கூட இல்லை, கருத்து சொல்லியிருக்கிறீர்கள்.
அதனால் அதற்கான மாற்றங்களைச் செய்து விடுவது பொருத்தமாக இருக்கும்.
வாசகர்களில் நக்கீரர்களும் உண்டு என்று தெரியும் அதனால்தான் என்விமரிசனத்தகுதி பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் நாராயணீயம் நூலைத் தமிழில் படித்திருக்கிறேன் அதிலிருந்து என் பதிவுகளுக்கு விஷயங்கள் சேகரித்தும் இருக்கிறேன் என் பதிவை ஊன்று படித்தால் புரியும் உங்களுக்காக விமரிசனமல்ல என் கருத்துகளே என்று எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்
Delete//ஆக நாராயணீயம்பற்றி எழுத எனக்கு ஓரளவு தகுதி இருப்பதுபோல் பட்டதால் துணிந்து விமர்சனம் செய்கிறேன்.//
Deleteமன்னிக்கவும். நீங்கள் இப்படிக் குறிப்பிட்டிருப்பதால் தான்
அப்படி எழுதினேன். திரு. செல்லப்பா அவர்களின் இந்த நூலை விமரிசிப்பதாய் இருந்தால், மூல நூலோடு அவரின் தமிழ் உரையை ஒப்பிட்டு சிறப்பான இடங்களில் பாராட்டி
திருத்த வேண்டிய இடங்களைத் திருத்தி.. இதற்கு நாராயணீயத்துடன் தோய்ந்த ரசனை வேண்டும். இப்படிப்பட்ட மனங்கலந்த ஒரு ரசனை திரு. செல்லப்பா அவர்களுக்கு நாராயணீயத்துடன் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் இந்த மொழியாக்கத்திற்கே துணிந்திருக்கிறார். அப்படிப்பட்டவரின் எழுத்தை விமரிசிப்பதற்கும் அவருக்கேற்பவான பரிச்சியம் அந்த நூலுடன் விமரிசிப்பவருக்கூம் வேண்டும் என்படற்காகச் சொன்னேன்.
மூல நூலோடு ஒப்பிட்டுப்பார்க்க எனக்கு சம்ஸ்கிருதன் தெரிந்திருக்க வேண்டும் அதுஇல்லாததால்தான்நாராயணீயத்தையோ தமிழ் உரையையோ பற்றிக்கருத்து கூறவில்லைஎழுதி இருப்பது விமரிசனம் அல்ல என்பதை நீங்கள் கூறியபின் தெரிந்துகொண்டேன் நூலின் தமிழுரை பற்றி எனக்கு ஓரளவு பரிச்சயமுண்டு அதுவே நான் கிருஷ்ணாயணமெழுதவைத்தது
Deleteநல்லது. பத்திரிகைகளில் வருவது போலவான புத்தக அறிமுகம் என்று இதைச் சொல்லலாம். அந்த அறிமுகத்தை நன்றாகவே செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
Deleteகடைசியில் வாழ்த்துகளுக்கு நன்றி சார்
Deleteநல்லதொரு தகவல் ஐயா... நன்றி...
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்
Deleteதிரு. செல்லப்பா ஸார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி ஜி
Deleteதிரு செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துகள், பகிர்ந்த உங்களுக்கு நன்றி
ReplyDeleteவழ்த்துகளுக்கு அவர் சார்பில் நன்றிசார்
Deleteஆமாம் செல்லப்பா சாரின் இப் புத்தகம் அச்சாவதற்கு கடைசி கட்டத்தில் இருந்தது நான் சென்னையை விட்டு பங்களூருக்கு மாற்றம் ஆகி வரும் சமயம். அதன் பின் ஒரு முறை சார் பேசினார்...நானும் அதன் பின் பேசினேன்...அப்போது ஸார் எதுவும் சொல்லவில்லை..பதிப்பகம் பற்றி முன்னரே சொல்லியிருந்தார். அதே போல பால கணேஷ் அவர்கள் தான் நூலழகு செய்ததும் தெரியும். பக்கங்கள், அப்புறம் நூல் பற்றியும், தான் எழுதுவது பற்றியும் விளக்கமாக எல்லாம் சொல்லியிருந்தார். அப்புறம் வெளிவந்துவிட்டது என்பதை இப்போது உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன்.
ReplyDeleteஉங்கள் கருத்தும் விளக்கம் எல்லாம் அருமை...செல்லப்பா சார், பாலகணேஷ் மற்றும் உங்களுக்கும் வாழ்த்துகள்.
கீதா
உங்கள் நீண்ட கருத்துக்கு நன்றி மேம்
Deleteஅட்டைப்படத்தில் திருவல்லிக்கேணி தேர்ப்பாகன் பார்த்தசாரதியா? நிஜமாகவா? சென்ற வருடம் அவரைப்போய்ப் பார்த்தபோது கம்பீர மீசை வைத்திருந்தாரே.. எடுத்துட்டாராமா ! அடடா !
ReplyDeleteபார்த்த சாரதியும் குருவாயுரப்பனும் கிருஷ்ணந்தானே
ReplyDelete