டும்களும் டாம்களும் இருகோணங்கள்
----------------------------------
( முன்பொரு பதிவு எழுதி இருந்தேன் காதலி வேண்டாம் என்று படித்த அப்பாதுரை வேண்டும் என்று இருந்தாலும் சரியாய் இருக்கும் எனப் பின்னூட்டமிட்டார் அதன் விளைவே இது இரு கோணங்களிலும் )
வேண்டும்
பிற பாவையரைப்பார்க்கையில் குற்ற உணர்ச்சி எழச் செயும்
எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்
பாங்குடனே பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்க
எனக்கொரு கேர்ல் ப்ரெண்ட் வேண்டும்
பரீட்சையில் தோல்வி தரும் சிந்தனையைத்
தூக்கி எறிய எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
அவளது அன்புக்காக என்னை என்றுமேங்க வைக்கும்
எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
அவளது அலைபேசியின் ஓசைக்கு என்னை ஏங்க
வைக்க எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்
செய்வனவற்றை திருந்தச் செய்ய வைக்க
எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
உறவுகளைப் பாந்தமுடன் ஏற்றுக் கொள்ளும்
எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்
என்
நட்புகளையும்தன் நட்புகளாய் ஏற்றுக் கொள்ளும்
பக்குவமுள்ள
எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டும்
என் உடலம்
பேணவும் என்னுடன் இணைந்து காதல்
செய்யவும்
எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
பொய் பேசிப் பாவம் கூட்டாது உள்ளதை நேர்படப்
பேசவைக்கும்
எனக்கொரு
கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
இதந்தரும் இனிய கனவுகள காண வைக்கும்
நல்லுள்ளம் கொண்ட எனக்கு ஒரு கேர்ல் ஃப்ரெண்ட்
வேண்டும்
நான்
நானாக இருக்கவும் விண்ணேறி
விண்மீன் பறிக்க
களிப்பேற்றும்
எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டும்
பாவையரைப் பார்க்கக் குற்ற உணர்ச்சி ஏதும் வேண்டாம்
எனக்கொரு கேர்ல்
ஃப்ரெண்ட் வேண்டாம்
பாங்குடனே பரிசுப் பொருள் வாங்கவே செலவேதும்
செய்ய வேண்டாம்- எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்
பரீட்சையில் தோல்வி தரும் சிந்தனையை
தேங்கச் செய்யும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்
அவளது அன்பு என்றும் உளதோ எனவே
தவிக்க வைக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.
அலைபேசியின் ஓசைக்காக ஏங்கி ஏமாந்து
நிற்க வைக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்
செய்வனவற்றில் சரியெது குறையெது எனக்
குத்திக்காட்டும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.
உறவுகள் யாருக்கும் பரிசுகள் தந்து மகிழ்ந்தால்
இதம் தர மறுக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.
நட்புகளின் எண்ணிக்கை கூட்டலாம் நேரம்
கழிக்கலாம் தடையாய் எனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டாம்.
ஊக்கத்துடன் உடலம் பேணலாம் காதல் திரைப்படம்
காணக் கட்டாயப் படுத்த எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.
பொய் பேசிப் பாவம் கூட்டவேண்டாம் உள்ளதைக்
கூறத் தயங்க வைக்கும் எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட் வேண்டாம்.
இதந்தரும் இனிய கனவுகள் காணலாம் வீணே
பகல் கனவில் மூழ்கடிக்கஎனக்கொரு கேர்ல்ஃப்ரெண்ட் வேண்டாம்
நான் நானாக இருக்கலாம் நினைக்கு முன்னே
கண்ணீர் சிந்த எனக்கொரு கேர்ல் ஃப்ரெண்ட்வேண்டாம்.
(எதிர்மறைச் சிந்தனையாளன் என்று கூறுபவர்கள் இப்போ என்ன சொல்வீர்கள்?)