சத்திய சோதனை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சத்திய சோதனை. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 அக்டோபர், 2013

நினைவுகளால் உந்தப்பட்டு....


                     நினைவுகளால் உந்தப் பட்டு
                      --------------------------------------



சுய சரிதை எழுதுவது என்பது மேற்கத்தியவரின் ஒரு பிரத்தியேக குணம். எனக்குத் தெரிந்து  கீழை நாட்டவர் சுயசரிதை எழுதியதாகத் தெரியவில்லை. அப்படியே எழுதுபவர் மேலை நாட்டினரின் வழக்கங்களால் ஈர்க்கப் பட்டிருக்க வேண்டும். நீ என்னதான் எழுதுவாய்.?இன்று நீ கடைப்பிடிக்கும் கொள்கைகளில் இருந்து நாளை மாறுபட்டாலோ அல்லது மாற்றினாலோ  உன்னை பின் பற்றும் மனிதன் உன் கொள்கை மாற்றத்தாலோ, மாறுபாட்டாலோ குழப்பமடைய மாட்டானா.?


இந்த மாதிரியான எண்ணம் என்னைச் சிந்திக்கச் செய்தது. ஆனால் நான் எழுத் முற்பட்டது என் சுய சரிதை அல்ல..நான் என் வாழ்வில் மேற்கொண்டுள்ள சத்தியப் பரிசோதனைகளின் தொகுப்பாய்த்தான் அது இருக்கும். இந்த மாதிரியான சத்தியப் பரிசோதனைகள் வாழ்வு முழுவதும் , இருப்பதால் அதன் தொகுப்பே ஒரு சுய சரிதையாகிவிட வாய்ப்புள்ளது. அதுவே நான் எழுதும் ஒவ்வொரு பக்கத்திலும் விரவி இருந்தாலும் நான் கவலைப் படமாட்டேன். இந்த சோதனைகளின் விவரங்கள் இதை வாசிப்பவருக்கு உதவாமல் போகாது என்று நினைப்பதில் பெருமைப் படுகிறேன்.அரசியல் துறையில் என் பரிசோதனைகள்  இந்தியாவில் மட்டுமல்ல நாகரீகநாடுகளிலும் ஓரளவுக்குத் தெரியப் பட்டதே.அதன் மதிப்பு பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை.எனக்கு “மஹாத்மாஎன்ற பட்டம் பெற்றுத் தந்தது பற்றியும் நினைப்பதில்லை.ஆனால் சில சமயங்களில் வருத்தப் பட வைத்திருக்கிறது. ஆனால் எனக்கு மட்டுமே தெரிந்த ஆன்மீகப் பரிசோதனைகளையும், அதிலிருந்து எனக்குக் கிடைக்கும் சக்தி எப்படி அரசியல் துறையிலும் உதவியாய் இருக்கிறது என்பது பற்றியும் எழுத விழைகிறேன். இம்மாதிரியான பரிசோதனைகள் உண்மையில் ஆன்மீகமாக இருந்தால் என்னை நானே புகழ்வது சரியாயிருக்காது. சிந்தித்துப் பார்க்கும் போது அது என் பணிவுக்குக்த்தான்  பலம் சேர்க்க வேண்டும்.கடந்து போன நிகழ்வுகளில் மனம் செல்லும்போது என் தகுதிகுறைபாடுகளே வெகுவாய்த் தெரிகிறது.
                      *************************
இப்போது நான் குறிப்பிடுவது என் பதினாறாம் பிராயத்து நிகழ்வுகள். என் தந்தை fistula எனும் நோயால் பாதிக்கப் பட்டு படுக்கையில் இருந்தார் என் தாயும், ஒரு வேலையாளும் நானும் என் தந்தையைக் கவனித்துக் கொள்ளும் முக்கிய நபர்கள். என் செவிலிப் பணியில் அவரது காயத்துக்கு மருந்திடுவதும் , வேளாவேளைக்கு மருந்து கொடுப்பதும் , வீட்டில் தயார் செய்யக் கூடிய மருந்துகளைத் தயார் செய்வதும் அடங்கும்.ஒவ்வொரு இரவும் அவரது கால்களைப் பிடித்து அமுக்கிக் கொடுப்பதும் வாடிக்கை. அவர் போதுமென்று சொன்னாலோ அவர் உறங்கினாலோ அல்லாமல் தொடர்ந்து செய்வேன். அதில் நான் தவறிய நினைவில்லை. அவருக்குச் செய்ய வேண்டிய சிசுருக்ஷைகளிலும் பள்ளிப் படிப்பிலும் என் நேரம் பங்கிடப் பட்டது.

இந்த காலகட்டத்தில் என் மனைவி கர்ப்பமாய் இருந்தாள்.-ஒரு கால கட்டம் இன்றைக்குத் திரும்பிப் பார்க்கும்போது நான் எப்படிக் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தேன் என்று தெரியப் படுத்துகிறது..ஒன்று நான் அப்போது இன்னும் மாணவன்தான். இரண்டு என் காமவேகம் என் படிப்பை விடவும் என் பெற்றோருக்கான கடமைகளை விடவும் ஆக்கிரமித்திருந்தது. ஒவ்வொரு இரவும் என் கைகள் தந்தையின் கால்களைப்பிடித்து விட்டுக் கொண்டிருக்கும்போது  மனம் ம்ட்டும் படுக்கை அறையைச் சுற்றி வரும்.பொது அறிவும் மருத்துவ தேவையும் மத உபதேசங்களும் அந்த நேரத்தில் உடல் புணர்ச்சிகளில் ஈடுபடுவது தவறு என்று தெரியப் படுத்தியும் என் சேவை முடிவுற்றதும் நேரே படுக்கை அறைக்குள் நுழைவேன்.
 இந்த இடைவெளியில் தந்தையார் நிலைமை சீர் குலையத் தொடங்கியது. ஆயுர்வேத மருத்துவர்களும் , ஹக்கீம்களும் பலவித சிகிச்சைகளை மேற்கொண்டனர். ஆங்கில அறுவைச் சிகிச்சை மருத்துவரும் பார்த்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தபோது  மருத்துவர்  அவரது வயதைக் காரணங் காட்டி குறுக்கே நின்றார்,.அறுவைச் சிகிச்சை எண்ணம் கைவிடப் பட்டது. அந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவர் குணமடைந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
இறப்பு என்பது உறுதியானபிறகு யார் என்ன செய்திருக்க முடியும்.
அவர் நாளுக்கு நாள் நலிந்து கொண்டு வந்தாலும் வைணவ முறையிலான சுத்தங்களைக் கடைப் பிடிப்பதில் குறியாய் இருந்தார். படுக்கையில் இருந்து எழுந்து வந்து அவர் கடன்களைச் செய்வதைப் பார்க்கும்போது ஆச்சரியமாய் இருக்கும்.என் தந்தையின் சகோதரர் அவரது நிலையைக் கேள்விப்பட்டு ராஜ்கோட்டிலிருந்து வந்திருந்தார்..நாள்முழுவதும் என் தந்தையின் அருகிலேயே அமர்ந்திர்ப்பார்.
அன்று இரவு பத்தரை பதினொன்று மணி இருக்கும். தந்தையின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன். அப்பாவின் சகோதரர் என்னை விடுவித்தார். நான் நேராகப் படுக்கை அறைக்குள் நுழைந்தேன். என் மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள் . நான் அருகில் இருக்கும்போது அவள் எப்படித் தூங்க முடியும்? அவளை எழுப்பினேன். ஐந்தாறு நிமிடங்களில் கதவு தட்டப் பட்டது. பணியாள் நின்றிருந்தார். நான் பயத்துடன் பார்த்தேன். அப்பா உடல் நிலை மோசம் என்றார்.எனக்கு அது தெரிந்ததுதானே என்ன விஷயம் சீக்கிரம் சொல் “ என்றேன்.அப்பா போய்விட்டார் என்றான்
                #######################

காலையில் எழுந்ததிலிருந்தே காந்தியின் நினைவாக இருந்தது. சிறு வயதில் காந்தியை நேரில் காணும் பாக்கியம் பெற்றவன் நான். காந்தியின் பாதிப்பு இந்தியாவின் பட்டி தொட்டிகளில் எல்லாம் உணரப் பட்டது. நாங்கள் அப்போது அரக்கோணத்தில் இருந்தோம். பிள்ளைகள் நாங்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தோம். தாசில்தார் தெரு என்று நினைவு. அடுத்த வீட்டுக்காரர் ஒரு திரை அரங்கின் சொந்தக் காரர். அவர் வீட்டில் ரேடியோ இருந்தது. பொதுவாகவே சத்தமாக வைப்பார்கள். அன்று 1948-ம் வருடம் ஜனவரி 30-ம் நாள் மாலை ரேடியோ செய்தி அலறியது. “ காந்திஜி சுட்டுக் கொல்லப் பட்டார்விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் நாங்கள் செய்தி கேட்டு ஓரளவு அதிர்ச்சி அடைந்தோம். தெரு முழுவதும் ஓடி காந்தியின் இறப்புச் செய்தியை அறிவித்தோம். பிறகென்ன .? ஊரே இழவுக் கோலம் பூண்டது. என் தந்தையார் துயரத்தில் விக்கி விக்கி அழுதார். எங்கள் வீட்டில் என் சிற்றன்னையின் உறவினர் ஒருத்தி இருந்தார். மொட்டை மாடிக்குச் சென்று கதறிக் கதறி அழுதார். அப்போது தெரிந்து கொண்டேன். காந்தியின் பாதிப்பு படிப்பறிவு இல்லாத ஒரு மூதாட்டியையே பாதித்த்து என்றால் அவரது கியாதி எவ்வளவு பரவலாய் இருந்திருக்க வேண்டும்.நீங்கள் படித்தது காந்திஜியின் நினைவாக அவரது MY EXPERIMENTS WITH TRUTH “ என்னும் புத்தகத்தில் இருந்து தமிழாக்கம் செய்து எழுதியது.