உலகம் சிறியது
----------------------
இந்த உலகமே மிகவும்
சின்னது. ஏது உலக சிந்தனை என்று நினைக்க வேண்டாம் சில நிகழ்வுகள் அப்படி
நினைக்க வைக்கின்றன பதிவுலகில் எழுதுகிற
பலரது ஆசையும் தனது படைப்புகளை மின்னூலாக்க
வேண்டும் என்று நினைப்பது தான் நானும்
விதிவிலக்கல்ல என் ஓரிரு படைப்புகளை முன்னூலாக்கும் முயற்சியில் முக்கால் தூரம் வந்து ஏமாந்தவன்
நான். அதையே ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன் பதிவுலக நண்பர் கரந்தை ஜெயக்குமார் புஸ்தகாவை நாடும்படிக் கூறினார் தொடர்பு கொள்ள
ஒருபெயரையும் தொலை பேசி எண்ணையும்
கொடுத்தார் எனக்கு இம்மாதிரி
விஷயங்களில் சாமர்த்தியம் போதாது இருந்தாலும் முயற்சிப்பொமே என்று அவர்
கொடுத்திருந்த எண்ணை டயல் செய்தேன் என்ன
ஆச்சரியம் மறுமுனையிலெடுத்தவர் என்னைப்
பார்க்கவருவதாகக் கூறி மறு நாள் காலையில் வந்தும் விட்டார் சிறிது நேரம்
பேசிக்கொண்டிருந்தோம் அவரும் பி எச் ஈ எல் குடியிருப்பில் இருந்தவர் என்றார்
வயதில் மிகவும் இளையவர் அவரது
தந்தையின் பெயரைக் கூறினார் நான்
1991 ம் ஆண்டே பி எச் ஈ எல்லை விட்டவன் என்றேன் அவரது தந்தையார் பெயர் சொன்னார் அந்தப்
பெயரில் பலரை எனக்குத் தெரியும்
குறிப்பிட்டுக் கூற அவரால் இயலவில்லை.
மின்னூலாக்க வழிமுறைகள் பலவற்றை கூறினார்
எனக்கு நான் ஏற்கனவே நூலாக்கி
இருந்த சிறு கதைத் தொகுப்பை வெளியிட முடியுமா என்று கேட்டேன் செய்யலாமே என்றார் எனக்குக் கூடவே என் நாவலையும் கவிதைத் தொகுப்புகளையும் வெளியிடும் ஆசை வந்தது நான் செய்யவேண்டியதை விளக்கி தொடர்பில் இருப்பதாகக் கூறிச் சென்றார் அன்று மாலை எனக்கு ஒரு தொலை பேசி அழைப்பு
மின்னூல்,வெளியிடுபவரின் தந்தை
பேசினார் என்னை நன்றாகத் தெரியும் என்றார்
அவரை எளிதில் அடையாளம் காண ஒரு அடைமொழியையும் கூறினார் பெயரும் ராஜகோபாலன் என்றார் எனக்கு நினைவுகள்மனத்திரையில் ஓடியது இந்த
ராஜகோபாலன் நான் இயக்கி இருந்த ஆராமுது
அசடா என்னும் நாடகத்தில் நடித்தவர் அவரது சஷ்டியப்த பூர்த்திக்கு அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறோம்
நாங்கள் இதுதான் நான்
இந்த உலகமே சின்னதுஎன்று நினைக்க வைத்தது மின்னூலை வெளியிட ஒப்புக்
கொண்டவர் பெயர் பத்மநாபன்
![]() |
| ஆராமுது அசடா நாடக புகைப்படம் இடமிருந்து மூன்றாவதாக ராஜகோபாலன் |
![]() |
| இடது ஓரத்தில் ராஜகோபாலன் |
![]() |
| வலது ஓரத்தில் ராஜகோபாலன் |
![]() |
| மின்னூல் பதிப்பாளர் பத்மநாபன் என்னுடன் |
வேறு சில நினைவுகள்
முன்பு வீட்டின் முன்பிருந்த மல்லிகைச் செடியை எடுத்து வேறு ஒன்று வைத்தோம் அது இந்த வருட ம் பூத்துக் குலுங்குகிறது நிறைய
பூக்கள் கடவுளுக்கு வைத்தது போக மீதி இருப்பது என் மனைவியின் தலையிலும்
அண்டை வீட்டாருக்கும்
இதைப் பார்க்கும் போது முன்பு நானெழுதி இருந்த பூவே பூவே பதிவு நினைவுக்கு வருகிறது அது இங்கு மீண்டும்
![]() |
| ஓங்கிப் படர்ந்திருக்கும்மல்லிச் செடி |
இதைப் பார்க்கும் போது முன்பு நானெழுதி இருந்த பூவே பூவே பதிவு நினைவுக்கு வருகிறது அது இங்கு மீண்டும்
சுவரேறிப் படர்ந்து பூத்துக் குலுங்கின
வெள்ளை ரோஜாவும் மல்லியும் முல்லையும்
பல்வேறு நிறங்களில் கண் சிமிட்டும்
செம்பருத்தி;காணக் கண் கோடி வேண்டும்.
ஆண்டுகள் பலவாகிப் போக மராமத்து
வேலைக்காக செடிகளையும் கொடிகளையும்
அகற்றச் சொன்னார் மேஸ்திரி.
மீண்டும் நடும் செடிகளும் புதுப் பொலிவுடன்
பூக்கத்தானே போகிறது எனும் நம்பிக்கையில்
பழைய செடிகள் வெட்டிக் களையப் பட்டன
யார் கண் பட்டதோ, ஆண்டிரண்டாகியும் செடியும்
கொடியும் வளர்ந்தும் பூ மட்டும் பூக்கவில்லை.
பூச்செடிகளிலும் மலடு என்றுண்டோ.?
தளராது நீர் ஊற்றி,நாளும் காத்திருந்து காத்திருந்து
ரோஜாச் செடியொன்றில் செந்நிறத்தில் மொட்டவிழ்ந்து
பூ ஒன்று பூக்கக் கண்டதும் ஆஹா..கொள்ளை அழகு.
ஜென்ம சாபல்யம் அடைந்திருக்கும் பூச்செடியும்.!
----------------------------------------------------------------
![]() |
| என்ன அழகு ஒற்றை ரோஜா |





