தென்னையைப் பெற்றால்
------------------------------------------
அப்பாடா ஒரு வழியாய் எங்கள் பிரச்சனை முடிவுக்கு
வந்தது
பிரச்சனை என்னவென்று சொன்னால்தானே தெரியும்
ஒரு தேங்காயின் விலை என்ன
தெரியாது
ஒரு இளநீரின் விலை என்ன
இதென்ன விலை கேட்டுக் கொண்டு
பொதுவாக என்ன விலை இருக்கும் என்று நினைக்கிறாய்
ஒவ்வோர் இடத்தில் ஒவ்வோர் விலை இருக்கும் ஆனால் முன்பைவிட விலை அதிகம்தான் கோடைக்காலம் இள
நீருக்கு டிமாண்ட் ஜாஸ்தி தேங்காயை விட இள
நீர் அதிகம்விலைஅது சரி உன்வீட்டில்தான் தென்னை
மரமிருக்கிறதே உனக்கேன் அந்தக் கவலை
அதைதான் சொல்ல வந்தேன் பிரச்சனை முடிந்தது என்று தென்னையில் இருக்கும்காய்களை கீழே கொண்டு வர வேண்டாமா இபோதெல்லாம் கூகிளில் தேடினால் காய் பறிப்பவர் பற்றிய டிடெயில்ஸ் கிடைக்கும் என்று தேடினது தான் மிச்சம்
அவ்வளவு ஹை டெக் ஏன்
சாதாரணமாக காய் பறிப்பவரின் தொலை பேசி எண் என்னிடம் உண்டு கூப்பிட்டால் இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்கிறாரேதவிர
வருவதில்லை மரத்தில் காய்கள் முற்றி சாலையில் காய்கள் விழுகின்றன நமக்கோ யார் தலை மீதாவது
விழுந்துவைக்குமோ என்று பயம் இது போல் ஒரு முறை யாரோ நிழலுக்காக காரை மரத்தின் கீழே நிறுத்திவைக்க ஒரு காய் விழுந்து காரின் முன்புறக் கண்ணாடி உடைந்து விட்டது
ஒரெ சல்லியமாய் போய் விட்டது (சல்லியம் =தொந்தரவு )
அது சரி வள வளவென்று சொல்லிக் கொண்டு இருக்காமல் சுருக்கமாகச் சொல்லமாட்டாயா என்ன செய்ய வலைத்தளத்தில்
பதிவுகள் படிப்பதன் விளைவோ என்னவோ
சுருங்கச் சொல்லப் போனால் மரத்தில் இருந்து காய்கள்பறிக்கப்பட்டு விட்டது ஆனால் அதற்கு மு நன்பட்ட அவலங்க்சளை சொல்லலாம் என்று நினைக்கிறேந்தேங்காய் விலை என்ன வென்று தெரியாது
யாரோ ஒரு மகானுபாவன் மரத்தில் ஏறி தேங்காய்
பறிக்கவா என்றார் இதற்குத்தானே காத்துக் கொண்டிருந்தாய் பால சுப்பிரமணியா
மரமேறி காய்களை பறிக்க என்ன தரவேண்டும்
மரம் ஏறிக் காய் பறிக்க ரூபாய் நானூறு தரவேண்டும்
மரத்தில் சுமார் எத்தனை காய்கள் இருக்கும்
சுமார் நூறு காய்கள்இருக்கலாம்
மனசு ஒரு கணக்குப்போட்டது
நூறு காய்களுக்கு நானூறு
ருபாய் என்றால் ஒருகாய்க்கு நான்கு ரூபாய்
ஆகிறது கீழே வந்தபின் அவற்றை வீட்டுக்குள்ளிருக்கும்
பரணுக்குள் சேர்க்க வேண்டும் பின் மட்டை எடுக்க வேண்டும் அதற்கு ஒரு காய்க்கு ரூபாய்
இரண்டு தர வேண்டும்ஆகஒரு தேங்காய் அடக்க விலை
ரூபாய் ஆறிலிருந்து ஏழுவரை ஆகும்காய் பறிக்க வந்தவர் இளநீர்க்காய்களை அவரே எடுத்துக் கொள்வதாகக் கூறினார் எங்கள் சுற்று
வட்டாரத்தில் ஒரு இள நீர் ரூபாய் முப்பது ஆகிறதாம்
இந்தக் கணக்கு பார்க்கவே முதலில் தேங்காய்
இளநீர் விலை பற்றிக் கேட்டேன் இளநீர்க்காய்களை
அவரே எடுத்துக் கொண்டால் ஒரு இள நீர் காய்க்குரூபாய் எட்டு தருவதாகக் கூறினார் இளநீர்க்காய்களை
மரத்திலேயே விட்டால் அவை முற்றி தேங்காயாக இன்னும் மூன்று மாதங்களாகலாம் அதன்பின் நான்
மரமேற யாரையாவது தேட வேண்டும் போதுமடா சாமி
இளநீர்க்காய்களை அவரையே எடுத்துக் கொள்ளச்
சொன்னேன்சாலையில் போக்குவரத்து அதிகம் இருந்தது எந்த பாதிப்புமில்லாமல் பார்த்துக்
கொள்வதாகக் கூறினார் சுமார் ஒரு மணிநேரம் நானோ
என் மனைவியோ வெளியில் வரவே இல்லை அவ்வளவு பயம் எல்லா முடிந்து பார்த்தால் அவர் எங்களிடம் ரூபாய் இருநூறு கொடுத்தார் தேங்காய்களை வீட்டின் பின் புறத்தில் கொண்டு சேர்த்தார் ஆகமொத்தம் எங்களுக்கு தேங்காய் பறிக்க எந்த செலவும் ஆகவில்லை
என்ன அவருக்கு சுமார் 75 இள நீர்க்காய்கள்
கிடைத்தது எங்களுக்கு சுமார் நூறு தேங்காய்கள்
கிடைத்ததுஅவருக்கு ஒரு இளநீர் ரூபாய் முப்பது என்று விற்றால் நல்ல லாபம் தான் மரம் ஏறவும்
காய்களை எடுக்கவும் இரண்டு பேர்களிருந்தனர் வயதானால் அதிகம் லாபம் நஷ்டம் பார்க்கக்
கூடாதுமொத்தத்தில் நோகாமல் நுங்கு பறிப்பது என்ன வெண்ரு தெரிந்து கொண்டேன் தேங்காய் பறிப்பவரிடம் அருகில் இருந்தவர்களொர் இள நீரிர்க் காய்க்கு ரூபாய் 15 தருகிறேன் என்று கூறியும் அவர் தரவில்லை
| வீட்டின் முன்புறத்தென்னை மரம் |