நாட்டு நடப்பு
------------------
(சுதந்திரதினம் இன்று . நம் நாட்டு நடப்புபற்றிய ஒரு சிந்தனை)
நாடே பற்றி எரிகிறது. நமக்கென்ன ஆயிற்றுஎன்று இருக்க
வேண்டியதுதான் இருந்தாலும் நமக்கென்று
ஏதாவது அபிப்பிராயம் இருக்குமல்லவா. வலை உலகில் இருந்தும் அதைப் பகிராமல் இருப்பது
என்ன நியாயம் நாட்டின் வடமேற்கு எல்லையில் இருக்கிறது காஷ்மீர், கடந்த ஒரு மாதமாக ஊரே அடைந்து இருக்கிறது நாளும் துப்பாக்கிச் சூடு கல்லெறி
கடையடைப்பு .இத்தனை தூரத்தில் இருக்கும் நமக்கில்லை அதன் பாதிப்பு. ஆனால்
எங்கோ ஏதோ சரியில்லை என்று மட்டும் நன்கு தெரிகிறது மாநிலத் தேர்தல் நடந்தபோதே
ஜம்மு வேறாகவும் காஷ்மீர் வேறாகவும்
ஓட்டளித்தது. மாநிலமே இரண்டாகப் பிளவுபட்டு நின்றது ஹிந்துக்கள் அதிகமாக உள்ள
பகுதியில் இருந்து பாஜகபெரும்பான்மையுடனும்
முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதி மக்கள் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையுடனும் வாக்குகள் பெற்றனர்,
இவர்களால் தனித்து ஆட்சி அமைக்க முடியாததால் கூட்டணி அரசு அமைக்க முன்வந்தனர். இது
ஒரு சந்தர்ப்பக் கூட்டணியே தவிர இருகட்சிகளுக்கும் எதிலும் ஒத்த கருத்து கிடையாது காஷ்மீரை எந்த
சக்தியாலும் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது என்னும் பாஜக வினரும்
காஷ்மீரில் ஒத்தகருத்துக்கு பாகிஸ்தானுடனும் பிரிவினை வாதிகளிடமும் பேசி முடிவுக்கு
வரவேண்டும் என்று மக்கள் ஜனநாயகக்
கட்சியும் கொள்கை அளவில் மாறு பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் இந்தியக் குடியரசின் பிற பகுதிகளுள் இருக்கும் மக்கள் என்ன
நினைக்கிறார்கள் என்றும் தெரியவேண்டுவது
அவசியமல்லவா. இந்நிலையில் கொஞ்சம் சரித்திரப் பின்னணிக்குப் போக வேண்டி உள்ளது
இந்தியாவுக்கு இங்கிலாந்து அரசு சுதந்திரம் வழங்க முன் வந்தபோது
ஏகப்பட்ட அரசுகள் இருந்தன. அவர்கள் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேரும் உரிமை
அளிக்கப் பட்டன. பெரும்பாலான அரசுகள் இந்தியாவுடன் சேர்ந்தன. முஸ்லிம்கள்
பெருவாரியான பிரதேசங்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்தன. அப்போது காஷ்மீரை ஆண்டு வந்த
ஹிந்து அரசன் மஹாராஜா ஹரி சிங் முதலில் சுதந்திரமாக இருக்கவே விருப்பப்
பட்டார் ஆனால் பிரிவினை முடிந்தவுடன்
பாகிஸ்தானில் இருந்த பழங்குடியினர் அரசுக்கு எதிராகக் கலகம் செய்ய அதற்கு
பாகிஸ்தானும் துணை போக மஹராஜா ஹரி சிங் இந்திய அரசின் உதவியை நாடினார் காஷ்மீர்
இந்திய அரசுடன் இணைவதானால் உதவுவோம் என்னும் கண்டிஷன் பேரில் மஹராஜா இந்தியாவுடன்
இணையும் ஒப்பந்தம் செய்தார் முன்னேறி வரும் பாகிஸ்தான் மற்றும் பழங்குடிப்படையை
இந்தியா தடுத்து நிறுத்தியது. அவர்கள் ஆக்கிரமித்த பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் என்றும் மற்ற பகுதிகள்
ஜம்மு லடாக் உட்பட்ட காஷ்மீர் மாநிலமாகவும் இருந்து வருகிறது காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தபோது இந்தியா ராணுவம்
செய்தித் தொடர்பு வெளி உறவு
போன்றவற்றுக்குப் பொறுப்பு என்றும்
மற்றபடி ஆட்சிக்கு ஆர்டிகிள் 370 தான் அடிப்படை என்றும் முடிவாகியது இந்த
ஆர்டிகிள் காஷ்மீருக்கு நிறைய பிரத்தியேக
சலுகைகளை வழங்கி இருக்கிறது
இப்படி இருந்தும்
காஷ்மீரில் வெகுஜன அதிருப்தியே நிலவுகிறது இதற்கான காரணங்களைக்
கண்டாராய்வதை விட்டு காஷ்மீர் இந்தியப் பகுதி இதை யாராலும் மாற்ற முடியாது என்றும்
அங்கு அமைதி நிலவ வேண்டும் என்று
பேச்சளவில் கூறுவதில் என்ன லாபம் அரசுக்கு எதிரான எதிர்ப்பின் காரணமே அவர்களுக்கு
நிலவும் சூழ்நிலையில் திருப்தி இல்லை என்றும் தெரிகிறது அடக்கு முறைகளால் எதிர்ப்பை நீக்க முடியாது ஹிந்து முஸ்லிம் புரிதல் இல்லை என்றே தெரிகிறது காஷ்மீருக்கு
வழங்கப்பட்ட பிரத்தியேக ஸ்டேடஸை நீக்க வேண்டும் என்று முனைப்பில் இருக்கும் பாஜக
அரசின் மீது காஷ்மீரிகளுக்கு நம்பிக்கை குறைகிறது எல்லாத்தரப்பினரையும்
அரவணைத்துச் செல்லும் மனோபாவம் அரசுக்கு
வேண்டும் தொடர்ந்து போராட்டத்தில் காஷ்மீரிகள் ஈடுபடுகிறார்கள் என்பது அரசின் ராஜதந்திரக் குறைபாடையே
காட்டுகிறது
பாகிஸ்தான் இந்தியா மீது படை எடுத்து வந்தபோது அவர்களைத் தடுத்து நிறுத்தியது போதவில்லை.ஜம்மு காஷ்மீரிலிருந்து விரட்டி இருக்க வேண்டும் என்ன செய்ய அப்போதைய பிரதமர் நேரு மிகவும் நல்லவராக இருந்தார் ஹைதராபாதை வசப்படுத்தியது போல் ஜம்மு காஷ்மீரையும் முழுதும் வசப்படுத்தி இருக்க வேண்டும் எத்தனையோ தேர்தல்கள் நடந்து முடிந்த போதும் காஷ்மீரிகளுக்குத் திருப்தியான அரசு அமையவில்லை என்பதே நிதர்சனம்
---------------------------------------------
16 ஆண்டுகாலமாய் உண்ணாவிரதம் இருந்து வந்த மணிப்பூரைச்
சேர்ந்த ஐரொம் ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் அவரது கோரிக்கைதான்
என்ன.?ராணுவத்துக்கு வழங்கப்பட்டிருக்கும்
அத்துமீறும் கேள்வி கேட்கமுடியாத
அதிகாரம் நீக்கப் பட வேண்டும் என்பதே
கலவரங்கள் நடக்கும் போது அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டால்
செயலாற்றுவது கடினம் என்று ராணுவத்
தரப்பிலும் தேவையில்லாத அதிகாரங்கள்
துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று ஷர்மிளா தரப்பிலும் கூறப்படுகிறது சில ஆண்டுகளுக்கு முன் ராணுவத்துக்கு
எதிரான போராட்டத்தில் பல பெண்கள் ஆடைகளை
அவிழ்த்து நிர்வாணப்போராட்டம் நடத்தியதும்
மறந்திருக்காது இந்த அதிகார துஷ்பிரயோகத்தை நீக்க, தான் மாநில முதல்வராக
வேண்டும் என்று ஷர்மிளா கருதுகிறார் இவர்
உண்ணாவிரதம் இருந்தது மருத்துவ மனையில் இப்போது அங்கிருந்து இடம் பெயர அவருக்கு
என்று இடம் தருவார் இல்லை. அவர் உண்ணா
விரதம் இருந்த போது இருந்த மவுசு அதை
விட்ட பின் இல்லை என்பதே உண்மை. நம் மக்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர்
தொடர் உண்ணாவிரதம் இருப்பதே பலருக்கும் நன்மை என்று எண்ணத்
தோன்றுகிறது ராணுவத்தின் விசேஷ அதிகாரம்
நீக்கப்பட்டால்தான் தன் அன்னையை
சந்திப்பேன் என்று ஷர்மிளா கூறி இருந்தார்
ராணுவத்துக்கு அதிகாரம் இருக்க வேண்டியதுதான்
ஆனால் அதை துஷ்பிரயோகம் செய்வது தடுக்கப்படவேண்டும்
---------------------------------------------------
வடமேற்கிலும்
வடகிழக்கிலும் அமைதி இல்லாமல் நாடு அல்லலுறும் போது மற்ற இடங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு
எதிராக வன் முறைகள் தூண்டி விடப்படுகின்றது இதன் முன்னணியில் உயர்வு தாழ்வு நீடிக்க வேண்டும் என்று கருதும்
ஹிந்துத்துவ அணிகள் பெரும் பங்கு வகிக்கின்றன, பிரதமர் மோடியின் மாநிலத்தில்
தலித்துகளின் போராட்டம் வலுக்கிறது பிரதமர் மோடியின் ஆட்சி எப்படி
இருந்தாலும் அவரைப் பற்றிய ஒரு perception
இருக்கிறது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் கொள்கைகளுக்கு குந்தகம் விளையக்
கூடாது என்று எண்ணுகிறார்
தமிழ்
நாட்டிலும் சாதி இந்துக்களுக்கும்
தலித்துகளுக்கும் போராட்டம் தொடர்கிறது
இவை கோவில் திருவிழாக்களிலும் கலப்பு சாதித் திருமணங்களிலும் வெளிப்படுகிறது தலித்துகள் கோவில் காரியங்களில் தங்களுக்கும் முன்னுரிமை வேண்டும் என்றும் திரு விழாக்களில் அவர்களுக்கும்
மண்டகப்படி உரிமை வேண்டும்
கேட்கின்றனர்சாதிக்கலப்பு திருமணங்கள் வெட்டு குத்து கொலை என்றும் நீள்கிறது இதில் எந்த சாராருக்கும் எதிராக நடக்கும் துணிவு தமிழக அரசுக்கு இல்லை என்றே
எண்ணத்தோன்றுகிறது
இந்த சாதிமதங்கள்
நம் நாட்டின் சாபம் என்றே நினைக்கிறேன் என்ன செய்ய ஆண்டாண்டுகளாக ரத்தத்தில் ஊறி விட்ட உணர்வுகள் எளிதில் நீங்குவதில்லை பசு ரட்சகர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் பசுக்களை ரட்சிப்பதை விட்டு பிற்படுத்தப் பட்டோருடன் வன்முறையில் ஈடுபடுகின்றனர். மேலோட்டமாகப் பார்க்கும் போது மனித உயிர்களை விட பசுவின் உயிர் முக்கியமாகப் படுகிறது ஆனால் பசுக்களை ரட்சிக்கும் கோசாலையில் நூற்றுக் கணக்கான மாடுகள் உயிர் துறந்தது ஏனோ அதிகம் பேசப்படுவதில்லை.
இந்தியா பலவிதக் கலாச்சாரங்களையும் உணவு முறைகளையும் கொண்டநாடு இவர்கள் எல்லோரும் சேர்ந்து இருப்பதைத்தான் யூனிடி இன் டைவெர்சிடி என்கிறோம் ஹிந்துத்துவ சக்திகள் பல போர்வையில் எதையோ அடைய நினைக்கிறார்கள் அரசு என்பது எல்லோருக்குமானது இறந்தபின்பும் பேதம் பாராட்டும் வகையில் இடுகாடுகளும் சுடுகாடுகளும்..... எங்கு நோக்கிப் பயணிக்கிறோம்
------------------------------------------------------------
சுதந்திரம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. நமக்கு அரசியல் சுதந்திரம் மட்டுமே கிடைத்திருக்கிறது அதையே சரியாக உபயோகிக்கத்தெரியாமல் திண்டாடுகிறோம் நாட்டு நடப்பில் பிரதானமாக வரும் என் கருத்துக்களே பதிவில்
சுதந்திரம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. நமக்கு அரசியல் சுதந்திரம் மட்டுமே கிடைத்திருக்கிறது அதையே சரியாக உபயோகிக்கத்தெரியாமல் திண்டாடுகிறோம் நாட்டு நடப்பில் பிரதானமாக வரும் என் கருத்துக்களே பதிவில்
பதிவை வாசிப்பவர்களாவது அவரவர் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன் ஒத்த கருத்து அமைவது சிரமம் என்பது தெரிகிறது அப்படி இருக்கும் சாத்தியங்கள் இருந்தால் இந்தமாதிரி பிரச்சனைகளே இருக்காதே ,
-