நினைவுகள் சில லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் சில லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 மார்ச், 2019

ஏதேதோ நினைவுகள்



                                      ஏதேதோ நினைவுகள்
                                    --------------------------------------
ஓஅது அந்தக்காலம்  என்பது எல்லோரும் பொதுவாக நினைப்பதுதானே நானும் விதி விலக்கல்லவே நினைவுகளுக்கு ஒரு ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை இருந்தாலும் ஓரளவு ஒழுங்கு படுத்தி சொல்கிறேன் எதை முதலில் சொல்வது? 73 ஆண்டுகள் நீண்டகாலம்தானே  எத்தனையோ நிகழ்வுகள்இந்த 73 ஆண்டுகளில் பெற்றோருடன் இருந்தது  வெறும் 18 ஆண்டுகளே இருந்தாலும் நினைவுகளை ஆக்ரமிப்பது அந்தவருடங்களே என் கணவருடன் வாழும் நாட்கள் அதிகமானாலும்  நினைவு என்னவோ அதற்கு  முந்தைய காலம்தான் பசுமையாக இருக்கிறது  எனக்கும்  என் தமக்கைக்கும்  இரண்டே  வயதுதான் வித்தியாசம் ஒன்றாகவே வளர்ந்தோம் எல்லா நிகழ்வுகளும் அவளுக்கும் தெரியும் ஆனால் ஒரு வித்தியாசம் எனக்கு நினைவில் இருப்பது அவளுக்கு இருக்காதுஅவளுக்கு நினைவிலிருப்பது எனக்கு இருக்காதுஆனால் இருவருக்கும் நினைவிருப்பது பள்ளிக்குச் சென்ற நாட்களே  ஒரு முறை நானும் அவளும் படித்தபள்ளிக்குச் சென்று பார்க்க விரும்பினோம் புகைப்படங்கள் சில எடுத்தோம் அவற்றில் சில






இப்போதைய ஒரு பள்ளிச் சிறுமியுடன்










கடைசியாக புடவைக்கடை 


நான்படித்து முடித்தபின்  வேலை பார்க்க விரும்பினேன்  அப்போதைய வாட்ச் ஃபாக்டரியில் ட்ரெயினி  ஆகச் சேர்ந்தேன் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில் சேர்க்கப்பட்டேன் இப்பொதும் அந்த வழியே செல்லும்போது  அந்த நினைவுகள்  முட்டு மோதும்   என் கணவர் கனரக கொதிகலன் தொழிற்சாலையில் தரக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தார்  நானும் எனக்கும் அந்தவிஷயங்கள் சில தெரியுமென்று சொன்னேன்  அந்தக் காலத்தில் ஜப்பானியர்கள் சொல்லிக்கொடுத்து எழுதி வைத்திருந்த  நோட் புத்தகத்தில் ஸ்டாடிஸ்டிகல்  அனாலிசிஸ்  பற்றி எழுதி வைத்திருந்ததைக்  காண்பித்தேன்   அதில் சில வார்த்தைகள் இப்போது ஏதோ ஜார்கன் மாதிரி இருக்கிறது
நானும் அக்காவும்  1962ல்


எச் எம் டி  வாட்ச் ஃபாச்டரியில்  1964 ல் இடது ஓரத்தில்  அமர்ந்திருப்பது நான்


பயிற்சியில்  இருந்தபோது திருமணம் ஆயிற்று  சில நாட்களில் அவருக்கு வேறு வேலையாகி சென்னை சென்றோம் வில்லிவாக்கத்தில் இருந்தோம் எனக்கு அங்கு மறக்க முடியாதது நாங்க இருந்தஸ்டோர் குடியிருப்புக்கு வரும்பட்டாணியரைத்தான் சுமார் ஏழு அடி உயரம் தலையில் தலைப்பாகையுடன்   பார்த்தாலே பயமாய் இருக்கும்  அவனிடம் கடன்  வாங்கியவரிடம் வட்டி வசூலிக்க வருவான்  நமக்கு ஏதும் தொந்தரவு  இல்லை என்றாலும்  ஊர் விட்டு ஊர் வந்து கடன்கொடுத்து வட்டி வசூலிக்கும்  அவர்கள் 
வித்தியாசமானவர்கள்தான் ஆச்சரியப்பட வைக்கும்