பதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்
-----------------------------------------------------------------------------------------
நான்
சந்தித்த பதிவர்கள் பற்றி எழுதி இருந்தேன்
அப்போது என்ன பேசினோம்
என்பதையும் தந்திருக்கலாமோ
என்றும்கருத்து இருந்தது நாங்கள் என்ன
பேசினோம் என்பதைவிட அவர்கள் பற்றி ,
அவர்கள் எழுத்து பற்றி நான் என்ன நினைத்தேன்
என்பது சொன்னால் நன்றாயிருக்கும்
என்று தோன்றியது சந்தித்த சந்திக்காத பதிவர்களின் எழுத்துகள் பற்றி இப்போது
கூறப்போகிறேன் அதற்கு முன்பு ஒரு காணொளி
இதில் காணும் விஷயங்கள் எனக்கு சரியாகப் புரியவில்லை பதிவுலகில் வங்கியில் பணி புரிந்து ஓய்வு
பெற்றவர்களால் இதைப் புரிய வைக்க முடியும்
என்று நினைக்கிறேன் வங்கி தொழிலில்
புகழ் பெற்ற பதிவர்கள் சிலரது பெயர்களை இங்கு எழுதுகிறேன் திரு செல்லப்பா
யக்ஞசாமி. திரு நடன சபாபதி திரு தி தமிழ் இளங்கோ போன்றோர் இன்னும் வலையுலகில் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்
பதிவுகளுக்கு வரவும் செய்கிறார்கள் இவர்களும் மற்றவர்களும் கருத்து சொல்லி என்னைத்
தெளிவு படுத்தலாம்
சந்திக்காத
பதிவர்களின் சில எழுத்துகள் என்னை மிகவும் ஈர்த்தவை திரு டிபிஆர் ஜோசப் எழுதி இருந்த ஒரு க்ரைம்
த்ரில்லர் நான் ஆவலோடு வாசித்து மகிழ்ந்தது சொந்த செலவில் சூனியம் என்பது அந்த
நாவலின் பெயர் ஒரு வங்கி அதிகாரியாய்
இருந்தவர் எப்படி இத்தனை விஷயங்களையும்
நுணுக்கத்தோடு எழுத முடிந்தது என்பதேஎன்
ஆச்சரியம் சுட்டி தருகிறேன் நேரம் இருந்தால் எல்லா பகுதிகளையும் படித்து பாருங்கள் என்னுலகம்
என்னும் தளத்தில் எழுதி வந்தார் ஆவடி வாசி
இதுவரை சந்தித்ததில்லை சுட்டி என்னுலகம்
சந்திக்காத
பதிவர்களில் ஒருவர் பக்கிரிசாமி நீலகண்டன்
இவரும் இப்போது பதிவுகளெழுதுவதில்லை ஆனால் ஆங்காங்கே
பின்னூட்டங்களிடுவார் இவரை
நினைத்தாலேயே இவரது ஒரு தொடர் நினைவுக்கு
வரும் முற்பிறப்பு விஷயங்களை நினைவு கூறும் ஒருவர் பற்றியது இவரைப் பற்றி இவரது
ப்ரொஃபைலில் இருந்து
நான் இங்கே எழுதும் அனைத்தும் Statin Drug,
Lipitor-க்கு சமர்ப்பணம். மனமும், உடலும் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பொழுதே, நான் நினைத்தவைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்னும் எண்ணத்தை Statin எனக்கு அளித்தது. உலகத்தில் உள்ள பயங்கரமான குற்றவாளிகள் அனைவருக்கும் கொடுக்கவேண்டிய அற்புதமான மருந்து அது. பக்க விளைவே கிடையாது; எல்லாம் நேரடி விளைவுதான்; மனுஷனை நடைபிணமாக மாற்றிவிடும். யார் செய்த புண்ணியமோ, சரியான நேரத்தில் மருந்தை நிறுத்திவிட்டேன். என்னை பார்த்து ஆர்வம் கொண்டு, நிறைய பேர் தமிழில் எழுதி, அதில் யாருக்காவது நோபெல் பரிசு கிடைத்தா, நான் ஜன்ம சாபல்யம் அடைவேன். இவரே தமிழில் தைரியமாக எழுதும் பொழுது, நானும் எழுதினால் தப்பே இல்லைன்னு, ரொம்ப பேர் முனைப்போடு எழுதுவாங்கன்னு நினைக்கிறேன் ( நானும் அதர்வோ ஸ்டாட்டின் மாத்திரைகளை எடுத்துக் கொள்பவன் )
சமுத்ரவைப் பற்றிச் சொல்லும்போதுஅவரது அணு அண்டம்
பேரண்டம் பகுதிகளையும் கலேடாஸ்கோப்
பதிவுகளையும் பற்றி எழுதீருந்தேன் ஆனாலும்
எனக்கு நினைவுக்கு வருவதுஅவருடைய சிறு கதை ஒன்றுதான் மிகவும் ரசித்தேன்
எந்த அளவுக்கு என்பது இத்தனை எழுத்துகளிலும் என்மனதில் இடம் பிடித்த பதிவு என்பதே காரணம் கதையின்
தலைப்பு நைவேத்தியம் சுட்டி
டாக்டர் கந்தசாமி வாழ்க்கைக்கு உதவும் பல செய்திகளை
பதிப்ப்பிப்பார் முக்கியமாக சுகாதார சிந்தனைகள் அதில் இருக்கும் டாய்லெட்
உபயோகிக்கும் முறை முதல் படுக்கையில் போர்வையின்
பக்கம்தலைமாடு கால்மாடு பற்றியும்
எழுதி இருக்கிறார் ஆதியில் என்னை ஒருபிரபலபதிவராக்குகிறேன் என்றார் நான் தான் என்
எழுத்துகள் மூலம் கிடைக்கும்பிரபலமே போதும்
என்றேன்
திரு செல்லப்பாவின் ஒரு பதிவு மனதில் நிற்கிறது இப்போது நடக்கும் ரெய்டுகள் பற்றிப்படிக்கும் போதெல்லாம்
அவரதுபடிவே நினைவுக்கு வரும் பலரும்
படித்திருக்கலாம் அண்மைய பதிவுதான் அது
தமிழ் தமிழ் அதிலும் பண்டையத் தமிழையே அனுபவித்து ஒருவர் பதிவிடுவதென்றால் அவரது திறமையிலும் எழுத்திலும் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாகும் ஊமைக் கனவுகள் என்னும் தளம் படித்தால் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கலாம் கவிதை எழுதக் கற்கலாம் பண்டைய இலக்கியங்களில் மூழ்கி முத்தெடுக்க உதவுவார் மரபுக் கவியின் இலக்கணங்களையும் கற்பிப்பார் ஜோசப் விஜு இவரது பெயரை அறியவே எனக்கு நாளாயிற்று. , நான் நீதிகேட்கிறேன் என்னும் ஒரு பதிவை எழுதி இருந்தேன்.அதற்கு பின்னூட்டமாக இக்குரல் பழங்காலத்திலேயே ஒலித்திருக்கிறது என்று எழுதி இருந்தார்.அதுவே ஒருவேளை அவரை இப்பதிவை வெளியிடச் செய்ததோ என்னவோ தெரியவில்லை உலகாயுதம்-கடவுளைக்கொன்றவனின் குரல் படித்துப் பாருங்கள் ரசிப்பீர்கள்.
சில பதிவர்கச்ளை நினைக்கும் போது எழும் நினைவுகளே பதிவாயிற்று ரசித்தீர்களா நட்புகளே i