மனைவி பற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனைவி பற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 மார்ச், 2019

மனைவி அமைவதெல்லாம்



                                              மனைவி அமைவதெல்லாம்
                                             -------------------------------------------------


நாம் வாங்கி வந்த வரமே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்  திருமணம்  நடக்கிறது வாழ்வில் வசந்தம் வீசும் என்னு நம்பிக்கை எழுகிறது சில விஷயங்களை அனுபவத்தின் பேரில் சொல்வது சரியாய் இருக்கும் திருமணமென்பதே கனவாகி இருக்கும் சிலருக்கு.  எனக்கு திருமணமென்பதே என்னை  நானறிய ஒருகருவியாய் இருந்தது இருவருக்கும் பலப்பல  எதிர்பார்ப்புகள் ஆனால் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறுகிறதா அந்தகாலகட்டத்தில் நினைக்காத எண்ணங்கள் இப்போது வருகிறதுசிறுபிராயத்தில் அணிய நல்லஉடுப்பிருக்காது நல்ல உணவிருக்காது படிக்க புத்தகங்கள் இருக்காது ஆனால் இல்லாத வெறுமை இருந்த தில்லை இப்போது நினக்கும்போதுதான் எதையெல்லாம் அனுபவிக்காமல்  இருந்திருக்கிறோம்   என்று தோன்றும்  இதைதான்  வாழ்வின் அனுபவமென்கிறேன் திருமணமான புதிதில்  சென்னையில் நாங்கள்  குடித்தனம்  நடத்தத் துவங்கிய போது நம்பமாட்டீர்கள் சமையல் எல்லாம் மண்சட்டி பானையில்தான்  அந்த நிலையில் இருந்து இந்நிலைக்கு வந்ததை   நினக்கும்போது  கேட்பவர்களுக்கு ஐயோ பாவமென்றிருக்கும் என்மனைவிக்கு மெல்லாமிப்படித்தான் என்னும் எண்ணமே இருந்ததுஎதையுமே குறையாய் அப்போது எண்ணியதில்லை யாருடனும் ஒப்பிட்டு பார்த்ததில்லை  ஆனால் எனக்கு அவள் அவளுக்கு நான் என்னும் எண்ணமேமேலோங்கி இருந்தது  அவள் என்முதல் மகனை பிரசவிக்கச் சென்றபோது அவளுக்கு ஒரு கடிதம்கவிதையாய் தீட்டி இருந்தேன்   அதையெல்லாம் ரசித்தாளோ தெரியாது அப்போதே நான்சுமாராக எழுதுவேன் அதுவும் உண்மையாக

ஓடிக்களைத்து ஊணுக்கலைந்து தேடிச்சோறு நிதம் தின்று
 
வாடி அலையும்நிந்தன் கொழுநன் பாடிப்பகரும் அல்லைக்கேளடி !
ஊரடங்கி பேயாடும் நேரம் போரடித்து வளைய வரும் வேலை
சாகடித்து கொல்லாமல் கொல்லும்--உன் பிரிவு
நோகடிக்குதே எண்ண எண்ண !
வந்து நோக்கின் நீஇட்ட மஞ்சமில்லை !நானிட்ட பஞ்சணையில்
வீழ்ந்து பட்டால் நித்திரை இல்லை !
சோர்ந்து பட்ட உடலுக்கு உயிரூட்ட காப்பி இல்லை  டி இல்லை சோறில்லை !
மாறுபட்ட சுழ்நிலையில்  வாழ்ந்து வரும் எனைக்காண நீயுமில்லை !
என்செய்வேன் ? சொல்லடி
எனக்கு என் மனைவி பற்றி ஒருபெருமிதம்  கர்வம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்  ஆனால் என்மனைவிக்கு இவற்றைச்சொல்வதில் உடன்பாடுஇல்லை  கண்பட்டு விடப் பொகுதையா என்பாள் இந்தவயதில் எனக்கு அவ்வாறு தொன்றுவதில்லை ரொம்பநாட்களுக்கு முன்  ஒருபாடல் எழுதி இருந்தேன்   யாரும்செருகொழியற்க  என்னும் தலைப்பில் எழுதியது  இதை நான்முன்பே பகிர்ந்திருக்கிறேன்

வெண்ணிற  மேனியாள்  எனக்கு
 
மிளிரும்  நீலவானம்   சரிதுகில்
பன்நிறம்  தெரியப   பதித்த  மணிகள்
 
மின்னும்    தாரகை   நல்லணிகலன்
எனக்கு   நிகர்   யாரே    இப்புவிமீதே   எனவே
உன்னாது  இயம்பும்   மதியும் --கிளியே 
கறை   துடைத்த   மதி  வதனம்   அவள்  மேனிக்கணியும்
 
பட்டோ   மற்றோ   பொலிவுறும்  பேருண்மை –ஆங்கு -
 தழிலோடும்   புன்னகையும்   நன்னகையாம்    வண்டென    விரைந்தாடும்   மலர்  விழிகளும்
 
கண்டதும்   கவி  பாடத்தூண்டும் ---என்
 
காதல்   ஜோதி  ! கன்னல்  மொழியினள்---அவள்
 
காண்பார்   கண்   கூசும்   பேரெழில் ---கண்டும்
 
செருக்கொழிந்தாரில்லை -- ஏன்  ?
சிந்தை    கவர்ந்த   என்  பூங்கொடியாள்  தன 
நடை  குரல்  அதரம்  கண்டும் -ஈண்டு 
தோகை    மயிலின்  களிநடம்   குறைந்திலை
கானக்குயிலின்  இன்னிசை  குறைந்திலை
கொவ்வைக்கனியதன்    செம்மையும்   குறைந்திலை --ஏன் ?
 
கட்டழகன்   எந்தன்   கொட்டமடக்க
 
வட்டமிடும்   கழுகன்ன   சுற்றி  வரும்
 
நான் முகன்    திட்டமெல்லாம்    தரை  மட்டம்
இயற்கையின்   படைப்பினில்   எனதவள்  சிறந்தவள் 
 
கண்கூடு    தேவையில்லை   அத்தாட்சி   இதற்கு  !
  
யாரும்   செருக்கொழியர்க --  யானும்  ஒழிகிலேனே 

மேற்கண்ட படைப்பில் வாசகர்கள் ஒன்றினை கவனிக்க வேண்டுகிறேன் எந்தநிலையிலும்  நான்  standing firm but never deprecated others  
பிறகு அண்மையில்  கண்ணனின்  கேசாதி பாதம் எழுதும் போதுஎன் காதலியின் கேசாதிபாதமும்  எழுதி இருந்தேன்   OF course that is a recent post
வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில் 
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன 
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில் 
பெரிய வளையங்களுடன் காதுகள்
 புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை. 
 உச்சந்தலை தொடங்கி உன் அழகை 
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட

எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென் 
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும் 
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின் 
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின் 
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும் 
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை. 
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
என்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில் 
உன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்
பாவையே எனை நான் மறக்கிறேன்.


என் மனைவியைப் பற்றி எழுதத் துவங்கினால் எழுதிக்  கொண்டே இருப்பேன் படித்து சோர்வடைந்தவர்களுக்கு  கண்டு மகிழ காணொளிகள்