கண்டேன் நான் கண்ணனை......
-----------------------------------------------
ஸ்ரீகிருஷ்ண
ஜெயந்தி என்றைக்கு. ஏன் இந்த சந்தேகம் வீட்டில்
இரண்டு காலண்டர்கள் ஒன்றில் கோகுலாஷ்டமி
இன்றைக்கு மற்றதில் நாளைக்கு . அது
சரி அஷ்டமி ரோகிணியில் கண்ணனின் பிறந்த
நாள் என்கிறார்கள் நமக்கென்ன தெரியும்
மனைவியைக் கேட்டேன் இன்றும் ஆகலாம் நாளையும் ஆகலாம் என்றாள் பெங்களூர் இஸ்கான் கோவிலில் இரண்டு நாளைக்கும்
கொண்டாடுகிறார்களாம் பதிவு எழுத உனக்கு அது முக்கியமில்லை என்று கூறிக் கொண்டு
எழுதத் துவங்குகிறேன் சில ஆண்டுகளுக்கு முன்
மலையாளத் தொடர் ஒன்று வந்து கொண்டிருந்ததுஅதன் டைட்டில் சாங் எனக்குப் பிடித்திருந்தது ‘” கண்டு ஞான்
கண்ணனை காயாம்பு வர்ணனை குருவாயூர்
அம்பல நடையிலெ” என்னும் பாட்டு அது அந்த
நேரத்தில் கண்ணனனின் கேசாதி பாதம் வர்ணித்து
ஒரு பதிவு எழுத விரும்பினேன் அதன் துவக்கத்தில் “கண்டேன் நான் கண்ணனைக் கார்மேக வண்ணனைக் குருவாயூர்
கோவில் நடையில்” என்று துவங்கி எழுதினேன் அதையே
இன்று மீள் பதிவாக்குகிறேன் கண்ணனின்
கேசாதி பாத வர்ணனைக்கு
காலமுண்டோ ரசிப்பீர்கள் என்று
நினைக்கிறேன்
கண்டேன் நான் கண்ணனை
கார்மேக வண்ணனைக்
குருவாயூர் கோவில் நடையில்
கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )
விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )
எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள் அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )
இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )
மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )
சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )
அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )
உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த என்
அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )
குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)
“
