திங்கள், 11 மார்ச், 2019

நானும் குழந்தையும்


                       
                              நானும்  குழந்தையும்
                              -----------------------------------

பச்சிளங்குருத்து என் மடியில்
கருப்பையில்நீந்தி மகிழ்ந்த( ? ) ஒரு சின்ன உயிர்
ஏதும் புரியாமல் என்னைப் பார்க்கிறது 
என்னைப் பார்க்கிறதா ?விலங்குகள்
 மண்ணில் விழுந்தவுடன்எழுந்தோடும்
இக்குழவிக்கு அது முடியுமா
 தாய் யாரென்றாவது தெரியுமா
பரப்பிரம்மம்  என்று சொல்லப் படுவதும்  ஈதோ  

நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும்
எனக்கு எண்ணிக்கையே துவங்காத
 மழலையின்  ( அதுவும் தவறோ )
 சிந்தையில் என்னதான் ஓடுகிறதோ
 சிந்தை என்றஒன்றுஇருந்தால் தெரியவில்லையே
இன்றைக்கு என்ன எல்லாமே  அப்ஸ்ட்ராக்டாக
  தெரிந்தவர்கள் தெளிவிக்கலாமே 
ஐந்து நாள் குழந்தை என்மடியில்

என் வீட்டின்மேல் தளத்தில் குடியிருப்பவருக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது என்னால் படியேறிப் போகமுடியாது என்று  எண்ணி குழந்தையை காட்ட என் வீட்டுக்கு வந்திருந்தார்  அப்போது எடுத்த படம்  




       

வெள்ளி, 8 மார்ச், 2019

மகளிர் சக்தி



                                         மகளிர் சக்தி
                                        -----------------------
  உலக மகளிர் தினத்தை ஒட்டி என்ன எழுதலாமென்று யோசித்தபோது எனக்குத் தெரிந்த என்னைத் தெரிந்த வலை உலக மகளிர்களின் பட்டியல் தயார் செய்து குறிப்பிட்ட சில கேள்விகளை குறிப்பிட்ட சிலரிடம் கேட்கலாம்  என்று தோன்றியது உடனே செயல் படுகிறேன் பட்டியல் தயார் செய்யும்போது பல வலைப் பதிவர்களை  என்பதிவின் பின்னூட்டங்களில் காணமுடிவதில்லை ஏறத்தாழ எட்டாண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன்  பல வித பதிவர்களை பின்னூட்டங்களில் பார்த்தாகி விட்டது  சிலர் பற்றிய சில அபிப்பிராயங்களும்  உண்டு அவை சரியாக இருக்கலாம் தவறாக ஆக இருக்கலாம்  என் அபிப்[பிராயங்கள் முக்கியம் அல்ல
முதலில் பட்டியல் பார்ப்போம் மனதில் வரும்பெயர்களே முதலில்  வேறு முக்கியத்துவமில்லை எல்லோரும் சமமே
1)   கீதா சாம்பசிவம்   இவரைஒரு முறை அவர் வீட்டில் சந்தித்திருக்கிறேன் ஒரு பதிவர் இவரை துறை போகியவர் என்று குறிப்பிட்டு  இருந்தார் இவரிடம்  நான்கேட்க விரும்பும்  கேள்வி நீங்கள் ஆன்மீகவாதியா  ஆஸ்திக வாதியா? எந்தக் கேள்விக்கும்  ஒரு பதில் இவரிடமிருக்கும் எனஎதிர்பார்க்கலாம் அரசியலில் கருத்து கூறும்போது நீங்கள் எதை          நம்புகிறீர்கள் கேட்டு அறிந்ததா பட்டறிந்ததா
2)   துளசி கோபால்  இவரை என்வீட்டிலும்  பதிவர் மாநாட்டிலும்சந்தித்து இருக்கிறேன்   என்னை சந்தித்ததை சிங்கத்தின் குகையில் என்று கூறி இருந்தார் அதுசரி மேடம்பலரும் உங்களை  டீச்சர் என்கிறார்கள் பள்ளி ஆசிரியரா எங்கே எப்போது?பதிவுகளில் எழுதும்போது நம்பிக்கையே முக்கியம் என்று எழுதுகிறீர்கள் அதுவும் பல நம்பமுடியாததாக இருந்தாலும்!
நீங்கள் ஒரு  விஷ்ணு பக்தையாகவே தெரிகிறீர்கள் சைவ சித்தாந்தங்கள் பற்றி ஏதும்சொல்வதில்லையேஇல்லாவிட்டால் பாடல் பெற்ற இடங்களுக்கே முக்கியத்துவம்  கொடுத்து ஏன்செல்கிறீர்கள்  நியூ ஜிலாந்தில் எப்போது இருப்பீர்கள்
3)   கீதா ரெங்கன் இவரைப் பலமுறை சந்தித்ததுண்டு இவர் இப்போதுபெங்களூர் வாசியான பின் சந்திக்க வில்லை மேடம் நீங்கள் உங்கள் பின்னுட்டங்களில் பலரோடு ஒத்துப்போவதையே காண்கிறேன்உங்களுக்கென்று அபிப்பிராயமிருந்தாலும்சொல்லாமல் போவதே மேல் என்று நினைக்கிறீர்களா பெரும்பாலான இடங்களில் நீங்கள்சொல்ல வந்ததை ஏற்கனவெ வேறு சிலர் சொல்லி இருப்பதாக நீங்கள் எழுதுவதைப் பார்க்கிறேன் கர்நாடக சங்கீதம்முறைப்படி பயின்றவரா நீங்கள் சொல்ல வருவதை சுருங்க சொல்ல மாட்டீர்களா
4)   பானுமதி வெங்கடேஸ்வரன்  இவர் எனக்கு உறவு முறையும் கூட இவரது மகள் திருமணத்துக்கு சென்றபோதுதான் இவரும்வலையில்  எழுதுகிறார்  என்று தெரிந்தது அப்போதெல்லாம்  இவரது பதிவு பலருக்கும் தெரியாமல் இருந்தது என்பதிவுக்கு வரும்பின்னூட்டங்க்களில்  இருந்து பலநண்பர்களை உருவாக்கினார் என்று இவர் சொன்னதாக நினைவு உங்கள் கருத்துக்கு மாறாகஎழுதினால் உணர்ச்சி வசப்படுவீர்களோ என்று தோன்றுகிறது
5)   கோமதி அரசு  மயிலாடு துறையில் இவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்  அங்கு எங்களுக்கு மிகவும் உதவியாய் இருந்தார் திரு நாவுக்கரசரும்  இவரைப் போலவே எந்த வம்பு தும்புக்கும்  போகாதவர்  எதிர்மறை எண்ணங்கள் என்றாலும் தாண்டி போய்விடுபவர் எல்லோருக்கும்  நல்லவராக இருக்க முயற்சி செய்பவர் வேதாத்ரி சுவாமிகளின்  எழுத்துக்களைமிகவும் நம்புபவர்  மயிலாடு துறையில் அப்போதுநான் எழுதி இருந்த இது என் ஏரியா அல்ல என்னும்பதிவில் பட்டினத்தார் பற்றிக் கேள்விப்பட்டதைஎழுதி இருந்தேன் இது என்  ஏரியா இல்லைஎன்றுசொல்லியே பட்டினத்தார் பற்றி எழுதி இருக்கிறார்என்று அப்போது அவர் சொன்னது எனக்கு ஏதோ சர்காஸ்டிக்காகத்தோன்றியது நான் தவறாகவும் இருக்கலாம்
6)   ராமலஷ்மி இவர் ஒரு புகைப்படக் கலைஞர் இவரை பெங்களூரில் ஒரு பதிவர் சந்திப்பில்பார்த்திருக்கிறேன்  அற்புத புகைப்படக் கலைஞர் இவரது பதிவுகள் எனக்குப் பிடிக்கும் தானாக எழுதுவதை விட பிறரது கொடேஷன்களை வெளியிடுவார் திரு நெல்வேலிக் காரர் என்றும்  ஒரு முதுகலைப் பட்டதாரி என்றும்தெரிகிறது
7)   திரு நெல்வேலிக் காரர் என்றதும்  அமெரிக்காவில் இருந்து வெட்டிப்பேச்சு என்னும் தளத்தில் எழுதி வந்த சித்ராவும்  நினைவுக்கு வருகிறார் இப்போதெல்லாம் அவரைக் காண்பதில்லை
8)   கீதா மதிவாணன் இவர் ஆஸ்திரேலியாவில் இருப்பவர்  அங்கிருந்துஅவருக்கு முடிந்த அளவில் தமிழுக்கு தொண்டாற்றி வருகிறார் அவரது சிலபதிவு என்னைக் கவர்ந்தது  சிலபூக்களின்ந்படங்களைக் காட்டிஅது பற்றிக் கேட்டிருந்தேன்  இவர்தான் அது பற்றி எனக்கு எடுத்துச் சொன்னவர் திரு ஞானசம்பந்தம் என்னும் மூத்தபதிவர் இவருக்கு மாமனார் முறை எனக்கு ஓரோர்சமயம் அவரது சிந்தனைகள் எனதுபோல்  தோன்றும்
9)   அன்புடன் மலிக்கா  இவர் என்னிடம்பெண் எழுத்து என்னும்தொடர் பதிவில் கலந்துகொள்ளச் செய்தார் ஆணெழுத்து பெண் எழுத்து  என்னும் பேதம்அறியாமல் நானும் எழுதி இருக்கிறேன்
10) இவர்களைத்தவிர சாதிகா என்பவருமென் பதிவுகளில் பின்னூட்ட உற்சாகம்தந்தவர்
11) புதுக் கோட்டையில் சந்தித்த சசிகலாவும் ஒருவர்  நான் எழுதி இருந்த ஒருபதிவின் வரிகளை நினைவில் வைத்துகோண்டு புதுக்கோட்டையில் என்னை திணர அடித்தவர் இன்னும்பலர் உண்டு பதிவின் நீளம்கருதி எழுதவில்லை
எனக்கு ஒரு சந்தேகம் உண்டு  பெண்களெப்போதும் 
        ஆண்களைச்சார்ந்திருப்பதுதான்  இந்தியக் கலாச்சாரம் என்று

 நினைக்கிறார்களா அவர்களுக்கென்று கருத்துஏதுமில்லையா இருந்தாலும் ஏன் சொல்ல வேண்டுமென்றுநினைத்துஒதுங்கிப் போகிறார்களா
மஞ்சுபாஷிணி வல்லி சிம்மன் மனோ சாமிநாதன்  திருமதி காமாட்சி போன்றோரும்  என்பதிவுக்கு வந்தவர்கள் திருமதி லக்‌ஷ்மி என்பவர் அம்பர் நாத் வாசி  பயண்ப் பதிவுகள் எழுதுவார் இப்போதெல்லாம் காண்பதில்லை திருமதி ராஜராஜேஸ்வரிமறக்க முட்யாதவர் கோவை வாசி ஒருகால் கோவையிலும் ஒரு கால் ஆஸ்திரேலியாவிலுமாகைருந்து படிவிடுவார் இப்போது இல்லை மறைந்து விட்டார்  ஆன்மீகப் பதிவுகள் எழுதுபவர் அவருக்க்கு ஜீனியஸ் என்னும் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தி இருக்கிறேன் இப்போது காரைக் குடியில் இருக்கும்  தேனம்மை லக்ஷ்மணன்நிறையவே எழுதுகிறார்  பல நூல்களை வெளியிட்டவர்  அவரது சாட்டர் டே போஸ்டுக்கு என்னிடம் எழுதி  வாங்கி இருந்தது நினைவுக்கு வருகிறது பதிவு  எழுதத்துவன்கியபோது இருந்த மனநிலைஎழுத எழுத மாறி விட்டது பெண்களுக்கு 33 சத வீதம் இட ஒதுக்கீடு என்பது ஒரே மாய்மாலம் என்று தோன்றுகிறதுசரிபாதி இட ஒதுக்கீடுஇருக்க வேண்டும் அல்லவாஇப்போதுபதிவுஎழ்களெழுதிவருக் பலரும் நகைச்சுவை என்று நினைத்து ஏதேதோ எழுதுகிறார்களோ  என்னு சந்தேகம்வருகிறது  தனகுத்தானே பல பட்டப்பெயர்கள் கொடுத்துக் கொண்டு எழுதும் அதிரா ஏஞ்செல் என்பவரை நான் அஞ்சலை  என்றுஅழைக்கலாமா என்று கேட்டிருந்தேன் என்புகைப்படத்தில் என் மீசை பயமுறுத்துகிறது என்பதை கேட்டதும் மீசையின் இன்னொருமுக்கியத்துவமும் தெரிந்தது  
எது எப்படியோ இந்தவயதில் நானும் எழுதுவதற்கு தூண்டு கோலாயிருக்கும் மகளிர் சக்தி வாழ்க என்று கூறி முடிக்கிறேன்       

     
        

புதன், 6 மார்ச், 2019

தொடரும் நினைவுகள்




                                தொடரும் நினைவுகள்
                               ---------------------------------------

ஏதேதோ எண்ணங்கள் தொடருகிறது திருச்சியில் நாங்கள் இருந்தபோது எங்கள் வட்டத்தில் இவரை என்பெயர் சொல்லிச் சொன்னால்தான் தெரியும்அங்கிருந்த போது எனக்கு வீட்டு வேலைகள் தவிர நிறையவே பொழுது போக்குகள் இருந்தன மகளிர் சங்க வேலைகள் அதில் அடக்கம்காலையில் இவரை அலுவலகத்துக்கு அனுப்பிய கையோடு அருகே இருந்த கோவில் அது முடிந்து லேடிஸ் க்ளப் நண்பிகளுடனான சந்திப்பு நான் அங்கே லயன்ஸ் கிளப் மகளிர் பிரிவில் காரியதரிசியாக இருந்தேன்   அவ்வப்போது முதியோர் இல்லங்களுக்கு போய் அவர்களுக்கு உணவளிப்போம் ஆனால் இப்போது நாங்கள் இருப்பதே முதியோர் இல்லம்போல் தானிருக்கிறது இருவயதான முதியவர்கள் அவ்வளவுதான் வித்தியாசம்
 மகளிர் சக்திஅங்கு ஒங்கி இருந்தது திருச்சி வானொலியில்  சில நிகழ்ச்சிகள் கொடுத்திருக்கிறோம்  மதியம் பூவையர் பூங்கா என்று ஒலிபரப்பாகும்   ஒருமுறை பீட் ரூட் ஹல்வாவில் ஒரு அழுத்தம் கொடுத்து சொன்னதை கேலி செய்ததும் நினைவில் நாடகங்கள் என்றும்  நாட்டியம் என்றும் ஏக பிசிதான்  முறைப்படி நாட்டியம் கற்கவில்லையானாலும்   பள்ளியில் படிக்கும்போது நானும் என் அக்காவு ம் திரை இசைப்பாடல்களுக்கு ஆடுவோம் பள்ளியில்  படிக்கும்போது  வஞ்சில் லோட்டை வாலிபன்படத்தில்வரும்  கண்ணும்  கண்ணும் கலந்து என்னும் பாடலுக்கு பத்மினி வைஜயன்ந்தி மாலா ஆடுவது போல நானும்  என் அக்காவும்  ஆடியது நினைவில் அப்போதெல்லாம்  ஃபோட்டொ எடுத்து வைத்துக் கொள்ள வீட்டில் யாருக்கும் இந்டெரெஸ்ட்இருக்க வில்லை    அதுவே திருச்சியில் இருந்தபோது நடன நிகழ்ச்சிகள் சேர்ந்த நாடகங்களில் நடிக்க உதவியது மகளிர் சார்பில் திருச்சியிலிருந்து டெல்லி சென்று கலா மிலன் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருக்கிறேன்  அது என்னவோ என் கணவருடன் பல இடங்களுக்குச்  சென்றி ருந்தாலும்   லேடிஸ் க்ளப் நண்பிகளுடன்  சென்று வந்ததே அதிகம் நினைவுக்கு வருகிறது டெல்லியில் இந்திரா காந்தியை அவரதுஇல்லத்தில் சந்தித்தது  மறக்க முடியாது திருச்சியில் மகளிர் பிரிவில் பல நாடகங்களில் நடித்ததும்நினைவுக்கு வருகிறது திருச்சியில்  என்கணவர் பல நடகங்களைப்போட்டிருக்கிறார்  என்னையும் ஒரு நாடகத்தில் நடிக்கக் கூப்பிட்டார்  நானும் மேடையில் பேசாமலேயே  ஒரு மருத்துவராக மேடைக்கு  பின்னால் நடித்திருக்கிறேன்  திருச்சியில்  துவாக்குடியில் இருக்கும் ஃபூட்க்ராட் கல்லூரியில்  சேர்ந்து சர்டிஃப்கேட்டும்  வாங்கி இருக்கிறேன் என்னென்னவோ நினைவுகள்  திருச்சியை விட்டு பெங்களூர்  வந்தது அவ்வளவாக  திருப்தி தரவில்லை  விஜயவாடா  நினைவுகளும்   வருகின்றன அவை இன்னொரு பதிவில் 
ஒரு நாடகத்தில்

மாறு வேடத்தில் 
       

கிராமிய நடனம்

பாரத மாதாவுக்கு வந்தனம் 

பெண்களுக்கு நாட்டியப் பயிற்சிn

பின்னல் கோலாட்டம்


டெல்லி கலாமிலான் இந்திரா காந்தியுடன் 







ஞாயிறு, 3 மார்ச், 2019

நிகழ்வுகள் நிகழ்ந்தபடி


                              நிகழ்வுகள் நிகழ்ந்தபடி
                              -----------------------------------
 மார்ச் மாதம் இரண்டாம் தேதி மறக்க முடியாதது அந்த நாளைய நிகழ்வுகள் மனதில் ஓடியது ஓடியபடி எழுதுகிறேன் 



நான் பயிற்சியில் சேர்ந்து பத்து மாதங்கள் ஆகியிருந்தது முதல் ஆறுமாதங்கள் கழிந்து மீதியுள்ள நாட்களை விடுதியில் தங்கித் தொடர வேண்டும் என்ற விதி
ஒரு நாள் அதிகாலை”எந்திரி, எந்திரி ஏந்திரி” என்னும் வழக்கமான கூப்பாடுடன் வார்டன் எங்கள்   அறைக் கதவைத் தட்டினார். காலையில் எழுப்பி காலைக்கடன்களை முடித்ததும் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் பின் காலை உணவுக்குப்பின் தொழிற்சாலைக்குச் சென்று ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடத்துக்குச் சென்று பயிற்சியில் ஈடுபடவேண்டும் இந்த மாதிரிப் பயிற்சியில் தொழிற்சாலையில் அநேகமாக எல்லா இடங்களிலும் என்ன செய்கிறார்கள் என்னும் ஐடியா கிடைக்கும்.
அன்றைக்கு என் மனசே சரியாக இருக்கவில்லை. இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் பயிற்சிக்காலம் பாக்கி இருந்தது. நாட்கள் ஆமை வேகத்தில் கழிவது போல் தோன்றிக் கொண்டிருந்தது. இந்தப் பயிற்சிக்காலம் முடிந்து எல்லாத் தேர்வுகளும் முடிந்து பணிக்கு அமர்த்தப் படும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன் இவன்.  இவனுடன் பயிற்சியில் இருந்த அனைவரையும் மேலாளர் அழைத்தார். ”பயிற்சி முடிந்தால் உங்களைப் பணிக்கு அமர்த்தும் போது உங்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கும் தெரியுமா.?”
“தெரியும் சார்....நாளொன்றுக்கு  ஒரு ரூபாய் பத்தணா ப்லஸ் அலவன்ஸ் “என்று கோரசாகப் பதில் சென்றது
”பயிற்சி முடிந்து மெகானிக் வேலையில் அமர்வீர்கள் இல்லையா ? ஆனால் இதைவிட நல்ல பயிற்சி கொடுத்து சூபர்வைசராக வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் . கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்” என்றார்
அங்கிருந்த சுமார் எண்பது பேர்களும் கலர் கலராக விழித்துக் கொண்டே கனவு காண ஆரம்பித்தார்கள், நான்  உட்பட.
“ஆனால்.....” மேலாளரின் இந்த இழுப்பு எல்லோரையும் இவ்வுலகிற்கு அழைத்து வந்தது “ இந்த வாய்ப்பு உங்களில் பனிரெண்டு பேருக்கே கிடைக்கும் உங்கள் அனைவரையும் பலவித தேர்வுக்கு உட்படுத்துவோம் பிறகு உங்களில் பன்னிரெண்டு பேர்கள் தேர்வு செய்யப்பட்டு சூபர்வைசர் பொறுப்புக்கு பயிற்சி பெற அம்பர்நாத்துக்கு அனுப்பப் படுவீர்கள் தயாரா.?”என்றார். பலரது ஆர்வமும் பொங்கி வரும் பாலில் நீர் விட்டது போல் அடங்கி விட்டது. ஆணைக்கு உட்பட்டுத்தானே ஆக வேண்டும். வேறு வழி.?ஆக ஒரு சுப முகூர்த்த நாளில் அனைவரும் தேர்வுக்கு உட்படுத்தப் பட்டனர். பொறி இயலில் ட்ராயிங். கணக்கு. என்று பலவித தேர்வுகளுடன் ப்ராக்டிகல் என்னும் தேர்வும் நடந்தது தேர்வில் வெற்றி பெற்று அம்பர்நாத்துக்கு அனுப்பப் பட்டு இரண்டு ஆண்டுகள் கழிந்து வெற்றியுடன் திரும்பினால் சூபர்வைசராக வேலை. அப்போது தொழிற்சாலைக்குள் நுழைய சில்வர் பாட்ஜ் கிடைக்கும் மெயின் கேட்டில் செல்லலாம். வருகையைப் பதிவு செய்ய அட்டையில் நேரம் குறிக்கும் மெஷினில் “தண்”என்று தட்ட வேண்டாம். மெகானிக்காகவே பயிற்சிமுடித்தால் சூபர் வைசர் ஆக குறைந்தது பனிரெண்டு ஆண்டுகளாவது ஆகும். தேர்வு செய்யப் பட்டால் அது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் இதையெல்லாம் அந்த வார இறுதி நாளில் வீட்டுக்குச் செல்லும் போது அப்பாவுக்குச் சொல்ல வேண்டும் . அவரும் மகிழ்வார்  இருந்தாலும் தேர்வு ஆக வேண்டுமே...
இரு தினங்களுக்குப் பின் மீண்டும் அனைவரும் அழைக்கப் பட்டனர். மனம்”திக், திக் “என்று அடிக்கும் சப்தம் அந்த நிசப்தமான அறையில் எங்கும் கேட்டிருக்கும். மேலாளர் “ நான் குறிப்பிடும் சிலர் முன் வந்து நான் சொல்லும்படி இட பாகத்திலோ வல பாகத்திலோ நிற்கவேண்டும் “என்றார். பூரண அமைதியான அந்த சந்தர்ப்பத்தில் என்ன சொல்லப் போகிறார். யார் யார் தேர்வு செய்யப் படுவார்கள் என்னும் எண்ணங்களின் நடுவே அனைவரும் காத்திருந்தனர். முதல் பெயரை அழைத்து வலது பக்கத்தில் நிற்கச் சொன்னார் அடுத்து இரண்டு மூன்று என்று கூப்பிடக் கூப்பிட எனக்கு  நெஞ்சே வாய்க்குள் வந்து விடும் போலிருந்தது . ஆறாவதாக என்  பெயர் வாசிக்கப் பட்டது .ஆனால் இவனை இடப் பக்கம் நிற்கச் சொன்னார் அதேபோல் பனிரெண்டு பெயரும் வாசிக்கப் பட்டு ஒன்பது பேர் வலப் பக்கமும் மூன்று பேர் இடப் பக்கமும் நிறுத்தப் பட்டனர் இத்ற்குள் மீதி இருந்தவர்கள் முகங்கள் களை இழந்து போய் இருந்தது.
இந்த இடப் பக்கம் வலப் பக்க நிற்க வைக்கப் பட்டவர்கள் அடுத்து என்ன செய்தி என்று ஆவலுடன் இருந்தனர். முன்பே பனிரெண்டு பேர் தேர்வு செய்யப் படுவார்கள் என்று தெரிந்து இருந்ததால் தேர்வு ஆகிவிட்டோம் என்னும் மகிழ்ச்சி இருந்தாலும் இந்த இட வல வேறுபாடு எதைக் குறிக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவல் மிகுந்திருந்தது இடப்பக்கத்தில் இருந்த மூவரும் ப்ரொவிஷனலி தேர்வு செய்யப் பட்டதாகச் சொன்னார். என்னை அழைத்து ”உன் பேச்சைக் குறைக்க வேண்டும். முந்திரிக் கொட்டை மாதிரி எங்கும் எதிலும் மூக்கை நுழைக்கக் கூடாது  ஒரு வார கால அவகாசம் “ என்று எச்சரித்தார் இருந்தாலும் இன்றுவரை இவனது அந்த முனைப்பு குறைந்துள்ளதா என்பது கேள்விக்குறியே. மற்ற இருவரும் அவர்களது குறைகள் எடுத்துக் கூரப்பட்டு எச்சரிக்கப் பட்டனர். தேர்வு ஆன பனிரெண்டு பேரும் cloud nine –ல் மிதந்தனர்.
அச்சமயம் என்னுடைய தந்தையார் உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருந்தார். அந்த வார இறுதியில் ( வார இறுதியில் வீட்டுக்குச் செல்லலாம் )மருத்துவ மனையில் தந்தையைப் பார்த்து இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டேன் . தந்தையும் இவன் வாழ்வில் இன்னும் பல வெற்றிகள் பெற்று முன்னுக்குவர வாழ்த்தினார். ஒரு கொசுவலையும் காலுக்கு நல்ல ஷூவும் வாங்க வேண்டும் என்றார் அதற்கான  ஏற்பாடாக அம்மாவிடம் பணம் கொடுக்கச் சொன்னார்.

இரண்டு நாட்கள் கழிந்திருக்கும் . இவன் பயிற்சியில் இருக்கும் போது மேலாளர் அழைப்பதாகச் செய்தி வந்தது. என்ன சொல்லப் போகிறாரோ ஒரு வேளை தேர்வு ஆகவில்லை என்று கூறுவாரோ என்ற பயத்துடன் அவரது அலுவலக அறையில் இவன் நுழைந்தான். என்றும் இல்லாமல் இவனை அவர்முன் அமரச் சொன்னார். இவன் குடும்பம் தந்தை பற்றியெல்லாம் விசாரித்தார். தந்தை மருத்துவ மனையில் இருப்பதாக இவன் கூறியதும் அவரை எப்போது பார்த்தான் என்று கேட்டார். “ உன் தந்தையின் நிலை சற்று கவலைக்கிடம்  நீ உடனே போய்ப் பார் “ என்றார். ஒரு வினாடி இந்த உலகமே சுழல்வது போல் தோன்றியது இவனுக்கு. வெளியே செல்ல எத்தனித்தவனிடம் “ மருத்துவ மனைக்குப் போகாதே . அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப் பட்டு விட்டது “ என்றார் அந்த நாள் 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி

. அப்பாவின் அரவணைப்பைக்  குறிக்கும்  ஒரு காணொளி 







      -

வெள்ளி, 1 மார்ச், 2019

ஏதேதோ நினைவுகள்



                                      ஏதேதோ நினைவுகள்
                                    --------------------------------------
ஓஅது அந்தக்காலம்  என்பது எல்லோரும் பொதுவாக நினைப்பதுதானே நானும் விதி விலக்கல்லவே நினைவுகளுக்கு ஒரு ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை இருந்தாலும் ஓரளவு ஒழுங்கு படுத்தி சொல்கிறேன் எதை முதலில் சொல்வது? 73 ஆண்டுகள் நீண்டகாலம்தானே  எத்தனையோ நிகழ்வுகள்இந்த 73 ஆண்டுகளில் பெற்றோருடன் இருந்தது  வெறும் 18 ஆண்டுகளே இருந்தாலும் நினைவுகளை ஆக்ரமிப்பது அந்தவருடங்களே என் கணவருடன் வாழும் நாட்கள் அதிகமானாலும்  நினைவு என்னவோ அதற்கு  முந்தைய காலம்தான் பசுமையாக இருக்கிறது  எனக்கும்  என் தமக்கைக்கும்  இரண்டே  வயதுதான் வித்தியாசம் ஒன்றாகவே வளர்ந்தோம் எல்லா நிகழ்வுகளும் அவளுக்கும் தெரியும் ஆனால் ஒரு வித்தியாசம் எனக்கு நினைவில் இருப்பது அவளுக்கு இருக்காதுஅவளுக்கு நினைவிலிருப்பது எனக்கு இருக்காதுஆனால் இருவருக்கும் நினைவிருப்பது பள்ளிக்குச் சென்ற நாட்களே  ஒரு முறை நானும் அவளும் படித்தபள்ளிக்குச் சென்று பார்க்க விரும்பினோம் புகைப்படங்கள் சில எடுத்தோம் அவற்றில் சில






இப்போதைய ஒரு பள்ளிச் சிறுமியுடன்










கடைசியாக புடவைக்கடை 


நான்படித்து முடித்தபின்  வேலை பார்க்க விரும்பினேன்  அப்போதைய வாட்ச் ஃபாக்டரியில் ட்ரெயினி  ஆகச் சேர்ந்தேன் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில் சேர்க்கப்பட்டேன் இப்பொதும் அந்த வழியே செல்லும்போது  அந்த நினைவுகள்  முட்டு மோதும்   என் கணவர் கனரக கொதிகலன் தொழிற்சாலையில் தரக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தார்  நானும் எனக்கும் அந்தவிஷயங்கள் சில தெரியுமென்று சொன்னேன்  அந்தக் காலத்தில் ஜப்பானியர்கள் சொல்லிக்கொடுத்து எழுதி வைத்திருந்த  நோட் புத்தகத்தில் ஸ்டாடிஸ்டிகல்  அனாலிசிஸ்  பற்றி எழுதி வைத்திருந்ததைக்  காண்பித்தேன்   அதில் சில வார்த்தைகள் இப்போது ஏதோ ஜார்கன் மாதிரி இருக்கிறது
நானும் அக்காவும்  1962ல்


எச் எம் டி  வாட்ச் ஃபாச்டரியில்  1964 ல் இடது ஓரத்தில்  அமர்ந்திருப்பது நான்


பயிற்சியில்  இருந்தபோது திருமணம் ஆயிற்று  சில நாட்களில் அவருக்கு வேறு வேலையாகி சென்னை சென்றோம் வில்லிவாக்கத்தில் இருந்தோம் எனக்கு அங்கு மறக்க முடியாதது நாங்க இருந்தஸ்டோர் குடியிருப்புக்கு வரும்பட்டாணியரைத்தான் சுமார் ஏழு அடி உயரம் தலையில் தலைப்பாகையுடன்   பார்த்தாலே பயமாய் இருக்கும்  அவனிடம் கடன்  வாங்கியவரிடம் வட்டி வசூலிக்க வருவான்  நமக்கு ஏதும் தொந்தரவு  இல்லை என்றாலும்  ஊர் விட்டு ஊர் வந்து கடன்கொடுத்து வட்டி வசூலிக்கும்  அவர்கள் 
வித்தியாசமானவர்கள்தான் ஆச்சரியப்பட வைக்கும்       

திங்கள், 25 பிப்ரவரி, 2019

தவிர்க்க முடியாததை அனுபவிக்க வேண்டும்





                                            தவிர்க்க முடியாததை  அனுபவிக்க வேண்டும்
                                              -----------------------------------------------------------------------
என் உடல்நலம்பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன் உபாதைகள்  என்னும் தலைப்பில் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன் முக்கிய காரணம் என்னவென்றால்பல உபாதைகளை பெற்று நலம் அடைந்தவன்நான்  என் எழுத்துகள் உண்மையின் பிரதி பலிப்பாயிருந்து வாசகர்களும் அவை குறித்த அனுபவங்களைத்தெரிந்து கொள்ள வேண்டும் என்னும்  ஆசைதான்  பலரும்பின்னூட்டங்களில் உடல் நலம் பேணும் படி எழுதி இருக்கிறார்கள்  எனக்கு சிலசமயம் உடல் நலம் பேணுவது என்றால் என்ன என்பதே சந்தேகமாக இருக்கும் வாழ்க்கையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து  உணவு பயிற்சி போன்றவைகளைக் கடை பிடிப்பதே உடல்நலம் பேணுதல் என்பதேஎன் அறிவு இளவயதில் நானொரு ஸ்போர்ட்ஸ்மன்  கிரிக்கட் விளையாடுவேன் தடகளப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசும்வாங்கி இருக்கிறேன் பயிற்சியில் அம்பர்நாத்திலிருநபோது உயரம் தாண்டுவதிலுல் டேபிள் டென்னிசிலும் பரிசு பெற்றவன் போல் வால்டில் பங்கு பெற்றவன்  இருந்தும் அவ்வப்போதுவரும் உபாதைகளில் இருந்து தப்பியதில்லைநிறையஎழுதி இருக்கிறேன்   கடந்தசில மாதங்களாக நடப்பதே பிரச்சனை யாகி இருக்கிறது மகாத்மா காந்தி நடப்பதே சிறந்தபயிற்சி என்று இருந்தவர்  நானும்வேறு பயிற்சிகளில் ஈடுபட முடியாத போது நடையில் கவனம்செலுத்தி தினம் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறேன்இப்போதெல்லாம் என்னால் தனியெ எங்கும் போக முடிவதில்லை  அனுமதியுமில்லை
 என்  வீட்டருகே ஒரு பார்க் இருக்கிறது அதில் தினமும் முடிந்ததோ இல்லையோ நடைப்பயிற்சியில் இருப்பேன்  நடையின் தூரமும் வேகமும் குறைந்துகொண்டே வந்தது ராஜ நடைஎன்று பீற்றிக் கொள்ளும் நான் தள்ளாடி தள்ளாடி நடக்க் வேண்டியதாய்ப் போய்விட்டது இந்தக் குறையுடன் மருத்துவரை அணுகியபோது எம் ஆர் ஐ டெஸ்டுக்கு உட்படச் சொன்னார்  அதுபற்றியும் எழுதி இருக்கிறேன் பலனேதும் கிடைக்கவில்லை எந்தபயணமும் மேற்கொள்ள முடிவதில்லை
 சில நாட்களுக்கு முன்  பார்க்கில் நடந்து  வந்து கொண்டிருந்த நான்  என்கட்டுப்பாட்டையும் மீறி வேகமாகத் தடுமாறியே வேகமாக நடக்கத்துவங்கினேன் மனதில்  இது சரி இல்லை என்று தோன்றவே  ஒருஇடத்தில் அமரப்போகும்போது நிலை தடுமாறி சாய்ந்து விட்டேன்  சில நல்ல மனிதர்கள் என்னை வீட்டில் கொண்டு விட்டார்கள் அதிலிருந்து வெளியே நடக்கப்போவதில்லை மீண்டும் மருத்துவரிடம் எல்ல நிகழ்வுகளையும் விவரித்தேன் என்னை c t scan க்கு உட்படுத்தினார்கள்  gait  assessment என்னும்  சோதனை   நடத்தினார்கள் வயதாவதன் பிரச்சனை என்கிறார்கள் சில  பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் நானும் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் அனுசரிக்கிறேன்  பார்க்கலாம்  எந்த வேலையும் செய்யாமல் நான் இருக்க என்மனைவி அதிகம் சிரமம் எடுக்கிறாள் கணினி முன்பு எழுதுவதே என் பொழுது போக்கு  அதிக நேரம்வாசிப்பில் கவனம் செலுத்தமுடிய வில்லை
பரிசோதனைகளில் பெரிதாக ஏதும்கண்டு பிடிக்கவில்லைஎன்னை ஒரு காமிரா முன் நடக்கச் சொன்னார்கள் அதில் என் இடப்பாகம்சற்றே  தொய்ந்து இருப்பதாக atrophy என்று சொன்ன நினைவு அட்ராஃபி என்றால் சுருங்குதல் என்று அர்த்தம்மூளையின் ஒரு பாகம் சுருங்கி விட்டதாம் வயதானதன் கோளாறு  என்று சொன்னார்கள் இன்னும் மோசமாகாமல் இருக்க சில பயிற்சிகள் சொன்னார்கள் ஒவ்வொரு முறையும்  எனக்கு நான் எழுதி இருந்த செய்யாதகுற்றமென்னும் பதிவே நினைவுக்கு வரும் தவிர்க்க முடியாததைஅனுபவித்து தான் தீரவேண்டும்/ என்மக்களுக்குக் கூறும் அறிவுரைகள் எனக்கும் பொருந்தும் தானே  பார்ப்போம் இன்னும் எத்தனை நாள் என்றுஅது தெரியும்போது கணக்கிடநானும் இருக்கமாட்டேன்
உலகமே நீ வாழவந்தவன் என்று கற்பனையில் எழுதியவன் எல்லாமே பொய்யாகி புனை சுருட்டாகும்போது........................! 

சனி, 23 பிப்ரவரி, 2019

நாய் படும்பாடு



                                                  நாய் படும் பாடு
                                                  ----------------------------

 அது என்னவோ தெரியவில்லை நாய்களைக் கண்டாலே ஒரு பாசம்  ஒரு ஞாயிறு என்று நினைக்கிறேன்   மதிய உணவுக்குப் பின் ஒரு குட்டித் தூக்கம் போடலாம் என்று இருந்தபோது ஒரு நாய் வாலை ஆட்டிக்கொண்டு சிநேக பாவத்துடன்  வந்தது பார்க்க் யாரோ வளர்க்கும் நாய் போல் இருந்தது நானும் அதைத் தடவிக்கொடுத்த போது  உரிமையுடன் வீட்டுக்குள் வந்து சோபாவில்  ஏறிப் படுத்துக் கொண்டது  மாலையானதும்சிலபிஸ்கட்டுகளைத் தின்னக் கொடுத்தேன்  சிறிது நேரமிருந்து விட்டு அதுபோய் விட்டது மறு நாளும் வந்ததுஅதேபோல் அன்றும் வாலை ஆட்டிக்கொண்டு வந்து சோபாவில் ஏறிப் படுத்துக் கொண்டது நானும் ஐயோ பாவம்வாயில்லா பிராணி என்று பேசாமல் இருந்து விட்டேன் இது இப்படியே தொடர்வது கண்டு என்மனைவி அதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கச் சொன்னாள்  யாராவதூரிமையாளர்கள் நம்மிடம்வந்து சண்டை போடலாம் என்றாள்  சிறி து யோசனைக்குப் பின்  எனக்கு ஒரு ஐடியா தோன்றியது தினமும் சிறிது நேரம் சோபாவில் படுத்து விட்டு சமத்தாக அதுவே போவது கண்டு அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய  நினைத்தேன்   அதன் காலரில் ஒரு சீட்டில்  நிகழ்வுகளை விவரித்து எழுதி கட்டி விட்டேன்  மறு நாள் என்ன ஆச்சரியம்   அதன்  காலரில் ஒருசீட்டுடன் அதுவந்தது அதை எடுத்துப் பிரித்துப்படித்தால்
‘
சார் / மேடம்   மிக்க நன்றி . ஒரு வாயில்லா ஜீவனுக்கு அடைக்கலம்கொடுத்து தங்க அனுமதித்ததற்கு மிக்க நன்றி அது என் நாய் இங்கே என்வீட்டில் அமைதியாக தூங்க முடியாமல்  அவதிப்படும் அது தனக்கு ஒரு இடத்தைத்தேடிக்கொண்டது என் வீட்டில் நான்கு பிள்ளைகள் என்மனைவி  அந்தநாய்  சற்று நேரம் நிம்மதியாய் இருக்க விடுவதில்லை அதனால் தான் அது உங்கள்வீட்டைத் தேடி வந்தது நானும் அதுபடும்பாட்டை அனுபவிக்கிறேன்   எனக்கும் உங்கள்வீட்டில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்க அனுமதி கிடைக்குமா  அப்படியானால் நானும்நிம்மதி யுடன் மதியவேளையைப்போக்கலாம்
நன்றியுடன்   என்று எழுதி இருந்தது


படம் இணையத்தில்  இருந்து