Friday, January 11, 2013

விளிம்புகளில் தொடரும் கதை



                 விளிம்புகளில்தொடரும்கதை.
                  -------------------------------------------------------


(ன்  ”வழ்வின் விளிம்பில் “என்றிறுகை எழி இரந்தேன்  
 gmbat1649.blogspot.in/2010/11/blog-post_21.html அ



என்னதான்  எண்ணமாக  வருகிறது..? வாழ்வா  இல்லை  சாவா.? நான்  வாழ  வேண்டும்  என்றால்  சரியான  காரணம்  இருக்க  வேண்டும்  அல்லவா. நான்  போய  விடுவேன்  என்று  எண்ணி, ரயிலடிக்கு  வண்டியேற்ற  வந்திருப்பவர்கள்  போலல்லவா   தெரிகிறார்கள்  இங்கு  கூடியுள்ளவர்கள் .
         " ரயில்  புறப்பட  இன்னும்  இரண்டு  நிமிஷங்கள்  தானிருக்கிறது."



          ரங்கசாமியின்  நேரம்  முடிந்து  விட்டதா.? அவன்  உயிருடன்  வீட்டுக்குத்  திரும்புவானா.  அவன்  நினைப்பதுபோல்  எண்ணத்தின்  சக்தியால்  சாவைத் துரத்துவானா. எண்ணத்துக்கு  சக்தி  கொடுக்க  கடமைச்  சுமைகள்  இல்லாததால்  வலு     இழந்து   மடிவானா...
         அவன்  ஏன்  சாக வேண்டும்..? ஏன்  சாகக்கூடாது.? கேள்விகளுக்கு  விடை  கிடைக்குமா.? கிடைக்காதே.! கிடைக்குமானால்  புத்தன்  வெற்றி  கண்டதாகாதா. ? வெற்றி  கண்டிருந்தால்..... எல்லாம்  வீண்  கேள்விகள்...
         ஒன்று  மட்டும்  புரிந்து  கொள்ள  வேண்டும். வினை  விதைத்தவன்  வினை  அறுப்பான் . தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான். மரண  பயம்  இல்லாமல்  சாக  வேண்டும் . ரங்கசாமியின்  கொடுப்பினை  என்ன..?
என்று முடித்ிரந்தேன். அன் ொடர்ச்சியாக அல்லு இரண்டாம் பியாகை எடத்ுக் கொள்ளாம் )



ரங்கசாமி அப்போது பிழைத்துக் கொண்டான். ஆனால் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது அல்லவா. ஒரு நாள் அவன் திடீரென்று வாழ்விலிருந்து பிழைத்துக்
கொண்டான்.அதாவது.இறந்தானா.?

என்னைப் பாருங்களேன். ஏதாவது பேசுங்களேன். தூங்கத்தானே செய்கிறீர்கள். நான் டிஸ்டர்ப் செய்ய மாட்டேன். நன்றாக உறங்குங்கள். “ மாற்றி மாற்றி இதையே கூறிக் கொண்டிருந்தவள் திடீரென்று வெடித்து அழ ஆரம்பித்து விட்டாள்.


அவள்  ஏன் அழ வேண்டும்.?அழுகை என்பதே ஒரு வடிகால்தானே. அழட்டும் நன்றாக அழட்டும். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ. எல்லோருக்கும் தெரிந்தது தானே. மனித உணர்வுகளுக்கு அழுகையும் அதன் பின் வரும் மறதியும் வரம்தானே. இருந்தாலும் ஏறத்தாழ ஐம்பது வருட தாம்பத்திய வாழ்வில் கை கோத்துக் கூடவே வந்தவர் திடீரென்று இல்லை என்றாகி விட்டால்.......எத்தனை எத்தனை நினைவுகள்.எத்தனை எத்தனை கனவுகள். ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்து வருகிறதே.

என்ன தைரியம் இவருக்கு.?ஏதொ சம்யுக்தையை குதிரையில் கவர்ந்து போன பிருதிவி ராஜா என்ற நினைப்பு. இருந்தாலும் அவர் சைக்கிளில் ஆரோகணித்து வருவதே கம்பீரமாகக் குதிரையில் வருவதுபோல்தான் இருக்கும். அந்த நாள் மறக்க முடியுமா.? தினமும் நான் போய்வரும் வழியில் எங்கிருந்தாவது என்னைக் காண நிற்கும் அவர் அன்று வீதியில் வழிமறித்து நிறையப் பேச வேண்டும் . இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் இடத்துக்கு வந்து விடு. விவரங்கள் கடிதத்தில்என்று கூறி என் கையில் ஒரு கடிதத்தைத் திணித்துவிட்டு சிட்டாய் பறந்து விட்டார்.


சில காரியங்கள் நடக்கும்போது அவற்றின் முக்கியத்துவமும் பரிமாணமும் புரிவதில்லை.என்ன ஏது என்று தெரியாமலேயே சிறிது நேரம் குழம்பி இருந்தாள். பிறகு ‘ ஐயோ இது தவறு அல்லவாஎன்று கேட்டுக் கொண்டாள். இருந்தாலும் மனசுக்குள்ளே சிறிது மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது. இப்போதும் அடிக்கடி அவர் கேட்பார். உனக்கு என் மீது காதல் இருந்ததா? காதல் இருக்கா.? இத்தனை வருஷங்களுக்குப் பின்னும் கேட்கும் கேள்வி அபத்தமாகத் தெரியவில்லையா என்று கேட்டால். Justice is not enough if it is done, but it should appear to be done also. அதுபோல காதலித்தால் மட்டும் போதாது காதலிப்பது தெரியவும் வேண்டும்.என்பார். எதையும் வெளிப்படையாகப் பேசும் குணம். அதுவே அவரின் பலமும், பலகீனமும்.

அந்தக் காலத்தில் காதல் என்றால் என்ன என்றே அறியாதவள்,ஏதோ ஒன்றால் ஈர்க்கப் பட்டு அவரை  சொன்ன இடத்தில் சந்திக்கத் துணிந்து விட்டாள். என்ன பேசுவது.? பேசுவதை விளக்கமாகக் கூறுவதில் தேர்ந்தவர், என்னவெல்லாமோ சொன்னார். ஆனால் அவள் அடிமனதில் இப்படி சந்திப்பது தவறு என்று ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் இல்லையென்றால் யாருக்கும் தெரியாமல் ரெஜிஸ்தர் கலியாணம் செய்து கொள்ளலாம்  என்றபோது தூக்கி வாரிப் போட்டது. ‘அப்படிச் செய்வது தவறுஎன்றுமட்டும் முனகினாள்.அம்மாவிடம் பேசுகிறேன் என்றும் கூறினாள். அம்மா ஒப்புக் கொள்ளவில்லை என்றால் .... அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றாள்.பிறகு அம்மாவிடம் அவரே பேசியதும் கலியாணம் நடந்ததும் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது.

திருமண விஷயம் குறித்து சொந்தங்கள் பலரிடம் கூறச் சென்றபோது. திருமணத்துக்கு இசைவு கேட்க வந்தாயா இல்லை சேதி சொல்ல வந்தாயா என்று பலரும் கேட்டனராம். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்
கொள்ளுங்கள். ஆனால் திருமணத்துக்கு வாழ்த்து கூற அவசியம் வாருங்கள் என்றாராம்.

என்ன இருந்தாலும் நெஞ்சுரம் அதிகம்தான் அவருக்கு. திருமணம் முடிந்து சென்னைக்குப் புதிதாய் குடித்தனம் வைக்கப் போனபோது எந்த ஒரு சாமானமும் வீட்டில் இருக்கவில்லை. முதலில் மண் சட்டி பானையில் தான் சமையல். ஒரு விக் ஸ்டவ். படுக்கப் பாய் தலையணை. வீட்டுக்கு வருபவர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். ஆனால் இதையெல்லாம் வாழ்வின் கஷ்ட காலங்கள் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. வாழ்வில் இதெல்லாம் மிகவும் சகஜம் என்பதுபோல் ஒரு குணம். எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவர் அவள் முதலில் உண்டாகி இருப்பதையும் மூன்று மாதங்கள் கழித்துத்தான் மருத்துவரிடம் கூட்டிச் சென்று உறுதிப் படுத்தினார். திருமணம் ஆவதும் கர்ப்பம் தரிப்பதும் சர்வ சாதாரண நிகழ்ச்சி என்று எடுத்துக் கொண்டார். இரண்டாவது மகனை பிரசவிக்க அன்று காலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்த மருத்துவ மனைக்கு நடத்தியே கூட்டிச் சென்ற அரைமணி நேரத்தில் சுகப் பிரசவம் நடந்தது. இதெல்லாம் நம் மேல் அக்கரை இல்லாததாலா, என்று பிற்காலத்தில் கேட்டபோது BLESSED ARE THOSE THAT ARE IGNORANT  என்று கூறுவார்.அப்போது பிரசவ அறையில் தன்னைப் பார்த்த பிறகு இனி வேறு குழந்தை வேண்டாம், உன் வலியை உன் முகத்தில் கண்டேன், இனியும் உன்னைக் கஷ்டப் படுத்தமாட்டேன் என்றார். அதுவே அளவோடு பெற்று இதுவரை நிறைவோடு வாழக் காரணமாயிருந்தது.


ஒரு முறை வாழ்க்கையில் வேறு பெண்களை நினைத்திருக்கிறீர்களா என்று கேட்டபோது ‘ என் மனம் ஒரு ஃபிலிம் நெகடிவ் போன்றது. ஒரு முறைதான் எக்ஸ்போஸ் ஆகும். நீதான் எக்ஸ்போஸான அந்தபடம் “என்பார்.

நான் மட்டும் என்னென்னவோ எண்ணிக் கொண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கென்ன ஒரு கவலையுமில்லாமல் போய்ச் சேர்ந்து விட்டீர்களே என்று மீண்டும் அழத்துவங்கி விட்டாள் நான் இற்ந்தால் யாரும் அழக்கூடாது. நான் என் கடமைகளைச் செய்துவிட்டேன். இன்னும் ஜீவித்திருப்பது அடுத்தவருக்கு தொல்லையாய்த்தான் இருக்கும்என்பார்..தனிப்பட்ட முறையில் எந்த தேவையும் எதிர்பார்ப்பும் இல்லாதவர். ஆனால் அவர் செலுத்திய அளவில் பாதி அன்பாவது கிடைப்பதில்லையே என்ற ஏக்கம் எப்போதும் உண்டு. அன்பை வெளிப்படையாகக் காட்டுபவர் எல்லோரும் அதுபோல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததில் ஆச்சரியம் இல்லை.


நினைவுகள் போட்டிபோட்டுக் கொண்டு வருகின்றன. சில அந்தரங்கமானவை . வாய்விட்டுக் கதற முடியவில்லை. ‘ரயில் கிளம்ப இன்னும் இரண்டு நிமிஷங்களே உள்ளன ‘ என்று வண்டி ஏற்றிவிட வந்தவர்கள்  இல்லாமல் எதிர்பாராத விதமாய்ப் போய்ச் சேர வேண்டும் என்ற அவர் ஆசை நிறைவேறிவிட்டது. அது ஒரு வகையில் நல்லதுதான். அவரால் அவரது தனித்தன்மையை விட்டு விட்டு எங்கும் இருக்க முடியாது. அது தந்தையர் குணம்போலும். தாயானவள் அனுசரித்துக் கொண்டு போவாள்.உன்னை விட்டு என்னால் எங்கும் இருக்கமுடியாது. உனக்கு முன்னால் நான் போய்ச் சேரவேண்டும் . இல்லை நாம் இருவரும் ஒரே நேரத்தில் போக வேண்டும் என்பாரே. அவர் போய் தான் மட்டும் இன்னும் இருக்கிறோமே என்னும் ஆற்றாமை அலைக்கழிக்க மீண்டும் கதறுகிறாள்.

பெண்கள் வட்டத்தைப் போன்றவர்கள். ஆதி அந்தம் தெரிந்து கொள்வது மிகவும் கடினம். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் பக்குவம் படைத்தவர்கள். ‘ என்னைப்போல் plan your work and work your plan என்று இருப்பவர்கள் அல்லஎன்று ஏதேதோ சொல்வாரே. அவருடைய எந்த குணம் குறை கொண்டிருந்தது என்று சொல்வதே கடினம். ஆங்... அந்த முன் கோபம்தான் நம்முடைய எண்ணங்களையும் சொல்ல விடாமல் தடுக்கும். அதற்காக அன்பு இல்லாதவர் என்றோ ஆணாதிக்கம் கொண்டவர் என்றோ கூற முடியாது.மனசாலும் பெச்சாலும் செய்கையாலும் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்பாரே.


வாயுவேகம்  மனோவேகம் என்பார்கள். வாயு வேகத்தைவிட மனோவேகம் அதிகம். ஒரு சில வினாடிகள் இருக்குமா, ரங்கசாமி குப்புற வீழ்ந்து.?அவன் போய்ச் சேர்ந்துவிட்டான் என்ற நினைப்பில் எத்தனை எத்தனை எண்ணங்கள்.....ஏதோ அசைவு தெரிகிறதே என்று பார்த்தால்... ரங்கசாமி கண்விழித்துப் பார்த்து “ ஏனம்மா அழுகிறாய். நான்தான் அவனை எட்டி உதைத்து விட்டேனேஎன்று கூறியபடி  சிரிக்கிறான்......!

நான் விடும் மூச்சுக் காற்று , என் ஜீவாத்மா அந்தப் பரமாத்மாவுடன் அந்தகாரத்தில் ஐக்கியமாகு முன்னே சிறிது நேரம் இங்கேயே உலாவி இருக்க வேண்டும். நீ படும் துக்கங்களைத் தாங்க முடியாமல் மீண்டும் என் உடலில் புகுந்து கொண்டிருக்க வேண்டும். நீயில்லாமல் நானில்லை நானில்லாமல் நீயில்லை. வா... என்னோடு நீயும் வா  அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “ இருங்கள்... இருங்கள் .. நானும் கூட வருகிறேன்..என்று கூறியபடி அவனை அணைக்கிறாள். சரிந்து விழுகிறாள்.

நடந்தது ஏதும் புரியாமல் இவர்களை இந்த கோலத்தில் பார்த்தவர்கள். அவரவர் கற்பனைக்கேற்றபடி கதைக்கிறார்கள்.  
---------------------------------------------------------------  ...
 

 
 
 
 

   
 



13 comments:

  1. அழுக்கான எழுத்து நடை .. நல்ல கதை ...

    ReplyDelete
  2. தொடர்ந்து எழுதுங்கள் அய்யா ...

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete


  4. கண்ணீரின் "விளிம்புகளில் தொடரும் கதை"


    இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. மிக மிக அருமை
    அந்தச் சூழலிலேயே ஆழ்ந்து படித்து ரசித்தேன்
    வித்தியாசமான சிந்தனை
    மனம் கவர்ந்த அருமையான கதை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய
    பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. என்ன ஒரு சரளமான எழுத்து....ஒரு நீண்ட இடை வெளிக்குப்

    பிறகு ஒரு அற்புதமான கதையை படித்த உணர்வு என்னுள்

    ReplyDelete
  8. சிற்சில இடங்களில் எழுத்துரு சரியாத் தெரியவில்லை. உடைந்து வருகிறது. நாளை மறுபடி பார்க்கிறேன். என் கணினியில் கோளாறுனு நினைக்கிறேன். நெட்வேறே சொதப்பல். :(

    ReplyDelete
  9. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete

  10. @ ராஜபாட்டை ராஜா.
    அழுக்கான(?) எழுத்து நடை.எழுத்துப்பிழை என எடுத்துக் கொள்ளவா இல்லை நிஜமாகவே.....?
    வருகைக்கு நன்றி,
    @ தமிழ் காமெடி உலகம்
    @ இராஜராஜேஸ்வரி
    @ ரமணி
    @ ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி
    @ கீதா சாம்பசிவம்
    @ டாக்டர் கந்தசாமி
    @ ரஞ்ச்னி நாராயணன்.
    வருகைக்கும் உற்சாக மூட்டும் கருத்துக்கும் நன்றி. ஆர் ஆர் ஆர்0இன் மற்றும் ரமணியின் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. ரஞ்சனியின் முதல் வரவுக்கு (?) நன்றி. எல்லோருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. இன்னிக்குத் தான் படிச்சேன். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. முழுசும் முடிக்கிறதுக்குள்ளே பப்ளிஷ் ஆயிடுத்து. இம்மாதிரித் தம்பதிகள் அபூர்வம்.

    ReplyDelete
  13. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அய்யா

    ReplyDelete