Monday, April 24, 2017

சென்னையில் நான் --- சில நிகழ்வுகளும் நினைவோட்டங்களும்


                         சென்னையில் நான்  ----- சில நிகழ்வுகளும்நினைவோட்டங்களும்
                           ----------------------------------------------------------------------------------------


இந்தமாதம்  அதாவது ஏப்ரல் 18 முதல் 22  ம் தேதி முடிய நான்  சென்னையில் இருந்தேன்   ஏதோ ஒரு காரணத்துக்காக நான்  சென்னை செல்வதானாலும்   அந்த பயணத்தை  நான்  வலைப் பதிவர்களை சந்திக்கும்  ஒரு வாய்ப்பாகக் கருதுவேன்   இந்தமுறையும் பலரையும் சந்திக்க நான்  விரும்பினாலும்  சிலரையே சந்திக்க முடிந்தது/ சென்னையில் கொளுத்தும் வெயிலில் நான்  பலரை சந்திக்க அழைத்தாலும்   வர இயல வில்லை என்று சொல்லிவிட்டால் வருத்தப் படுவது குறைவாயிருக்கும்  ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் உதாசீனப் படுத்துவது வருத்தம்  தருகிறது இதுவே எனக்கு வலை நட்புகளைப் பற்றிய  மதிப்பீட்டிலொரு மாற்று குறைய வைக்கிறது. இருந்தாலும் நான்  பயணத்தில் இருந்தபோதே  வருகிறேன் என்று சொல்லி இருந்தாலும்   தவிர்க்கமுடியாக் காரணங்களால்  வர இயலவில்லை என்று தொலை பேசியில்  தெரிவித்த திண்டுக்கல் தனபாலன் போன்றோர் மதிப்பில் உயர்கிறார்கள்  என்னை ஒரு தொந்தரவு என்று எண்ணும் வகையில் நான்  விடாது தொடர்பு கொண்டும்  வராதவர்கள்  குறைந்த பட்சம் தங்கள் இயலாமையைத் தெரியப்படுத்தி இருக்கலாம் இதில் வருகிறேன்  என்று சொல்லி வராதசிலரும்  உண்டு  . Let bygones be bygones.  I learn from my experiances . இந்த முறை வெகு நாட்களாக சந்திக்க விரும்பிய பூவனம் ஜீவியை சந்தித்தேன்   அவரை நானும்  என்னை அவரும் நேரிடையாய் அறியக் கிடைத்த ஒரு வாய்ப்பு  ஸ்ரீராம் காலையிலேயே வந்து சென்றார்,  மதியம்  தில்லையகத்து கீதா, தம்பட்டம்  பானுமதி  வே நடன சபாபதி ஜீவி  ஆகியோர் வருகை தந்தனர் இவர்களுள் ஸ்ரீராமும்  கீதாவும்  தங்கள் புகைப்படங்கள் வருவதை விரும்புவதில்லை 
திரு வெங்கட்ராமன் கணேசன்  (ஜீவி)
வே. நடன சபாபதி
திருமதி பானுமதி, நான்  .ஜீவி, நடனசபாபதி
video
                            ஒரு சிறியாணொளி
எங்கள் ப்ளாக் கேட்டிருந்த சீதை ராமனை மன்னித்தாள்  என்னும் தலைப்புக்காக நான்  எழுதி இருந்த பதிவுக்கான பின்னூட்டங்கள்  நான்  பெங்களூர் வந்தபின்பே வாசித்தேன் அது குறித்து எல்லோருக்கும்  மறுமொழி தருவது நீண்டு விடும் என்பதாலும்  நான் எழுதியது கதை வடிவில் இல்லை என்றும்  கட்டுரை போல் இருக்கிறதுஎன்றும்  படித்தேன்   எனக்கே அந்த சந்தேகம் இருந்ததால் ஸ்ரீராமுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியைஇங்கே வெளியிடுகிறேன்
 அன்பின்  ஸ்ரீராமுக்கு வணக்கம்  நிபந்தனையுடன்  கதை கேட்டீர்கள் ஆனால் நான் எழுதிக் கொடுத்திருப்பது கதையின் இலக்கணத்துக்கு (அப்படி ஒன்றிருந்தால் ) உட்படாதது நான்  சற்றே வித்தியாசமாய்ச் சிந்தித்து எழுதி இருக்கிறேன் உங்கள் தயவால் கம்பராமாயணம் சில பகுதிகளுக்கு  மீண்டும்  சென்றேன்  பிரசுரிக்க முடியாதென்றால் தெரியப் படுத்தவும் இப்படிக்கு அன்பும்  நன்றியுடனும்  ஜீஎம்பி ”
அதற்குப் பதிலாக ஸ்ரீராம் இதைத்தான் எதிர்பார்த்தேன்.  கட்டாயம் வெளியிடுகிறேன்.  அனேகமாக ஏப்ரல் 18.  கணினிக்கு வந்ததும் கன்பர்ம் செய்கிறேன்.  நன்றி.
 மேலும் கதைக்கு இலக்கணமாக  அவர் எழுதி இருந்தவரிகளும் இதோ சாதாரணமாக ஒரு சம்பவத்தை வைத்து கதை புனைவார்கள்நீங்கள் மொத்த சம்பவத்தையும் கோர்த்து, ஒரே வரியில் முடித்து விட்டீர்கள்அதுதான் நீங்கள் சொல்லும் கதையின் இலக்கணமோஒரு சம்பவம்...  தொடர்ந்து ஒரு உரையாடல்...  முடிவுஎப்படியோ.. இதை ஏப்ரல் 18 காலை 6 மணிக்கு வெளியிடுகிறேன்.
நன்றி ஸார்.
( நான் சிறுகதையின்  இலக்கணம்  என்று ஏதும்  எழுதி இருக்கவில்லை )

 கதைக்கு இலக்கணம்  என்று ஏதும்  இருப்பதாக  எனக்குத் தெரியவில்லை  ஒரு வரிக் கதைகளும்  படித்திருக்கிறேன் முடிவில் சொல்ல வந்ததைச் சொல்கிறோமா என்பதே முக்கியம்   நான் எழுி இருந்தது என் புனைவு அல்ல,  ராமாயணக் காப்பியத்தில் இருந்ததை நான்  புரிந்து கொண்டதைச் சான்றுகளுடன் விளக்கி இருந்தேன்   ஸ்ரீராம்  என்னைச்  சந்தித்த போது  அவர் சொல்லும்இலக்கணப்படி ஒரு கதை எழுதினால் அதையும் பதிவிடுவதாகக் கூறி இருந்தார்  எனக்கு அந்த மாதிரியும்  எழுத முடியும்   அதையே கதையில் ராமன் சீதை என்னும் பாத்திரங்களைக் கற்பனை செய்து ஏதோ கதை ஒப்பேற்றி விடலாம்தான் ஆனால் எனக்கு அது சரியாகத் தோன்றவில்லை ராமன்  சீதை என்றாலேயே நம் மனதில் வருவது இராமாயணக் காப்பிய பாத்திரங்களே ராமாயணத்துக்கு யாரும் காப்பி ரைட் வாங்கி இருப்பதாகத் தெரியவில்லை. ராமனை ஒருதாரண புருஷனாகவே நம்  மக்கள் நினைக்கின்றனர் என்னால் அப்படி நினைக்க முடியவில்லை எல்லா குணங்களும் குறைகளும்  நிறைந்த பாத்திரங்களாகவே அணுகுகிறேன்  என் மனதில் தோன்றிய சில கருத்துகளுடன் கதை புனையத் தயார்படுத்திக் கொண்டேன்இருந்தாலும் அசல் கதையை சிதைக்கக் கூடாது என்னும்  முனைப்பும் இருந்ததுஅதுவே இந்த வடிவம் பெற்றுவிட்டது ராமாயணக் கதையை அநேகமாக எல்லோரும்  அறிந்துஇருப்பர் ஆகவே கதையை விளக்காமல் பாத்திரங்களை மட்டும்  அணுகுகிறேன்
ராமாயணத்தை நான்  ஒரு கதையாகவே எண்ணுகிறேன்   அதன்  பாத்திரங்களுக்கு இல்லாத குணா விசேஷங்களை  கற்பனை செய்யவும்  விரும்பவில்லை  இந்தப் பதிவே பலரத்து பின்னூட்டங்களுக்கு மறுமொழியாக இருக்கிறது என்று தோன்று கிறது
 சீதை ராமனை மன்னித்து விட்டாள் என்னும்  தலைப்பில் கூடிய சீக்கிரமே  எழுதுவேன்  என்  வலைத்தளத்தில் பதிவிடுவேன் அதுவாவது சிலர் நினக்கும்  சிறுகதை இலக்கணத்துக்குள் வருகிறதா பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும்       
      

Friday, April 14, 2017

சித்திரை விஷு


                                 சித்திரை விஷு
                                -----------------------


தெச்சி மந்தாரம் துளசி பிச்சக மாலைகள் சார்த்தி குருவாயூரப்பா நின்னெ கணிகாணேணம் என் மாமியார் பாடும் பாட்டு இன்று ஏனோ நினைவுக்கு வருகிறது ஏனோ என்ன இன்று விஷு நாள் அல்லவா  கேரள வேரைக் கொண்டுள்ள எங்கள் குடும்பத்தில் இந்த விஷு அன்று கணியும்  வைக்கப்படும்   நான்  என் மனைவியிடம் தினமும் உன்னை கணிகாணும்  எனக்கு இந்தக் கணி ஒரு பொருட்டே அல்ல என்பேன்  இருந்தும் பழக்கமாக இருக்கும்  இந்தக் கணி காணலுக்கு நான்  மறுப்பு சொல்வதில்லை. சின்ன பிள்ளைகளாக  இருந்தபோது இந்த நாளில் பெரியவர்களிடம்  இருந்து கிடைக்கும் கை நீட்டத்துக்கு ( நேட்டட்டதுக்கா) காத்திருந்ததும் உண்டு அதே பழக்கம்  இன்றும்  தொடர்கிறது என்ன எனக்கு மூத்தவர்களிடம் என்னால் வாங்கமுடிவதில்லை  ஆனால் என்னிடமிருந்து என்  மக்களும்  பேரக் குழந்தைகளும் வாங்குவார்கள் இந்த ஆண்டு என்  மூத்தமகன் வந்திருக்கிறான் என்  பெரிய பேரனும்  கூட இருக்கிறான் அவர்களுக்கு கைநீட்டம் கொடுத்து மகிழ்ந்தேன்
புஸ்தகா பத்மநாபன் வந்திருந்தார் மின்னூல் வெளியிட சில எக்ரிமெண்ட் பேப்பர்களில் கையெழுத்து வாங்கிச் சென்றிருக்கிறார் இன்னும்  பத்து பதினைந்து நாட்களில் என் படைப்புகள் மின்னூலாகவெளிவரலாம்
 மனச் சிறையில் ஆயிரம்  எண்ணங்கள் ஓடுகின்றன அப்போது தங்கள் மனச் சிறையில் அடைத்து வைத்திருக்கும்  என் மக்கள் எங்களைக்  கண்ணாடிக் கூண்டுக்குள் சிறை வைத்திருப்பதைப் பகிர்கிறேன் எதிர்வரும்  20ம் தேதி எதிர்பார்க்கும் எல்லாப் பதிவர்களையும் சென்னையில் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்  சிலருக்கு இதுவே ஒரு தொந்தரவாக இருக்கலாம் பொருட்படுத்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்
எங்கள் வீட்டுக் கணி
கண்ணாடிக் க்யூபுக்குள் நாங்கள் சிறை
 அனைத்து வாசக நண்பர்களுக்கு எங்கள் மனங்கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்                                   
Wednesday, April 12, 2017

அலைபாயுதே மனம் மிக அலைபாயுதே


                              அலைபாயு தே மனம் மிக அலை பாயுதே
                                -------------------------------------------------------நீண்ட நேர சிந்தனைக்குப் பின்  இந்தப் பதிவை எழுதுகிறேன் மனம்  அலை பாய்கிறது என்றால் பொதுவாகவே சங்கடமான விஷயங்களாகவே  இருக்கிறது ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக வலையுலகில் இருக்கிறேன்  இன்னும் சரியாகப் பிடிபடவில்லை. வலை நட்புகள் அநேகமாக வெறும்  அறிமுகங்களாகவே இருக்கிறார்கள் நான் அதையே நட்பாக்கிக் கொள்ள விழைகிறேன்  என்னை பொறுத்தவரை இந்த அறிமுகங்கள் நட்புகளாக மலர ஒரு உள்ளார்ந்த எண்ணம்  வேண்டும்  அதை டெவெலப் செய்ய ஒருவரை ஒருவர் கண்டு சந்திக்க வேண்டும்  அதுவே நல்ல நட்புக்கு வழிவகுக்கும்  இயன்ற அளவு அதைச் செயல் படுத்த முயற்சிக்கிறேன் நான் செல்லும்  இடங்களில் வலையுலக நண்பர்களைச் சந்திக்க முயன்று வருகிறேன்   பெங்களூருக்கு யார் வருவதாக இருந்தாலும்  என் வீட்டுக் கதவுகள் திறந்தே இருக்கும்  அதைச் சிலர் அறிவார்கள் எல்லோருக்கும்  எல்லா நேரமும் வலையுலக நட்புகளைச் சந்திக்க இயலுவதில்லை. சூழ்நிலை அமையும்  போது அதைப் பயன்படுத்த விரும்புகிறேன் யார் என்னைத் தொடர்பு கொண்டாலும் உடனே என்னில் எதிர்பார்க்கப்படுவதை உடனே செய்கிறேன் எனக்கு தொலைபேசியில் பேசுவது திருப்தி தருவதாயில்லை அதனிலும் அஞ்சல மூலம் கருத்துப் பரிமாற்றம்  நன்றாக இருக்கும்  என்று நம்புகிறேன்
 என்  எழுத்துகளைப் படிப்போருக்கு நான்  ஒரு திறந்த புத்தகம் என்று தெரியும் நான் சென்னை வரும்போதெல்லாம் பதிவுலக நண்பர்களை சந்திக்க விழைகிறேன்  நான்  ஒவ்வொருவர் வீட்டுக்குச் சென்று சந்திப்பது  நேரம்  எடுப்பது பல லாஜிஸ்டுகள் என சரியாகவருவதில்லை ஆகவே குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சிலரை  சந்திப்பது எளிதாக இருக்கும்  என்னும் எண்ணத்திலும் சந்தித்திராத பதிவர்கள் சந்திக்கமுடிவதையும்  கருத்தில் கொண்டு முயன்று வருகிறேன்   இதேபோல் நடந்த சந்திப்புகளில்தான் சென்னை வாழ்பதிவர்கள் சிலரை சந்தித்து இருக்கிறேன்   சந்திப்புக்கு வர இயலாதவர்களும் இருக்கலாம் ஆனால் அதை தெளிவு செய்தால் மனம் அலைபாய்வதைத் தடுக்கலாம் அல்லவா நேரமும் காலமும் சரியாக இருக்க வேண்டும் ஒவ்வொரு சென்னை விஜயத்தின் போதும் பலரைத் தொடர்புகொண்டு அவர்களது சௌகரியங்களைக் கேட்கிறேன் கம்யூனிகேஷன்  என்பது மிக முக்கியம் ஆகவே எழுதும் கடிதத்தில்  எல்லா விவரங்களையும்  கூறி அதற்கு பதில் எழுதும் போது அது அனைவருக்கும்  செல்லும்  விதம் எழுத வேண்டிக் கொள்கிறேன்  சந்திக்க விருப்பம் சொல்பவர்கள் எல்லாம் எல்லோரையும்  சந்திக்க வேண்டுமென்பதே என் அவா. அதற்கென்றே நேரமும் காலமும் சௌகரியப்படுமா என்றுகேட்கிறேன்  இல்லையென்றால் ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாமல் போகலாம் அனைவருக்கும் ஒரு விண்ணப்பம்  தயவு செய்து  மனதில் நோ என்றுநினைத்து  யெஸ் என்று சொல்லாதீர்கள் குறைந்த பட்சம் பதிலாவது போடுங்கள் இதையே மனம்  அலை பாய்கிறது என்றுகூறுகிறேன் என் அஞ்சல்களுக்குப் பதில் எழுதாமல் இருப்பது அலட்சியம் செய்வது போல் இருக்கிறது  எனக்கு அது மிகவும் வருத்தம்  தரும்  விஷயம் இதுவரை நான் யாருடைய கடிதத்துக்கும் பதில் எழுதாமல் இருந்ததில்லை. வலை நட்புகளை நேசிப்பதாலேயே சந்திக்கவும் விரும்புகிறேன்
 சரி விஷயத்துக்கு வருகிறேன்   நாங்கள் என் தம்பியின்  பேத்தியின்  திருமணத்துக்கு சென்னை வருகிறோம்  இந்த மாதம் 18ம் தேதி இரவு சென்னை வந்து  திருமணம்  21ம் தேதி என்பதால் 20ம்  தேதி சில வலைப்பதிவர்களை சந்திக்கவிருப்பம் சிலருக்கு அஞ்சல் மூலம்  தெரிவித்து இருக்கிறேன்   சந்திக்க வருவதாகக் கூறியவர்கள் எல்லோரும் சந்திக்க வேண்டி 20ம்  தேதி மதியம்  சென்னையில் என்  மகன்  வீட்டில் கூட வேண்டுகிறேன் என் மகன்  வீடு வேளச்சேரி விஜய நகர்ப் பேரூந்து நிலையத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் 100 அடி புற வழிச்சாலையில் இருக்கும்   சாய் சரோவர் என்னும்  பத்துமாடிக் குடியிருப்பில்  ஏழாவது தளத்தில் இருக்கிறது சிலர் ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கலாம் சிலர் இன்னும்  வராதிருக்கலாம்   ஆகவே வர இருப்பவர்கள்  தயை கூர்ந்து இதற்கு பதில் தெரிவிக்க வேண்டுகிறேன்  நான்  அழைப்புவிடுத்தவர்களில் ஸ்ரீராம்  நடன சபாபதி ஜீவி  தில்லையகத்து கீதா  தம்பட்டம் பானுமதி ஆதிராமுல்லை முனைவர் பானுமதி மின்மினிப் பூச்சிகள் சக்தி பிரபா  எரிதழல் வாசன்   ஆகியோர் உள்ளனர் இவர்கள் தவிர சௌகரியப்பட்டவர்களும்  வருவதை விரும்புகிறேன் இன்னும்  சில நாட்களே இருகும் தருவாயில் அனைவரையும்  மீண்டும்  தொடர்பு கொண்டு அவர்களது நிலையைக் கேட்டறியத் தாமதமாகலாம் என்பதாலேயே இந்த அலைபாயும் மனதின்  எண்ணங்களைப் பதிவாக்குகிறேன்   என்  தளத்துக்கு வரும் பதிவர்கள் எல்லோரையும்  சந்திக்கவிருப்பம்  இதையே ஒரு மினி பதிவர் சந்திப்பாக்கி வெற்றியடையச்செய்ய வேண்டுகிறேன்  என் தொலைப் பேசி தொல்லை பேசியாக இருக்கிறது இருந்தாலும்  தகவல் தெரிவிக்க 18ம் தேதிக்கு முன்   கீழ்கண்ட தொலைபேசிகளிலும்  கூறலாம்
எனது கைபேசி எண் 09686595097
என் மனைவியின்  கைபேசி எண் 09739453311
இன்னொரு எண்   07760593289
முடிந்தவரை அஞ்சலில் தொடர்புகொள்ள வேண்டுகிறேன் 
சில நாட்களாக ஃபயர் ஃபாக்சில் திறக்காமல் இருந்த என்  தளம் இப்போது திறக்கிறது என்னமாயமோ தெரியவில்லை.    

Thursday, April 6, 2017

உலகம் சிறியது


                                               உலகம்  சிறியது
                                                ----------------------


இந்த உலகமே மிகவும்  சின்னது. ஏது உலக சிந்தனை என்று நினைக்க வேண்டாம் சில நிகழ்வுகள் அப்படி நினைக்க வைக்கின்றன  பதிவுலகில் எழுதுகிற பலரது ஆசையும்  தனது படைப்புகளை மின்னூலாக்க வேண்டும்  என்று நினைப்பது தான்  நானும்  விதிவிலக்கல்ல என் ஓரிரு படைப்புகளை முன்னூலாக்கும்  முயற்சியில் முக்கால் தூரம் வந்து ஏமாந்தவன் நான். அதையே ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன்   பதிவுலக நண்பர் கரந்தை ஜெயக்குமார்  புஸ்தகாவை நாடும்படிக் கூறினார் தொடர்பு கொள்ள ஒருபெயரையும் தொலை பேசி எண்ணையும்   கொடுத்தார்  எனக்கு இம்மாதிரி விஷயங்களில் சாமர்த்தியம் போதாது இருந்தாலும் முயற்சிப்பொமே என்று அவர் கொடுத்திருந்த எண்ணை டயல் செய்தேன்  என்ன ஆச்சரியம்  மறுமுனையிலெடுத்தவர் என்னைப் பார்க்கவருவதாகக் கூறி மறு நாள் காலையில் வந்தும் விட்டார்  சிறிது நேரம்  பேசிக்கொண்டிருந்தோம்   அவரும்  பி எச் ஈ எல் குடியிருப்பில் இருந்தவர் என்றார் வயதில் மிகவும் இளையவர்  அவரது தந்தையின்  பெயரைக் கூறினார்  நான்  1991 ம் ஆண்டே பி எச் ஈ எல்லை விட்டவன் என்றேன்   அவரது தந்தையார் பெயர் சொன்னார் அந்தப் பெயரில் பலரை எனக்குத் தெரியும்  குறிப்பிட்டுக் கூற அவரால் இயலவில்லை.  மின்னூலாக்க வழிமுறைகள் பலவற்றை கூறினார்  எனக்கு நான்  ஏற்கனவே நூலாக்கி இருந்த சிறு கதைத் தொகுப்பை வெளியிட முடியுமா என்று கேட்டேன்   செய்யலாமே என்றார்  எனக்குக் கூடவே என் நாவலையும்  கவிதைத் தொகுப்புகளையும் வெளியிடும்  ஆசை வந்தது நான்  செய்யவேண்டியதை விளக்கி  தொடர்பில் இருப்பதாகக் கூறிச் சென்றார்  அன்று மாலை எனக்கு ஒரு தொலை பேசி அழைப்பு மின்னூல்,வெளியிடுபவரின்  தந்தை பேசினார்  என்னை நன்றாகத் தெரியும் என்றார் அவரை எளிதில் அடையாளம் காண ஒரு அடைமொழியையும் கூறினார்  பெயரும் ராஜகோபாலன் என்றார்  எனக்கு நினைவுகள்மனத்திரையில் ஓடியது இந்த ராஜகோபாலன் நான்  இயக்கி இருந்த ஆராமுது அசடா என்னும்  நாடகத்தில் நடித்தவர்  அவரது சஷ்டியப்த பூர்த்திக்கு  அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறோம் நாங்கள்  இதுதான்  நான்  இந்த உலகமே சின்னதுஎன்று நினைக்க வைத்தது மின்னூலை வெளியிட ஒப்புக் கொண்டவர் பெயர் பத்மநாபன் 
ஆராமுது அசடா நாடக புகைப்படம்  இடமிருந்து மூன்றாவதாக  ராஜகோபாலன்
இடது ஓரத்தில் ராஜகோபாலன் 

வலது ஓரத்தில் ராஜகோபாலன்

மின்னூல் பதிப்பாளர் பத்மநாபன்  என்னுடன்வேறு சில நினைவுகள்
முன்பு வீட்டின் முன்பிருந்த மல்லிகைச் செடியை எடுத்து  வேறு ஒன்று வைத்தோம் அது  இந்த வருட ம் பூத்துக் குலுங்குகிறது நிறைய பூக்கள் கடவுளுக்கு வைத்தது போக மீதி இருப்பது என் மனைவியின்  தலையிலும்  அண்டை வீட்டாருக்கும் 

ஓங்கிப் படர்ந்திருக்கும்மல்லிச் செடி   இதைப் பார்க்கும் போது முன்பு நானெழுதி இருந்த பூவே பூவே பதிவு நினைவுக்கு வருகிறது அது இங்கு மீண்டும்
சுவரேறிப் படர்ந்து பூத்துக் குலுங்கின
வெள்ளை ரோஜாவும் மல்லியும் முல்லையும்
பல்வேறு நிறங்களில் கண் சிமிட்டும்
செம்பருத்தி;காணக் கண் கோடி வேண்டும்.

ஆண்டுகள் பலவாகிப் போக மராமத்து
வேலைக்காக செடிகளையும் கொடிகளையும்
அகற்றச் சொன்னார் மேஸ்திரி.

மீண்டும் நடும் செடிகளும் புதுப் பொலிவுடன்
பூக்கத்தானே போகிறது எனும் நம்பிக்கையில்
பழைய செடிகள் வெட்டிக் களையப் பட்டன

யார் கண் பட்டதோ, ஆண்டிரண்டாகியும் செடியும்
கொடியும் வளர்ந்தும் பூ மட்டும் பூக்கவில்லை.
பூச்செடிகளிலும் மலடு என்றுண்டோ.?

தளராது நீர் ஊற்றி,நாளும் காத்திருந்து காத்திருந்து
ரோஜாச் செடியொன்றில் செந்நிறத்தில் மொட்டவிழ்ந்து
பூ ஒன்று பூக்கக் கண்டதும் ஆஹா..கொள்ளை அழகு.
ஜென்ம சாபல்யம் அடைந்திருக்கும் பூச்செடியும்.!
----------------------------------------------------------------
என்ன அழகு ஒற்றை ரோஜா
               


               
                                          


   .