Sunday, October 29, 2017

தீபாவளி சில நினைவுகள் சில நிகழ்வுகள் -2017


                  தீபாவளி சில நினைவுகள் சில நிகழ்வுகள் -2017
                  --------------------------------------------------------------------
பணியில் இருந்த போது தீபாவளிச் செலவுகள் அனைத்துமே எனக்குத்தான்  ஓய்வு பெற்றபின்னும் மக்களுக்குப் புதுத் துணி வாங்கும் பழக்கம்  தொடர்கிறது. பொதுவாக நான்  மால்களுக்குப் போவதுகிடையாது என்னுள் ஒர் மெண்டல் ப்ளாக்கேட் துபாய் சென்றிருந்த போது மால்களுக்கு அனுபவம்  பெறப் போனதுண்டு  சென்னையிலும்  ஒரு முறை வேளச்சேரி அருகே இருக்கும் மாலுக்கு என் மகன் கூட்டிச் சென்றிருக்கிறான்
இந்த முறை உடுப்பு வாங்க ஒரே இடத்தில் எல்லாம் கிடைக்கும்  என்று என் மகன்கூட்டிச் சென்றான் அப்போதெல்லாம்  தினமும் மாலை மழை பெய்து கொண்டிருந்தது  மாலை மழைக்கு முன்  போய் வந்து விட வேண்டும்     என்றும் மதிய உணவை மாலிலேயே எடுத்துக் கொள்ளலாம் என்பதும்  திட்டம்  ஆடை வாங்குவதில் சில சிரமங்கள் இருக்கின்றன வாங்குவது அவர்களுக்குப் பிடிக்க வேண்டும்   சைஸ் சரியாக இருக்க வேண்டும்  இருந்தாலும்  இப்போதெல்லாம் இந்த வாட்ஸப்பில் படம்  அனுப்பி விருப்பம்  தெரிந்துகொள்ள முடிகிறது துணி மணிஎல்லாம் வாங்கி முடித்தபோது மதியம் இரண்டரை ஆகியிருந்தது  உணவுக்கு அங்கிருந்த ராஜஸ்தானி ஓட்டலுக்குச் சென்றோம்  ஒரு தாலி விலை ரூபாய் 450/-மிக அதிகம் என்றே தோன்றியது

பதினெட்டாம்  தேதி தீபாவளி என்று மனைவி சொன்னாள் ஆனால் இங்கு கர்நாடகாவில்  19 .20 தேதிகளே விடுமுறை  என்  மூத்தமகன்  சென்னையிலிருந்து  17ம் தேதி மாலை வந்தான்  இரண்டாம் மகனும் ஒருநாள் விடுப்பு எடுத்து வந்தான்   என் மச்சினன்  என்னுடன்  இருந்து படித்து வளர்ந்தவன் மனைவி மாமியாருடன்  வந்தான்  நெருங்கிய சுற்றம்  என்று சொல்லிக் கொள்ள இவர்களே  தீபாவளிக்கு இனிப்பு வகைகள் எல்லாம் கொண்டு வந்திருந்தார்கள் என்  மூத்த ஒஏரன்  எனக்காக ஒரு வாக்கிங் ஸ்டிக்கும்  ராமச்சந்திர குஹா எழுதிய இந்தியா பிஃபோர் காந்தி என்ற புத்தகத்தையும்  ஒரு டைரியையும்  வாங்கி வந்தான்  இப்போதெல்லாம் டைரி எழுத முடிவதில்லை கை எழுத்து கட்டுப்பாட்டில் இல்லை கூடவே ஒரு ஐ ஃபோனும்  வாங்கி வந்திருக்கிறான் எனக்கு அதை இயக்கம் கற்க நாளாகும் போல் இருக்கிறது  நான் அவனுக்கு ஹாரியட் பீச்சரின்  UNCLE TOM;S CABIN என்னும்  புத்தகம் பரிசாகக் கொடுத்தேன்  என்  மனைவி அவள் பங்குக்கு பேசின்  லட்டு செய்து இருந்தாள் யார் வந்தாலும்  சமையல் வேலை அவளுக்குத் தானே  அவளுக்கும்  வயதாகிறது  உணவு முடிந்தபின்  என்ன ஒரே ஃபோட்டோ செஷன்  தான்   இனிய நினைவுகளை மீட்டெடுக்க உதவுவது
பினிக்ஸ் மாலில் 
       பேரனுக்கு என் அன்பளிப்பு 
 
பேரனின்  பரிசுகளுடன்  

பேரனின் அன்பு  
என் வாரிசுக்சளுடன்  
மூத்தமகன் மச்ச்சினன் இளைய மகன்  நான்  
மருமகள்களுடன்   
இளைய மகன் படம்பிடிக்க எங்கள் குடும்பம்  
மாமியாரும் மருமகள்களும்  



இன்னும்  நிறைய படங்கள் இருக்கின்றன/ அவை எல்லாம்  என் நினைவுகளை மீட்டெடுக்க உதவு ம் 









        

Thursday, October 26, 2017

கந்தனிடம் ஒரு கேள்வி


                      கந்தனிடம் ஒரு கேள்வி
                     ----------------------------------------
வலைப் பதிவுகளில் நாளும்   முருகனைப் பற்றிய பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன  காலத்துக்கு ஏற்ற பதிவுகள் நேற்று திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் இன்று சஷ்டி  எனக்கும்  முருகனைப் பிடிக்கும்   நான் படித்த கதைகளில் இருந்து  திரட்டியவை என்  பாணியில் பக்தியாகவும்  ஒரு வேளை தென்படலாம்  முன்பு நான்  எழுதிய ஃப்லோ இப்போது இல்லை என்கிறார் ஏகாந்தன்  சரியென்றே தோன்று கிறது  அதனால் என்ன முன்பு எழுதியதையே மீண்டும் வெளியிடலாமல்லவா

    நாளும் என் நினைவிலும் நாவிலும்
    வந்தமரும் குமரா, கந்தா- எனக்குன்னைப்
    பிடிக்கும் என்றொரு முறை எழுதி இருந்தேன்..
    அதில் நமக்குள்ள சமன்பாட்டைக் கூறி,
    ஏன் பிடிக்கும் எனவும் எழுதி இருந்தேன்.
    ஐயா, எனக்கொரு ஐயம்எனக்குனைப்
    பிடிக்கும் ,உனக்கெனைப் பிடிக்குமா.?

    நாளும் நெறி தவறி குணங்கெட்டு
    கோபுரம் மேலிருந்து கீழே விழுந்தவரைத்
    தாங்கிப் பிடித்தவர் நாவில் வேலால்
    “ சரவண பவ “ என எழுதி 
    “ முத்தை திரு பத்தித் திரு நகை “என
    அடியெடுத்துக் கொடுத்து அவர் உன்
    புகழ் பாட அருள் புரிந்தாயே
    எனக்கென்ன செய்தாய் நீ. ? 

    மண்ணுலகில் வந்துதித்து ஐந்து பிராயம்
    வாய் பேசாது ஊமையாய் நின்ற்வருக்கு
    வாயுரைக்க மட்டுமின்றி உன் மேல்
    பக்தியில் பாடவும் அருள் புரிந்தாயே
    எனக்கென்ன செய்தாய் நீ. ?


    கந்தா.! உன் புராணம் பாட வந்த

    கச்சியப்ப சிவாச்சாரியருக்கு

    எடுத்துக் கொடுத்த பாடல் முதல் அடி

   “ திகட சக்கர செம்முக மைந்துளான் “
    இலக்கணப் பிழை கொண்ட தென்று
    குமரகோட்டப் புலவர் பெருமக்கள்
    எடுத்துரைக்கத் தவறேதுமில்லை என்று
    நீயே செந்தமிழ்க் குமரனாய் வந்து
    சோழ நாட்டு வீர சோழியம் என்ற
    இலக்கண நூல் ஆதாரங் காட்டி அருளினாயே,
    எனக்கென்ன செய்தாய் நீ. ?

    மண்ணும் விண்ணும் தொடும் மாமரமாய் எதிர்நின்ற
    மாயையின் மைந்தன் சூர பதுமனை இரு கூராக்கி
    சேவலும் மயிலுமாய் தடுத்தாட் கொண்டாயே, மாலவன்
    மருகா, மாயையில் கட்டுண்டு மனம் பிதற்றும்
    எனக்கென்ன செய்தாய் நீ .?


 முன்னறிவிப் பேதுமின்றி குப்புற வீழ்ந்த

   என் கூடு விட்டு உயிர்ப் பறவை பறத்தல்

   உணர்ந்து “ ஐயோ “என்று அவன் மனையாளை

   அழைத்தவள் அஞ்சு முகம் கண்டு ஆறு முகம்
   தோற்றினாயே, நெஞ்சமதில் அஞ்சேல் என உன்
   வேல் காட்டினாயே, முருகனே, செந்தில் முதல்வனே
   மாயன் மருகனே, ஈசன் மகனே, ஒரு கை முகன்
   தம்பியே, உன் தண்டைக்கால் நம்பியே நாளும்
   பொலிவுறும் இப்பித்தன் எனக்கென்ன செய்தாய்
   ! 

முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் போன்ற பதிவுகள் சிலருக்கு நினைவுக்கு வரலாம்பதிவுகளைப் படிக்க சொடுக்கவும்) 

(ஐயோ என்பது யமனின்  மனைவி பெயர் )
  
         

Tuesday, October 24, 2017

தீபாவளி சில நினைவுகள் சிலநிகழ்வுகள்


               தீபாவளி  சில நினைவுகள் சில நிகழ்வுகள்
               ------------------------------------------------------------------
   தீபாவளிவரும்போதெல்லாம்  சில நினவுகளும் கூடவெ வரும் தவிர்க்க முடிவதில்லை நானும் என் தம்பியும் 1948ம் வருட வாக்கில் எங்கள் தந்தை வழிப்பாட்டி வீட்டில் கோவிந்த ராஜ புரத்தில் இருந்தோம்  பொதுவாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளிக்கு கேரளத்தில் அவ்வளவு மவுசு கிடையாது பட்டாசு மற்ற வாண வேடிக்கைகள் எல்லாம்  விஷுவின் போதுதான்  இருந்தாலும் ஆங்காங்கே தமிழர் வாழும்பகுதிகளில் தீபாவளி கொண்டாடப் படும் எங்களுக்கு தீபாவளி பட்டாசு வெடிக்க ஆசை ஆனால் அவற்றை வாங்க வழி இருக்க வில்லை பாட்டி தீர்மானமாகக் கூறி விட்டார்கள் பட்டாசு வாங்க  காசு இல்லை என்று … தீபாவளிக்கு முன் தினம் எங்கள் மாமாக்கள் இருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள்  ஏதோ வேலையாகநாங்கள்முகம்வாடி இருப்பது கண்டு காரணம்  கேட்டுத் தெரிந்து எங்களுக்கு ரூபாய் இரண்டு கொடுத்து பட்டாசு வாங்கிக்க சொன்னார்கள் எங்களுக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை ஊருக்கு வெளியில்கந்தகப் பொடி விற்பவர்களிடம்  இருந்து கொஞ்சம் கந்தகப் பொடி வாங்கினோம் சிகரெட்டை பாக் செய்யும்  அலுமினியப் பேப்பரை ரோடில் இருந்து பொறுக்கி வந்தோம்  ஒரு துளையுள்ள பெரிய சாவியை ஒரு குச்சியில் கட்டினோம்   அதே குச்சியில் ஒரு நீளக்கயிறில் ஒரு ஆணியையும் கட்டினோம் பிறகென்ன பட்டாசு வெடிக்கநாங்கள் தயாராகி விட்டோம்  கந்தகத் தூளை அலுமினியப் பேப்பரில் சிறு உருண்டைகளாக்கி  சாவித்துளையில் போட்டு அதில் கட்டிருக்கும்  ஆணியை நுழைத்து ஓஓஓஓங்கி ஒரு போடு ..டமார் என்னும் வெடி அந்த தீபாவளியை மறக்க முடியாது 
இன்னொரு தீபாவளி சமயம்  நான்  பயிற்சியில் அம்பர்நாத்தில் இருந்தேன் என் அண்ணா நேவியில் இருந்தார் பாம்பே கொலாபாவில் ஒரு வீட்டின் அறையில் தங்கி இருந்தார்  தீபாவளிக்கு நான்கொலாபா போயிருந்தேன் அந்த விட்டில் இருந்தவர்களுடன்  தீபாவளி அவர்கள் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்தார்கள்  சாலைக்கு வந்து பட்டாசு வெடிப்பது இயலாத ஒன்று. பட்டாசுத் திரியில் நெருப்பு கொளுத்தி  கீழே வீசுவார்கள் அவை அந்தரத்திலேயே வெடிக்கும்   மாடி பால்கனியில் ஒரு தாம்பாளத்தில் ஒரு பாட்டிலில் செருகிய புஸ்வாணத்தை  கையை நீட்டிப் பிடித்து பற்ற வைப்பார்கள் புஸ்வாணம் சீறி மேலே போகும்  அது ஒரு வித்தியாசமான தீபாவளி அனுபவம் 
நான் திருமணமாகி என் பிள்ளைகளுடன்  தீபாவளி கொண்டாடியது திருச்சி குடியிருப்பில்தான்  காலை எழுந்தவுடன் முதலில் ஒரு லக்ஷ்மி வெடி போட்டு  பின் குளித்து புத்தாடை உடுத்தி  என் பிள்ளைகள் தீபாவளிக்கு ப் பட்டாசுவெடிக்கத் தயாராவார்கள்  குடியிருப்பில் காலை ஐந்து மணிமுதல் ஒரே வெடிச்சத்தம்தான்  ட்ரெயின்  என்றொரு வகை உண்டு அதை ஒரு மாடியில் இருந்து இன்னொருமாடிவரைக் கட்டிய கயிறில்  இந்த வகையை வைத்துக் கொளுத்தினால் அது அங்கும்  இங்கும்  நகருவது பார்ப்பது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சிதான் 
  இன்னொரு நினைவும்  வருகிறதுநீலகிரி  வெல்லிங்டனில் என் தம்பிகளுடன்  பட்டாசு வெடித்தது  யார் வீட்டில் அதிகவெடி என்பதை தெரிந்து கொள்ள அதிககுப்பைகள்  வெடித்த பட்டாசுகளது இருக்கும்  சின்ன  வெடிகள் ஓரிரண்டுவெடிக்காமல் இருக்கும்  அவையும் அந்தக்குப்பையில்  இருக்கும்  விடிந்ததும்  அவற்றை வெடிக்க முயற்சியும்  நடக்கும்  அம்மாதிரி சமயம் ஒன்றில் என் தம்பி  வாயருகே ஒரு ஊதுவத்தியின் நெருப்பு கொண்டுவெடிக்காத பட்டாசுகளுக்கு நெருப்பு பற்ற வைக்க முயல ஒரு பட்டாசு அவன் வாயருகே வெடிக்க அவன்”அம்மா செத்தேன்” என்று கதறி ஓடி வந்ததும்   நினைவுக்கு வருகிறது 
அப்பாவி அதிரா எனக்கு இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டிருந்தார்கள் அவருக்காக கீழே என் எண்ணங்களை பதிப்பிக்கிறேன்


 பண்டிகைகள் கொண்டாடவே; ஆயிரம் காரணங்கள்
புராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்
பண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே. 
நரகாசுரன் இறக்கும்போது கேட்ட வரமோ, ராமனின் 
வனவாசம் முடிந்து திரும்பும் நாளோ, சக்தியின் 
கேதாரகௌரி விரதம் பூர்த்தியாகிப் பின்னர் 
அர்தநாரீஸ்வரியான (ரரான) தினமோ, ஏதானால் என்ன ? 
தீபாவளிப் பண்டிகை நாள் நன்று கொண்டாடுவோம்.
அகில இந்தியாவிலும் , ஏன் உலகின் பிற பாகங்களிலும்கூட
தீபாவளி கொண்டாடப் படுகிறது. சீக்கியர் பொற்கோயில் 
கட்டத் துவங்கிய தினமென்றும்,  சமணர் மகாவீரர் நிர்வாணம் 
அடைந்த தினமென்றும், கொண்டாட்டம் நன்று கொண்டாடுவோம்
ஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும் 
அகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி
தீப ஆவளியில்  ஒளிவரிசையில் வெளிச்சம் பெற 
தீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம். 
உறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர் 
ஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்
வேண்டாதன விட்டொழிப்பதை தலை முழுகுதல் எனக் கூறுவர்
கங்கா ஸ்நானமும் ஒரு தலை முழுகலே நம்மில் இருக்கும் 
“நான்ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி 
இனிப்பதனைப் பகிர்ந்துண்டு தீபாவளிப் 
பண்டிகை நன்று கொண்டாடுவோம்  
(நினைவுகள் முற்றும்  நிகழ்வுகள் தொடரும் )
           

Saturday, October 21, 2017

எண்ணக் கலவைகள்


                                        எண்ணக் கலவைகள்
                                       ------------------------------------

  எனக்கு என்னென்னவோ எண்ணங்கள் எழுத்தில் வடிக்க இயலுமாதெரியவில்லை  முதலில் வலையில் பதிவிடும்  எழுத்தாளர்கள் அனைவரையும்  தெரிந்து கொள்ள விரும்புகிறேன்  ஆனால் பலரும் அப்படித் தெரிந்து கொள்வதை விரும்புவதில்லை  காரணம்  தெரியவோ கேட்கவோ நான் யார் ? சில மாதங்களுக்குமுன்  ஒரு மின் அஞ்சல் வந்தது  இங்கி லாந்திலிருந்து ஒரு வாசகி முதலில் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை  என் பதிவுகளை கூகிள் பிளசில் வாசிப்பவராம்  விவரம் தெரிய புகைப்படம் கேட்டு எழுதி இருந்தேன்  அவர்கள் கடிதத்தில் இருந்த ஒரு வாசகம்  என்னை புகழ்ந்திருந்தது /  You are broad minded open to discussion without prejudice that's what I feel about you basically I m a micer to appreciate anyone so u can take my complement as it is எதுவும் கூட்டிச் சொல்லல :)thanks for your reply and blessings I m pleased to read your mail./ முகஸ்துதிக்கு மயங்காதார் உண்டோ  அவர்கள் ஜூலை மாதம் இந்தியா வருவதாகவும்  முடிந்தால் என்னை சந்திப்பதாகவும்   எழுதி இருந்தார்கள் தீபா கபிஷ் என்பது அவர் பெயர்  அவர்களது குழந்தையின் புகைப்படம்  மட்டும் சேமித்து வைத்திருக்கிறேன்  நாகர் கோவிலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது அவர்களுக்கு எனக்கு இங்கிலாந்தில் தெரிந்த வாசகிகள் அதிரா ஏஞ்சலின்  பெயர்களைத் தெரிவித்து  அவர்கள் எழுத்தை வாசிப்பீர்களா  என்று கேட்டிருந்தேன்   வாசித்ததுண்டு என்று பதில் வந்தது  இதற்கு மேல் அவர்களைப் பற்றி எழுதினால் ரசிப்பார்களோ தெரியவில்லை


இங்கிலாந்து வாசகி  தீபாகபிஷின்   குழந்தை  ---அதிரா 
                                ==================================
பல நண்பர்கள் ஏனோ தங்கள் முகம் காட்ட விரும்புவதில்லை  சில பதிவுகளைக் காண்ட்ரா வர்ஷியலாக எழுதும்  நானே என்னைப் பற்றிய எல்லாத்தகவல்களையும் தெரிவிக்கிறேன் ஆனால் நான் பிரபலமாகவில்லை போல் இருக்கிறது மாற்றுக் கருத்துகளைச் சொல்லும் பலரையும் போட்டுத்தள்ளும் கலாச்சாரம்  மிகுந்திருக்கிறதே  அண்ணல் காந்தியையே  ஒரு அப்பழுக்கற்ற அகிம்சாவாதியையே கொன்றுவிட்டார்கள்  அண்மையில் பெங்களூரில் கௌரி லங்கேஷ் எனும் ஒரு முற்போக்கு சிந்தனை வாதியைக் கொன்று விட்டார்கள் பேசுவோம்  கருத்துகளைப் பரிமாறுவோம்  என்பதெல்லாம் இல்லை  ஒழித்துக் கட்டிவிடுகிறார்கள்  இப்போது காந்தியை சுட்டது ஏதோ நான்காவது குண்டாயிருக்கலாம்  என்று சந்தேகமெழுப்பி  அந்த வழக்கை மீண்டும்  நடத்த ஒரு குரல் எழும்பி இருக்கிறது சரித்திர நிகழ்வுகளையே மாற்ற ஒரு கூட்டம் குறியாயிருக்கிறது தாஜ்மகால் இந்தியாவின்  பெருமைக்கு இழுக்கு தேடித்தருகிறது என்று ஒரு பி ஜே பி  எம் பி குரல் கொடுத்திருக்கிறார்  அதற்கு டூரிஸ்ட் விளம்பரம்  இல்லை என்று யாரோ எழுதி இருந்ததற்கு வரிந்து கட்டிக் கொண்டு சிலர் அது  தவறான புரிதல் என்றெல்லாம் எழுதி இருந்தார்கள் நாம் எப்போதும்  பழங்கதைகளையும்     இதிகாசங்களையும்   உண்மை என்று நம்பிஅவற்றை சரித்திர நிகழ்வுகள் என்றே நம்பிக்கொண்டிருக்கிறோம் சரித்திர நிகழ்வுகளுக்கும் வரலாறுகளுக்கும் சான்றுகள் அவசியம்வெறும் கதைகளும்  நம்பிக்கைகளும் போதாது 
                                =======================
 திருபெருமாள்முருகன்  சில வழக்கங்ளை வைத்துப்புனைந்திருந்த கதைக்கு  எதிர்ப்பு வந்திருந்தது  நானும் ஒருசிறு கதை எழுதி இருந்தேன்  அக்காலக் கேரள வழக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட கதை  அது பதிவில் வந்தபோது எனக்கு நானும்  சில feathers களை சீண்டி விட்டேனோ என்னும் எண்ணம் வந்தது நான்தான் பிரபலமடைய வில்லையே யாரும் கண்டு கொள்ளாமல் போய்விட்டது அந்தக் கதை
                              =============================

நிரூபிக்கபடவில்லை என்னும் காரணத்தால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர் தல்வார் தம்பதிகள்  அவர்களதுமகள்  பதினாலு வயது ஆருஷியும்  வீட்டு வேலையாளும்  2008 ல் கொலை செய்யப்பட்டிருந்தனர்  அந்தக் காலத்தில் செய்தி ஊடகங்களே வழக்கினை திசை திருப்பினவோ என்று சந்தேகம்  எழுகிறது ஒரு வேளை செய்யாத குற்றத்துக்கு நான்காண்டுகள் சிறையில்  வாடிய தல்வார்  தம்பதிகளின்  மன உளைச்சல்களுக்கு  இன்னல்களுக்கும் யார் காம்பென்சேட் செய்வது அதேபோல் சுநந்தாவின்  கொலையையும் இன்னும்  தெளிவு இல்லாத நிலையில்  சில ஊடகங்கள் முன்னாள் மந்திரியும்  சுநந்தாவின்  கணவனுமான காங்கிரஸ்  தலைவருமான சஷி   தரூருக்கு எதிராக  வரிந்து கட்டிக் கொண்டிருப்பது  தெரிகிறதுஇன்றைக்கு  சுநந்தா தங்கி இருந்த அறையை  di seal  வைக்க உத்தரவுவந்திருக்கிறது  நீதித் துறையின் மெத்தனமா காவல் துறையின்   மெத்தனமா இல்லை அரசுக்கு அடங்கிப் போகும் இவர்கள் குறையா என்ன வென்றுதெரியவிலை 
                             =================================
இன்னொன்றும்  எண்ணத்துக்கு வருகிறது சுற்றுச் சூழல் பாதிப்படைவதால் தலை நகரிலும்  இன்னும்  சில மாநிலங்களிலும்  தீபாவளிக்கு  பட்டாசு விற்பனை செய்யக் கூடாது என்னும் அரசாணையை  அப்படியே ஏற்று கொண்டிருக்கும்  நீதித்துறையும்  கவனத்தை  ஈர்க்கிறது சுற்று ச்சுழல் பாதிப்புக்கு வருடத்தில் ஒரு நாள் வரும்  தீபாவளி அன்று வெடிக்கப்படும்  வெடிகளும் வாண வேடிக்கையும்  தான்  காரணமா ஒரு நாள் தடையால் மாசுமருவற்ற சூழல் வருமா எதையோ நினைத்து  உரலை இடிப்பது போல் இருக்கிறதேஇது எத்தனை பேரின் வருவாய்க்கு முட்டுக்கட்டை என்பது தெரியவில்லையா கங்கையும்  யமுனையும்  மாசால் மங்கிக் கொண்டுஇருப்பதற்கு ஏதும் செய்யமுடியாதவர்கள்  தங்களதிகார பலத்தைக் காட்டும்   சந்தர்ப்பமா இது
                                ==========================
பெங்களூருவில் விதான சௌதா கட்டி அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன / அதற்காக ஒரு விழா எடுக்கிறார்களாம்  எப்படி தெரியுமா அங்கிருக்கும் சட்டசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும்  ஒரு தங்க பிஸ்கட் கொடுக்கப் போகிறார்கள் அங்கு பணியில் இருக்கும்  சுமர் 5000 பேருக்கு வெள்ளிதட்டுகளும் வழங்க ஏற்பாடாம்(அந்த செய்தி பரிசீலிக்கப்பட வேண்டியதேபொதுமக்களின்  எதிர்ப்புக் குரலால்   அரசின்  எண்ணங்களில் மாற்றம் வரும் என்றே தெரிகிறது) நானும் தான்  விதான சௌதா கட்டுமானப்பணியில் சம்பளம்கிடைக்காமல் ஒரு மாதம் உழைத்திருக்கிறேன் பார்க்க பூர்வஜென்ம கடன்http://gmbat1649.blogspot.com/2011/02/blog-post_09.html 
                                ============================
 சட்டசபைகளுக்கும்  பாராளு மன்றத்துக்கும் ஒரே சமயம்  தேர்தல் நடத்த வேண்டும்  என்பது மோடி அரசின் விருப்பம்.ஆனால் இப்போது ஹிமாச்சல் பிரதேசத்துக்கும்   குஜராத்துக்கும்  ஒரே  நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சந்தர்ப்பம்வந்தும் முதலில் ஹிமாச்சல் பிரதேசத்துக்கு   மட்டும்  தேர்தலாம்  குஜராத் தேர்தல் நாள இன்னும் அறிவிக்கப்படவில்லை மோடி அரசுக்கு அதில் விருப்பமில்லாதது போல் தெரிகிறது தற்போது மோடி குஜராத்துக்கு பலசலுகைகளை அறிவிக்கும்  நிலையில் இருக்கிறார்  தேர்தல் அறிவித்தால் சலுகைகளை அறிவிப்பது முடியாது கோட் ஆஃப் காண்டக்ட் அமலுக்கு வரும் தேர்தல் கமிஷனும்  அரசுக்கு அடிபணிவதுபோல் இருக்கிறது எனக்கு ஒன்று புரிவதில்லை அரசுக்கு நீதித்துறை தேர்தல் ஆணையம்  வருவாய்த்துறை இவைஎல்லாம்  கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்  அதிகாரம் உள்ளதா. இல்லை இதில் இருப்போர் தங்களதிகாரத்தை நிலை நாட்டுவதில் விருப்பமில்லாதவர்களா
                            ==============================
  இப்போது சில ஊடகங்களில் வரும்  விளம்பரங்கள் பற்றியும் சொல்லாமல் இருக்க முடியவில்லை ஐயாயிரம்  ஆண்டு பழமையான என்று சகட்டு மேனிக்குக் கதை விடுகிறார்கள்சில நூறாண்டுகளுக்கு முன்  நிகழ்ந்தவைகளையே சரியாக இணைக்க முடியாமல் இருக்கிறோம்  ஆயுர் வேத மருந்துகள் நல்லனவாகவே இருக்கலாம்  அதற்காக  இப்படியா பணம்  பண்ணவும்  ஒரு நியதி வேண்டும் அல்லவா
                            ==================================  
  எண்ணங்களைப் பகிரவே எழுதுகிறோம் வலையில் இது  ஓரளவுக்குத்தான் செல்கிறது பத்திரிக்கைக்கு  எழுதினால் ரீச் அதிகமாக இருக்கும் தான்  ஆனால் சூடு கண்டபூனை போல் இருக்கிறேன் 2011ல் ஹிந்து பத்திரிக்கைக்கு ஒருகடிதம்  எழுதி இருந்தேன்  பார்க்க  http://gmbat1649.blogspot.com/2011/08/blog-post_08.html எழுதிய கடிதம் தணிக்கை செய்யப்பட்டு இருந்தது  அப்போது எனக்குத் தோன்றியதையும் எழுதி இருந்தேன்  நாட்டு நடப்புகளை உணர்வில் வடித்து
பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
பிரசுரம் செய்தனர். படித்ததும்
சிந்தையில் தோன்றியது சிறகு
திருத்தப்பட்ட கிளி ஒன்று.
நல்ல வேளை இக்கிளிக்கு
உயிர் இன்னும் இருந்தது.
மீண்டும்  கூறுகிறேன்   என்னென்னவோ எண்ணங்கள் எழுத்தில் வடிக்கக் காத்திருக்கிறது பார்ப்போம் 
                           ===========================

-
      
                          

.    

Wednesday, October 18, 2017

பறவைகள் பலவிதம்


                                   பறவைகள் பலவிதம்
                                 -----------------------------------
      SMALL THINGS MAKE PERFECTION BUT PERFECTION IS NO SMALL THING

இந்தக் காணொளி எனக்கு அண்மையில் வந்தது இது என்னை  வேறு  ஒரு செய்தியை நினைக்க  வைத்தது ஒரு ஆங்கிலப் படத்தில் ஒருவன்  அம்பால் ஒரு பூவைக் கொய்ய வேண்டிய ஷாட்  நடிகர் முதல் முயற்சியிலேயே பூவைக் கொய்து விட்டார் பலரும்  பாராட்டினார்கள் அதில் ஒருவர் அதை அதிர்ஷ்டவசம் என்று கூறினாராம் நடிகருக்குக் கோபம் வந்தது இந்த ஒரு ஷாட்டுக்கு தான் எத்தனை  முறை பயிற்சி எடுத்திருப்பேன்  என்றாராம் மீண்டும் ஒரு முறை அம்மாதிரி அம்பு எய்து பூவைக்  கொய்தாராம் ஒரு ஷாட்டுக்கு பல முறை முயற்சி செய்து வெற்றி பெறுபவர்களும் இருக்கிறார்கள் என்பது புரிகிறது இந்தக் காணொளியில் வருவது ஒரு மராத்திய படத்துக்கு  ( Macharla Buddha)   பறவைகளின் ஒலியிலேயே இசை அமைத்திருப்பதுதான்  பாராட்டுக்குக் காரணம்


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்  எங்கள் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்


  

Sunday, October 15, 2017

மனைவியை நேசிப்பவர்கள்............


                                மனைவியை நேசிப்பவர்கள்
                            --------------------------------------------------
இந்த மாதம்  ஆறாம் தேதி என் வீட்டில் மீண்டும்  மகளிர் சக்தியைக் கண்டேன் மூன்றாம் முறையாக என்வீட்டில் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடை பெற்றது பலருக்கும் இது கேள்விக்குறி எழுப்பலாம் மனைவியை நேசிப்பவன் நான் அவள் விருப்பத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலுமா. ?என் வழியிலேயே சிந்தித்துப் பார்த்தேன் என் மனைவிக்கு  என்ற தேவைகள் மிகச் சொற்பமே எனக்கும் அம்மாதிரியே ஊருக்கு உபதேசம் உன்  வீட்டில் மட்டும் ஏன் இப்படி?ஒரே பதில் மனைவியை நேசிப்பவர்களுக்கு ……… இதனால் உண்டாகும்  சாதக பாதகங்களைப்பட்டியல் இடுகிறேன்    முதலில் சாதகங்கள்  என் மனைவிக்கு சோஷியல் நட்புகளை  வளர்க்க உதவுகிறது உரக்கச் சொல்லும் போது  அதுவே ஒருபயிற்சியாகிறது ஒரு நிகழ்ச்சியை ஆர்கனைஸ் செய்யும்  பலத்தையும்  பெருமையையும்  தருகிறது என்றாவது வீட்டுக்கு வரும் உறவுகளை ஒருகாரணம் கொண்டு வரவேற்க  உதவுகிறது நட்புகள் மத்தியில் தன்னைப் பறை சாற்றிக் கொள்ள உதவுகிறதுஎன்னையும்  பலருக்குத் தெரிவிக்க உதவுகிறது
பாதகங்களாக…. வரவே இல்லாதவனுக்குச் செலவுகள் கூடுகிறது (என் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மனைவி சொல்லுவாள்)
இவர்கள் பாராயணம் செய்யும் போது சுமார் மூன்று மணிநேரம் எனக்கு ஹவுஸ் அரெஸ்ட் இவளது நட்புகள் என்னையும்  பங்கு கொள்ளச் சொல்லி வற்புறுத்துவார்கள்  இல்லாவிட்டால் நான் என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்  அது மனைவிக்கு விருப்பமில்லாதது  நான் மனைவியை நேசிப்பவன் ………………முடிந்தவரை என் கருத்துகளை என்மனைவிக்குச் சொல்வேன்  அவளும்  என்னை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது
வந்தவர்களுக்கு  வெற்றிலை பாக்கு பழம்  கூடவே பதினொரு ரூபாய்பணம்  அதென்ன பதினொன்று 
இரு இனிப்புகள்  ஒரு காரம் கூடவே ஒரு ஸ்டீல் டப்பா 
மகளிர் சக்தியினர் சிலர் 
இன்னொரு படம் 
என் வீட்டில் நடந்த விஷ்ணு சகஸ்ர நாம பாராயணத் தொகுப்பு படங்களும்  காணொளிகளும் 
பாரா யணத்துக்கு ரெடி






மேலே பாராயணக் காணொளிகள் கீழே மனதை ஒருமுகப்படுத்த ஒரு காணொளி








   


Tuesday, October 10, 2017

ஆய கலைகள்


                                        ஆயகலைகள்
                                        ---------------------

ஆய கலைகள் 64 என்கிறார்களே, அவையாவன
1)   அக்கர இலக்கணம் --------------- எழுத்திலக்கணம்
,2)  -இலிகிதம்,     ----------------------- எழுத்தாற்றல்   
-3)  கணிதம்,- --------------------------------- கணித இயல்
4)   வேதம்,-------------------------------------- மறைநூல்       
5)   புராணம்,-------------------------------------தொன்மம் - 
6)   வியாகரணம் ---------------------------இலக்கணவியல்,-
7)   நீதி சாஸ்திரம்,--------------------------நயநூல் 
8)   ஜோதிட சாஸ்திரம்,------------------கணியக் கலை      
9)  -தர்ம சாஸ்திரம்-------------------------அறத்துப்பால்
10)  யோக சாஸ்திரம்,---------------------ஓகக்கலை - 
11)  மந்திர சாஸ்திரம்,-------------------மந்திரக்கலை-
12)  சகுன சாஸ்திரம்,--------------------நிமித்தக்கலை
13) -சிற்பசாஸ்திரம்,--------------------------கம்மியக்கலை
14)  வைத்திய சாஸ்திரம்-------------- மருத்துவக்கலை,-
15)  உருவ சாஸ்திரம்,------------------உருப்பமைப்பு- 
16)  இதிகாசம்,---------------------------------மறவனப்பு  
17)  காவியம்,------------------------------------வனப்பு
18) அலங்காரம்--------------------------------- அணி இயல்  ,-
19) மதுரபாடனம்,-------------------------------இனிது மொழிதல்
20)  நாடகம்,----------------------------------------நாடகக் கலை-
21)  நிருத்தம்,-------------------------------------ஆடற்கலை-
22)  சத்த பிரமம்,--------------------------------ஒலி நுட்ப அறிவு 
23) -வீணை,-----------------------------------------யாழ் இயல்
24) வேணு,------------------------------------------குழலிசை
25) மிருதங்கம்-----------------------------------மத்தள நூல் 
26) தாளம்------------------------------------------தாளையல் 
27) அத்திரப் பரீக்ஷை,---------------------வில்லாற்றல் 
28) கனகப் பரீக்ஷை,--------------------- பொன் நோட்டம்  
29) இரதப் பரீக்ஷை,-----------------------தேர் பயிற்சி -
30)  கஜபரீக்ஷை,---------------------------யானை ஏற்றம் 
-31) அஸ்வப் பரீக்ஷை,-----------------குதிரையேற்றம்  -
32) ரத்தினப் பரீக்ஷை-------------------மணி நோட்டம்- 
33)  பூபரிக்ஷை,------------------------------மண்ணியல்
34) -சங்கிராம இலக்கணம்,---------போர்ப்பயிற்சி-
35) மல்ல யுத்தம்,------------------------- கைகலப்பு  
36) ஆகருக்ஷணம்.-------------------------கவர்ச்சி இயல்
37) -உச்சாடனம்,-----------------------------ஓட்டுகை 
38) வித்துவேஷணம்,---------------------நட்பு பிரிக்கை-
39) மதன சாஸ்திரம்,--------------------மயக்கு கலை-
40) மோகனம்,--------------------------------புணருங்கலை (காம சாத்திரம்)
41) வசீகரணம்,------------------------------வசியக் கலை
42)-இரசவாதம்,------------------------------இதளியக் கலை
43) காந்தர்வ விவாதம்----------------இன்னிசைப் பயிற்சி-,
44) பைபீல வாதம்,-----------------------பிற உயிர் மொழி
45) கௌத்துகவாதம்---------------------மகிழுறுத்தம் 
46)-தாது வாதம்,-----------------------------நாடிப்பயிற்சி 
47) -காருடம்,----------------------------------கலுழம்   
48) நட்டம்,--------------------------------------இழப்பரிகை
49) முட்டி,--------------------------------------மறைத்ததை அறிதல் 
50) ஆகாயப் பிரவேசம்---------------வான் புகுதல்,
51) ஆகாய கமனம்,----------------------வான் செல்கை 
52) பரகாயப் பிரவேசம்,--------------கூடுவிட்டுக் கூடு பாய்தல்
53) அதிரிச்யம்,-----------------------------தன்னுறு கரத்தல்-
54) இந்திரஜாலம்,-------------------------மாயம் 
55) மகேந்திர ஜாலம்--------------------பெருமாயம்,
56) அக்னிதம்பம்,--------------------------அழற்கட்டு  
57) ஜலஸ்தம்பம்,------------------------நீர்க்கட்டு - 
58) வாயுத்தம்பம்,------------------------ வளிக்கட்டு -
59) திட்டித் தம்பம்,-----------------------கண்கட்டு 
60) வாக்குத்தம்பம்,----------------------நாவுக்கட்டு- 
61) சுக்கிலத்தம்பம்,---------------------விந்துக் கட்டு
62) கன்னத் தம்பம்,---------------------புதையற்கட்டு 
63) கட்கத் தம்பம்,----------------------வாட்கட்டு - 
64) அவத்தைப் பிரயோகம்--------சூனியம்  


சத்தியமாகச் சொல்கிறேன், பெயர்கள்தான் எழுதிவிட்டேனே அல்லாமல் அவை என்ன என்று தெரியாது ‘அபிதான சிந்தாமணியில் கலைஞானம் 64 என்னும் தலைப்பில் கொடுக்கப் பட்டவை என்று சொல்லப் படுகிறது

இன்னொரு தொகுப்பு 
வேறொரு பட்டியல்
1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;

8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
;43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

அவரவர் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம் சிலருக்கு இவை உதவலாம்