Wednesday, October 18, 2017

பறவைகள் பலவிதம்


                                   பறவைகள் பலவிதம்
                                 -----------------------------------
      SMALL THINGS MAKE PERFECTION BUT PERFECTION IS NO SMALL THING

இந்தக் காணொளி எனக்கு அண்மையில் வந்தது இது என்னை  வேறு  ஒரு செய்தியை நினைக்க  வைத்தது ஒரு ஆங்கிலப் படத்தில் ஒருவன்  அம்பால் ஒரு பூவைக் கொய்ய வேண்டிய ஷாட்  நடிகர் முதல் முயற்சியிலேயே பூவைக் கொய்து விட்டார் பலரும்  பாராட்டினார்கள் அதில் ஒருவர் அதை அதிர்ஷ்டவசம் என்று கூறினாராம் நடிகருக்குக் கோபம் வந்தது இந்த ஒரு ஷாட்டுக்கு தான் எத்தனை  முறை பயிற்சி எடுத்திருப்பேன்  என்றாராம் மீண்டும் ஒரு முறை அம்மாதிரி அம்பு எய்து பூவைக்  கொய்தாராம் ஒரு ஷாட்டுக்கு பல முறை முயற்சி செய்து வெற்றி பெறுபவர்களும் இருக்கிறார்கள் என்பது புரிகிறது இந்தக் காணொளியில் வருவது ஒரு மராத்திய படத்துக்கு  ( Macharla Buddha)   பறவைகளின் ஒலியிலேயே இசை அமைத்திருப்பதுதான்  பாராட்டுக்குக் காரணம்


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்  எங்கள் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்


  

46 comments:

  1. உண்மைதான், கடும் பயிற்சி இல்லாமல் எதுவும் வராது. மேஜிக் செய்பவர்கள், குறிப்பாக கார்டுகளைக் கொண்டு செய்யும் மேஜிக்குகள் கடுமையான பயிற்சியின் விளைவே.

    பறவைகளின் ஒலி காணொளி ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பறவைகளின் ஒலியோடு இசை அமைத்திருப்பதே எனக்கு தெரிந்தது

      Delete
  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார் .
    காணொளி சூப்பர்ப் ..இயற்கை எப்பவும் அழகு அதிலும் பறவைகள் கானம் இனிமையோ இனிமை

    ReplyDelete
    Replies
    1. வந்து ரசித்ததற்கு ஏஞ்செலினுக்கு நன்றியும்வாழ்த்துகளும்

      Delete
  3. யாரிடம் எந்த திறமை ஒளிந்து இருக்கிறது என்பதை கணிக்க முடியாது ஐயா.
    காணொளி பிறகு கணினியில் பார்க்கிறேன்.

    தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அருமை ஐயா ஒலியை கேட்டேன் நல்ல எஃபெக்ட்டுடன் சேர்த்து இருக்கின்றார்கள்.
      எனது HP கணினியில்தான் இப்படி கேட்கிறதா ? இல்லை எல்லோருக்கும் இப்படியா தெரியவில்லை.
      தமன்னா - 3

      Delete
    2. எல்லோரிடமும் ஏதாவது திறமை ஒளிந்து கொண்டிருக்கும் அதை வெளிக் கொணர்வது பாராட்டுக்குரியது

      Delete
    3. ஒளியையும் ஒலியையும் இசைப்பது பற்றி நீங்கள் சொல்லலாம் வருகைக்கு நன்றி ஜி

      Delete
  4. பறவைகள், விலங்குகள் எழுப்பும் ஒலிகள் அதற்கான சூழல்களில், தற்செயலாகக் கேட்க நேரிடுகையில் இசை நயத்தோடு, ஒரு வினோதத்தன்மையோடு வெளிப்படும். இது வேறுவிஷயம்.

    ஆனால் பிட் பிட்டாகச் சேர்த்து, கட் அண்ட் பேஸ்ட் செய்து இத்தகைய ஒலிகளைக் கேட்கச்செய்வது சர்க்கஸ் ஆகலாம்; சங்கீதமாக முடியாது! இப்படி நான் சொல்வது எத்தனைப் பேருக்குப் புரியுமோ, நானறியேன்.

    உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


    ReplyDelete
    Replies
    1. ஏகாந்தன் சகோ உங்களின் கருத்து எனக்கும் இந்தக் காணொளியை வாட்சப்பில் பார்த்து ரசித்தேன் என்றாலும் எனக்குத் தோன்றியது...என்னதான் அவர்கள் இயற்கை ஒலியாகவே எடுத்துக் கோர்த்திருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆவது போன்று....பறவைகளின் ஒலியை நாம் நேரில் கேட்பதற்கும் இதற்கும் வித்தியாசம் இருப்பதை உணர முடிந்தது. இயற்கை இயற்கைதான்!

      கீதா

      Delete
    2. சர்க்கஸ் போய் ரசிப்பவர்களும் இருக்கிறார்கள் இயற்கை ஒலிகளை கர் அண்ட் பேஸ்ட் செய்யவும் திறாஅமை வேண்டும் அல்லவா

      Delete
    3. முதலில் ரசிக்கும் போது தெரியாத குறைகள் பின்னூட்டமிடும் போது முன்னால் வந்து நிற்கும்

      Delete
  5. பயிற்சி இன்றி எதையும் செய்ய முடியாது என்பது உண்மைதான். இனி இன்று வாழ்த்து சொன்னால் அடுத்த வருட தீபாவளிக்கு அட்வான்ஸாக சொல்வதுபோல இருக்கும்!!!!

    எனக்கு காணொளி திறக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இந்த தீபாவளி என்றைக்கு என்பதே சந்தேகமாய் இருக்கிறது இங்கெல்லாம் நேற்று 18ம் தேதி பணி நாள் இன்றுதான்விடுமுறை என்றைக்கு விடுமுறையோ அன்றுதான் பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன

      Delete
    2. இது ஒன்றும் புதுசு இல்லை ஐயா. தமிழ்நாட்டில் மட்டும் திரயோதசி முடிந்து சதுர்த்தசி ஆரம்பிக்கும் அதிகாலையில் நரக சதுர்த்தசி ஸ்நானம். கர்நாடகாவில் அன்றைய தினம் ஸ்நானம் இருந்தாலும் அமாவாசையும் அங்கே முக்கியம். அதே போல் ஆந்திரர்களுக்கும் அமாவாசை முக்கியம். மற்ற வடமாநிலங்களில் முதல்நாள் சின்ன தீபாவளி, மறுநாள் அமாவாசை அன்று பெரிய தீபாவளி எனக் கொண்டாடுவார்கள். இங்கே தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டும் எனில் மற்ற மாநிலங்களில் 3 நாட்கள் கொண்டாடுவார்கள். இது பல வருடங்களாக வழக்கத்தில் உள்ளதே! புதுசாக எல்லாம் இல்லை. அந்த அந்த மாநிலத்தில் என்று விடுமுறையோ அங்கே அன்று தீபாவளி! முக்கியமாய் சதுர்த்தசியும் அமாவாசையும் முக்கியம். பல சமயங்களில் சதுர்த்தசி முடிந்து அமாவாசை ஆரம்பிக்கும் சமயங்களில் தமிழகம், மற்ற மாநிலங்களில் ஒரே நாள் தீபாவளி வருவதுண்டு!

      Delete
    3. என்னைப் பொறுத்தவரை இம்மாதிரிக் கொண்டாட்டங்கள் எல்லாம் உறவுகள் கூடி மகிழவே என்று நினைப்பவன் தகவலுக்கு நன்றி மேம்

      Delete
  6. காணொளி பார்க்க முடியலை. தாமதமான தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பதிவே கணொளியைச் சுற்றியது திறக்காமல் இருப்பது துரதிர்ஷ்டமே வாழ்த்துகள்

      Delete
  7. Replies
    1. வந்து ரசித்தமைக்கு நன்றி சார்

      Delete
  8. கணொளிகளைக் காணமுடியாதபடிக்கு எனது கணினியில் ஏதோ சிக்கல்..

    அன்பின் தீபாவளி வாழ்த்துகள்... வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. பார்க்க முடியாமல் போகும் காணொளிகளை இடுவதற்கே யோசிக்க வேண்டி இருக்கிறது தீபாவளி வாழ்த்துகள்

      Delete
  9. ஸார் உண்மைதான் பயிற்சி மிக மிக அவசியம். நிறைய ஹோம்வொர்க் செய்தால்தான் நீங்கள் சொல்லியிருக்கும் நிகழ்வு போல் செய்ய வரும் இங்கும் கூட பல நடிகர்கள் தாங்கள் நிறைய ஹோம்வொர்க் செய்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்...

    கீதா: துளசியின் கருத்துடன்...இந்தக் காணொளி எனக்கு வாட்சப்பில் வந்தது. ரசித்தேன்...அது முழுவதும் இயற்கையாக ஒலிகள் எடுக்கப்பட்டாலும் அதில் ஏதோ ஒன்றுமிஸ் ஆவது போல் தோன்றியது...ஆனால் பறவைகள் அசத்தல்...

    ReplyDelete
    Replies
    1. இயற்கையோடு செயற்கையை சேர்த்திருப்பதுதான் காரணமோ வாழ்த்துகள்

      Delete
  10. காணொளி முன்பே பார்த்திருக்கிறேன்....
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா...
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இந்த வாட்ஸப்பால் உலகே சுருங்கிவிட்டது வாழ்த்துகள்

      Delete
  11. எல்லா ஒலிகளையும் ரசித்தேன். இசையமைப்பு போலவே நான் உணரவில்லை. இயற்கையான ஒலிகள் போன்றே உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. மேலே சிலரது கருத்துகளை வாசித்தீர்களா சார் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

      Delete
  12. Replies
    1. இம்மாதிரி வரிகளைக் கொண்டே பதிவு தேர்த்த முடியும் சார்

      Delete
  13. முயற்சியின் முடிவ பயிற்சி! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா

      Delete
  14. ரசிக்கும்படியான காணொலி. வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. காணொளியை ரசித்ததற்கு நன்றி சார்

      Delete
  15. காணொளி அருமை.
    தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி இருப்பீர்கள்/

    ReplyDelete
    Replies
    1. காணொளி கண்டு மகிழ்ந்த்தற்கு நன்றி மேம் தீபாவளிப் பதிவு இன்னும் சில நாட்களில்

      Delete
  16. ஜி எம் பி ஐயா... நான் அப்பாவி அதிரா வந்திருக்கிறேன்... அழகிய வீடியோ... தீபாவளி கொண்டாடுவதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கோ?...

    ReplyDelete
    Replies
    1. வருக வருக அப்பாவி அதிரா அவர்களே தீபாவளி பற்றிய என்பதிவு இன்னும் சில நாட்களில் வரும் அப்போது விளங்கி விடலாம்

      Delete
    2. ஹா ஹா ஹா ஓகே ஐயா... மீ வெயிட்டிங்:)..

      Delete
    3. இதன் அடுத்த பதிவில் உங்களைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறேன்

      Delete
    4. ஆஆஆவ்வ்வ்வ் அப்படியோ?? ஏதும் ஏடாகூடமெனில் இப்பவே சொல்லிடுங்கோ:) நான் காசிக்கே போயிடுறேன்ன்ன்:).. ஹா ஹா ஹா..

      Delete
    5. படித்துப் பார்த்துச் சொல்லுங்கள் ஏடாகூடமாக ஏதாவது இருக்கிறதா என்று

      Delete
  17. காணொளியில் கேட்ட தேனொலி அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி! தீபாவளி நல் வாழ்த்துகள்! தாமதமாக சொல்வதற்கு மன்னிக்க!

    ReplyDelete
    Replies
    1. வாழ்துகளை எப்போது வேண்டுமானாலும் கூறலாம் மேலும் தீபாவளியே வெவ்வேறு தினங்களில் கொண்டாடப் படுகிறடு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா

      Delete
  18. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்

    ReplyDelete