Sunday, July 30, 2017

படகுப் பயணங்கள்


                                          படகுப் பயணங்கள்
                                         -------------------------------
திரு வெ.நடனசபாபதி அவர்கள் காயலில் படகில் போனதாக எழுதி இருந்தார் திரு துரை செல்வராஜு அவர்கள் அண்மைய பின்னூட்டம் ஒன்றில் பதிவுகள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவதுபற்றி எழுதி இருந்தார் சரிதான்  எனக்கு நான் மேற்கொண்ட படகு பயணங்கள் வரிசையாய் என்னைப் பற்றி எழுது என்னைப் பற்றி எழுது என்று கூறியது போல் இருந்தது. நேராக படகில்  பயணித்த அனுபவங்களூடே நிகழ்ந்த சம்பவங்கள் சில முக்கியத்துவம் பெறுகிறது1968 என்று நினைக்கிறேன்
 படகில்  கொடைக்கானல் 

திருச்சிகுடியிருப்பில் இருந்து நண்பர்கள் ஒரு பேரூந்து அரேஞ்ச் செய்து கோடைக்கானனலுக்கு உலா சென்றிருந்தோம் கொடைக்கானலில் ஏரியில்படகு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு  அதில் நண்பர்கள் பலரும் ஏறி அமர்ந்தோம் குடும்பத்துடன்   வந்திருந்தவர்கள் பலர் அது ஒரு துடுப்பு படகு சிறிது தூரம் சென்றதும் நண்பரொருவர் மீண்டும் கரைக்குப் போகச் சொல்லிக் கத்தினார் ஆரம்பமே சரியில்லையே என்று பலரும்  நினைத்தார்கள் விருப்பமில்லாமல் படகில் சவாரி செய்தால் ரசிக்க முடியாது என்று தெரிந்ததால் மீண்டும் கரைக்கு வந்தோம்  நண்பரும் அவர் மனைவி மகனும்  இறங்கிக் கொண்டார்கள் இறங்கும் போது ஏன் என்றுவிசாரித்தோம் எந்தநினைப்பு வரக்கூடாதோ அது வந்து அவர் பயத்தில் உறைந்துவிட்டார். அப்படி என்ன நினைப்பு.?ஒரு ஃப்லாஷ் பேக்( flash back)   போகவேண்டும்  சில நாட்களுக்கு முன் நடந்தசம்பவம் அது திருமணம் ஆன இரு இளம் ஜோடிகள் கல்லணைக்கு சுற்றுலா வந்திருந்தனர் / இரண்டு ஜோடிகளுமே எனக்கு நன்கு தெரிந்தவர்கள் அவர்களில் ஒருவர் என்னுடன்  பணியில் இருந்தவர்
கரையில் மனைவிகள் அமர்ந்திருக்க கணவன்மார் இருவரும் நீரில் இறங்கி இருக்கிறார்கள் அப்போது நீர் கால் கணுவளவே இருந்தது திடீரென்று பார்த்தால் அங்கு நின்றிருந்த இருவரில் ஒருவரைக் காணவில்லை பெண்கள் இருவரும் கதறி அழ நீரில் இருந்தவர் ஏதும்புரியாமல் விழித்திருக்கிறார்  கூட வந்தநண்பன் காணாமல் பொனது அப்போதுதான் அவருக்கும்தெரிந்தது தேட ஆரம்பிக்கிறார்கள்  களேபரமறிந்து எல்லோரும் தேட அவர்களுக்குப் புரியாதது  கூட வந்த நண்பர் ஏதோ புதைமணலில் சிக்கி இருக்கிறார்  அவரது உடல் இரண்டு நாட்களுக்குப் பின் கண்டெடுக்கப் பட்டது  கொடைக்கானலில் படகில் வந்த நண்பருக்கு இந்த நினைவு வந்து தண்ணீரைப் பார்த்ததும்  தனக்கு நீச்சல் தெரியாததும்  நினைவுக்கு வந்து படகை கரைக்குத் திருப்பச் சொல்லி இருக்கிறார் கணுக்கால் அளவு கூட நீர் இல்லாதபோது ஒருவர் நீரில் மூழ்கி இறந்தது என்றும் சிந்திக்க வைப்பதுதான்

கடல் தர்ப்பை எடுக்க ப் படகில் 

இன்னொரு படகுப் பயணம் நாங்கள் ராமேஸ்வரம் அருகே இருந்த நவபாஷாணக் கோவிலுக்குச் சென்றிருந்தோம் அப்போது அங்கிருந்த சிலர் கடலுக்குச் சென்று கடல் தர்ப்பை கொண்டு நவபாஷாணக் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்தது  என்று கூற கடலில் ஒரு படகுப் பயணம் ஆரம்பித்தது கடலில் சிறிது தூரம்சென்றதும்  நீரில் மிதந்து வந்த தர்ப்பைப் புற்களைப் பறித்து வந்து நவபாஷாண க் கற்களுக்கு வழிபாடு நடத்தினார்கள் எனக்கு கடலில் ஒரு படகுப் பயணம் அமைந்தது

வாரணாசியில் நாங்கள் என் பெரிய அண்ணா மனைவியுடன்  சென்றிருந்தபோது அண்ணா பித்ருக்களுக்கு  திதி கொடுக்க நினைத்தார் அவர் திதி கொடுப்பதில் எனக்கு ஆட்சேபணை இருக்கவில்லை படகிலேயே  திதி கொடுக்கவும் பிண்டங்கள் வைக்கவும்  வசதி செய்யப்பட்டது திதியும்  கொடுக்கப்பட்டது
வாரணாசி படகில் திதி 
  அதன்  பின்  அலஹாபாதில் இருந்து திருவேணி சங்கமத்துக்கு படகில் சென்றதும் மறக்க முடியாதது படகில் துழாவிச் செல்லும் போது கங்கையில் இறந்த ஒரு மனித உடலும்   மாட்டின்  உடலும்  மிதந்துவந்ததை பார்த்ததும்  மறக்க முடியாத அனுபவம்  அப்போது மட்டும்  நீரில் விழுந்து விடுவோமா என்னும் நினைப்பு வராதது நல்லதற்கே
திருவேணி சங்கமத்துக்கு 
படகுப் பயணங்களில் இரு முறை கொச்சியில் சென்றதும் நினைவுக்கு வருகிறது கேரள டூரிச படகு. அவர்கள் படகில் செல்லும் போது விளக்கங்கள் கூறிக்கொண்டே வருகிறார்கள் படகில் போகும் போது  சைனீஸ் மீன்பிடி வலைகளையும் காண நேர்ந்தது ஜ்யூ டௌன் ( jew town)    பார்த்தோம் நிறையவே காணொளியில் இருக்கிறதுஒரு முறை நானும் மனைவியும்  இன்னொருமுறை அமெரிக்காவில் இருந்து வந்திருந்த நண்பரின்  குடும்பத்துடன்
கொச்சியில்( காணொளியில் இருந்து )



நண்பரின் குடும்பத்தோடு குமரகம்  காயலில் படகில் சென்றதுமொரு இனிய அனுபவம் எல்லாவற்றையும்  வீடியோவாக எடுத்துள்ளேன்   பதிவிட முடியவில்லை
குமரகத்தில் படகு வீடு ( காணொளியிலிருந்து)


ஹொகனேகலில் பரிசலிலும்  சென்றிருக்கிறோம்  அப்போது எடுத்தபுகைப்படங்களை ஃபில்மில் எடுத்ததுதேடிக்கொண்டிருக்கிறேன் நான் மனைவி அண்ணா  அண்ணி அவர்களது பேரன் பேத்தி என ஆறுபேர் முதலில் பரிசலில் ஏற பயமாய் இருந்தது பரிசலில் போகும் போது சிறுவர்கள் மலை முகட்டுக்கு மேல் ஏறி அங்கிருந்து பரிசல் அருகே குதித்துகாசு கேட்டார்கள்  பயமறியா இளங்கன்றுகள்
கடைசியாக கன்னியா குமரிவிவேகாநந்தா குன்றுக்கு  படகில் சென்றோம்

                        காணொளி கன்னியாகுமரி 

           .






Wednesday, July 26, 2017

ஒரு துணுக்குத் தோரணம்


                                           ஒரு துணுக்குத் தோரணம்
                                           -----------------------------------------
அம்மாவுக்கு
 உனக்கு வலி கொடுத்து பிறந்த காரணத்தால்தானோ என்னவோ எனக்கு வலி ஏற்படும்போது அம்மா என்று அழைக்கிறேன் 
                     -------------------------------------

இந்த தமிழ் மணம் எனக்கு ஒரு புதிராகவே இருக்கிறது, அதுவும்  இந்த ராங்கிங்  பற்றி நினைத்தால் புரிவதே இல்லை. கடந்த மூன்று மாதங்களில்  வாசித்தவர் எண்ணிக்கை கொண்டு ராங்கிங்  கொடுக்கப் படுகிறது நான் என்னவோ என்றும்போல்தான் எழுதி வருகிறேன்   போன இரண்டு மூன்று  பதிவுகளின்  போது 20/21 ராங்கில் இருந்த என்பதிவு கடந்த இடுகையின் போது 13 ஆக  உயர்ந்திருக்கிறது  வாசகர் எண்ணிக்கையில் பெரிய மாற்றம்  ஏதும் இல்லை
                       ------------------------------------------

ஒரு செய்திப்பகிர்வு
 மும்பையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை அங்குள்ள ஒர் ரேடியோ ஜாக்கி கிண்டலடித்துப் பாட்டு இயற்றிப் பாடி இருக்கிறார்  தொலைக் காட்சியில் பார்த்தபோது பலரும் ரசிப்பதைக் காண முடிந்தது ஆனால் அதிகாரத்தில் இருப்பவரைக் கேலி செய்தால் என்ன பலன் கிடைக்கும்  தெரியுமா  அவர் வீட்டில் டெஙுகு கொசு வளர்க்கிறார்  என்று வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் …….!
                   ----------------------------------------------  

மகனுக்கு பேண்ட் வாத்திய வரவேற்பு 
என் இரண்டாவது மகனை ஒரு கல்லூரி விழாவுக்குத் தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள் அழைப்பிதழ் கீழே  ஒரு தந்தையாக பெருமிதம் கொள்கிறேன்
மகனுக்கு வந்த அழைப்பிதழ்





மகன் பட்டம் வழங்குகிறான்

எங்கள் வீட்டில் மீண்டும்  மகளிர் சக்தியைக்கண்டேன்  பெண்கள் குழுவாக வந்து விஷ்ணு சஹஸ்ர நாமம் ஜபித்தார்கள் வழக்கம்  போல் நான்  என் அறையில் முடங்கிக் கிடந்தேன் 
வீட்டில் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்  (மகளிர் சக்தி )




ஒரு சிறுகதை
 அந்தப் பெரியவர் தன்னுடைய , ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த தோட்ட வீட்டில் தனியாக இருந்தார். அந்தப் பெரிய வீட்டின் ஒரு பகுதியில் நான்கைந்து பேர்களுடைய நடமாட்டம் இருந்ததை உணர்ந்தார். ஒரு அறையில் கதவைச் சாத்திக்கொண்டு அவசர போலீசுக்கு போன் செய்தார்.
“ என் வீட்டில் திருடர்கள் நடமாட்டம் தெரிகிறது. நீங்கள் உடனே வந்து என்னையும் என் பொருள்களையும் காப்பாற்ற வேண்டும் “ என்று கூறினார். அவர்கள் அவரது இருப்பிடம் போன்றவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு
“ நீங்கள் இப்போது எங்கிருக்கிறீர்கள்.?என்று கேட்டனர். “ தோட்ட பங்களா வின் ஒரு கடைசி அறையில் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே இருக்கிறேன் “ என்றார். “ நீங்கள் எங்கேயும் வெளியே செல்ல வேண்டாம், அங்கேயே இருங்கள். தற்சமயம் எங்களிடம் போதிய ஆட்கள் இல்லாததால் உடனே வர முடியவில்லைஎன்று கூறி தொடர்பைத் துண்டித்தனர். .

சரியாக ஒரு நிமிஷம் கழித்து மறுபடியும் போன் செய்தார். “ என் தோட்டத்தில் திருட வந்தவர்களை நான் சுட்டு விட்டேன். நீங்கள் அவசரமாக வரவேண்டும் “என்றார்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு போலீஸ் ஜீப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீஸ் படையுடன் பங்களா முன் வந்து திருடிக் கொண்டிருந்தவர்களைக்
கைது செய்தது. வெளியே வந்த பெரியவரிடம்நீங்கள் சுட்ட நபர் எங்கே .?என்று கேட்டனர். பெரியவர் “ நான் யாரையும் சுடவில்லை “ என்றார். “ பின் ஏன் சுட்டதாகப் பொய் சொன்னீர்கள் ?என்று கேட்டதற்கு “ நீங்களும்தான் இங்கு வர ஆட்கள் இல்லை என்று சொல்ல வில்லையா “ என்றார் அந்த அனுபவம் வாய்ந்த உலகம் தெரிந்த பெரியவர்.
                             ------------------------------------

மலர்களின் பெயர்கள்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி
ஏதாவது தெரிகிறதா. ?
மணிமேகலையில்  சாத்தனார் கூறி இருக்கும் பெயர்களாம்
                             ---------------------------------------

Give us the serenity, to accept what can not be changed, courage to change that which should be changed, and wisdom to know one from the other
                                                  ------------------------------------

பத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது,
பாடகம் தண்டை கொலுசும் பச்சை வைடூரியம் 
இச்சையா யிழைத்திட்ட  பாத சிலம்பின் ஒலியும்
முத்து மூக்குத்தியும் இரத்தினப் பதக்கமும் மோகன மாலையழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலும் செங்கையின் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளியுற்ற சிறு காது கொப்பின் அழகும்
பாடலின்  கடைசி வரிகள் இரண்டை நீக்கி இருக்கிறேன் 
இந்தப்பாடல் உங்களிடம்  ஏதாவது நினைவலைகளைத் தோற்று விக்கிறதா ?
              ------------------------------------------------------------------------               









Sunday, July 23, 2017

ஊர்க்கோலம்


                                     ஊர்க்கோலம்
                                    -----------------------
மின்னூல் முகப்பு 

பணி ஆற்றிய ஊர்களில் இருந்த பறித்து வந்த நிகழ்வுகளே கதையாகிறது என்கிறார்  செல்லப்பா மொத்தம்  பதினைந்து கதைகள் கூடவே அவரைப்பற்றிய ஒரு சுய அறிமுகமும் . கார்ப்பரேஷன்  வங்கியில் பணி ஆற்றி  துணைப் பொதுமேலாளராக ஓய்வு பெற்றவர்
நண்பர்கள் வேறு தோழர்கள் வேறு  என்னும்  முதல் கதையில்      அவரிடமிருந்த பழைய ஹெர்குலெஸ் சைக்கிளையே அறி முகத்தில் நகைச் சுவையாக விவரிக்கிறார்காங்கிரஸ் கட்சியை மேம்படுத்த தொடங்கப்பட்ட வெண்புறா  மன்றத்தின்  ஒரு உறுப்பினர் ரேணு .மன்றம் மூலம் அறிமுகமானவர்  பீடி சுற்றும்  தொழிலாளி  ஒரு முறை பீடி சுற்றும் வேலை இரண்டு நாட்களுக்கு இல்லை என்றானதும்  தொண்டர் ரேணு கதாசிரியருக்கு ஸ்காலர் ஷிப் பணம் கிடைத்திருப்பதாக  ராஜ சேகர் என்பவர் மூலம் கேள்விப்பட்டு மிகவும்  சங்கடத்துடன்  ஒரு இருபது ரூபாய் கைமாத்தாக வேண்டி இருக்கிறார். ஆசிரியரும் ஸ்காலர் ஷிப் பணத்தில் மிச்சமிருந்த 22 ரூபாயில் இரண்டு ரூபாய் வைத்துக் கொண்டு மீதி இருபது ரூபாயை  தோழர் ரேணுவிடம்  கொடுத்தார்  நாட்கள் கடந்தன/ ரேணு இவரைப் பார்க்கும் போதெல்லாம் கூடிய சீக்கிரம்பணத்தை திருப்புவதாகக் கூறுவார்  மூன்றாண்டுகளுக்கு பிறகு இவருக்கு வேலை வாய்த்துப் போகும்போது  அவசரமாக வந்து நான்கு ஐந்து ரூபாய்த் தாள்களைக் கொடுத்து தாமதத்துக்கு மிகவும்  வருத்தம் தெரிவித்தார் ஆனால் அதே சமயம் இவரிடமிருந்து நூறு ரூபாய் கடனாகப் பெற்ற ராஜசேகர் எவ்வித்க் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எவ்வளவு பண்ம் தரவேண்டும் என்பது கூட நினைவில்லாத மாதிரி இவருக்கு திருமணம் செய்யாமல் இருக்குமாறு அட்வைஸ் வேறு கொடுக்கிறார்  ஏழை என்றாலும் கடன் பட்டார் நெஞ்சம்  போல  வருந்திய ரேணு எங்கே ஓரளவு வசதியுடன்  இருந்தும்  கடன்  பற்றிய எண்ணமே  இல்லாமல் இருந்தராஜசேகர் எங்கே. ? இந்தக் கதையை படித்ததும்  என்  அனுபவம்  ஒன்றும் நினைவில் வந்தது அரசு பணியில் இருந்த ஒருவர் (யாரென்பது வேண்டாமே) தான் மிகவும் கஷ்ட நிலையில் இருப்பதாகவும்  உடனே ரூ.500/ அனுப்புமாறும்  உருக்கமான ஒரு கடிதம்  எனக்கு எழுதினார்  பணம்பெறும்போது சொன்ன வார்த்தைகள் எல்லாம்காற்றில் போய் விட்டது  இன்று வரை அது ஆயிற்று 40 வருடங்கள்  ஒரு மூச்சு கூட இல்லாமல்  இருக்கிறார் அவர்  இலங்கை வேந்தனின் கடன் பட்டார் நெஞ்சம் என்பது ஒரு சிலருக்குத்தான் போலும்
தோள்மாறிய ரோஜா
 கல்லூரியில்கட்டுரைப் போட்டியிலும்  கவியரங்கத்தில் பங்கு பெற்றதற்காகவும் இரு ரோஜா மாலைகள் ஆசிரியருக்குக் கிடைத்ததாம்  அதில் ஒன்றை  ஆசிரியரின் நண்பர் ஒருவர் ஜெயப்பிரகாஷ்  என்பவர்  கேட்டு வாங்கிப்போகிறார்  அது மட்டுமல்லாமல் தானே பெற்ற பரிசுபோல் பீத்திக் கொண்டு ஆசிரியரின் தாயிடமும்  கூறிக் கொள்கிறார்
விழா முடிந்து வீடு சென்றபோது வெறும் கழுத்துடன் இருந்த இவரிடம்  இவரது தாயார் ஜெயப்பிரகாஷுக்கு இரண்டு மாலைகள்கிடைத்ததை அவன் சொல்லிப்பெருமை கொண்டதைக்  கூறி இருக்கிறார்  சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிற்சங்கத் தலைவனாக ஜெயப்பிரகாஷ் இருந்ததை ஆசிரியர் தெரிந்துகொள்கிறார்  அவரது அலுவலகத்தில் ரோஜா மாலையுடனிருக்கும் ஜெயப்பிரகாஷின்  ஃபோட்டோவையும்பார்க்கிறார்  அற்ப சந்தோஷிகள் வேஷம் போடும் மக்கள்
புலன் விசாரணை
  இப்போதெல்லாம் நடக்கும் புலன்  விசார்ணகள் சிபிஐ ரெய்ட்   எப்படி இருக்கலாம் என்னும் அனுபவ விளக்கமே இக்கதை  விசாரணைக்குப் போகிறவர்களில் இவரும்  வங்கி அதிகாரி என்னும் நிலையில்  ஒருவர்  என்ன விசாரணை  எங்கே என்ற எந்த செய்தியும் கூறப்படாமல் கூட்டிப் போகப்படுகிறார் 
இந்தக் கதையில் வரும் வாசகம் சிந்திக்க வைக்கிறது  
எங்க டிபார்ட்மெண்டுல இதெல்லாம்  சகஜமுங்க பெரிய தொகை கை மாறிச்சுனா நாங்களே ஆளை விட்டுலஞ்சம் வாங்கினார்னு புகார் எழுதச் சொல்லுவோம் ரெய்ட் வருவாங்க நல்லா கவனிச்சுக்குவோம் அந்தநாள்வரைக்கும் ரெகார்ட் க்லியர் ஆகிவிடும் அப்புறம் கவலை வேண்டாமே . நீங்கள் பேங்கில் இருக்கீங்க அதானுங்களுக்குப் பழக்கமில்ல போல
சிபிஐ ரெய்ட் என்று களேபரம் செய்யப்படும்  ஒவ்வொரு செயலுக்கும்பின்  என்னதான் உண்மையோ
 கடமை புரிவார் இன்புறுவார்
 ----------------------------------------------------
 வங்கிகளில் கடை நிலைத் தொழிலாளிகளையும் மதிக்கிறோம் என்று சொல்லி அதன் பின்னணியில் இருக்கும்  சிலசுவாரசியமான  நிகழ்ச்சிகளை கூறும் கதை இது  கடை நிலை ஊழியர் பெருமை பேசிக் கொள்ளவும்
சில எதிர்பாராத நிகழ்வுகள் எப்படி ஒருவரது மாற்றலுக்குக் காரண மாக அமைகிறது என்பதையும்  கோர்வையாகச் சொல்லும் கதை
அனைத்துமகளிர் வங்கி, உருமாற்றம்,பரிசாக வந்த பவழ மோதிரம், ஞானியைக் கண்டேன் , படம் கொடுத்த பாடம் , சுதந்திர தினம், குட்பை மஞ்சு, விசிறி சாமியார் கொடுத்தபழம் , ஆகிவந்தபுத்தகம் . திருக்குறள் நாயக்கர் உண்டா எதிர்காலம்  போன்றவை மீதி உள்ள கதைகள்
சொந்த அனுபவங்கள் பதியப்படும் போது  அவரது குணாதிசயங்களும் பதியப் படுகிறது  ஆசிரியரை நேரில் பழக்கம் உண்டு. இருந்தாலும்  இக்கதைகளைப் படிக்கும் போது அவர் குறித்த மேலும் சில தகவல்களும் குணங்களும்தெரியவருகிறது  எல்லாக் கதைகளையும்  நானே விவரித்து விட்டால் நூலைப் படிக்கும் ஆர்வம்குறையலாம்  ஒரு சில சாம்பிள்  கதைகளையே  குறிபிட்டு இருக்கிறேன் 
ஊர்க்கோலம் கதைத் தொகுப்பு எளிதாக வாசிக்கத் திறம்பட எழுதப்பட்டது  புஸ்தகாவில் மின்னூலாக வந்திருக்கிறது  வாசித்துப் பயன்பெறலாமே  


திரு செல்லப்பாவுடன்  நான்  
          







Wednesday, July 19, 2017

ஒரு பயண நினைவு


                                                    ஒரு பயண நினைவு
                                                     -------------------------------
  அண்மையில் வெங்கட் நாகராஜின்பதிவு படித்தேன் அதில் அவர் விசாகைக்கு பயணம் செய்தது பற்றி எழுதப் போவாதாகக் கூறி இருந்தார். உடனே எனக்கு என் வைசாக்  நினைவுகள் வந்து அலை மோதின. வலைப்பதிவன் நினைவுகளையே முக்காலும் பதிவாக்குபவன்  சும்ம இருப்பேனா இதோ ஒரு பதிவு
முன்பெல்லாம்  அவ்வப்போது பயணப் பட்டு விடுவேன்   விசாகப் பட்டினத்தில் என்  மச்சினன்  வேலையில் இருந்தான் போனால் தங்க இடம் உண்ண உணவு கவலை இல்லை.நானும் மனைவியும் பயணித்தோம்   மனைவியில்லாமல் பயணிப்பது இல்லை  1999ம் வருடம்  பதினெட்டு வருட முந்தைய நினைவுகள் காலையில் மச்சினன் வேலைக்குக் கிளம்பிப் போனால்  திரும்பி வர மாலையாகும்   அதன் பின்  எங்காவது போகலாம் ஆனால் நாள் முழுவதும் என்ன செய்வது. அப்போது நான் தஞ்சாவூர் ஓவியங்கள் தீட்டுவதில் மிகுந்த ஈடுபாடுடன் இருந்தேன் பகல் வேளையை ஓவியம் தீட்ட உபயோகிக்கலாம் என்று முன்னாலேயே திட்டமிட்டிருந்தேன்   அதற்கு வேண்டிய பொருட்களையும் எடுத்துச் சென்றேன்  என் மச்சினன்  அய்யப்பன்  படம்  தீட்டுங்கள் என்றான்  தீட்டிய படம் அவனுக்குத்தானே ஆகவே அவன்  விருப்பம்போல் ஓவியம்  தீட்டத் துவங்கினேன்
ஓவியத்துக்கு தங்க ரேக்குகள் (gold foils) தேவைப்படும்   நான் எடுத்துச் சென்றது போதவில்லை. சென்னையில் என்  மருமகளிடம்  வாங்கி குரியரில் அனுப்பச் சொன்னேன் கூரியரும்வந்தது  ஆனால் பிரித்துப்பார்த்தபோது தங்கரேக் இருக்க வில்லை. அதற்குள் கூரியர் கொடுத்தபையன் போய் விட்டான் மீண்டும் தகவல் சொல்லி மறுபடியும் அனுப்பச் சொன்னேன்  இந்த முறை கூரியர் வந்தபோதுபையனை வைத்துக் கொண்டே கவரைப் பிரித்தேன்  அதுவும் காலியாக இருந்தது கூரியர் பையன் கம்ப்லெயிண்ட் கொடுக்கச் சொன்னான் அந்தக் கூரியர் சென்னையில் இருந்து  ஹைதராபாத் வந்து அங்கிருந்து விசாகப் பட்டணம் வருவதாகத் தெரிந்தது அவர்கள் வந்ததை டெலிவர் செய்ததாக கூறினார்கள்  ஒரு எழுத்துக்கம்ப்லெயிண்ட் கொடுத்தோம்   மருமகளுக்கும்தகவல் தெரிவித்தோம்   அவள் குரியர் கவரை அந்த அலுவலகர்  முன்புதான் தங்க ரேக்குகளை இட்டு மூடியதாகக் கூறினாள்  சென்னையில் அந்தக் கம்பனியிடமிருந்து நஷ்ட ஈடாக  ஒரு தொகையை  வாங்கினாள் இம்முறை அனுப்பியது ஒழுங்காக வந்தது பிறகு ஓவியத்தை வரைந்து முடித்தேன்  கூரியர் சம்பந்தப்பட்ட இந்த நினைவுதான்/ நிகழ்வுதான் முதலில் வந்தது
மச்சினன் வீட்டில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில்  சிம்ஹாசலக் கோவில் இருந்தது  எழுநூறு எண்ணூறு  அடி உயரத்தில் சிம்மகிரி என்னுமிடத்தில் உள்ள கோவில் அது வராக நரசிம்ஹர் என்று நினைவு. ஆனால் அதைவிட அந்த சுவாமியின்  சிலையைக் காண முடியாதபடி சந்தனத்தால்  மூடி இருக்கிறர்கள்  வழக்கம்போல் கடவுளின்  உக்கிரம்  தாங்க முடியாது என்றும்  ஆண்டுக்கு ஒரு முறையே மூர்த்தியைப் பார்க்க முடியும்   என்றும் கதை  கூறினார்கள்
இன்னொரு கோவில் விசிட் விசாகப் பட்டினத்திலிருந்து சுமார் 120 கி மீ தூரத்தில் அன்னாவரம்  என்னும்  இடத்தில் இருந்த சத்திய நாராயணர் கோவில்  அங்கே கோவிலில் மதியம் உணவு படைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் பசியில் இருந்த நாங்கள் அவர்கள்பிரசாதமென்னும் பெயரில் கொஞ்சூண்டு புளிசாதம் கொடுத்த போது பசி ஆறாமல்  சாப்பாட்டுக்கு உணவகம் நாடியதும் நினைவுக்கு வருகிறது

விசாகப்பட்டினம் கடற்கரை சின்னது  அங்கே சில பெண்கள் மெஹந்தி தீட்டிபணம்பார்க்கிறார்கள்  ஐந்தே ரூபாய்க்கு  இரண்டு நிமிடத்தில் அழகான டிசைனில் கைகளில் மெஹந்தி ஓவியம் தீட்டுகிறார்கள் சிறந்த கைவேலைப்பாடு உடையவர்கள்

அங்கே கைலாஷ் கிரி என்னும அழகான இடம் சென்றிருந்தோம் பொழுது போக்கவும் அழகான காட்சிகளைக் காணவும்  ஏதுவாக இருக்கிறது மூழ்கிய டைடானிக் கப்பலை நினைவு கொள்கிறமாதிரி இருந்தது விசாகாவில்  சுமார் இரண்டு வார காலம் இருந்தோம்  அதற்கு முன்   பணியில் இருந்தபோது  விசாகப்பட்டினத்துக்கு ஏரோப்லேனில் பயணித்திருக்கிறேன் 

விசாகப்பட்டினம்  கைலாஷ் கிரியில் எடுத்த படம் 
 
விசாகப்பட்டினத்தில்  வரைந்த ஐயப்பன் ஓவியம் n
    
   
      
                       
     
                   

Saturday, July 15, 2017

இவர்கள் யார் என்று தெரிகிறதா


                                  இவர்கள் யார் என்று தெரிகிறதா
                                   ==============================
1)       கணவன் மனைவி இருவரையும் BERMUDAS-ல் காணலாம். பெரும்பாலும் NIKE ஷூக்கள அணிந்திருப்பர்.
2)      தாபாக்களில் உணவு அருந்திவிட்டு CREDIT கார்டில் பணம் செலுத்த முயல்வார்கள்.
3)      மினெரல் வாட்டர் பாட்டிலுடன் இருப்பார்கள்.
4)      தாராளமாக DEODARENT உபயோகிப்பார்கள்.
5)      யாராவது தும்மினால் GOD BLESS  என்பார்கள்.
6)      ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும்போது HEY அல்லது HI என்பார்கள்.
7)      தயிர் என்பதற்கு யோகர்ட் என்பார்கள்.
8)      டாக்சி என்பதற்கு பதில் CAB என்பார்கள்.
9)      சாக்கலெட் அல்லது மிட்டாய்க்கு CANDY என்பார்கள்
10)  பிஸ்கட் என்பதற்கு குக்கி என்பார்கள்.
11)  HAVE TO GO என்பதற்கு GOTTA GO என்பார்கள்.
12)  ஜீரோ என்று வருமிடங்களை ஓ என்பார்கள். (உ-ம் 204 என்பதை டூஓஃபோர் என்பார்கள்.)
13)  தூரங்களை மைலில் சொல்வார்கள்
14)  எண்களை மில்லியன்களில் சொல்வார்கள்.
15)  சுற்றுப்புறம், வெயில் எல்லாவற்றையும் குறைபட்டுக் கொள்வார்கள்.
16)  பால் கவர்களில் பாலில் எவ்வளவு % FAT இருக்கிறது என்பதை கவனமுடன் பார்ப்பார்கள்.
17)  நாளைக் குறிப்பிடும்போது மாதம் தேதி வருடம் (MM/DD/YYYY) என்றுதான் எழுதுவார்கள். தேதி மாதம் வருடம் என்று குறிப்பது பிரிட்டீஷ் வழக்கம் என்று கேலியாக சொல்வார்கள்.
18)  COKE குடிக்கும்போது கவனமாக DIET COKE தான் குடிப்பார்கள்.
19)  ஊருக்கு வந்து ஒரு மாதம் ஆனாலும் JET LAG பற்றி குறை கூறுவார்கள்.
20)  இந்தியாவின் எல்லாவற்றையும் குறைவாகவே மதிப்பார்கள்.
21)  தங்கள் பயணத்தின்போது சூட்கேசில் கட்டப்படும் விமான சர்வீஸாரின் TAG களை எடுக்கவே மாட்டார்கள்.
22)  SCHEDULE என்பதை SKEJULE என்றும் MODULE என்பதை MOJULEஎன்றும் உச்சரிப்பார்கள். (அமெரிக்கா ரிடர்ண்ட் அமெரிக்க  இந்தியர்கள்)

பாட்டிலில் ஷாம்பூ காலியான பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி இன்னும் ஒரு குளியலுக்கு அதை உபயோகிப்பார்கள் .
பற்பசை காலியானாலும் அதைத் தட்டி தகடாக்கி சுருட்டி எல்லாப் பேஸ்ட்டையும் வெளியில் எடுப்பார்கள்  . 
இருநூறு ரூபாய்க்குக் காய்கறிகள் வாங்கினாலும் கொஞ்சம் கொத்துமல்லித் தழை கொசுராக வாங்குவார்கள்  . 
கிடைத்த பரிசுப் பொருட்களையே மீண்டும் பரிசாகக் கொடுக்க அது பொதிந்து வந்த வண்ணத் தாளையே உபயோகிப்பார்கள் 
வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த bone chjna கோப்பை, தட்டுகளை விருந்தினர் வரும்போதுமட்டும் வெளியில் எடுப்பார்கள் . 
ஒரு பொட்டுத் தங்கம் வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட அதன் விலை ஏற்றம் பற்றிக் கவலை கொள்வார்கள் . 
TV ரிமோட்டைத் தட்டித் தட்டி அதன் உயிர் எடுப்பார்கள் . புது பாட்டரி வாங்காமல் காலம் கடத்துவார்கள்   
விருந்துக்குப் போகுமுன் பட்டினி கிடந்து வயிற்றைக் காலியாக வைத்துக் கொள்வார்கள்
. T ஷர்ட் பழையதானால் அதை இரவில் உடுத்து வார்கள் . இன்னும் பழையதானால் ஹோலி அன்றைக்கு உடுத்துவார்கள்  இன்னும் பழையதானால் வீடு துடைக்க உபயோகிப்பார்கள் (இந்தியர்கள் )

நாம் இந்தியர்கள்   
ஆண்குழந்தைக்காக வேண்டுவோம். பெண்சிசுக்களை வேண்டோம்.முடிந்தால் கருவிலேயே அழிப்போம். பெரியோர்களின் ஆசியும் ஆண்மகவுக்கே பெண்ணுக்கல்ல. 
ஆனால்
செல்வம் வேண்டுமென்றால் மஹாலக்ஷ்மியை வேண்டுவோம்.
கல்வி வேண்டுமென்றால் சரஸ்வதியை வேண்டுவோம்.
துக்கங்களில் இருந்து நிவாரணம் கிடைக்க  தாய் சக்தியை நாடுவோம்
பேய் பிசாசுகளில் இருந்து பயம் அகல காளிமாதாவை தரிசிப்போம்..
நாம் இந்தியர்கள். WE ARE HYPOCRITES.!

                                       


 காணொளி கண்டு ரசிக்க 

நமக்கு தெரிந்திருக்க வேண்டிய உறவு முறைகள் 

       நாமும் நம் வம்ச விருட்சமும்   
  பரன்                          பரை
  சேயோன்                      சேயோள்
  ஓட்டன்                        ஓட்டி
  பூட்டன்                        பூட்டி
  பாட்டன்                       பாட்டி
  தந்தை                         தாய்
  மகன்                          மகள்
  பெயரன்                        பெயர்த்தி
  கொள்ளுப்பெயரன்              கொள்ளுப் பெயர்த்தி

  எள்ளுப்பெயரன்                 எள்ளுப்பெயர்த்தி 


இதில் காணும் எண்களில் ஏதாவது ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள் காணொளி  மீண்டும்  பார்க்கும் போது நீங்கள் நினைத்த எண் காணாது
இது எப்படி என்று சொல்ல முடிகிறதா பாருங்கள் காணொளி





























Tuesday, July 11, 2017

மழை விட்டும் தூவானம்..............


                                  மழை  விட்டும் தூவானம்..............
                                 ---------------------------------------------
மழைவிட்டும் தூவானம்  விடவில்லை என்பார்கள்  அது போல் இருக்கிறது எனக்கும்  மரம்செடி கொடிகள் என்று எழுதி இருந்தேன்  அதில் என் வாழைமரம் விட்டுப்போயிருந்தது வாழை குலைத்துக் காய்க்க சுமார் ஓராண்டுகாலம் ஆகிறது என்  தோட்டத்தில்  மூன்று நான்கு மரங்கள் வைத்திருந்தேன்  வீடு மராமத்து  செய்யும் போது பின் புறம் பாதி இடத்துக்கும்  மேல் கான்க்ரீட் பூசி ஒரு கார் நிறுத்தும் இடமாகச் செய்திருந்தேன் அப்போது பலியானவை வாழைகளே  இருந்தாலும்  ஒரு கன்றை இருக்கும்  இடத்தில்  நட்டேன்  அது இப்போது பூ விட்டிருக்கிறது அந்தக் குலை சாய்ந்து மதில் ஓரம்  இருப்பதால் காய்க்கப் போகும் குலை திருட்டுப் போகலாம் ஒரு நப்பாசையாக அதனை புகைப்படமாக சேமிக்கிறேன் அதுகீழே

 இருக்கும் ஒரே வாழை 
வாழ்வில் ஒரு நாள் என்றுமனைவியின் பிறந்த நாள் குறித்து எழுதி இருந்தேன் பிறந்த நாள் அன்று மாலை  என் இரண்டாம் மகன் குடும்பத்துடன் வந்திருந்தான் வரும்போது ஒருகேக்கும்  வாங்கி வந்தான்   நானும் என்  ஆசைக்கு ஒருகேக் அவனில்லாமல்  பேக்கினேன்  ( செய்முறைக்கு பார்க்க என்  பூவையின்  எண்ணங்கள் பதிவு.. எனக்கு மெழுகு வத்தி ஏற்றி அணைத்துக் கொண்டாடுவதில் விருப்பம்  இல்லை  அதற்குப் பதில் விளக்கேற்றி  வாழ்த்து சொல்வது சிறந்தது  என்று எண்ணுகிறேன்   அது குறித்து ஒரு பதிவும் முன்பே எழுதி இருக்கிறேன்  பார்க்க (பிறந்த நாள் )  (பிறந்த நாள் )
 என் மனைவியின்  பிறந்த நாளன்று எடுத்த புகைப்படங்களும் காணொளியும்  பதிவிடுகிறேன் 

இடப்பாகம் இருப்பது மகன்  வாங்கி வந்த கேக்  வலது புறம் அவனில்லாமல் பேக்கிய கேக் 

     
   
மனைவியுடனும் பிறந்த நாள் கேக்குடனும்    


இட்மிருந்து வலமாக சின்ன பேரன்,  மகனின்  மச்சினன்  மகன்,  மனைவி, நான், பேத்தி 

  
மேலே தெரியும் ஆலிலைக்கண்ணன் நான் என் அண்ணாவுக்குக் கொடுத்தது நான் அப்போது புகைப்படம்  எடுத்துக்  கொள்ளவில்லை தஞ்சாவூர் ஓவியம்