Sunday, July 23, 2017

ஊர்க்கோலம்


                                     ஊர்க்கோலம்
                                    -----------------------
மின்னூல் முகப்பு 

பணி ஆற்றிய ஊர்களில் இருந்த பறித்து வந்த நிகழ்வுகளே கதையாகிறது என்கிறார்  செல்லப்பா மொத்தம்  பதினைந்து கதைகள் கூடவே அவரைப்பற்றிய ஒரு சுய அறிமுகமும் . கார்ப்பரேஷன்  வங்கியில் பணி ஆற்றி  துணைப் பொதுமேலாளராக ஓய்வு பெற்றவர்
நண்பர்கள் வேறு தோழர்கள் வேறு  என்னும்  முதல் கதையில்      அவரிடமிருந்த பழைய ஹெர்குலெஸ் சைக்கிளையே அறி முகத்தில் நகைச் சுவையாக விவரிக்கிறார்காங்கிரஸ் கட்சியை மேம்படுத்த தொடங்கப்பட்ட வெண்புறா  மன்றத்தின்  ஒரு உறுப்பினர் ரேணு .மன்றம் மூலம் அறிமுகமானவர்  பீடி சுற்றும்  தொழிலாளி  ஒரு முறை பீடி சுற்றும் வேலை இரண்டு நாட்களுக்கு இல்லை என்றானதும்  தொண்டர் ரேணு கதாசிரியருக்கு ஸ்காலர் ஷிப் பணம் கிடைத்திருப்பதாக  ராஜ சேகர் என்பவர் மூலம் கேள்விப்பட்டு மிகவும்  சங்கடத்துடன்  ஒரு இருபது ரூபாய் கைமாத்தாக வேண்டி இருக்கிறார். ஆசிரியரும் ஸ்காலர் ஷிப் பணத்தில் மிச்சமிருந்த 22 ரூபாயில் இரண்டு ரூபாய் வைத்துக் கொண்டு மீதி இருபது ரூபாயை  தோழர் ரேணுவிடம்  கொடுத்தார்  நாட்கள் கடந்தன/ ரேணு இவரைப் பார்க்கும் போதெல்லாம் கூடிய சீக்கிரம்பணத்தை திருப்புவதாகக் கூறுவார்  மூன்றாண்டுகளுக்கு பிறகு இவருக்கு வேலை வாய்த்துப் போகும்போது  அவசரமாக வந்து நான்கு ஐந்து ரூபாய்த் தாள்களைக் கொடுத்து தாமதத்துக்கு மிகவும்  வருத்தம் தெரிவித்தார் ஆனால் அதே சமயம் இவரிடமிருந்து நூறு ரூபாய் கடனாகப் பெற்ற ராஜசேகர் எவ்வித்க் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எவ்வளவு பண்ம் தரவேண்டும் என்பது கூட நினைவில்லாத மாதிரி இவருக்கு திருமணம் செய்யாமல் இருக்குமாறு அட்வைஸ் வேறு கொடுக்கிறார்  ஏழை என்றாலும் கடன் பட்டார் நெஞ்சம்  போல  வருந்திய ரேணு எங்கே ஓரளவு வசதியுடன்  இருந்தும்  கடன்  பற்றிய எண்ணமே  இல்லாமல் இருந்தராஜசேகர் எங்கே. ? இந்தக் கதையை படித்ததும்  என்  அனுபவம்  ஒன்றும் நினைவில் வந்தது அரசு பணியில் இருந்த ஒருவர் (யாரென்பது வேண்டாமே) தான் மிகவும் கஷ்ட நிலையில் இருப்பதாகவும்  உடனே ரூ.500/ அனுப்புமாறும்  உருக்கமான ஒரு கடிதம்  எனக்கு எழுதினார்  பணம்பெறும்போது சொன்ன வார்த்தைகள் எல்லாம்காற்றில் போய் விட்டது  இன்று வரை அது ஆயிற்று 40 வருடங்கள்  ஒரு மூச்சு கூட இல்லாமல்  இருக்கிறார் அவர்  இலங்கை வேந்தனின் கடன் பட்டார் நெஞ்சம் என்பது ஒரு சிலருக்குத்தான் போலும்
தோள்மாறிய ரோஜா
 கல்லூரியில்கட்டுரைப் போட்டியிலும்  கவியரங்கத்தில் பங்கு பெற்றதற்காகவும் இரு ரோஜா மாலைகள் ஆசிரியருக்குக் கிடைத்ததாம்  அதில் ஒன்றை  ஆசிரியரின் நண்பர் ஒருவர் ஜெயப்பிரகாஷ்  என்பவர்  கேட்டு வாங்கிப்போகிறார்  அது மட்டுமல்லாமல் தானே பெற்ற பரிசுபோல் பீத்திக் கொண்டு ஆசிரியரின் தாயிடமும்  கூறிக் கொள்கிறார்
விழா முடிந்து வீடு சென்றபோது வெறும் கழுத்துடன் இருந்த இவரிடம்  இவரது தாயார் ஜெயப்பிரகாஷுக்கு இரண்டு மாலைகள்கிடைத்ததை அவன் சொல்லிப்பெருமை கொண்டதைக்  கூறி இருக்கிறார்  சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிற்சங்கத் தலைவனாக ஜெயப்பிரகாஷ் இருந்ததை ஆசிரியர் தெரிந்துகொள்கிறார்  அவரது அலுவலகத்தில் ரோஜா மாலையுடனிருக்கும் ஜெயப்பிரகாஷின்  ஃபோட்டோவையும்பார்க்கிறார்  அற்ப சந்தோஷிகள் வேஷம் போடும் மக்கள்
புலன் விசாரணை
  இப்போதெல்லாம் நடக்கும் புலன்  விசார்ணகள் சிபிஐ ரெய்ட்   எப்படி இருக்கலாம் என்னும் அனுபவ விளக்கமே இக்கதை  விசாரணைக்குப் போகிறவர்களில் இவரும்  வங்கி அதிகாரி என்னும் நிலையில்  ஒருவர்  என்ன விசாரணை  எங்கே என்ற எந்த செய்தியும் கூறப்படாமல் கூட்டிப் போகப்படுகிறார் 
இந்தக் கதையில் வரும் வாசகம் சிந்திக்க வைக்கிறது  
எங்க டிபார்ட்மெண்டுல இதெல்லாம்  சகஜமுங்க பெரிய தொகை கை மாறிச்சுனா நாங்களே ஆளை விட்டுலஞ்சம் வாங்கினார்னு புகார் எழுதச் சொல்லுவோம் ரெய்ட் வருவாங்க நல்லா கவனிச்சுக்குவோம் அந்தநாள்வரைக்கும் ரெகார்ட் க்லியர் ஆகிவிடும் அப்புறம் கவலை வேண்டாமே . நீங்கள் பேங்கில் இருக்கீங்க அதானுங்களுக்குப் பழக்கமில்ல போல
சிபிஐ ரெய்ட் என்று களேபரம் செய்யப்படும்  ஒவ்வொரு செயலுக்கும்பின்  என்னதான் உண்மையோ
 கடமை புரிவார் இன்புறுவார்
 ----------------------------------------------------
 வங்கிகளில் கடை நிலைத் தொழிலாளிகளையும் மதிக்கிறோம் என்று சொல்லி அதன் பின்னணியில் இருக்கும்  சிலசுவாரசியமான  நிகழ்ச்சிகளை கூறும் கதை இது  கடை நிலை ஊழியர் பெருமை பேசிக் கொள்ளவும்
சில எதிர்பாராத நிகழ்வுகள் எப்படி ஒருவரது மாற்றலுக்குக் காரண மாக அமைகிறது என்பதையும்  கோர்வையாகச் சொல்லும் கதை
அனைத்துமகளிர் வங்கி, உருமாற்றம்,பரிசாக வந்த பவழ மோதிரம், ஞானியைக் கண்டேன் , படம் கொடுத்த பாடம் , சுதந்திர தினம், குட்பை மஞ்சு, விசிறி சாமியார் கொடுத்தபழம் , ஆகிவந்தபுத்தகம் . திருக்குறள் நாயக்கர் உண்டா எதிர்காலம்  போன்றவை மீதி உள்ள கதைகள்
சொந்த அனுபவங்கள் பதியப்படும் போது  அவரது குணாதிசயங்களும் பதியப் படுகிறது  ஆசிரியரை நேரில் பழக்கம் உண்டு. இருந்தாலும்  இக்கதைகளைப் படிக்கும் போது அவர் குறித்த மேலும் சில தகவல்களும் குணங்களும்தெரியவருகிறது  எல்லாக் கதைகளையும்  நானே விவரித்து விட்டால் நூலைப் படிக்கும் ஆர்வம்குறையலாம்  ஒரு சில சாம்பிள்  கதைகளையே  குறிபிட்டு இருக்கிறேன் 
ஊர்க்கோலம் கதைத் தொகுப்பு எளிதாக வாசிக்கத் திறம்பட எழுதப்பட்டது  புஸ்தகாவில் மின்னூலாக வந்திருக்கிறது  வாசித்துப் பயன்பெறலாமே  


திரு செல்லப்பாவுடன்  நான்  
          







27 comments:

  1. தங்களின் அன்பான, மேலான, சுவையான, விமர்சனத்தால் தன்யனானேன் ஐயா! மிக்க நன்றி. புஸ்தகாவில் நமது வலைப்பதிவர்கள் நிறைய புத்தகங்களை சேர்த்திருக்கிறார்கள். நான் 99 ரூபாய் செலுத்தி சுமார் ஐம்பது புத்தகங்களைப் படித்துவிட்டேன். மற்றவர்களும் செய்யலாம். நமது நூல்கள் நமக்குள்ளேயாவது முதலில் அறிமுகம் ஆகட்டுமே! அப்போதுதானே இந்த மின்-நூல் என்னும் ஊடகத்தின் நன்மைகளும் சிக்கல்களும்(இருப்பின்) எல்லாருக்கும் தெரியவரும்? லேப்டாப்பில் படிப்பதைவிட, லேப்டாப்பில் முதலில் நூல்களை இறக்கம் செய்துகொண்டு, அதன் பிறகு, புஸ்தகா App மூலம் notepad அலது மொபைல் மூலம் படித்தால் அருமையான அனுபவமாக இருக்கும். லேப்டாப்பில் ஃபாண்ட் சிலநேரம் பாடுபடுத்தும் என்பதால் இதைச் சொல்கிறேன். விரைவில், நமது வலைப்பதிவர்களின் நூல்களைப் பற்றி மட்டுமே ஒரு நெடும் பதிவு எழுதப்போகிறேன். சிலநாட்களில். ஜிஎம்பி ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றி.
    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. குறைந்த பட்சம் நண்பர்களாவது வாசித்துக் கருத்து சொல்லலாம், வயதாவதின் தாக்கம் வாசிப்பில் தெரிகிறது இளைஞர்களாவது வாசிக்கட்டுமே என்று நினைப்பது தவறாகாதே நூல் விமரிசனம் எழுதும்வித்தகர்களும்வித்தகிகளும் பதிவுலகில் நிறையவே இருக்கிறார்கள் வருகைக்கு நன்றி சார்

      Delete
  2. நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வாசிப்பவர்கைன் ஆவலை அதிகரித்தால் மகிழ்ச்சியே வருகைக்கு நன்றி

      Delete
  3. விமர்சனம் அலசிய விதம் நன்று ஐயா
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. நான் ஒரு சில கதைகளையே குறிப்பிட்டு இருக்கிறேன் பாராட்டுக்கு நன்றி ஜி

      Delete
  4. நல்ல விமரிசனம். சில கதைகளைப் படித்த ஞாபகமும் இருக்கிறது. செல்லப்பா சார் எழுத்துக்குக் கேட்பானேன். அவர் அனுபவம், சொல்லிச்செல்லும் தன்மை எல்லாமே ரொம்ப இன்டெரெஸ்டிங்காக இருக்கும்.

    என்ன, அமெரிக்காவிலேர்ந்து வந்தப்பறம், வெயில் தாளமுடியாமல் ரெஸ்ட் எடுக்கறார்னு நினைக்கறேன். புதுப் பதிவு எதையும் ரொம்ப நாள் காணோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போல் வாசிப்பவர்களே எழுத்தாளர்களின் பலம்

      Delete
  5. நல்ல விமரிசனம். செல்லப்பா அவர்களின் எழுத்தை அதிகம் படித்ததில்லை. ஆனால் எங்கள் ப்ளாகில் அவர் தான்யமாலினி பற்றி எழுதி இருந்ததைப் படிக்கையில் தேர்ந்த எழுத்தாளர் என்று புரிந்தது. வாய்ப்புக் கிடைத்தால் இந்தப் புத்தகத்தைப் படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. புஸ்தகா டிஜிடல் மீடியாவில் போனால் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம் நன்றி மேம்

      Delete
  6. திரு இராய செல்லப்பா அவர்களின் ‘ஊர்க்கோலம்’ என்ற மின்னூல் பற்றிய தங்களின் நூலாய்வு அவரது படைப்பை படிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது. நானும் புஸ்தகாவில் உறுப்பினர் ஆகையால் அவசியம் படிப்பேன். அவரது படைப்பை அறிமுகப்படுத்தி திறனாய்வு செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. நல்ல எழுத்தாளரான செல்லப்பா சாரின் புத்தகம் பற்றி மிக அருமையான விமர்சனம்....நான் இன்னும் வாசிக்கவில்லை...புஸ்தகாவில் வாசிப்பது கொஞ்சம் கடினமாக இருப்பதால் கொஞ்சம் நேர அவகாசம் தேவைப்படுகிறது...அவரது எழுத்துபற்றிச் சொல்லவும் வேண்டுமோ.. சிறப்பாக எழுதுபவர்..
    சார் ஏனோ அமைதியாக இருக்கிறார்...அடுத்து புத்தகங்கள் வெளியிடும் முயற்சியாக எழுதுவதில் இருக்கலாம்...

    கீதா....

    ReplyDelete
    Replies
    1. என் வாழ்வின் விளிம்பில் நூலைப் படித்தீர்களா கௌஇக்கு அடக்கமாய் வாசிக்கலாமே எழுதுவதில் சுணக்கம் ஏதுமில்லை. அவரது நேர ம் பற்றி தெரியவில்லை

      Delete
  8. செல்லப்பா ஸாரின் எழுத்துகள் சிறப்பாக இருக்கும். அவரின் அனுபவங்களும் சுவாரஸ்யமானவை. அவற்றை எழுத்தில் வடிக்கும்போது படிப்பவர்களுக்கும் அந்த சுவாரஸ்யம் தொற்றிக் கொள்வது இயற்கை. அழகாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள் ஜி எம் பி ஸார். பகிர்வுக்கு நன்றி.

    தம +1

    ReplyDelete
    Replies
    1. எழுதுபவருக்கு தான் எழுதுவது பரவலாக வாசிக்கப் பட வேண்டும் என்பதுதானே அவாஉங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  9. அழகான விமர்சனம். செல்லப்பா சாரின் கதைகள், கட்டுரைகள் படித்து இருக்கிறேன்.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்

      Delete
  10. படிக்க வேண்டும்.

    ReplyDelete
  11. உங்க விமர்சனமே அவர் வலைப் பூவில் படித்ததை நினைவுக்கு கொண்டு வருதே :)

    ReplyDelete
    Replies
    1. எல்லாக் கதைகளும் வலைப்பூவில் வந்தவையா

      Delete
  12. அவசியம் படிப்பேன் ஐயா நன்றி

    ReplyDelete
    Replies
    1. கையில் இருக்கும் படைப்புகளையே படிக்க வேண்டுமல்லவா நன்றி சார்

      Delete
  13. இனித்தான் படிக்க வேண்டும் ஐயா!

    ReplyDelete
  14. படித்த் ரசியுங்கள் சார்

    ReplyDelete
  15. நூல் விமர்சனம் அருமை ஐயா. நூலாசிரியர் எழுத்து மூலமாக நம்மை ஈர்ப்பவர் என்பதை நாம் அறிவோம். அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. நூலினை வாசித்து ஆசிரியருக்கு ஊக்கம்தாருங்கள் நன்றி சார்

    ReplyDelete