Wednesday, July 19, 2017

ஒரு பயண நினைவு


                                                    ஒரு பயண நினைவு
                                                     -------------------------------
  அண்மையில் வெங்கட் நாகராஜின்பதிவு படித்தேன் அதில் அவர் விசாகைக்கு பயணம் செய்தது பற்றி எழுதப் போவாதாகக் கூறி இருந்தார். உடனே எனக்கு என் வைசாக்  நினைவுகள் வந்து அலை மோதின. வலைப்பதிவன் நினைவுகளையே முக்காலும் பதிவாக்குபவன்  சும்ம இருப்பேனா இதோ ஒரு பதிவு
முன்பெல்லாம்  அவ்வப்போது பயணப் பட்டு விடுவேன்   விசாகப் பட்டினத்தில் என்  மச்சினன்  வேலையில் இருந்தான் போனால் தங்க இடம் உண்ண உணவு கவலை இல்லை.நானும் மனைவியும் பயணித்தோம்   மனைவியில்லாமல் பயணிப்பது இல்லை  1999ம் வருடம்  பதினெட்டு வருட முந்தைய நினைவுகள் காலையில் மச்சினன் வேலைக்குக் கிளம்பிப் போனால்  திரும்பி வர மாலையாகும்   அதன் பின்  எங்காவது போகலாம் ஆனால் நாள் முழுவதும் என்ன செய்வது. அப்போது நான் தஞ்சாவூர் ஓவியங்கள் தீட்டுவதில் மிகுந்த ஈடுபாடுடன் இருந்தேன் பகல் வேளையை ஓவியம் தீட்ட உபயோகிக்கலாம் என்று முன்னாலேயே திட்டமிட்டிருந்தேன்   அதற்கு வேண்டிய பொருட்களையும் எடுத்துச் சென்றேன்  என் மச்சினன்  அய்யப்பன்  படம்  தீட்டுங்கள் என்றான்  தீட்டிய படம் அவனுக்குத்தானே ஆகவே அவன்  விருப்பம்போல் ஓவியம்  தீட்டத் துவங்கினேன்
ஓவியத்துக்கு தங்க ரேக்குகள் (gold foils) தேவைப்படும்   நான் எடுத்துச் சென்றது போதவில்லை. சென்னையில் என்  மருமகளிடம்  வாங்கி குரியரில் அனுப்பச் சொன்னேன் கூரியரும்வந்தது  ஆனால் பிரித்துப்பார்த்தபோது தங்கரேக் இருக்க வில்லை. அதற்குள் கூரியர் கொடுத்தபையன் போய் விட்டான் மீண்டும் தகவல் சொல்லி மறுபடியும் அனுப்பச் சொன்னேன்  இந்த முறை கூரியர் வந்தபோதுபையனை வைத்துக் கொண்டே கவரைப் பிரித்தேன்  அதுவும் காலியாக இருந்தது கூரியர் பையன் கம்ப்லெயிண்ட் கொடுக்கச் சொன்னான் அந்தக் கூரியர் சென்னையில் இருந்து  ஹைதராபாத் வந்து அங்கிருந்து விசாகப் பட்டணம் வருவதாகத் தெரிந்தது அவர்கள் வந்ததை டெலிவர் செய்ததாக கூறினார்கள்  ஒரு எழுத்துக்கம்ப்லெயிண்ட் கொடுத்தோம்   மருமகளுக்கும்தகவல் தெரிவித்தோம்   அவள் குரியர் கவரை அந்த அலுவலகர்  முன்புதான் தங்க ரேக்குகளை இட்டு மூடியதாகக் கூறினாள்  சென்னையில் அந்தக் கம்பனியிடமிருந்து நஷ்ட ஈடாக  ஒரு தொகையை  வாங்கினாள் இம்முறை அனுப்பியது ஒழுங்காக வந்தது பிறகு ஓவியத்தை வரைந்து முடித்தேன்  கூரியர் சம்பந்தப்பட்ட இந்த நினைவுதான்/ நிகழ்வுதான் முதலில் வந்தது
மச்சினன் வீட்டில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில்  சிம்ஹாசலக் கோவில் இருந்தது  எழுநூறு எண்ணூறு  அடி உயரத்தில் சிம்மகிரி என்னுமிடத்தில் உள்ள கோவில் அது வராக நரசிம்ஹர் என்று நினைவு. ஆனால் அதைவிட அந்த சுவாமியின்  சிலையைக் காண முடியாதபடி சந்தனத்தால்  மூடி இருக்கிறர்கள்  வழக்கம்போல் கடவுளின்  உக்கிரம்  தாங்க முடியாது என்றும்  ஆண்டுக்கு ஒரு முறையே மூர்த்தியைப் பார்க்க முடியும்   என்றும் கதை  கூறினார்கள்
இன்னொரு கோவில் விசிட் விசாகப் பட்டினத்திலிருந்து சுமார் 120 கி மீ தூரத்தில் அன்னாவரம்  என்னும்  இடத்தில் இருந்த சத்திய நாராயணர் கோவில்  அங்கே கோவிலில் மதியம் உணவு படைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் பசியில் இருந்த நாங்கள் அவர்கள்பிரசாதமென்னும் பெயரில் கொஞ்சூண்டு புளிசாதம் கொடுத்த போது பசி ஆறாமல்  சாப்பாட்டுக்கு உணவகம் நாடியதும் நினைவுக்கு வருகிறது

விசாகப்பட்டினம் கடற்கரை சின்னது  அங்கே சில பெண்கள் மெஹந்தி தீட்டிபணம்பார்க்கிறார்கள்  ஐந்தே ரூபாய்க்கு  இரண்டு நிமிடத்தில் அழகான டிசைனில் கைகளில் மெஹந்தி ஓவியம் தீட்டுகிறார்கள் சிறந்த கைவேலைப்பாடு உடையவர்கள்

அங்கே கைலாஷ் கிரி என்னும அழகான இடம் சென்றிருந்தோம் பொழுது போக்கவும் அழகான காட்சிகளைக் காணவும்  ஏதுவாக இருக்கிறது மூழ்கிய டைடானிக் கப்பலை நினைவு கொள்கிறமாதிரி இருந்தது விசாகாவில்  சுமார் இரண்டு வார காலம் இருந்தோம்  அதற்கு முன்   பணியில் இருந்தபோது  விசாகப்பட்டினத்துக்கு ஏரோப்லேனில் பயணித்திருக்கிறேன் 

விசாகப்பட்டினம்  கைலாஷ் கிரியில் எடுத்த படம் 
 
விசாகப்பட்டினத்தில்  வரைந்த ஐயப்பன் ஓவியம் n
    
   
      
                       
     
                   

43 comments:

  1. ஒன்றிலிருந்து ஒன்றாக இனிய பதிவு..

    மலரும் நினைவுகள் அருமை.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. சரியாகத்தான் சொன்னீர்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக பதிவு .வருகைக்கு நன்றி சார்

      Delete
  2. ஐயப்பன் படம் ஆஹா அழகு...

    மகிழ்வான நினைவுகள்..

    ReplyDelete
    Replies
    1. ஓவியம் வரையக் கற்றுக் கொண்ட போது வரைந்தது பாராட்டுக்கு நன்றி

      Delete
  3. நினைவுகளை மீட்டெடுத்துப் பகிர்ந்த விதம் சுவாரஸ்யம். ஓவியம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மேம்

      Delete
  4. கூரியரில் உள்ளே விலை உயர்ந்த பொருட்களை வைத்து அனுப்பினால் கூரியர் சொந்தக்காரரே பொருட்களை எடுக்க வாய்ப்பு உள்ளது என்றே சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் நம் இந்தியத் தபால் துறையை மிஞ்ச முடியாது. வெளிநாடுகளுக்கும் நானும் அனுப்பி இருக்கேன். பத்திரமாகப் போய் விடும்.

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் கூரியரில் வைப்பதைக்காடினாலும் தவறு நேர்ந்து விடுகிறது வருகைக்கு நன்றி மேம்

      Delete
  5. உங்கள் விசாகப்பட்டின நினைவுகள் அருமை!

    ReplyDelete
    Replies
    1. நினைவுகளின் துவக்கமே வெங்கட்டின் பதிவுதான்

      Delete
  6. மலரும் நினைவுகள் இரண்டு படமும் அருமை. வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. என் தளத்துக்கு முதல் வருகையோ பார்த்த நினைவு இல்லையே நன்றி சார்

      Delete
  7. அய்யப்பன் அழகாய் இருக்கிறார். கூரியரில் நடக்கும் அட்டூழிய அனுபவங்கள் சில எனக்கும் உண்டு. ஊறுகாய், ஊதுபத்தி, எண்ணெய் கூட கூரியரில் அனுப்பியிருக்கிறேன்.

    தம +1

    ReplyDelete
    Replies
    1. என் மகன் பம்பாயில் இருந்தபோது கடலை மிட்டாய்கள் செய்து கூரியரில் அனுப்பியதுண்டு வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  8. படம் அழகு சார்.

    துளசி: விசாகப்பட்டினம் சென்றதில்லை. வெங்கட்ஜி யின் பதிவுகளில் இருந்து நிறைய அறிய முடிகிறது....நீங்களும் சில இடங்கள் சொல்லியிருக்கிறீர்கள்....

    கீதா: சார் நீங்கள் சொல்லுயிருக்கும் இடங்கள் சென்றொருக்கிறோம் சார். கைலாசகிரி,ஆர் கே பீச், ரொம்ப அழகு.....சார் பீச் சிறியதாக இல்லையே...நல்ல பெரிசு சார். நல்ல வளைந்து வளைந்து நீளமாகச் செல்கிறது...தண்ணி வெகு அருகில்....அதிகம் நடக்க வேண்டாம்...அந்த வகையில் சிறிதுதான்....ரிஷிகொண்டே பீச்சும் அழகு...

    ReplyDelete
    Replies
    1. நான் பீச் சிறியது என்று சொல்லி இருக்கிறேனா மீட்டெடுத்த நினைவுகளுக்கு வெங்கட்டுக்கு நன்றி

      Delete
  9. உங்கள் விசாகப்பட்டினம் அனுபவம் கூட நல்லாத்தான் இருக்கு. ஆமாம், கடைசியில், ஐயப்பன் படத்தை நீங்களே எடுத்துக்கொண்டுவிட்டீர்களா?

    இப்போவும் நான் மற்றவர்களை ஏதாவது கொரியரில் சென்னை வீட்டிற்கு அனுப்பச்சொல்லுவேன் (கல்லிடைக்குறிச்சிலேர்ந்து இனிப்பு, நெல்லைலேர்ந்து மிக்சர், நெல்லைலேர்ந்து வாசனைத் திரவியங்கள் போன்று). நான் சென்னை செல்லும்போது எடுத்துக்கொண்டு வருவதற்கு. இதுவரை களவு போனதில்லை.

    ReplyDelete
    Replies
    1. என்மச்சினன் ஓய்வு பெற்று இப்போது பெங்களூரில் இருக்கிறான் அவன் சுவற்றில் மாட்டி இருந்த படத்தைப் புகைப்படமாக எடுத்துக் கொண்டேன்

      Delete
  10. எனக்கும் ஓவியத்துக்கும் தொலைவு மிகவும் மிகுதி. உங்கள் தஞ்சை ஓவியம் நன்றாக இருக்கிறது. ஆனால், படமெடுத்தபொழுது கை கொஞ்சம் அசைந்து விட்டது போலும். கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது. உணவு என்பது உண்ணும் அந்த நேரத்தில் மட்டுந்தான் சுவை தரும். ஆனால், பயணங்கள் துய்க்கும்பொழுதும் சுவை தரும்; பின்னாளில் அவை தொடர்பான நினைவுகளில் மூழ்குவதன் மூலமும் சுவை தரும். அந்தச் சுவையை எங்களுடனும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. பல பயணங்கள் பற்றி பதிவில் எழுதி இருக்கிறேன் நினைவுகள் சுகம்தான் வருகைக்கு நன்றி பிரகாசன்

      Delete
  11. மலரும் நினவுகள் அருமை.
    ஐயப்பன் படம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. ஆதிகாலத்தில் வரைந்த படம் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  12. ஓவியம் அருமை ஐயா நினைவோட்டங்களை பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  13. ஐயப்பன் படம் அருமை!

    நாங்கள் 1974 இல் விசாகப்பட்டினத்தில் வசித்தோம்.

    ReplyDelete
    Replies
    1. விசாகப் பட்டினத்துக்கு இரு முறாஐ சென்றிருக்கிறேன் ஒன்று அலுவல் நிமித்தம் மற்றது ஓய்வுக்குப் பின் பாராட்டுக்கு நன்றி மேம்

      Delete
  14. நினைவுகள் இனிமையானவை ஐயா

    ReplyDelete
    Replies
    1. சில என்று சேர்த்துக் கொள்ஈரேன் சார் நன்றி

      Delete
  15. கூரியரில் இவ்வளவு சிக்கலா? நினைவுகளைப் பகிர்ந்த விதம் அருமை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. எப்போதுமில்லை சில நேரங்களி உண்டு சார் வருகைக்கு நன்றி

      Delete
  16. விசாகபட்டிண நினைவுகள் அருமை. இவ்வளவு விஷயங்களையும் மறக்காமல் இருக்கிறீர்களே!!ஆச்சர்யம்தான். அந்த ஞாபக சக்தி லேகியத்தை எங்களுக்கும் தெரியபடுத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எதை முக்கியமாக நின்சைக்கிறோமோ அவை எளிதில் மறக்கப் படுவதில்லை லேகியம் ஏதுமில்லை மேம்

      Delete
  17. நேற்று என் வலைப்பூவில் விஜயவாடா ,நீங்கள் வைசாக் பற்றி ...இருவரும் ஆந்திர ஊறுகாய் சாப்பிட்டு இருப்போமா :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவில் விஜய வாங்க என்று மரியாதையுடன் கூறி இருக்கிறீர்கள் இல்லையா எனக்கு கார உணவுபிடிக்காது ஒத்துக் கொள்ளவும் செய்யாது

      Delete
  18. ஐயப்பன் படம் அருமையாக இருக்கிறது. பாராட்டுகள்! தாங்கள் பார்த்த கைலாஷ்கிரி இப்போது முழுதும் மாறிவிட்டதாம். நானும் அங்கு போய் இருக்கிறேன். தங்களின் மலரும் நினைவுகள் இன்னும் மலரட்டும்!

    ReplyDelete
  19. எனக்கு ஓரோர் சமயம் வரும் சந்தேகம் 1950 களில் நாங்கள் தக்கியிருந்த வீட்டைக் காண வெல்லிங்டன் சென்றிருந்தேன் வீடும் தோப்பும் இருந்த அடையாளமே இருக்கவில்லை. காலத்தின் கோலம் இப்படியிருக்க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மு இருந்ததை இப்படி இப்படி என்று எப்படிக் கூறுகிறார்கள்

    ReplyDelete