பதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்
-----------------------------------------------------------------------------------------
நான்
சந்தித்த பதிவர்கள் பற்றி எழுதி இருந்தேன்
அப்போது என்ன பேசினோம்
என்பதையும் தந்திருக்கலாமோ
என்றும்கருத்து இருந்தது நாங்கள் என்ன
பேசினோம் என்பதைவிட அவர்கள் பற்றி ,
அவர்கள் எழுத்து பற்றி நான் என்ன நினைத்தேன்
என்பது சொன்னால் நன்றாயிருக்கும்
என்று தோன்றியது சந்தித்த சந்திக்காத பதிவர்களின் எழுத்துகள் பற்றி இப்போது
கூறப்போகிறேன் அதற்கு முன்பு ஒரு காணொளி
இதில் காணும் விஷயங்கள் எனக்கு சரியாகப் புரியவில்லை பதிவுலகில் வங்கியில் பணி புரிந்து ஓய்வு
பெற்றவர்களால் இதைப் புரிய வைக்க முடியும்
என்று நினைக்கிறேன் வங்கி தொழிலில்
புகழ் பெற்ற பதிவர்கள் சிலரது பெயர்களை இங்கு எழுதுகிறேன் திரு செல்லப்பா
யக்ஞசாமி. திரு நடன சபாபதி திரு தி தமிழ் இளங்கோ போன்றோர் இன்னும் வலையுலகில் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்
பதிவுகளுக்கு வரவும் செய்கிறார்கள் இவர்களும் மற்றவர்களும் கருத்து சொல்லி என்னைத்
தெளிவு படுத்தலாம்
சந்திக்காத
பதிவர்களின் சில எழுத்துகள் என்னை மிகவும் ஈர்த்தவை திரு டிபிஆர் ஜோசப் எழுதி இருந்த ஒரு க்ரைம்
த்ரில்லர் நான் ஆவலோடு வாசித்து மகிழ்ந்தது சொந்த செலவில் சூனியம் என்பது அந்த
நாவலின் பெயர் ஒரு வங்கி அதிகாரியாய்
இருந்தவர் எப்படி இத்தனை விஷயங்களையும்
நுணுக்கத்தோடு எழுத முடிந்தது என்பதேஎன்
ஆச்சரியம் சுட்டி தருகிறேன் நேரம் இருந்தால் எல்லா பகுதிகளையும் படித்து பாருங்கள் என்னுலகம்
என்னும் தளத்தில் எழுதி வந்தார் ஆவடி வாசி
இதுவரை சந்தித்ததில்லை சுட்டி என்னுலகம்
சந்திக்காத
பதிவர்களில் ஒருவர் பக்கிரிசாமி நீலகண்டன்
இவரும் இப்போது பதிவுகளெழுதுவதில்லை ஆனால் ஆங்காங்கே
பின்னூட்டங்களிடுவார் இவரை
நினைத்தாலேயே இவரது ஒரு தொடர் நினைவுக்கு
வரும் முற்பிறப்பு விஷயங்களை நினைவு கூறும் ஒருவர் பற்றியது இவரைப் பற்றி இவரது
ப்ரொஃபைலில் இருந்து
நான் இங்கே எழுதும் அனைத்தும் Statin Drug,
Lipitor-க்கு சமர்ப்பணம். மனமும், உடலும் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பொழுதே, நான் நினைத்தவைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்னும் எண்ணத்தை Statin எனக்கு அளித்தது. உலகத்தில் உள்ள பயங்கரமான குற்றவாளிகள் அனைவருக்கும் கொடுக்கவேண்டிய அற்புதமான மருந்து அது. பக்க விளைவே கிடையாது; எல்லாம் நேரடி விளைவுதான்; மனுஷனை நடைபிணமாக மாற்றிவிடும். யார் செய்த புண்ணியமோ, சரியான நேரத்தில் மருந்தை நிறுத்திவிட்டேன். என்னை பார்த்து ஆர்வம் கொண்டு, நிறைய பேர் தமிழில் எழுதி, அதில் யாருக்காவது நோபெல் பரிசு கிடைத்தா, நான் ஜன்ம சாபல்யம் அடைவேன். இவரே தமிழில் தைரியமாக எழுதும் பொழுது, நானும் எழுதினால் தப்பே இல்லைன்னு, ரொம்ப பேர் முனைப்போடு எழுதுவாங்கன்னு நினைக்கிறேன் ( நானும் அதர்வோ ஸ்டாட்டின் மாத்திரைகளை எடுத்துக் கொள்பவன் )
சமுத்ரவைப் பற்றிச் சொல்லும்போதுஅவரது அணு அண்டம்
பேரண்டம் பகுதிகளையும் கலேடாஸ்கோப்
பதிவுகளையும் பற்றி எழுதீருந்தேன் ஆனாலும்
எனக்கு நினைவுக்கு வருவதுஅவருடைய சிறு கதை ஒன்றுதான் மிகவும் ரசித்தேன்
எந்த அளவுக்கு என்பது இத்தனை எழுத்துகளிலும் என்மனதில் இடம் பிடித்த பதிவு என்பதே காரணம் கதையின்
தலைப்பு நைவேத்தியம் சுட்டி
டாக்டர் கந்தசாமி வாழ்க்கைக்கு உதவும் பல செய்திகளை
பதிப்ப்பிப்பார் முக்கியமாக சுகாதார சிந்தனைகள் அதில் இருக்கும் டாய்லெட்
உபயோகிக்கும் முறை முதல் படுக்கையில் போர்வையின்
பக்கம்தலைமாடு கால்மாடு பற்றியும்
எழுதி இருக்கிறார் ஆதியில் என்னை ஒருபிரபலபதிவராக்குகிறேன் என்றார் நான் தான் என்
எழுத்துகள் மூலம் கிடைக்கும்பிரபலமே போதும்
என்றேன்
திரு செல்லப்பாவின் ஒரு பதிவு மனதில் நிற்கிறது இப்போது நடக்கும் ரெய்டுகள் பற்றிப்படிக்கும் போதெல்லாம்
அவரதுபடிவே நினைவுக்கு வரும் பலரும்
படித்திருக்கலாம் அண்மைய பதிவுதான் அது
தமிழ் தமிழ் அதிலும் பண்டையத் தமிழையே அனுபவித்து ஒருவர் பதிவிடுவதென்றால் அவரது திறமையிலும் எழுத்திலும் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாகும் ஊமைக் கனவுகள் என்னும் தளம் படித்தால் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கலாம் கவிதை எழுதக் கற்கலாம் பண்டைய இலக்கியங்களில் மூழ்கி முத்தெடுக்க உதவுவார் மரபுக் கவியின் இலக்கணங்களையும் கற்பிப்பார் ஜோசப் விஜு இவரது பெயரை அறியவே எனக்கு நாளாயிற்று. , நான் நீதிகேட்கிறேன் என்னும் ஒரு பதிவை எழுதி இருந்தேன்.அதற்கு பின்னூட்டமாக இக்குரல் பழங்காலத்திலேயே ஒலித்திருக்கிறது என்று எழுதி இருந்தார்.அதுவே ஒருவேளை அவரை இப்பதிவை வெளியிடச் செய்ததோ என்னவோ தெரியவில்லை உலகாயுதம்-கடவுளைக்கொன்றவனின் குரல் படித்துப் பாருங்கள் ரசிப்பீர்கள்.
சில பதிவர்கச்ளை நினைக்கும் போது எழும் நினைவுகளே பதிவாயிற்று ரசித்தீர்களா நட்புகளே i
தமிழ் தமிழ் அதிலும் பண்டையத் தமிழையே அனுபவித்து ஒருவர் பதிவிடுவதென்றால் அவரது திறமையிலும் எழுத்திலும் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாகும் ஊமைக் கனவுகள் என்னும் தளம் படித்தால் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கலாம் கவிதை எழுதக் கற்கலாம் பண்டைய இலக்கியங்களில் மூழ்கி முத்தெடுக்க உதவுவார் மரபுக் கவியின் இலக்கணங்களையும் கற்பிப்பார் ஜோசப் விஜு இவரது பெயரை அறியவே எனக்கு நாளாயிற்று. , நான் நீதிகேட்கிறேன் என்னும் ஒரு பதிவை எழுதி இருந்தேன்.அதற்கு பின்னூட்டமாக இக்குரல் பழங்காலத்திலேயே ஒலித்திருக்கிறது என்று எழுதி இருந்தார்.அதுவே ஒருவேளை அவரை இப்பதிவை வெளியிடச் செய்ததோ என்னவோ தெரியவில்லை உலகாயுதம்-கடவுளைக்கொன்றவனின் குரல் படித்துப் பாருங்கள் ரசிப்பீர்கள்.
சில பதிவர்கச்ளை நினைக்கும் போது எழும் நினைவுகளே பதிவாயிற்று ரசித்தீர்களா நட்புகளே i
இங்கே குறிப்பிட்டிருப்பவர்களில் செல்லப்பா யக்ஞசாமியையும், தமிழ் இளங்கோவையும் தவிர்த்து மற்றவர்கள் அறியாதவர்கள். கிட்டத்தட்ட இன்னொரு வலைச்சரம்! அறியாதவர்களை அறிந்து கொண்டேன்.
ReplyDeleteநாம் எழுதுவது தவிர பிறர் என்ன எழுதுகிறார்கள் என்பதையே குறிப்பிட்டுள்ளேன் இன்னொரு வலைச்சரம் போல இருந்தாலும் பலனை அடையலாம்தானே வருகைக்குநன்றி மேம்
Delete'நீங்கள் குறிப்பிட்டிருப்பவர்களில் சிலரது பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். முனைவர் கந்தசாமி சார், செல்லப்பா சார், தமிழ் இளங்கோ ஐயா ஆகியோர்.
ReplyDeleteடிபி ஆர் ஜோசப் அவர்கள், தினமலரில் பின்னூட்டத்தில் எழுதுபவரா (வாரமலர் மற்றும் சில செய்திகளில்)? அவரது தளத்தைப் பார்க்கிறேன். மற்றவர்களது தளம் நேரம் கிடைக்கும்போது.
நீங்களும் (அல்லது மற்ற பதிவர்களும்), இந்த மாதத்தில்/வாரத்தில் எங்களைக் கவர்ந்த இடுகைகள் என்று லிங்க் கொடுக்கலாம். விட்டுப்போன நல்ல இடுகைகளைப் படிக்கமுடியும்.
ஸ்டாடின் மருந்துபற்றி எழுதுங்கள்.
நான் தினமலர் படிப்பவனல்ல பிறர் எழுத்துகளைப் படிக்கும்வாய்ப்புக்காகவே சுட்டிகள் கொடுத்துள்ளேன் கொடுக்கும் சுட்டிகளைப் படியுங்கள் மேலும் நான் கொடுக்கும்லிங்குகள் மறவர்களுக்கு பிடிக்காமல் போகலாம்
Deleteஸ்டாடின் என்னும் மருந்து அதர்வோஸ்டாட்டின் எனப்படுவது பொதுவாக கொலெஸ்ட்ரொல் இருப்பவர்களுக்கு கொடுக்கப் படுவது ஒரு வேளை பக்கிரி சாமிக்கு ஒத்துக் கொள்ளவில்லையோ என்னவோ ஒரு முறை நான் எழுதிய பதிவுகள் சிலவற்றின் லிங்குகளைக்கொடுக்கவா என்று கேட்டபோது வேண்டாம் என நீங்கள் மறுத்தது நினைவு
டி.ஆர்.பி.ஜோசப் ஐயா அவர்கள் முன்பு எனது பதிவுகளை தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தியவர்.
ReplyDeleteதொடர்கிறேன் ஐயா...
அவர் டி ஆர் பி ஜோசப் அல்ல டி பி ஆர் ஜோசப் நல்ல பதிவர் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக எழுதுவதில்லை
Delete///பதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்///
ReplyDeleteஜி எம் பி ஐயா.. இதைத் தொடருங்கோ... அப்பூடியே எங்களைப்பற்றியும் என்ன நினைக்கிறீங்க என எழுதுங்கோ:))
உங்களைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. என்ன நினைக்க வேண்டும் என்பதே முக்கியம் இப்போது ஒரு ஜாலி குட் பதிவர் என்றுதான் தோன்றுகிறது
Deleteஇந்தப் பதிவு படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஓரிருவரைத் நண்பர்கள் மற்ற நண்பர்கள் பக்கத்தைப் படித்திருக்கிறேன்.
ReplyDeleteசில பதிவர்களின் படைப்புகளில் என்னை கவர்ந்ததைக் கூறி இருக்கிறேன் வாசகர்கள் ரசிப்பார்களென்று நினைத்தது சரியா தெரியவில்லை
Deleteமூத்த வலைப்பதிவர் திரு G.M.B அய்யா அவர்கள் மனதில், வங்கியில் பணிபுரிந்த வலைப்பதிவர்கள் வரிசையில் எனது பெயரும் இருக்கக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி; நன்றியும் கூட. திரு செல்லப்பா யக்ஞசாமி, திரு நடன சபாபதி, திரு டிபிஆர் ஜோசப்,– ஆகியோரில் திரு இராய செல்லப்பா யக்ஞசாமி அவர்களை மட்டும் நேரில் சந்தித்து இருக்கிறேன். மேலும் என்னைத் தவிர மற்ற மூவரும், அவரவர் பணியாற்றிய வங்கிகளில் அதிகாரிகளாகப் பணிபுரிந்தவர்கள்.
ReplyDelete// ….. …. ஒரு காணொளி இதில் காணும் விஷயங்கள் எனக்கு சரியாகப் புரியவில்லை பதிவுலகில் வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களால் இதைப் புரிய வைக்க முடியும் என்று நினைக்கிறேன் //
கடந்த சில நாட்களாகவே, மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள வீடியோ காட்சியும், பேட்டியும் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. நேற்றைய (24.12.17) தி இந்து நாளிதழிலும் இந்த பேட்டி “மக்களின் டெபாசிட் தொகையை குறிவைக்கும் புதிய சட்டம்” என்ற தலைப்பில் முழு பக்கத்தில் வெளி வந்துள்ளது. ( இணையதள இணைப்பு http://tamil.thehindu.com/tamilnadu/article22267808.ece ) இந்த கட்டுரையிலேயே உங்களுக்கான முழு விவரமும் இருக்கிறது.
பெரும்பாலும் பலரும் தங்களது பணத்தை ( குறிப்பாக பணி ஓய்வு பெற்றவர்கள் ) வங்கிகளில்தான் பாதுகாப்பு கருதி வைத்து இருக்கிறார்கள்.. எந்த வங்கி திவால் ஆகும் அல்லது திவால் ஆக்கப்படும் என்பது மத்திய அரசின் நடவடிக்கையில்தான் இருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் வங்கியிலிருந்து எல்லாவற்றையும் எடுத்து வீட்டில் ரொக்கமாக அடுக்கி வைத்துக் கொள்ளவோ அல்லது தங்கமாக வாங்கி அழகு பார்க்கவோ முடியாது; நிலம், வீடு என்று முதலீடு செய்யலாம் என்றால், இப்போது ‘ரியல் எஸ்டேட்’ பிஸினஸ் கடுமையான காலகட்டத்தில் இருக்கிறது.
அரசாங்கம் சார்பில் இந்த மசோதா குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். பார்ப்போம்.
நீங்கள் கொடுத்தசுட்டியியைச் சொடுக்கினால் விவரங்கள் இல்லை முக்கியமாகைதி கூறப்பட்டிருக்கும் பெயில் இன் ஷரத்து கவலை தருவதாக இருக்கிறதுஹிவாலாகும் வங்கிகளையோ நிதி நிறுவனங்களையோ தனியாரிடம் தாரை வார்க்கும் வாய்ப்புகள் பற்றியே கவலை டிமானிடைசேஷன் ஜி எஸ்டி போன்றவற்றையே நாமெடிர்கொண்டவர்கள் அல்லவா
Deleteசும்மாவானும் பீதியைக் கிளம்புகிறார்கள். நெடுநாட்களாக யூ ட்யூப்பிலும் வாட்ஸாப் உலகத்திலும் சுற்றிக் கொண்டிருந்தது இந்த விடியோ. இப்பொழுது தான் 'ஹிந்து' வின் கண்ணில் பட்டது போலும். பொதுவாக மக்கள் panic ஆகாமல் நம்பிக்கை ஊட்டுவதும் ஹிந்து மாதிரியான பெருமை வாய்ந்த பத்திரிகைகளின் கடமை. இந்த பேட்டி பற்றி அரசு தரப்பில் ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் அதையும் பேட்டி கண்டு வெளியிடுவது தான் பத்திரிகை தர்மம்.
ReplyDeleteஅரசும் உடனுக்குடனே தன் பக்க கருத்துக்களை மக்களுக்குத் தெரிவிக்க ஆவன செய்ய வேண்டும். அரசு PRO-க்கள் எதற்கு தான் இருக்கிறார்களோ தெரியவில்லை.
//நேற்றைய (24.12.17) தி இந்து நாளிதழிலும்.. //
இதே மாதிரி 2G-யால் பெரும் இழப்புக்குள்ளாகிய தொலைத்தொடர்புத் துறையின் தொழிற்சங்கத் தலைவர் யாரிடமாவது பேட்டி கண்டு 'தி ஹிந்து' வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
நடுநிலைக் கருத்துக்க்காகாவே இதை வெளியிட்டேன் அரசு தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி இருக்கிறார் நிதி அமைச்சர் ஜி 29 நாடுகளின் சேர்க்கையின் நிர்பந்தமே இந்த நடவடிக்கை போல் தெரிகிறதுவங்கி தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு இருக்கிறதாமே சட்டம் அமுலாக்கப்பட்டபின் குய்யோ முறையோ என்பதை விட அதன் பலா பலன்களை முன்பே தெரிந்து கொள்வது நல்லதல்லவா இந்த அரசு எதையோ அவசர அவசரமாகச் செயல் பட முனைவதுபோலும் தெரிகிறது இவர்களுக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறதே
Deleteஇந்த விடியோவில் சொல்லப்படுபவற்றில் வெகு முக்கியமானது வங்கி பெறும் பிக்ஸட் டெபாஸிட்டுகளைப் பற்றிய தகவல் தான்.
Deleteகுறிப்பிட்ட காலம் வரைக்கும் இந்தப் பணத்தை உபயோகித்துக் கொள்; அதற்கான வட்டியை எனக்குக் கொடுத்து விடு. நிர்ணயித்த கால முடிவில் முதலைத் திருப்பிக் கொடுத்து விடு' என்று டெபாஸிட் செய்பவருக்கும் வங்கி நிறுவனத்திற்குமான ஒப்பந்த அடிப்படையிலேயே பிக்ஸட் டெபாஸிட்டுகள் உயிர் வாழ்கின்றன. இந்த ஒப்பந்த ஷரத்தை வங்கி நிர்வாகமோ, ரிசர்வ் வங்கியோ மீற முடியாது.
பிக்ஸட் டிபாஸிட்டுகள் வங்கிக்கு பொன் முட்டையிடும் வாத்துக்கள். அதைக் கீறிப்பார்க்க யாரும் துணிய மாட்டார்கள். வங்கி என்பது ஒரு இடத்தில் வாங்கி இன்னொரு இடத்தில் கொடுத்து இடைப்பட்ட லாபத்தில் இயங்கும் ஒன்று. வாங்கும் பணம் வங்கியின் உயிர் மூச்சு; திருப்பித் தர மாட்டார்கள் என்ற நம்பிக்கை போனால் அத்தனை வங்கிகளையும் இழுத்து மூட வேண்டியது தான்.
இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் எந்த அரசும் தடாலடி வேலைகளில் இறங்காது. ஆளும் பிஜேபி அரசை நிலைதடுமாற வைக்க என்னன்னவோ செய்திகள் எல்லாம் பரப்பப்படுகின்றன. இதில் அரசியல் இருக்கிறது.. நீங்கள் இந்த விடியோவை வெளியிட்டதில் என்ன நடுநிலை கருத்து இருக்கிறது என்று தெரியவில்லை. பிஜேபிக்கு எதிரானது என்று எண்ணிக் கொண்டு அப்பாவி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடாது.
திரு ஜீவி அவர்கள் சொல்வதை முற்றிலும் ஆமோதிக்கிறேன். உண்மையில் நான் எழுத நினைத்தேன். ஆனால் மோதிக்கும் அவர் அரசுக்கும் நான் கொ.ப.செ. என்றொரு பெயர் இருப்பதால் யோசனை! இது திட்டமிட்டுப் பரப்பும் வதந்தியே என்பதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இருக்கின்றன என்றாலும் அவற்றை வெளியே சொல்ல முடியவில்லை. அதே போல் 15 வங்கிகளை இழுத்து மூடப் போவதாய்ச் சொல்வதும் ஆதாரமற்ற செய்தி! இப்படி எல்லாம் செய்து அரசின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்குவதில் யாருக்கு லாபமோ அவர்களுக்காகச் சிலர் இயங்குகின்றனர். ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் சமீபத்தில் பேசியதும் அப்படியானதே!
Deleteஅடுத்து வரப்போகும் தேர்தலை நினைத்துக் கொண்டால் எந்த அரசும் மக்கள் விரோதச் சட்டங்களைக் கொண்டு வராது, என்னதான் பெரும்பான்மை இருந்தாலும். இந்த அரசு இதுவரை அப்படி ஏதும் செய்யவில்லை. டிமானிடைசேஷன் தவிர்த்து. ஜிஎஸ்டி என்பது பத்து வருடங்களுக்கும் மேலாகப் பேசப்பட்டு ஆலோசித்து வரும் ஒன்று. இப்போது எல்லா மாநில நிதி, முதல் அமைச்சர்களுடன் நிதிச் செயலர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே செயலுக்கு வந்தது. இன்றும் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி மாற்றங்களைத் தீர்மானித்து வருகின்றனர்.
DeleteIndia to overtake UK and France to become fifth-largest economy in 2018: Report
Deleteஇது இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி!
@ஜீவி நடுநிலைக் கருத்து என்பது என் கருத்துகள் எதுவும் சொல்லப்பட வில்லை காணொளி காண்பவர் கருத்துகளை உருவாக்கிக் கொள்ளலாம் இரு தரப்பு வாதங்களும் இருக்கின்றன எதிர்மறை கருத்துகளுக்கு இடம் கொடுக்க வேண்டும் பெரும்பான்மை பலத்தினால் ஒரேயடியாக ஸ்டீம் ரோல் செய்யக் கூடாது என்பதே முக்கியம் என் பணம் எனக்கு வர வேண்டும் அதுவும் எனக்குத் தேவை பட்டபோது வேண்டும் பணமாகவே வேண்டும் ஈக்விடியாக அல்ல இது குறித்த விவாதமே தேவை
Delete@கீதா சாம்பசிவம்
Deleteவாட்ஸாப்பில் வந்த செய்தி இதில் எந்த திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை / இந்த அரசு இதுவரை அப்படி ஏதும் செய்யவில்லை/ இது ஒரு பெர்செப்ஷனே மாற்றுக் கருத்தும் உண்டு ஜி எஸ்டியில் வந்த மாற்றங்கள் எல்லாம் மாற்றுக்கருத்துகளால் உருவானதே இன்னும் மாற்றங்கள் வரலாம் எல்லாவற்றையும் சரி என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவமெனக்கில்லை
@ஜீவி /அரசும் உடனுக்குடனே தன் பக்க கருத்துக்களை மக்களுக்குத் தெரிவிக்க ஆவன செய்ய வேண்டும். அரசு PRO-க்கள் எதற்கு தான் இருக்கிறார்களோ தெரியவில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அந்தச் செயலை மீடியாக்கள்தான் செய்து வருகிறதே ஆனால் இந்தச் செய்தி பற்றி மீடியாவில் எந்தச் செய்தியும்
Deleteவாசித்ததாக நினைவில்லை ஒரு வேளை நான்தான் கவனிக்க வில்லையோ
//என் பணம் எனக்கு வர வேண்டும் அதுவும் எனக்குத் தேவை பட்டபோது வேண்டும் பணமாகவே வேண்டும் ஈக்விடியாக அல்ல இது குறித்த விவாதமே தேவை..//
Deleteஒரு காரியம் நடைபெறாத பொழுதே அதைப் பற்றிய விவாதம் எப்படி சாத்தியம்?.. அப்படியான கோணல் மாணல்கள் நடைபெறுவதாக இந்த விடியோவைப் பார்த்துக் கொள்ள வேண்டுமா?
ஈக்வெட்டியாக அல்ல, உங்கள் பணம் பிக்ஸட் டெபாசிட்டில் இருந்தால் அது முதிர்வடையும் காலத்தில் பணமாகவே உங்களுக்கு வந்து சேரப் போகிறது என்பதை எதிர்காலம் உங்களுக்குச் சொல்லும்.
நம்பிக்கயே ஆதாரம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பிரயோசனம் இல்லை
Deleteஇந்த மாதிரியான விடியோக்களைப் பார்த்து விட்டு சில வரும் முன் காப்பவர்கள் ப்ரீ மெட்சூராக தங்கள் டெபாஸிட்டுகளை முடித்துக் கொள்வார்கள் தாம்.
Deleteஅப்படி பெரும்பான்மையோர் முடிவுக்கு வந்தால் வங்கிகள் தாங்காதல்லவா?.. ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பது அரசின் வேலை இல்லை என்றாலும், இந்த மாதிரியான குழப்பத்தை தவிர்க்க அரசு பொது நன்மை கருதி முன் வர வேண்டும். சட்டங்கள் வரைவில் இருக்கும் பொழுதே, இந்த மாதிரியான பீதிகளைக் களைய அரசு தரப்பினர் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் அரசின் கடமை.
மக்களை யூகத்தில் விடுவது அரசின் நோக்கம் இல்லையென்றாலும், வெகுஜன மக்களின் ஆதரவோடு சட்டங்கள் அமுல் நடத்தப் பட்டால் அப்படியான நாட்டுக்குத் தேவையான சட்டங்களுக்கு தங்களின் ஒத்துழைப்பை நல்கி மக்களே அத்தகைய சட்டங்களின் வெற்றியை நிச்சயப்படுத்துவார்கள்.
நன்கு சிந்தித்து பின்னூடம் எழுதப்பட்டது நன்றி சார்
Deleteயு.எஸ். வங்கிகள் அனைத்தும் தனியாருக்குச் சொந்தமானவை. அங்கைய நிலைமையே வேறே. யு.எஸ்.வங்கிகளையும் நம் பொதுத்துறை வங்கிகளையும் ஒரே தட்டில் வைத்து பேசக்கூடாது.
ReplyDeleteஒரு பக்கம் வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்ய அரசியல் வாதிகளின் நிர்பந்தம். இன்னொரு பக்கம் நலிந்த வங்கிகளை தூக்கி நிறுத்த அரசே நிதியளித்து (இந்தியன் வங்கிக்கு செய்தது போல) வழிகாட்டியது தான் முறையான வழி.
விவசாயக் கடன்களைத் தவிர மற்ற வாராக்கடன்களை முனைப்புடன் வசூலிப்பது தான் முறையான வழி.
அந்தக் காணொளியில் கூறுவதிலிருந்து கோஆப்பெரேடிவ் வங்கிகள் காணாமல் போகும் வாய்ப்பு இருப்பது போல் தெரிகிறது இந்த மாதிரி காணொளிகள் வராமலிருந்தால் செயல்கள் பற்றி ஏதும் தெரியாதவராகி இருப்போம் நாமும் ஜி 20 நாடுகளில் அங்கத்தினர் ஆகவே பிறரது அனுபவங்களையும் நாம்கணக்கில் எடுக்க வேண்டும் இந்த பெயில் இன் ஷரத்தே நிதி நிறுவனங்களையோ வங்கிகளையோ தனியாருக்கு தாரைவார்க்க வழி வகுக்குமா தெரியவில்லை பதிவுலகின் வங்கி அதிகாரிகள் யாரும் கருத்துசொல்ல வரவில்லை தி தமிழ் இளங்கோ சுட்டி கொடுத்டு படித்துக் கொள்ளக் கூறி இருக்கிறார் .கடன்களை வசூலிக்க முடியாமல் போவது நம் வங்கிகளுக்குப் புதிதல்லவே
Deleteகோஆப்ரேட்டிவ் வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. இருந்தாலும் நிர்வாக விஷயங்களில் பொதுத்துறைவங்கிகளுக்கும் இவற்றிற்கும் சிற்சில வேறுபாடுகள் இருக்கின்றன.
Deleteகூட்டுறவு என்பதின் அடிப்படையில் வேண்டாத தலையீடுகளும் இருக்கின்றன. சமீபத்திய பணச் சீர்திருத்த நடவடிக்கைகளின் அனுபவத்தில் கூட்டுறவு வங்கிகளில் சில மாற்றங்களை செய்ய நடுவண் அரசும் ரிசர்வ் வங்கியும் விரும்பலாம். இதற்கும் ஜி 20-க்கும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் முடிச்சுப் போடக் கூடாது.
நம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் செயல்படுகின்றன. உலகத்து பெரும்பாலான நாடுகள் பண வீழ்ச்சியில் சிக்கிக் கொண்ட சமீப கால அனுபவத்தின் போது நம் நாடு மட்டும் அத்தகைய பாதிப்பின் சுவடே தெரியாமல் வளமையுடன் இருந்ததற்குக் காரணம் நம் ரிசர்வ் வங்கியின் அற்புத வழிகாட்டுதல்களே.
முந்தைய அரசில் பிரதமர் கட்சித் தலைவரின் கட்டுபாட்டில் இருந்தார். அதனால் மிகச் சிறந்த பொருளாதார நிபுணராய் அவர் இருந்தும்
அவரால் சுதந்தரமாக செயல்பட முடியாத சில நிர்பந்தங்கள் இருந்திருக்கலாம். நடந்திட்ட ஊழல்களில் பட்டியல் மிக நீண்ட ஒன்று.
ஆனால் இன்றைய பிரதமருக்கு அத்தகைய நிர்பந்தங்கள் இல்லை. அதனாலேயே ஆட்சியும் எந்த பெரிய ஊழலுக்கும் இரையாகாமல் தப்பித்துக் கொண்டு வருகிறது.
பொருளாதார விஷயங்களை அலசும் பொழுது இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள நாம் தவறவே கூடாது.
நம் நாட்டு மக்களின் பொருளாதாரச் சூழ்நிலையில் தடாலடியாக எதையும் தனியாருக்கு தாரை வார்க்க முடியாது; பொதுத்துறைக்கும் தனியார் துறைகளுக்கும் போட்டி ஏற்படுவதின் மூலம் பொதுத் துறையை சிறப்பாக வளர்த்தெடுக்கலாம் என்பதே இந்தியாவின் அனுபவமும் ஆகியிருக்கிறது. அதே நேரத்தில் தனியார் துறையை விட அரசுத்துறை ஊழியர்களுக்கு அதிக சம்பளம், பென்ஷன் போன்ற பணப்பலன்கள் கூடியிருப்பதையும், வேலை பாதுகாப்பு ஏற்பட்டிருப்பதையும் நாம் சொல்லியே ஆக வேண்டும்.
ரிசெர்வ் வங்கியும் தலையிட முடியாத நிலைக்கு உட்படுத்தும் சக்தி இருப்பதாகப் படித்தேன் தனியாருக்கு தாரை வார்க்க முடியாது என்பது நல்ல செய்திதான் ஆனல் தையும் மீறி நடக்கலாம் என்பதே சிந்திக்க வேண்டிய விஷயம் ஒரு சட்ட நிலையை ஏன் தான் அரசின் நிலையிலிருந்தே கணிக்கிறோமோ தெரியவில்லை /தனியார் துறையை விட அரசுத்துறை ஊழியர்களுக்கு அதிக சம்பளம், பென்ஷன் போன்ற பணப்பலன்கள் கூடியிருப்பதையும், வேலை பாதுகாப்பு ஏற்பட்டிருப்பதையும் நாம் சொல்லியே ஆக வேண்டும்/ இது குறித்துநான் கருத்துசொல்லும் நிலையில் இல்லை
Delete@கீதா சாம்பசிவம் /India to overtake UK and France to become fifth-largest economy in 2018: Report /இது வெறும் ஹேஷ்யம்தான்
Deleteஎன்னை மறக்காமல் இருக்கும் சிலரில் ஐயா GMB அவர்கள் முதன்மையானவர். நன்றி ஐயா!
ReplyDeleteசந்தித்தவர்களைப் பற்றிய பதிவு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் தங்கள் ஒரிஜினல் படைப்புகளை வாசிக்கவேண்டும் என்று என் போன்ற சிலருக்குத் தோன்றுகிறதே, என் செய்ய? கருணை புரிவீர்களா?
நான் சில மாதங்களாக வலைப்பதிவு எழுதவில்லை. வேறு முக்கிய வேலைகள் என் விரல்களில் அமர்ந்துகொண்டிருக்கின்றன. பார்க்கலாம், ஜனவரியில் இருந்து ஒழுங்காக வாரம் ஒருமுறை எழுதிவிடுமாறு உங்கள் அன்பும் ஆதரவும் என்னைத் தூண்டுமாக!
-இராய செல்லப்பா சென்னை
உங்களை மறக்க முடியுமா சார் இதில்வருவதெல்லாம் என் ஒரிஜினல் படைப்புகளே என்று சொல்லித்தாந்தெரிய வேண்டுமா சார் என்பதிவுகளைப் படிக்கிறீர்கள் என்று நான் நம்பலாமா சார்
Deleteபெரியீர், ஒரிஜினல் என்றால் தங்கள் சொந்தக் கற்பனயில் உருவான கதை கட்டுரை கவிதை முதலியவற்றையல்லவா குறிக்கும்! மற்ற பதிவர்களைப் பற்றி எழுதுவது-போன்றவை உங்களுடைய 'comments' என்ற வகையில் தானே அடங்கும்! நான் சொன்னது creative literature!
Deleteஅன்புடன், இராய செல்லப்பா சென்னை
ஐயா இப்படியும் எழுதலாம் என்பதே சொந்தக் கற்பனைதானே காணொளியில் காணும் செய்திக்கு உங்கள் கருத்து என்ன என்பதையும் கூறலாமே
Deleteபதிவர்களின் பதிவுகள், அவர்களைப் பற்றிய உங்களின் எண்ணங்கள்...உங்களின் நினைவாற்றலும் ஆற்றொழுக்க நடையும் எங்களை வியக்கவைக்கின்றன. நுணுக்கமாக எழுதும் விதம் எங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. நன்றி ஐயா.
ReplyDeleteசுட்டிகள் கொடுத்ததே அவர்களின் படைப்புகள் பற்றி எல்லோரும் அறிய வேண்டும் என்பதால்தானே செல்லப்பா சாரின் பின்னூட்டம் என் ஒரிஜினல் எழுத்துகளை காண வேண்டும் என்கிற்து அதாவது இவை என் எழுத்துகளல்ல என்பதுபோல் தெரிகிறது
Deleteபதிவர்களைப் பற்றிய தங்களின் பதிவுகள் தொடரட்டும் ஐயா
ReplyDeleteமகிழ்ந்தேன்
வருகைக்கும் வழக்கம் போல க்ரிஸ்பான பின்னூட்டத்துக்கும் நன்றி சார்
Deleteபதிவை விட உங்கள் பின்னுட்டங்கள் கரசரமாய் சுவரசியமாய் இருக்கிறது சார்
ReplyDeleteநிறையை அறிந்து கொண்டேன் தொடர்கிறேன்
உங்கள் கேள்விக்கும் பதில் அளித்திருந்தேன் பார்த்தீர்களா
மன வருத்தம் வேண்டாம் தவறுதலாய் நடைபெற்றுவிட்டது .
பூவிழிக்கு என்னைப் பொருத்தவரை பதிவுகள் நல்ல கருத்தாடல்களுக்கு வழிவகுக்க வேண்டும் கருத்து வேறுபாடுகள் மற்றவரின் எண்ண ஓட்டங்கள் பற்றி தெரிய வைக்கிறது என் பின்னூட்டம் விடுபட்டது ஏன் என்று தெரியாததால் கேட்டிருந்தேன் வருகைக்கு நன்றி
Deleteஎன்னையும் பொருட்டாக நினைவுகூர்ந்ததமைக்கு நன்றி ஐயா. விரைவில் மீண்டும் பதிவுலகுக்கு வர முயற்சிக்கிறேன்.
ReplyDeleteஎன் பதிவுகளை வசித்து ஊக்கம்தந்தவர் அல்லவா மறக்க முடியுமா மீண்டும் வாருங்கள் சார் பல புத்யவர்களையும் பார்க்க முடியும் நன்றி சார்
Deleteபதிவர்களை அறியவும் அவர்களின் ஆற்றலைப் புரியவும் களம் அமைத்துத் தரும் தங்களைப் பாராட்டுகின்றேன்.
ReplyDeleteஅறியாத பதிவர்களின் தாங்களுக்குச் செல்ல அவர்களது தள சுட்டியும் கொடுத்திருந்தேன் வருகைக்கு நன்றி சார்
Delete