திங்கள், 9 ஜூலை, 2018

ஒரு புலம்பல்

         

                                                    ஒரு புலம்பல்
     ஒரு புலம்பல் பதிவு
ஓய்வு பெற்று வந்தபோது இங்கு ஒரு வங்கி அக்கௌண்ட் ஓப்பென் செய்ய வேண்டி இருந்தது  வீட்டிலிருந்து ஒரு கி மீட்டருக்குள் இருந்த வங்கியில் கணக்கு திறக்க முதல் பிரச்சனை வந்தது வங்கி அதிகாரிகளுக்க்குத் தெரிந்த ஒருவர் என்னைத் தெரிந்ததாக கையெழுத்து கேட்டார்கள் நானோ ஊருக்குப் புதியவன் வங்கிக்கு தெரிந்தவர்கள் அந்த வங்கியில்  கணக்கு இருப்பவர்களைத் தேடி நான் எங்கு போக ஒரு யோசனை உதித்ததுஅப்போதைய பஞ்சாயத்து  அலுவலகம்சென்று  என் வீட்டு பத்திரங்களைக்காட்டி நான்   இங்கு வசிப்பவன் என்று கூறி அங்கிருந்த  அதிகாரிகளிடம் ஒரு கடிதம் பெற்று வந்து.ஒரு கணக்கு துவங்கினேன்   அது நடந்தது 1992 என்று நினைவு அதன் பின் பிஎச் இ எல் பணப்பட்டுவாடாவை  அந்த வங்கிக்கு மாற்றினேன்  இப்போது வயது ஏறி விட்டது ஒரு கிமீ தூரத்தில் இருந்த வ்ங்கி அலுவலகம்  நான்கு கி மீ தூரத்துக்கு மாறிவிட்டது இருந்தால் என்ன  இப்போதுதான் வீட்டிலிருந்தே  வங்கி கணக்குகளை இயக்க முடியுமாமே நெட் பாங்கிங் என்றுஎன் மக்கள்  சொன்னார்கள்  எனக்கு அதெல்லாம்  க்ரீக் அன்ட் லாட்டின்  புரிவதில்லை  என் மக்களின் உதவியோடு ஒரு மாதிரி சமாளித்து வந்தேன்   ஒரு நாள் இண்டெர்நெட்  பாங்கிங் முடங்கி விட்டது வங்கியின்தலமை அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன்  அவர்கள் என் மின்முகவரியை வங்கிக்கிளைக்குத்  தெரியப்படுத்தி கிளைக்கு எழுதச் சொன்னார்கள் எந்த பதிலும் வரவில்லை  ஒரு முறை நேரில் சென்று என் இண்டெர்நெட் அக்கௌண்ட் முடக்கப்பட்டதை கூறி அதை நேர்படுத்த வேண்டினேன் அவர்களும் சரிசெய்வதாகக் கூறி  ஒரு வாரகாலத்துக்குள்  சரியாகும் என்றும் என் விலாசத்துக்கு கூரியர்மூலம் பதில் வருமென்றும் கூறினார்கள் இதனிடையில் என் ஏ டி எம் கார்டில்பணம்கேட்டால் வரவில்லை சில பல முயற்சிகளுக்குப் பின்  பழைய ஏ டி எம் கார்டை மாற்றி கோல்டென் கார்ட் கொடுக்கப் படும் என்றும் கூறினார்கள்  ஒரு வழியாக அதைமாற்றம் செய்தேன்  ஆனால் அந்தக் கார்ட் மூலம்ரயில் டிக்கட் போன்றவை சாத்தியப்படாமல் இருக்கிறது  கேட்டால் முதலில் ஏடிஎம்   கார்டை ரெஜிஸ்டர் செய்ய வேண்டுமாம்  அது அதே வங்கியின் ஏடிஎம்கிளையில்தான் சாத்தியமாம்  ஆனால் நான்போகும் போதெல்லாம் அந்த மெஷின் பழுதில் இருப்பதாக தெரிய வருகிறது
 இன்னும்  என்  இண்டெநெட் அக்கௌன்ட் முடங்கியே இருக்கிறது  போகும் போதெல்லாம் இன்று மாலைக்குள் சரியாகி விடுமென்று கூறு கிறார்கள்

ஓரளவு விஷய ஞானம் உள்ள எனக்கே இந்தகதி என்றால்  படிப்பறிவில்லாதவர் பாடுஎப்படி இருக்கும்
பேசாமல் இந்த வங்கிக் கணக்கை மூடிவேறு ஏதாவது வங்கிக்கு போகலாமென்றால்  சில இடங்களுக்கு இந்த வங்கியையே  காட்டி இருக்கிறேன் என்பதாலும்   மாற்ற நான் இன்னும்  பாடுபட வேண்டிவரும் என்பதாலும் முழிக்கிறேன் 

புலம்பலுக்குப் பின் ஒரு மகிழ்ச்சி என்வீட்டில் பூத்த பிரம்ம கமலம்பூக்கள் ஒரு இரவுதான் மலர்ந்திருந்தன மறு நாள் தொய்ந்து விட்டது  


  

ராத்திரியில்  பூக்கும் இம்மலர்களைக் கண்டதும் ஒரு பாடல் நினவுக்கு வந்தது
புலம்பலுக்குப் பின் 


                                                  -------------------

வெள்ளி, 6 ஜூலை, 2018

ஒரு பின்னூட்டமே பதிவாய்



                           ஒரு பின்னூட்டமே பதிவாய்
                             --------------------------------


சிறுகதைகளை ஆழ்ந்து ஊன்றிப் படிக்கும்நண்பர் ஒருவரிடம் என்  சிறுகதையைவிமரிசிக்கக் கேட்டிருந்தேன் குறை நிறைகளைக் கூறிவிமரிசனம் செய்திருந்தார் அதுவே இப்போதுபதிவாகிறது எழுதுபவன் கொள்வாரில்லையோ என்று நினைக்கும்போது  இம்மாதிரியான கருத்துரைகள் உற்சாக பானம் ஆகும் என்ன கதை யார் விமர்சகர் என்பது யூகிக்க எளிது  சிறுகதைகள் சில விஷயங்களின் பாதிப்பால் எழுதப்படுபவைசில பின்னூட்டங்களுக்கு விளக்கம் கூற முற்படும்போது நாம்  எழுதியதை ஸ்தாபிக்க விரும்புவதுபோல் இருக்கும் பின்னூட்டங்கள் வாசகரின் எண்ணப் பிரதிபலிப்பு  அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் முறை சிலநிகழ்வுகள் வெவ்வேறான பாதிப்புகளை  உண்டாக்கலாம் எதையும் ஜஸ்டிஃபை செய்ய அவசியமில்லை 

சாவின் விளிம்பில், நினைவு திரும்பும் பொழுதெல்லாம் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளில் சிக்குண்டு தவிக்கும் ரங்கசாமியின் 'கதை'யை முன்னிலைப் படுத்திக் காட்டி, அதன் பின்புலமாய் வாழ்க்கையின் போற்றுதலுக்குரிய சில நெறிகளை ஆசிரியர் சொல்லிச் செல்வது தான் இந்தக் கதையின் குறிப்பிடத்தக்க அம்சம். எனக்குப் பிடித்த அம்சமும் கூட. எந்த எழுத்துக்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இதற்காகத் தான் இந்தக் கதையை எழுதினேன் என்று எழுதியவர் சொல்லாமல் இருக்கலாம். அதனால் என்ன?.. நல்ல சிந்தனை உள்ளவர் உள்ளத்திலிருந்து அவர் அறியாமலேயே இப்படிப்பட்ட நல்ல எண்ணங்கள் வெளிப்படுவது இயல்பான ஒன்று தான். சேகரம் பண்ணி தன் வாழ்க்கைக்கு மூலதனமாய் மூட்டை கட்டிக் கொள்வது தேர்ந்த வாசகரின் வேலையாகிப் போகிறது.

சாவைப் பற்றி நினைப்பதே சங்கடம் கொடுக்கக் கூடிய ஒன்று தான். அதை எதிர்கொள்கையில் பயம் மட்டும் கூடாதென்பதற்குத் தான் இந்த தேசத்து ஆன்மீக சிந்தனைகளே, மரணத்தை வெல்வோம் என்று கூறுகிறது. வெல்வோம் என்பது அந்த பயசிந்தனையிலிருந்து மீள்வோம், மீள்வதின் மூலமாக அதை வெற்றி கொள்வோம் என்கிற அர்த்தத்தில்.

நாம் எதிர்பார்க்காதவாறு இந்தக் கதையில் முன்னிலைப் படுத்துகிற பாத்திரமான ரங்கசாமிக்கு, அந்த நேரத்தில் குற்ற உணர்வு நெஞ்சத்தில் குடிபுகுந்து வாட்டியது தான் வினோதம். அந்த வினோதம், ஒருவிதத்தில் தன்னை சுயவிமர்சனப் படுத்திக் கொண்ட அவனது நேர்மையையே காட்டுகிறது. தன் தந்தை சாகக்கிடந்த நேரத்தில் அவரை பொறுப்பாக கவனித்துக் கொள்ளாதது, இந்த நேரத்தில் அவன் நினைவில் நர்த்தனமாடி குற்ற உணர்வில் குன்றிப்போக வைக்கிறது.. அதை வேறு எண்ணங்களைக் கொண்டு விரட்டப் பார்த்தாலும், மேலே மேலே வந்து அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. இவன் செய்யத் தவறியதையே, இவனின் இந்த நிலைமையில் இவன் மனைவி மக்களிடம் இவன் எதிர்பார்க்காது இருந்ததே இவன் செய்யத்தவறிய அந்த ஒரு தவறுக்கும் கழுவாயாகப் போய்விடுகிறது.

தான் வாழ்ந்த வாழ்க்கையில் திருப்தி இருக்கிறது ரங்கசாமிக்கு. அந்த திருப்தியை தன் தந்தையின் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து அங்கங்கே குமுறுவது, பாத்திரப்படைப்பின் மேன்மையைக் குலைக்கிறது. 'ஒரு சொட்டு தண்ணீர் தன் தந்தை கையால் கிடைக்காதா' என்று தவிக்கிற நேரத்தில், இவன் யார் எனத்தெரியாது தந்தை அமுதமென நீர் கொடுத்த மாதிரியும், யார் என்று தெரிந்த பொழுது, 'என்னைக் கொன்றவனல்லவா நீ?.. நீ எனத் தெரிந்திருந்தால் தந்திருக்கமாட்டேன்' என்று தந்தை சொல்கிற மாதிரி இவனுக்குத் தோன்றுவதும், ஏனோ செத்த பிறகும் தந்தையும், சாகும் நிலையில் தனயனும் ஒருவருக்கொருவர் குரோதம் பாராட்டுகிறார்கள். இரண்டு பாத்திரங்களையும் உயர்த்தி, ரங்கசாமியை திருப்திபடுத்தி, அவனது குற்ற உணர்வை சாக அடித்திருக்கலாம்.
யதார்த்தமாக எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்கிற ஆசையில் ஆசிரியர் கதையை ஒரு நல்ல முடிவுக்குக் கொண்டு வரும் இந்த அரிய வாய்ப்பை தெரிந்தே தவிர்த்து விட்டார் போலும்!

'
தந்தை செய்த பிழையைத் தனயன் செய்திருக்க வில்லை' போன்ற-- பல இடங்களில் ஆசிரியர் கூற்றாக வரும் செய்திகளைத் தவிர்திருந்தால் கதையின் நேர்த்தியைக் கூட்டி, சரியாகப் பொருந்துகிற மாதிரி ஒரு சட்டத்திற்குள் அடைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இறுதியாக ஒன்று சொல்ல வேண்டும். இதெல்லாம் படிக்கிற நேரத்துப் பார்வையில் பட்ட கருத்துக்களே தவிர, இப்படித் தான் இந்தக் கதையைப் பார்க்க வேண்டும் என்றில்லை.
இன்னொரு நேரத்துப் படிக்கும் பொழுது வேறு வகையான எண்ணங்கள் தோன்றலாம். இப்படியெல்லாம் சிந்திக்க வைப்பதே நல்ல கதைகளுக்கு அடையாளம். வெறும் பொழுது போக்கு கதைகளுக்கில்லாத சிறப்பும் கூட. அதனால் தான் எழுதுகிற எழுத்தின் மூலம் ஏதாவது ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்ற நினைப்புகளே எக்காலத்தும் போற்றுதலுக்குள்ளாகிறது.

குறிப்பாக இந்தக் கதையைக் குறிப்பிட்டு எழுதச் சொன்னதினால் என் கருத்துக்களைக் குறிப்பிட்டேன். என் பார்வையில் பார்த்ததே தவிர, கதையின் சிறப்பிற்கு இவையெல்லாம் எந்த விதத்திலும் குறுக்கே நிற்பவையல்ல. இரண்டு முறை தாங்கள் நினைவு படுத்தியும் இன்னும் செய்ய வில்லையே என்கிற அவசர உணர்வில் எழுதியது.

இந்தக் கதைக்கு ஒரு விமரிசனம் எழுதச் சொல்லி என்னைக் கேட்டுக் கொண்டமைக்கு மிக்க நன்றி, ஐயா!


கதை எதுவென்று யூகிக்க முடிகிறதா  பின்னூட்டமும்  யாருடையது தெரிகிறதா 




 

  




செவ்வாய், 3 ஜூலை, 2018

மீண்டும் பெண்களா



                                                       மீண்டும்  பெண்களா
                                                        --------------------------------
   
பலபிரச்சனைகளை சந்தித்து   சமாளித்து  சலித்துபின் சகித்து  கடைசியில் அதை ஏற்று  வாழும் ஜீவனுக்குப் பெயர் ஆண்
நான்  அலுவலகம் சேர்ந்தபோதுஒரு தொலைபேசி அழைப்பு வந்தது என் மனைவிதான் அழைத்திருந்தாள் 
இன்று என்ன தேதி 
நான் சொன்னேன் அக்டோபர் 13 
தொலை பேசி அழைப்பு  துண்டிக்கப்பட்டது
எனக்குள் ஒரு பயம்வந்தது  ஏன்  ஏன்  …..?
அவளது பிறந்தநாளா
குழந்தையின் பிறந்தநாளா 
திருமண  தினமா எரிவாயு புக் செய்ய வேண்டிய நாளா
ஏதாவது முக்கிய பொருள் வாங்க வேண்டுமா
அவளது பெற்றோரின் மணநாளா
பிறகு தேதி எதற்கு
மதியம் ஏதோ சாப்பிட்டதாகப் பேர் பண்ணினேன்
மாலை வீட்டுக்குள் நுழையும் போதே  என்மகன் எதிர்பட்டான்  அவனிடம்
வீட்டில் பூகம்பம்  புயல் ஏதாவது இருக்கிறதா எனக்கேட்டேன்
ஒன்று மில்லை எல்லாம் அமைதியாகத்தானிருக்கிறது எனறான்
ஏன் என்று கேட்டான்   காலயில் வந்த தொலைபேசிஅழைப்பு  பற்றி சொன்னேன்  அவன்  புன்னகை தவழ சொன்னான்   காலையில் காலண்டரில் சில தேதிகளைக் கிழித்து விட்டேன்   அம்மா சிறிது  கன்ஃப்யூஸ்  ஆகிவிட்டாள்  என்றான்                                           
 பெண்கள் மேல் எனக்கு எந்தக் காழ்ப்புண்ர்வுமில்லை பெண்கள் யாரும்  பொய்ங்க வேண்டாம்  பின் ஏன்  பெண்களைப் பற்றி அதிகம் எழுதுகிறேன்  அவர்கள் புரியாதபுதிர்கள்         
பெண்களைப் பற்றி அதிகம் புரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படும் நான் புரிந்து கொள்ள படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
உங்கள் புரிதல் எப்படி பகிரலாமே
.                            
1)  ஒரு ஆணும்  பெண்ணும் சாக்கலேட் பெட்டியிலிருந்து சாக்கலேட் எடுத்து உண்கிறார்கள்.ஒருவர் எடுத்த உடன் அதை மென்று தின்று விடுகிறார். அடுத்தவர் எடுத்துக் கடித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கிறார்.
கடித்தவர் யார் ?------------------ஆணா     பெண்ணா.?

2.) ஒரு ஆணும் பெண்ணும் ஒரு விருந்துக்குச் செல்கிறார்கள்.. அங்கே ஒருவர் சந்திரனுக்குச் செல்ல அநேகம் பேர் விரும்புவதில்லை என்றார். நம் நண்பர்களில் ஒருவர் கருத்துக் கணிப்பின்படி அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார். மற்றவர் “அது சரியாக இருக்க வாய்ப்பில்லை. நான் .போக விரும்புகிறேன் “ என்கிறார்.
மற்றவர் கருத்தினை இப்படி கணக்கிடுபவர் யார்.?---------ஆணா    பெண்ணா.?

3) ஒரு கணவனும்  மனைவியும் ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மாடியில் சற்று உடல் நலமில்லாத அவர்கள் குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது. “ குழந்தையின் உடல் நலம் குறித்து வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறாய் அல்லவா.?கவலைப் படாதே. டாக்டர் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி இருக்கிறார்.
மற்றவரின் உள்ளத்தை முதலில் கண்டு கொண்டு ஆறுதல் கூறுபவர் யார்.? ஆணா  பெண்ணா ?

4) ஒரு கணவனும் மனைவியும் ஒரு ஹோட்டலில் உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.. ஒருவர் சாதாரணமாக உண்ணாத உணவு வகைகளை ஆர்டர் செய்கிறார். மற்றவர் வீட்டில் உண்ணும் உணவு வகைகளையே கேட்கிறார்..உணவில் வெரைட்டி தேடுபவர் யார்.? ------------------- ஆணா     பெண்ணா. ?

5)  அதே ஜோடி ஒரு கடைக்குப் போகிறார்கள்..அங்கே ஒரு பக்கம் வித்தியாசமான புதிய பொருட்களும் இன்னொரு பக்கம் சாதாரணமாக இருக்கும் பொருட்களும் வைக்கப் பட்டிருக்கின்றன. வித்தியாசமான பொருட்களால் கவரப் படுபவர் யார்.? ஆணா     பெண்ணா. ?


உங்கள் பதில் எந்த அளவுக்கு கீழ்கண்ட பதில்களுடன் ஒத்துப் போகிறது. என்று பாருங்களேன்.

1) பெண். ----டாக்டர் ஹெலென் ஹால் ஜென்னிங்ஸ் ப்ரூக்லைன் காலேஜ் பேராசிரியர் கூறுகிறார். ஆண்கள் தேவையற்றுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். பெண்கள் எல்லாவற்றையும் துருவுவார்கள்.

 2). பெண். --- மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிடிநடத்திய ஆய்வின்படிபெண் எப்போதும் தான் எண்ணுவதுதான் சரி என்று சப்ஜெக்டிவ் ஆக சிந்திக்கிறாள். ஆண் பரந்த மனதுடன் ஆப்ஜெக்டிவ் ஆக சிந்திக்கிறான். 

3) ஆண். ----பிட்ஸ்பர்க்  வெடெரன்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஹாஸ்பிடல் சைகாலஜிஸ்ட் அநேக திருமணமான ஜோடிகளிடம் நடத்திய ஆய்வின்படி, ஆச்சரியப்படும்படி ஆண்களுக்கே மற்றவரின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது என்று கண்டறிந்தார்.

4). பெண்.--- மார்க்கெட்டிங் கருத்தாராய்வுப்படி, பெண்களே புது உணவு வகையறாக்களை ருசி பார்க்க ஆர்வம் காட்டுகின்றனராம்.

5)  ஆண். ---புதிய வடிவமைப்பு, பாக்கேஜிங்  போன்ற வற்றால் கவரப் பட்டு தெரிந்து கொள்ள ஆணே ஆர்வம் காட்டுகிறான் என்று இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மோடிவேஷனல் ரிசர்ச் தலைவர் டாக்டர் எர்நெஸ்ட் டிக்டர், கூறுகிறார்.